ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஐந்து சுற்று எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினகரன் 24,550 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். மதுசூதனன் 10687 வாக்குகளும் மருதுகணேஷ் 5519 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கலைகோட்டுதயம் 962 வாக்குகளும் பாஜகவின் கரு. நாகராஜன் 318 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?

கவிதா சொர்ணவல்லி டிடிவி ஜெயிப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆர்கேநகர் நிலவரங்களை தொடந்து கவனிக்க... வேண்டாம் வேடிக்கை பார்த்திருந்தால் கூட இது தெரிந்திருக்கும். அவருக்கு அங்கு எதிரிகளே இல்லை. அதுதான் உண்மை. இந்த இடைதேர்தல் என்பது, வென்றேயாக வேண்டியது என்ற கட்டாயம் தினகரனுக்கு மட்டுமே இருந்தது.அவர் அதில் முழு முனைப்புடன் இறங்கினார். அவருக்காக, அவருடைய ஆட்கள் அங்கே உயிரைக் கொடுத்து பணியாற்றினார்கள். ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணி மீது மக்களுக்கிருந்த அதிருப்திகளை வாக்குகளாக்குவதில் கோட்டை விட்டது திமுக. அவ்வளவு ஏன் … Continue reading டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?

சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர். கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இந்த வழக்கு தேர்தல் ஆணையத்துக்குச் … Continue reading சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்

டி.டி.வி. தினகரனுக்கு ரூ. 28 கோடி அபராதம்: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

அந்நிய செலாவணி மோசடி வழக்கில், அதிமுக-வின் முன்னாள் எம்.பி.யும், தற்போதைய அதிமுக பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவின் அக்காள் மகனுமான டி.டி.வி. தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ. 28 கோடி அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 1995-96ஆம் ஆண்டுகளில், டிடிவி தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாடுகளில் இருந்து பெரும்தொகை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது, தான் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ள நிலையில், தனது கணக்குகளில் பெரும் தொகை டெபாசிட் … Continue reading டி.டி.வி. தினகரனுக்கு ரூ. 28 கோடி அபராதம்: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்