அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு ட்ரம்ப் வெற்றி

சர்சைகளுடன் களம் கண்ட 45வது ஐக்கிய அமெரிக்க தேர்தல் களம் முடிவுக்கு வந்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ர்ம்ப் தோற்கடித்தார். முஸ்லிம்கள் அமெரிக்கா வருவதை தடை செய்வோம், அகதிகள் வருவதை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்புவோம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னதோடு பெண்களிடன் முறைகேடாக நடந்துகொண்டதாகவும் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. இந்நிலையில் முன்னேறிய சமூகமாகச் சொல்லிக்கொள்ளும் அமெரிக்கர்கள் பிற்போக்குத்தனமான கருத்துகளை முன்வைத்த ட்ரம்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் அடுத்த அதிபர்: ட்ரம்ப் முன்னிலையில்..

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.  டிரம்ப் - ஹிலாரி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளில் டொனால்டு டிரம்ப்:  248 இடங்களிலும் ஹிலாரி கிளிண்டன்: 218 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்த இடங்கள் 538. அறிவிக்கப்பட்டவை 466.