யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

 ஞாநி ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா? தி.மு.க: 1. எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப்படும் கட்சி. 2.பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தும் கட்சி. அங்கே இங்கே என இரண்டு இடங்களிலும் இதே கட்சி அதிகாரத்தில் இருந்தால், கட்சித்தலைவர் குடும்பத்தின் வியாபாரத்தொழில் துறை ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்பு கட்டுக்கடங்காமல் போய்விடும். 3. பகுத்தறிவு, தமிழ்ப்பற்று போன்றவற்றையெல்லாம் வெற்று கோஷங்களாக மட்டுமே … Continue reading யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

#விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!

வா. மணிகண்டன் எழுத்தாளர் ஞாநி, பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் தாங்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணி வென்றுவிடும் என்று இப்பொழுது வரைக்கும் நான் நம்பவில்லை என்றாலும் திமுக, அதிமுகவிற்கு மாற்று எதுவுமேயில்லை என்ற நிலை இல்லை. மூன்றாவதாக ஒரு ஆள் இருக்கிறார் என்பதே சந்தோஷம்தான். ஆனால் மூன்றாவதான ஒரு ஆளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் தர்ம அடி அடிப்பதைத்தான் காணச் சகிக்கவில்லை. மனுஷ்ய புத்திரன் மாதிரியானவர்கள் வைகோவையும் மக்கள் நலக் … Continue reading #விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!

மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து எழுதிய ஞாநி, பத்ரி சேஷாத்ரி: முகநூலில் கிளம்பியிருக்கும் விவாதம்!

மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து பத்திரிகையாளர் ஞாநியும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியும் தங்களுடைய முகநூல் பக்கத்தில் கருத்து இட்டிருந்தனர். இதை ஆதரித்தும் நிகராகரித்தும் பல வகையான விவாதங்கள் முகநூலில் எழுந்துள்ளன. ஞாநியும் பத்ரியும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது முதலில்... ஞாநி சங்கரன் அ.தி.மு.கவா தி.மு.கவா என்றால் இன்று நான் தி.மு.கவுக்கே என் ஓட்டை அளிப்பேன். தி.மு.கவா மக்கள் நலக்கூட்டணியா என்றால் இன்று நான் மக்கள் நலக் கூட்டணிக்கே என் ஓட்டை அளிப்பேன். ஞாநி சங்கரன் மக்கள் நலக் … Continue reading மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து எழுதிய ஞாநி, பத்ரி சேஷாத்ரி: முகநூலில் கிளம்பியிருக்கும் விவாதம்!

#சர்ச்சை: ஞாநி, ஆனந்த விகடன், திமுக மிரட்டல், மனுஷ்யபுத்திரன், சமஸ்

 விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நேர்படப் பேசு நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அதில் பத்திரிகையாளர்கள் ஞாநி, விஜயசங்கர், மணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விவாதத்தில் ஞாநி கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது திமுகவில் இணைந்திருக்கும் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், இதுகுறித்து வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ‘ அவருக்கு வயதாகிவிட்டது. அவரை அவரது குடும்பத்தினர் இம்சித்து அரசியலில் நீடிக்க செய்கிறார்கள். இது மனிதாபிமானமல்ல’ … Continue reading #சர்ச்சை: ஞாநி, ஆனந்த விகடன், திமுக மிரட்டல், மனுஷ்யபுத்திரன், சமஸ்