சட்டமன்ற தேர்தல் கூட்டணி உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சென்னையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தார். கேள்வி:– தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா காலூன்ற முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான டி.ராஜா கூறியிருக்கிறாரே? பதில்:– "இந்தியாவில் நடந்த முதல் பொது தேர்தலின் போது 2–வது பெரிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. இப்போது ஒரு சீட் கட்சியாக மாறிய பிறகும் கம்யூனிஸ்டு தலைவரின் செருக்கு குறையவில்லை என்பதையே … Continue reading கம்யூனிஸ்ட்களுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்: ஹெச்.ராஜா சவால்!
குறிச்சொல்: டி.ராஜா
எமர்ஜென்ஸி முன்னோட்டம்: சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசவிரோத வழக்கு!
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் தேசவிரோத கோஷங்களை ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார், உமர் காலித் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் மூவர் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கின்றனர். இவர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்பியதாக சொல்லப்பட்டது பொய்யான குற்றச்சாட்டு என பேசப்படும் நிலையில், இந்தியாவின் முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக … Continue reading எமர்ஜென்ஸி முன்னோட்டம்: சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசவிரோத வழக்கு!
எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!
ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு விரோதமாக மாணவர்கள் கோஷமிட்டதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பி வரும், டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜாவும் ஜவஹர்லால் பல்கலையில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இது குறித்து கோவையில் பேட்டியளித்த பாரதீய ஜனதாவின் எச்.ராஜா "அபராஜிதாவை சுட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். ”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் … Continue reading எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!
கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!
ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆதரவு தெரிவித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த சிலர் கட்சி பலகை மீது ‘பாகிஸ்தானின் ஏஜெண்ட்’ என எழுதிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி … Continue reading கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!
தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?
நாட்டின் பிரபலமான, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (J.N.U) கடந்த செவ்வாய்க்கிழமை, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர்களில் ஒருவரான மக்பூல் பட், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மறைவுக்கு துயரம் அனுசரிக்கும் நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. ஜேஎன்யூ நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி, மற்றும் பாரதீய … Continue reading தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?