டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமாரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். பாட்னா கலை கல்லூரியில் பீகார் காவல்துறை கண்மூடித்தனமாக மாணவர்களைத் தாக்கியதாகக் கூறி டெல்லி பிகார் பவனில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னய்யா குமார் உள்ளிட்ட 42 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
குறிச்சொல்: ஜேஎன்யூ
“மரக்கட்டை போல் உணர்ச்சியற்ற துணைவேந்தரை வேறு எங்கும் பார்க்க முடியாது”: 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஜேஎன்யூ மாணவர்கள்
“இதுபோன்று மாணவர்களின் நலனில் அக்கறையற்று மரக்கட்டைபோல் உணர்ச்சியற்று இருந்திடும் ஒரு துணைவேந்தரை நாங்கள் எங்கேயும் சந்தித்தது இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளமாட்டோம். இது சாகும்வரையிலான உண்ணாவிரதம்,’’ என்று மாணவர் சங்க பொதுச் செயலாளர் ராம நாகா கூறுகிறார். 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களில் ராம நாகாவும் ஒருவர். கன்னய்ய குமார் உட்பட ஆறு பேர் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டதாலும், மருத்துவர்கள் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு சிகிச்சையைத் தொடர … Continue reading “மரக்கட்டை போல் உணர்ச்சியற்ற துணைவேந்தரை வேறு எங்கும் பார்க்க முடியாது”: 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஜேஎன்யூ மாணவர்கள்
“நான் மனுஸ்மிருதியை எரிப்பேன்”: ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் அறிவிப்பு
“சாதிய ரீதியாக மக்களைப் பிரிக்கும் பெண்களை ஆண்களுக்குக் கீழானவர்களாக சித்தரிக்கும் மனுஸ்மிருதியை எரிக்கப் போகிறேன். பெண்கள் தினத்தில் இதை செய்யப் போகிறேன்” என அறிவித்திருக்கிறார் ஏபிவிபி அமைப்பின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் ஜாடின் கரோயா.
விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்
விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே... ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன் இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு … Continue reading விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்
#ஆசாதிகன்னய்யா: ஜேஎன்யூ வளாகத்தில் ஏபிவிபி நடத்திய ‘பெருந்திரள் கூட்டத்தில் கலந்துகொண்ட 32 மாணவர்களும் இரண்டு நாய்களும்
கன்னய்யா குமாரை ஜாமீனில் விடுவித்த நீதிபதி பிரபா ராணி, மாணவர் சமூகம் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க தீவிர தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதை முன்னிறுத்தி ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர்கள் பெருந்திரள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். வியாழன் அன்று மதியம் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகப்புப் படத்தில் உள்ளனர். படங்கள்: Su Nand
’இஸ்ரத் ஜஹான் வழக்கை மோடியை பழிவாங்க காங்கிரஸ் பயன்படுத்தியது’ என்ற முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை அதானி குழுமத்தின் இயக்குனர்!
2004ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் மும்பையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான். அந்தச் சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. நரேந்திர மோடியின் தூண்டுதலின் அடிப்படையிலே இந்த போலி மோதல் நடந்ததாக மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் சொன்னது. மத்திய அரசு முதலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி என சொல்லப்பட்டார். ஆனால், அவருடைய குடும்பத்தினரிடமிருந்து, மனித உரிமை அமைப்புகளிடமிருந்து … Continue reading ’இஸ்ரத் ஜஹான் வழக்கை மோடியை பழிவாங்க காங்கிரஸ் பயன்படுத்தியது’ என்ற முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை அதானி குழுமத்தின் இயக்குனர்!
தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் கன்னய்யா குமாருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், ஹெல்மெட், காவலர் சீருடை அணிந்து, நீதிமன்றம் அழைத்து வருகிறது டெல்லி போலீஸ். வழக்கறிஞர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு என சொல்கிறது டெல்லி போலீஸ். தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக அறிவித்த வழக்கறிஞர்கள் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள் … Continue reading தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?