முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது!

புதிய பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்படவில்லை. சாக்கடை கழிவு செல்வதற்கு வழிகளே இல்லை. ஆங்காங்கே தேங்கிக் கிடந்த சாக்கடை நீர், பெய்து வரும் பெருமழையில் நிரம்பி ஓடுகிறது. வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. மாநகர சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை ஆறுகள் போல மழைநீர் புரண்டு ஓடுகிறது.

’மர்மக் காய்ச்சலு’க்கு 4 குழந்தைகள் பலி: மு. க. ஸ்டாலின் கண்டனம்

"சென்னையில் 4 குழந்தைகள் இறப்புக்கு காரணமான சுகாதார சீர்கேட்டையும், மருத்துவத் துறையில் புரையோடியுள்ள அலட்சியப் போக்கையும் கவனிக்காத தமிழக அரசுக்கு எனது வன்மையான கண்டனம்" என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் காலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்திருக்கிறது. அடுத்து பொழிச்சலூரைச் சேர்ந்த … Continue reading ’மர்மக் காய்ச்சலு’க்கு 4 குழந்தைகள் பலி: மு. க. ஸ்டாலின் கண்டனம்