அரசியவாதி ரஜினி 1.0? அல்லது வியாபாரி ரஜினி 2.0?

உண்மையிலேயே தமிழகத்தின் மீது ஒரு துளி அக்கரையாவது இருந்தால், உடனடியாக அனைத்து படத்திட்டங்களையும் உதறிவிட்டு அரசியலில் குதித்திருக்கலாமே? இன்னும் படம் நடிக்கவேண்டிய அவசியம் என்ன?

போராட்டமும் எதார்த்தமும்

ஜி. கார்ல் மார்க்ஸ் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பாரதீய ஜனதா கட்சி தட்டிக் கழித்திருப்பது தமிழகம் முழுவதும் கட்சிகளைக் கடந்து எல்லா மக்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இங்கு தன்னெழுச்சியாக நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டங்கள், வெறும் காவிரிக்கானது மட்டும் அல்ல. காவிரி என்பது அதிருப்திகளின் பிரதான காரணமாக இருக்கிறது அவ்வளவே. கொஞ்சம் கொஞ்சமாக சேகரமாகிக்கொண்டே இருக்கும் அதிருப்தி அதன் கொதிநிலையை எட்டுவதன் வெளிப்பாடே இப்போது நடக்கும் போராட்டங்கள். காவிரி விவகாரத்தில், காங்கிரஸ், பிஜேபி, ஜனதாதளம் என எந்த … Continue reading போராட்டமும் எதார்த்தமும்

கமலை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

ஜெயலலிதா இருக்கும்போது கமல் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்று அதிமுகவினர் பேசிவருவதற்கு எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் பதில் அளித்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பதிவில், “கமல் ஏன் ஜெயலலிதா இருக்கும்போது அரசை விமர்சிக்கவில்லை என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து கேட்கிறார்கள். ஜெயலலிதா தன்னை விமர்சிப்பவர்களை எவ்வளவு கொடூரமாக நடத்துவார் என்பது உலகறிந்த உண்மை. சந்திரலேகா மேல் ஆசிட் வீசப்பட்டது, நக்கீரன் கோபால் கைது என அரசியல் எதிரிகள் மேல் நடத்திய தாக்குதல் எத்தனை..எத்தனை...போட்ட அவதூறு வழக்குககளுக்கு … Continue reading கமலை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே! இந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘வெட்டுப்புலி’ அமைந்திருக்கிறது. தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ், … Continue reading “திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

அடியாட்கள்;அமைச்சர்கள்;உடையார்;ஒரே நாளில் பத்திரப்பதிவு : ஜெ-சசி கும்பலின் அராஜகம் பற்றி கொடநாடு உரிமையாளர்…

90-களில் நீலகிரி மாவட்டத்தில் சொத்து வாங்குவது தொடர்பாக பல்வேறு இடங்களை ஜெ;வும் சசியும் பார்வையிட்டாலும், கடைசியில் அவர்கள் திருப்தியுற்றது கொடநாடு எஸ்டேட்டில். 1800-களில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்டேட், ஒவ்வொருவருக்காக விற்கப்பட்டு, 1970-களில் Peter Earl Edward Craig Jones என்பவரின் குடும்ப சொத்தாக மாறியது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், கொடநாடு எஸ்டேட்டின் உண்மையான உரிமையாளர் Peter Earl Edward Craig Jones … Continue reading அடியாட்கள்;அமைச்சர்கள்;உடையார்;ஒரே நாளில் பத்திரப்பதிவு : ஜெ-சசி கும்பலின் அராஜகம் பற்றி கொடநாடு உரிமையாளர்…

நீட் ஏன் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை? ; ஜெயாவின் இந்தக் கடிதத்தை படியுங்கள்….

மார்ச் 10, 05:15 AM சென்னை, மருத்துவ கல்வியில் தேசிய பொது நுழைவுத்தேர்வை ஆதரிக்கும் மறுசீராய்வு மனுவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஏற்கனவே எழுதிய கடிதம்தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு செய்யும் மத்திய அரசின் முயற்சியை கடுமையாக எதிர்த்து கடந்த பிப்ரவரி 9–ந் தேதி … Continue reading நீட் ஏன் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை? ; ஜெயாவின் இந்தக் கடிதத்தை படியுங்கள்….

”கருப்புத்துண்டு அமங்கலம்; அதை எடுத்துவிடுங்கள் என ஜெ. சொன்னார்”

அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் டிடிவி தினகரன் ஆளுமை மிக்கவர் எனவும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதாவைக் காட்டிலும் ஜனநாயகவாதி எனவும் தெரிவித்தார். மதிமுகவிலிருந்து விலகி அதிமுக சேர்ந்தபோது கருப்புத்துண்டு அமங்கலம், அதை எடுத்துவிடுங்கள் என ஜெயலலிதா சொன்னதாக பேட்டியில் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.  

“ஜெயலலிதாவை இப்படியா கேவலப்படுத்துவது?”: சர்ச்சையாகும் ஓபிஎஸ் அணியின் தேர்தல் பிரச்சாரம்

நடைபெறவிருக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மறைந்த முதலமைச்சரின் மரணத்துக்கு நீதி வேண்டி  ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி மக்களிடம் வாக்கு என தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணியின் சார்பாக போட்டியிடும் மதுசூதனனுக்கு, ஜெயலலிதா சவப் பெட்டியில் இருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்ட பொம்மையை வைத்து வாக்கு கேட்டு வருகின்றனர். இது சமூக ஊடகங்களில் புதிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. https://www.facebook.com/rajarajan.rajamahendiran/posts/10207736314720475

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வமூட்டியதே நான் தான்!: சசிகலா

சென்னை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார் சசிகலா. அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களைச் சொன்னார். "எம்ஜிஆர் மறைவின்போது கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவை அவரது இறுதிச் சடங்கின் போது அனுமதிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஜெயலலிதா, தமக்கு கட்சியும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தார். உங்களை எதிர்த்தவர்கள் முன்னால் வளர வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவுக்கு நான்தான் அரசியல் ஆர்வத்தினை ஊட்டினேன். அத்தகையை சூழலில் … Continue reading ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வமூட்டியதே நான் தான்!: சசிகலா

”திமுக நம்மை ஒன்றும் செய்யாது என சசிகலா நம்புகிறார்!”

கதிர்வேல் ”வேலைக்காரி என்பதால் எதிர்ப்பதா? அப்படியானால் வேலைக்காரிகள் எல்லாம் கேவலமா? இதற்காகவே அவர் சீயெம் ஆக வேண்டும்” என்று ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது. அந்த கோஷ்டியில் உள்ளவர்கள் ஆகட்டும், நீங்களாகட்டும், நானாகட்டும் எல்லோருமே வேலைக்காரன் அல்லது காரிகள்தான். உழைத்து சம்பளம் வாங்கும் எல்லோரும் வேலைக்காரர்கள் அல்லாமல் வேறென்னவாம்? எனவே, எதிர்ப்பு என்பது அவர் வேலைக்காரி என்ற அடிப்படையில் எழுந்தது அல்ல. சொல்லப் போனால் அவர் வேலைக்காரியாக இருந்ததே இல்லை. “அம்மாவுக்கு பணிவிடை செய்வதன்றி வேறேதும் அறியேன்” என்று … Continue reading ”திமுக நம்மை ஒன்றும் செய்யாது என சசிகலா நம்புகிறார்!”

சின்னம்மாதான் அம்மாவின் அரசியல் வாரிசு: மு. தம்பித்துரை

சசிகலா தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பித்துரை தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதே அம்மாவின் தாரக மந்திரம். சமூகநீதி காக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வினை உறுதி செய்யவும், சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும், இந்திய குடியரசில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் தன்னையே அர்ப்பணித்து எம்.ஜி.ஆர். காட்டிய புனிதப் பாதையில் வாழ்ந்த … Continue reading சின்னம்மாதான் அம்மாவின் அரசியல் வாரிசு: மு. தம்பித்துரை

வரலாற்றின் பக்கங்களை ஒருபோதும் திருத்தி எழுதிவிட முடியாது!

விநாயக முருகன் பெண்களின் ஆதர்சம் என்று ஒரு தோழி சொன்னார். மரணம் சிலரை மிக எளிதாக புனிதர்களாக்கிவிடும். ஆனால் காலம் அப்படி செய்யாது. ஹிட்லர் இறந்தபோது ஜெர்மனி நாட்டு மக்கள் எல்லாரும் அழுதார்கள். ஹிட்லர் புனிதபிம்பமாக மாறினார். இன்னமும் ஜெர்மனியில் ஹிட்லருக்கு தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஹிட்லர் ஜெர்மனியர்களுக்கு அவ்வளவு ஆதர்சம். ஆனால் யூதர்களுக்கு? வரலாறு இன்னமும் ஹிட்லரை நினைவில் வைத்துள்ளது. ஆனால் என்னவிதமாக என்பதுதான் கேள்வி. ஒருவரின் மரணத்தின்போது அவரின் செயல்பாடுகளை விமர்சிப்பது அநாகரிகம்தான். ஆனால் … Continue reading வரலாற்றின் பக்கங்களை ஒருபோதும் திருத்தி எழுதிவிட முடியாது!

மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வெளிநடப்பு செய்து உதவினார் ஜெயலலிதா: வெங்கய்யா நாயுடு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் பாஜக பிரமுகர்கள் பெருமளவு கலந்துகொண்‌டனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார். தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வத்தை கட்டித் தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோ‌டி, எல்லா உதவிக‌ளையும் மத்திய அரசு செய்யும் எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஜெயலலிதாவின் உடல் அருகே நீண்ட நேரம் இருந்தார்.  அதிமுக பொதுச்செயலாளரின் இரங்கல் நிகழ்வில் பாஜக பிரமுகர் ஏன் … Continue reading மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வெளிநடப்பு செய்து உதவினார் ஜெயலலிதா: வெங்கய்யா நாயுடு

அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு

ஹெச்.ஜி.ரசூல் பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய … Continue reading அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு

“காவிகளை எதிர்க்கும் தமிழகக் கட்சிகள் உடனடியாக ஒன்றுகூடி ஆலோசிக்க வேண்டும்”

சுப. உதயகுமாரன் தாங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பெரும்பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள பிரயத்தனிக்கும் ஒரு கூட்டமும், அவர்களுக்கு ஒத்தாசையாக செயல்பட்டு கொல்லைப்புறம் வழியாக கோட்டைக்குள்ளே நுழைய விரும்பும் இன்னொரு கூட்டமும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை கடத்தி வைத்து அரசியல் நாடகங்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், ஒரு மாபெரும் மக்கள் தலைவரை பல மாதங்களாக மக்களுக்குக் காட்டாமல் ஒளித்து வைத்திருப்பது, அவரது இரத்த உறவுகளைக்கூட அண்டவிடாமல் தடுத்து நிற்பது, வெற்று அறிக்கைகள் மட்டும் விடுத்து மக்களை மதிக்காமல் நடப்பது … Continue reading “காவிகளை எதிர்க்கும் தமிழகக் கட்சிகள் உடனடியாக ஒன்றுகூடி ஆலோசிக்க வேண்டும்”

முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்வதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபிறகு முதலமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்தநிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து அவர் தரும் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவர்கள் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்போலோ மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக … Continue reading முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு

’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை

‘டெல்டா காஷ்மோரா’ என்ற பெயரில் ஜுனியர் விகடன் வெளியிட்ட கட்டுரை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். அந்த அறிக்கையில், “தமிழகத்தின் பழம்பெரும் இதழ் "ஆனந்த விகடன்". அதனை உருவாக்கிய திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள் பத்திரிகைத் துறையிலும், திரைப்படத் துறையிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்தகைய "ஆனந்த விகடன்" குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் "ஜுனியர் விகடன்". 9-11-2016 தேதிய "ஜுனியர் விகடன்"இதழில் "மிஸ்டர் கழுகார்" பகுதியில் வந்துள்ள ஒரு செய்தி; நம் … Continue reading ’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை

ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!

ச. பாலமுருகன் இன்று 14.10.2016 கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும் அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் வதந்தி பரப்புதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்து காவல்துறை சிறைபடுத்தியுள்ளதை அறிய முடிகின்றது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அடிப்படை சனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாக உள்ளது. தனது இரண்டு நண்பர்கள் தமிழக முதல்வர் குறித்து உரையாடுவதே குற்றசெயலாக … Continue reading ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!

“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி

Translated by கவிதா சொர்ணவல்லி தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும். Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், … Continue reading “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி

உறவுகளை கேள்விக்குள்ளாக்கும் அதிரடி எழுத்து; எழுத்தாளர் ஜெயலலிதாவின் நாவல் பற்றிய விமர்சனம்…

அதிஷா முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை. திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும்.  பின்னாளில் அவர் புரட்சித் தலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்! ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது … Continue reading உறவுகளை கேள்விக்குள்ளாக்கும் அதிரடி எழுத்து; எழுத்தாளர் ஜெயலலிதாவின் நாவல் பற்றிய விமர்சனம்…

ஜெயலலிதாவின் உடல்நலமும் சுயநல நோக்கங்களுக்காக நடத்தப்படும் நாடகங்களும்

ஜி. கார்ல் மார்க்ஸ் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலமின்மையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்றன. அவரது நிலை குறித்து விதவிதமான கருத்துகள் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. எல்லோரும் இந்த விஷயத்தில் அதீத மாண்பு காக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தொடங்கி எதிரிக்கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் உட்பட. அப்பல்லோ மருத்துவமனை ஒரு கோட்டையைப் போல பராமரிக்கப்படுகிறது. இதுவரை அவரது உடல்நிலை குறித்து வெளிவந்திருக்கும் எல்லாத் தகவல்களுமே உண்மைக்கும் பொய்க்குமான விளிம்பில் நிற்கின்றன. அந்த செய்திகளைச் சுற்றி உளுத்துப்போன செண்டிமெண்ட் காரணங்கள் … Continue reading ஜெயலலிதாவின் உடல்நலமும் சுயநல நோக்கங்களுக்காக நடத்தப்படும் நாடகங்களும்

அத்தையை பார்க்க விரும்புகிறேன்; மருத்துவமனைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை: ஜெயலலிதா சகோதரர் மகள் வேதனை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமாரின் மகள்   தீபா, டைம்ஸ் ஆப் இந்தியா நாழிதழுக்கு  அளித்துள்ள பேட்டியில் "என்னுடைய மிக பிரியமான அத்தையின் கைகளை பிடித்து "உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவீர்கள்" என்று கூற விரும்புகிறேன்.  ஆனால், என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளார். தனது அத்தையான ஜெயலலிதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விஷயத்தை பத்திரிகை வாயிலாகத்தான் தெரிந்து கொண்டதாகவும்,   தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவமனை வாயிலுக்கு சென்று , உள்ளே அனுமதிக்குமாறு  … Continue reading அத்தையை பார்க்க விரும்புகிறேன்; மருத்துவமனைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை: ஜெயலலிதா சகோதரர் மகள் வேதனை

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து எழுதிய தமிழச்சி மீது வழக்கு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தது முகநூலில் அவதூறான பதிவுகளை எழுதியதாக பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஒருவாரத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை   தமிழச்சி என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் காவல்துறையில் புகார் … Continue reading தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து எழுதிய தமிழச்சி மீது வழக்கு

ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: மருத்துவர்கள் விளக்கம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக கடந்து வாரம் அப்பலோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரடைந்துவருவதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. புதன்கிழமை முதலமைச்சர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும்வகையில் மருத்துவர்கள், “முதலமைச்சர் நலமுடன் உள்ளார்; இன்னும் ஒருசில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். முன்னதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புகிறவர்களை காவல்துறை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளது.

தலைமைச் செயலகமான மருத்துவமனை: காவிரி விவகாரத்தை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் முதலமைச்சர்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர். காவிரி வழக்கில் கர்நாடக அரசு மேலும் 3 நாளைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது குறித்தும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்ததாக இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி … Continue reading தலைமைச் செயலகமான மருத்துவமனை: காவிரி விவகாரத்தை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் முதலமைச்சர்!

வெளிநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: மருத்துவர் குழு மறுப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கப்பட வேண்டிய தேவை இல்லை என அப்பலோ மருத்துவமனை மருத்துவர் குழு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலமைச்சர் வழக்கமான உணமை உட்கொண்டு வருகிறார்; சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தெரிவித்தனர்.

ஜெயலலிதா நலம் பெற்றுத் திரும்ப தலைவர்கள் வாழ்த்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் நலம்பெற்றுத் திரும்ப அரசியல் கட்சித் தலவர்கள் வைகோவும் மு. க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் < div class="mtm _5pco"> உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: < … Continue reading ஜெயலலிதா நலம் பெற்றுத் திரும்ப தலைவர்கள் வாழ்த்து

பத்தி: காவிரி, பாலாறு பிரச்சினையைவிட சசிகலா புஷ்பாவை சிறையில் அடைப்பதுதான் தமிழக அரசுக்கு முக்கியமா?

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயலலிதாவின் ஆட்சி என்பது அதிகார துஷ்பிரயோகத்துக்கு எப்போதுமே பெயர் போனது. கிட்டத்தட்ட அதுவொரு சர்வாதிகார ஆட்சி. அதே சமயம் சுரண்டப்படும் மக்களின் முன்னால், அதுவரை அதிகாரத்தை சுவைத்துக்கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி செருப்பால் அடிப்பதன் மூலம் மக்களை கிளுகிளுப்புக்கு உள்ளாக்குவதும் அவரது வாடிக்கை. இது அவரது எல்லா ஆட்சிக் காலத்திலும் நடக்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் சசிகலா புஷ்பா விவகாரம். அவரது குடும்பத்தினர் மீது, அவர்களது வீட்டில் வேலை செய்தவர்கள் கொடுத்த பாலியல் அத்துமீறல் … Continue reading பத்தி: காவிரி, பாலாறு பிரச்சினையைவிட சசிகலா புஷ்பாவை சிறையில் அடைப்பதுதான் தமிழக அரசுக்கு முக்கியமா?

“ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்”: போயஸ் கார்டன் ரகசியங்களை வெளியிட்ட சசிகலா புஷ்பா

தன்னை அதிமுக தலைமையில் இருக்கும் ஜெயலலிதா, கன்னத்தில் அறைந்ததாக பரபர குற்றச்சாட்டை வைத்தார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. அதிமுக தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிருந்து நீக்கியது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, “சென்னை போயஸ் தோட்டத்தில் நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன் வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு கூட என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இனி … Continue reading “ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்”: போயஸ் கார்டன் ரகசியங்களை வெளியிட்ட சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?; முழுவீடியோ…

நான் துன்புறுத்தப்பட்டேன்; அவர் என்னை அறைந்தார்: ஜெயலலிதா குறித்து சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு முழு வீடியோ... https://youtu.be/yJ59EdA2w00

“ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?”: ஜெ. மீது சசிகலா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

“ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?” என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல், அதிமுக எம்பி சசிகலா புஷ்பா நா தழுதழுக்க குற்றம்சாட்டினார். சனிக்கிழமையன்று டெல்லி விமானநிலையத்தில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கு திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு கைகலப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு குறித்து விமர்சனம் செய்ததால் திருச்சி சிவாவை கன்னத்தில் நான்கு அறைவிட்டதாக சசிகலா ஊடகங்களில் தெரிவித்தார். நான்கு அறையல்ல, ஒரு அறைதான் விட்டார் என திருச்சி சிவா … Continue reading “ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?”: ஜெ. மீது சசிகலா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

“செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்தும் அம்மா என்ற சிங்கமே;பத்திரை மாத்து தங்கமே!”: ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் கவிதை

2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம். தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஜெயலலிதாவை கவிதை வடிவில் புகழ்ந்துரைத்தார். “கனிவு , இரக்கம், ஈகை இலக்கணமாக , மக்களுக்காக துடிக்கின்ற மனித தெய்வமே, மக்களால் நான் , மக்களுக்காகவே நான் என்ற தியாகத்தில் வாழும் சொரூபமே, புடம் போட்ட தங்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில் 6-ம் முறை தமது ஆற்றல் கரங்களில் செங்கோல் ஏந்தி ஆட்சி … Continue reading “செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்தும் அம்மா என்ற சிங்கமே;பத்திரை மாத்து தங்கமே!”: ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் கவிதை

ஸ்வாதிகளும் ராம்குமார்களும் நம் மூளையை ஏன் ஆக்கிரமிக்கிறார்கள்?

வில்லவன் ராம்தாஸ் இதையே பேசிக்கொண்டிருப்பதற்கு சலிப்பாக இருக்கிறது, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை… ராம்குமாரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது, ஆனால் அவரை குற்றவாளி என போலீஸ் சொன்னதும் அப்படியே நம்பிவிடுகிறீர்கள். போலீசைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறீர்கள்... எப்படி? ராம்குமார் மேய்த்த ஆடு, அவரது பக்கத்துவீடு, படித்த பள்ளி என ஒரு இடம் விடாமல் விசாரிக்கும் ஊடகங்கள், கொலை நடந்தபோது அங்கே நின்ற மக்களிடம் (மற்றும் துரத்திச்சென்ற இருவரிடமும்) … Continue reading ஸ்வாதிகளும் ராம்குமார்களும் நம் மூளையை ஏன் ஆக்கிரமிக்கிறார்கள்?

காவல் நிலைய என்கவுண்டர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீடு என்ன?

Marx Anthonisamy ஓசூரில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், அவரது பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்கவும் முதலமைச்சர் ஜெயா உத்தரவிட்டுள்ளார். நன்றிகளையும் பாராட்டுக்களையும் சொல்லிக் கொள்வோம். இது தொடர்பாக சம்பவத்தன்று என்னிடம் எக்ஸ்பிரஸ். ஹிண்டு ஆகிய பத்திரிகைகளில் கருத்துக் கேட்டபோது உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும் என்றுதான் சொன்னேன். கொல்லப்பட்ட காவலரின் மனைவி ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை. பிள்ளைகள் படித்துக் கொண்டுள்ளனர் என்கிற … Continue reading காவல் நிலைய என்கவுண்டர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீடு என்ன?

புதிய மொந்தையில் பழைய கள்: ஜெயலலிதாவின் கோரிக்கைகள் பற்றி கருணாநிதி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  பிரதமரைச் சந்தித்து 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான ஆட்சி அமைந்த போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்று 3-6-2014 அன்று பிரதமரிடம் 31 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்ததோடு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களையும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களையும் சந்தித்து விட்டு சென்னை … Continue reading புதிய மொந்தையில் பழைய கள்: ஜெயலலிதாவின் கோரிக்கைகள் பற்றி கருணாநிதி

ஆர். கே. நகர் மக்களின் குறைகளைக் கேட்க தனி அலுவலர்

ஆர் கே நகர் தொகுதி மக்களின் குறை தொடர்பான மனுக்களை பெற தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், தண்டையார்ப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவின் தனி அலுவலர், வாரந்தோறும் செவ்வாய் அன்று மனுக்களை பெற்றுக்கொள்வார் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் கோவர்த்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி:ஜெயலலிதா உத்தரவு

  சேலத்தில் வசித்துவருபவர் பிரபல இசையமைப்பாளர் கோவர்த்தன் (88). இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா உள்ளிட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் கைராசி, பூவும் பொட்டும், பட்டணத்தில் பூதம் (அந்த சிவகாமி மகனிடம் என்ற பாடல்) உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். வயது முதிர்வு, செவித்திறன் குறைபாடு போன்றவற்றால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். எந்தவித வருவாயும் இல்லாமல் வறுமைச் சூழலில் வாழ்ந்து வருவதால் வாழ்க்கையை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் … Continue reading இசையமைப்பாளர் கோவர்த்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி:ஜெயலலிதா உத்தரவு

பினராயி விஜயனுக்கு ஜெயலலிதா வாழ்த்து!

கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, பினராயி விஜயனுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்று கேரள முதலமைச்சராக  பினராயி விஜயன் பதவியேற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் தலைமையில் கேரள மாநிலம் வளர்ச்சி மற்றும் வளம் நிறைந்ததாக மாறுவதற்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. இன்று ஆளுநரை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது அமைச்சரவை பட்டியலையும் சமர்பித்தார்.  தற்காலிக சபாநாயகராக முன்னாள் அமைச்சர் செ. செம்மலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்கள் பட்டியல்: ஜெயலலிதா- முதலமைச்சர், இந்திய ஆட்சிப்பணி, காவல், உள்துறை ஒ.பன்னீர்செல்வம்- நிதித்துறை நிர்வாக சீர்திருத்தம் திண்டுக்கல் சீனிவாசன்- வனத்துறை எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை செல்லூர் ராஜூ- தொழிலாளர் … Continue reading அதிமுக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல்

“அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார்.  நேர்கண்டவர் செந்தில். ஏன் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவை பார்க்க வந்து மாண்டுபோனவர்கள் பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பாமல் திருமாவளவன் தூங்கியதை திரும்ப திரும்ப காட்டினீர்கள். இதெல்லாம் எங்கள் அணியை சிதைக்கும் முயற்சிதான்” … Continue reading “அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி