இயற்கையை அழித்து ‘வளர்ச்சி’: கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்து காமராஜர் துறைமுகம்!

தண்ணீருக்கான பொது மேடை எண்ணூர் கழிமுகமும், பக்கிங்காம் கால்வாயும்,கொசஸ்தலை ஆறும் காமராஜர் துறைமுகம் மற்றும் எண்ணூர் அனல் மின் நிலையங்களின் விரிவாக்கத் திட்டத்திற்காக வேகமான வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வடசென்னையின் நிலத்தடி நீர்மட்டம், சாம்பல் கழிவு மற்றும் வெந்நீர் கலப்பால் அழிவுக்குள்ளாகியிருக்கும் பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்த்தலை ஆற்றின் பல்லுயிரியம் இவற்றோடு இன்னும் வளர்ச்சியின் பேரால் மேற்கொள்ளப்பட்டு வருகிற துறைமுக, அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் பேரழிவின் எல்லைக்கு இப்பகுதியை தள்ளிக்கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் … Continue reading இயற்கையை அழித்து ‘வளர்ச்சி’: கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்து காமராஜர் துறைமுகம்!

பழவேற்காடு முதல் இனையம் துறைமுகம்வரை: நெய்தல் திணையின் அழிவும் தமிழக மக்கள் வாழ்வியல் சிதைவும்

தண்ணீருக்கான பொதுமேடை விடுத்துள்ள அழைப்பு: முன்னதாக கொச்சின், வல்லார்பாடத்தில் சுமார் 3500 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்ட சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையமானது, அதன் மெகா ஊழல்,நிதி மோசடிகளாலும் அதிக வாடகை வசூலாலும் தோல்வியடைந்த திட்டமாக உள்ளது. ஆண்டுக்கும் சுமார் 10 லட்சம் சரக்கு பெட்டகங்களையாவது கையாளவேண்டிய அத்துறைமுகம் அதன் சரிபாதி பங்கு கூட நாளது வரை கையாளவில்லை. இத்தகைய சூழலில் வல்லார்பாத்திலிருந்து 105  நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள விளிஞ்ஞத்தில் சுமார் 7525 கோடி … Continue reading பழவேற்காடு முதல் இனையம் துறைமுகம்வரை: நெய்தல் திணையின் அழிவும் தமிழக மக்கள் வாழ்வியல் சிதைவும்