கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் முரண்படுகிறீர்களா என்பது உள்ளிட்ட தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. தமிழில் : ச.வீரமணி. 2016ல் யார் வெற்றி பெறுவார்கள்? இடதுமுன்னணி கூட்டணியா? அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியா? இது ஒரு போராட்டம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட கடந்த சில சுற்று தேர்தல்கள் நடந்தபோது இருந்த நிலை இன்று கிடையாது. இந்த முறை, அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம். ... ஒரு … Continue reading கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

“தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!

ப்ரேமா ரேவதி மிக சுத்தமான உயர்தரமான சில சாலைகள் சில பகுதிகள் சென்னை மாநகரத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒன்று சேத்துப்பட்டில் இருக்கும் ஹாரிங்டன் சாலை. பல முறை துப்புரவு செய்யப்பட்டு பல பன்னாட்டு உணவு விடுதிகள் மிளிரும் இச்சாலையை பலமுறை கடந்திருக்கிறேன். இன்று அதிகாலை அதைக் கடக்கும்போது திடீரென “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்” என்ற பாடல் மிக உரக்க ஒலித்தபோது இது ஹாரிங்டன் சாலைதானா என … Continue reading “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!

#வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!

தேசவிரோத குற்றம்சாட்டப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்காக சென்னை ஐஐடி வளாகத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகத் தொடர்பு குழுவைச் சேர்ந்த ஜோஸுவா ஐசக் ஆசாத் கலந்துகொண்டார். அவர் இந்த பேரணியில் கலந்து கொண்டு பேச மாணவர்களால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை வளாகத்துக்குள் பாதுகாப்பு காவலர்கள் அனுமதிக்க முடியாமல் தடுத்துள்ளனர். தான் “ஜெய் பீம்” என முழங்கியது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் ஆசாத் அவருடைய முகநூல் பதிவில்... Joshua Isaac … Continue reading #வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!

”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்). Countercurrents.org, 18 February, 2016 தளத்தில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழாக்கத்தை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதை நன்றியுடன் இங்கே மறுபிரசுரம் செய்கிறோம். மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் … Continue reading ”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

ரோகித் வெமுலாவின் போராட்டம் முதல் மரணம் வரை நடந்தது என்ன?

எவிடன்ஸ் கதிர் ஒரு தற்கொலை கடிதம் தேசத்தையே புரட்டிப்போட்டிருக்கிறது. என் சாவுக்கு இவர்கள் எல்லாம் காரணம் என்று எழுதி வைக்கும் தற்கொலை கடிதங்கள் பல உண்டு. இதுபோன்ற கடிதங்கள் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரமாக இருக்கும். ஆனால் சில தற்கொலை கடிதங்கள் அன்பையும் நீதியையும் ஒரு சேர பிரதிபலிக்கும். அதுபோன்ற ஒரு கடிதம் தான் தேசத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. ‘என் தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல. நான் மட்டுமே பொறுப்பு. என் மரணத்திற்கு பிறகு என் நண்பர்களையோ எதிரிகளையோ … Continue reading ரோகித் வெமுலாவின் போராட்டம் முதல் மரணம் வரை நடந்தது என்ன?