பத்தி: நாட்டுப்புறபாடல்களின் மீட்டுருவாக்கத்தின் அவசியம்; ஜோக்கர் படப் பாடல்களை முன்வைத்து

ஜீவா பொன்னுசாமி கலையும் இலக்கியமும் சமூகத்திற்கு ஆகப்பெரும் கொடை என்பதில் சந்தேகமில்லை.  நவீனப்படுத்தப்பட்ட மறு வடிவங்களாக கலைகளுக்கு புகலிடமாக ஆக்கப்பட்டு விட்ட சினிமாவும், அச்சில் ஏறி வாசகனை சென்றடைவதை விட வலைத்தளம் மூலம் இலக்கிய படைப்பு பெருவீச்சில் சென்றடைவதும் மீட்டுருவாக்கத்தின் ஒரு மறுவடிவமே! அவ்வகையில் பாடல்கள் என்பது, நாட்டுப்புறப்பாடல் முதல் சங்க இலக்கியம் தொட்டு நவீன கவிதைகள் வரை உலகளாவி பறந்து வேற்றுமொழி கலாச்சாரத்துடன் வார்த்தைகளோடு உறவாடி ரசிகனுக்கு கிடைக்கும் பேரானந்தமே அளப்பெரியதாக கொண்டாடப்படுகிறது. அப்படி ஜோக்கர் எனும் திரைப்படத்தின் … Continue reading பத்தி: நாட்டுப்புறபாடல்களின் மீட்டுருவாக்கத்தின் அவசியம்; ஜோக்கர் படப் பாடல்களை முன்வைத்து

மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களுக்கு, டிராஃபிக் ராமசாமியை அடித்த வில்லாதி வில்லனின் கடிதம்!

அரவிந்தன் சிவக்குமார் பெறுனர்: மக்கள் ஜனாதிபதி. மன்னர் மன்னன் அவர்கள், c/o பொன்னூஞ்சல், பாப்பிரெட்டி பவன் தருமபுரி. மதிப்புக்குரிய மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களே, ஒரு முக்கிய நிகழ்வை உங்கள் பார்வைக்கு கொண்டுவர விழைகிறேன். நேற்று கொத்தவால் சாவடியாக இருந்து மறைந்து போன இடத்துக்கு பக்கத்தில் பந்தர் தெரு முனையில் வீதியில் கடைவைத்து வயிற்று பிழைப்பு நடத்தும் ஒரு தெருக்கடை வியாபாரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏன் தெரியுமா? அவர் டிராபிக் ராமசாமி என்னும் நபரை … Continue reading மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களுக்கு, டிராஃபிக் ராமசாமியை அடித்த வில்லாதி வில்லனின் கடிதம்!

கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் கபாலியும் ஜோக்கரும் தமிழில் அண்மையில் வெளிவந்து பரவலாகப்பேசப்படும் இரண்டு திரைப்படங்கள். தமிழ்ரசிகர்களை இப்படங்கள் எப்படியோ ஒரு வகையில் இருதுருவங்களாக நின்று ஈர்த்திருக்கின்றன. கபாலியின் பலம் என்பதே அது தன் கதைப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தமிழர் அரசியல் மற்றும் தலித் அரசியல் என்பதாக புரிந்துகொள்ளலாம்.அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர் பா.ரஞ்சித், கபாலியில் ரஜினிகாந்தை மிக நேர்த்தியாக அவரது இயல்பும் தனித்துவமும் மாறாமல் படைத்துக் காட்டியுள்ளார். ஒரு காலத்தில் எம்ஜிஆர் திரைப்படங்களில் எம்ஜிஆர் விவசாயி, தொழிலாளி, மீனவநண்பன், ரிக்ஷாக்காரன் … Continue reading கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்

ஜோக்கர்‬ சினிமாவும் பீச்சாங்கை முத்தங்களும்!: கீட்சவன்

கீட்சவன் ஓர் ஆண் என்ற வகையிலான என் காமப் பார்வையில் பெண்களின் பின்பகுதியும், மார்பகங்களும் மிகவும் ஈர்க்கத்தக்கவை. ஆனால், ஒரு பெண் வெளிக்குப் போகும்போது பின்பகுதியையும், குழந்தைக்குப் பாலூட்டும்போது மார்பகங்களையும் யதேச்சையாகக் காண நேரும்போது காம எண்ணம் பொசுக்கப்படுவதையும் உணர்ந்திருக்கிறேன். என் டீன் வயது அனுபவம்தான் என் மனநிலைக்கு முக்கியக் காரணம். அப்போது, சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. நான் அந்தப் பகுதிகளைக் காலை வேலைகளில் கடக்கும்போதெல்லாம் ஒரு காட்சி மட்டும் கொந்தளிக்க … Continue reading ஜோக்கர்‬ சினிமாவும் பீச்சாங்கை முத்தங்களும்!: கீட்சவன்

ஜோக்கர்: மக்கள் ஏன் ஜோக்கர்களாக பார்க்கப்பட வேண்டும்?

கார்த்திக் கோபாலகிருஷ்ணன் ஒரு படம் பொழுதுபோக்காக இருக்கிறதா இல்லையா? என்பது பிரச்சனை அல்ல. ஆனால் தரமான படம், நல்ல கருத்தை சொல்கிறது என்று கொண்டாடும் பொழுது அந்த கருத்து எப்படிப்பட்டது என்பதை கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏனென்றால் ரசிகன் கருத்தை ரசிக்கிறான், அந்த கருத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றிப்போகிறான், ஒத்துப்போகிறான். "ஜோக்கர்" படம் பார்த்தேன், அப்படம் சொல்லவரும் கருத்து என்ன. "வீதிக்கு போராட வா தோழா" நல்ல விஷயம் தான், பிறகு என்ன பிரச்சனை. வீதிக்கு மக்கள் திரளாய் இல்லாமல் தனியாக வரச்சொல்கிறது … Continue reading ஜோக்கர்: மக்கள் ஏன் ஜோக்கர்களாக பார்க்கப்பட வேண்டும்?

திருட்டு வி.சி.டி.யில் படம் பார்த்தால் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிவிடுங்கள்: ஜோக்கர் படத்துக்கு வித்தியாச விளம்பரம்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜோக்கர் திரைப்படம். ராஜு முருகன் இயக்கிய இந்தப் படத்தில் புதுமுகங்களான  குரு சோமசுந்தரம், காயத்ரி, ரம்யா பாண்டியன், பவா செல்லதுரை ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு நாளிதழ்களில் வெளியான ஒரு விளம்பரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. திருட்டு விசிடியில் படம் பார்த்தால் அதற்குரிய பணத்தை இந்த அக்கவுண்டில் போட்டுவிடுங்கள் என ஜோக்கர் படத்தின் பெயரிலான வங்கிக் கணக்கு எண்ணுடன் அந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. மேலும் … Continue reading திருட்டு வி.சி.டி.யில் படம் பார்த்தால் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிவிடுங்கள்: ஜோக்கர் படத்துக்கு வித்தியாச விளம்பரம்