அரசியல் சட்டத்தின் ஆட்சியா? அரண்மனையில் வாழும் மன்னராட்சியா?

சி. மதிவாணன் ''மன்னர் இறந்துவிட்டார். மன்னர் நீடூழி வாழ்க'' என்று சொன்னார்கள் என்றால், ராஜ்ஜியத்தின் அதிகாரத்தையும் மன்னரின் சொத்துகளையும் கைப்பற்றப் போகிறார்கள் என்று அர்த்தம். அது மன்னர் ஆட்சியில் சரிதான், வேறு வழியில்லை, இந்த கொள்ளையனுக்குப் பதில் மற்றொரு கொள்ளையன் என்று விட்டுவிடலாம். ஆனால், இது அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் நாடு என்று சொல்கிறார்கள். அரசியல் சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டியவர் உடல் நலம் பற்றி சொல்ல மறுக்கிறார்கள். இருந்தபோதும், கவர்னருக்கு அவர் வாய்மொழியாக அறிவுரை … Continue reading அரசியல் சட்டத்தின் ஆட்சியா? அரண்மனையில் வாழும் மன்னராட்சியா?

உடல் நலம் தேறி வரும் முதலமைச்சர் ஏன் கையெழுத்து போடவில்லை?

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பரங்குன்றம், தஞ்சை மற்றம் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்பாளர்களுக்கு, கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து படிவம் பி வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் இடது கையின் பெருவிரல் ரேகை பதிவு(27-10-2016) செய்யப்பட்டுள்ளது. மேலும் … Continue reading உடல் நலம் தேறி வரும் முதலமைச்சர் ஏன் கையெழுத்து போடவில்லை?

தொடரும் பால்குட பலிகள்!: ராமதாஸ் கண்டனம்

“உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி சேலம் நெய்க்காரப்பட்டியில் நேற்று அதிமுகவினர் நடத்திய பால்குட ஊர்வலகத்தில்  பங்கேற்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். முதலமைச்சர் நலம்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக நடத்தப்படும் நிகழ்வுகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் கவலையளிக்கிறது” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கரைபுரநாதர் கோவிலில் நேற்று நடைபெற்ற இந்த பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாட்டுக்கு அதிமுக … Continue reading தொடரும் பால்குட பலிகள்!: ராமதாஸ் கண்டனம்

சமூக ஊடகங்கள், வலைதள செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோத பாசிசம்!

மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.சி.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை: அப்போலாவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகத்தில் வதந்திகளைப் பரப்பியதாக இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளது தமிழகப் போலீசு. அவர்கள் மீது தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பியதாக 3 சட்டப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் படி ஏழாண்டுகள் வரை அவர்களைச் சிறையிலடைத்துத் தண்டிக்கமுடியும். முதல்வர் உடல் நிலை பற்றி வதந்திகளைப் பரப்பியதாக இதுவரை 50 … Continue reading சமூக ஊடகங்கள், வலைதள செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோத பாசிசம்!

முதலமைச்சர் உடல்நிலை பற்றி பேசினாலே கைது செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல!

முதலமைச்சர் உடல்நிலை பற்றி பேசினாலே கைது செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல  என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கோவையைச் சேர்ந்த  வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களையும் சேர்த்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய கைதுகள் எதையோ திசை திருப்பவும், யாரையோ அச்சுறுத்தவும் செய்யப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா … Continue reading முதலமைச்சர் உடல்நிலை பற்றி பேசினாலே கைது செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல!

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு: திருமாவளவன்

தமிழகத்தில் அதிமுக அரசில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தமிழக அரசை நிலைகுலையச் செய்யவும் நரேந்திர மோடி அரசு முயற்சித்து வருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையானது தமிழக மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் முழுமையாக நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தோம். … Continue reading தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு: திருமாவளவன்

“அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” கவிஞர் சினேகனை பகடி செய்யும் சமூக ஊடகங்கள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து “அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” என்ற பெயரில் கவிதை வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கவிஞர் சினேகன். கவிஞரின் இந்த வீடியோவுக்கு சமூக ஊடகங்களில் பகடிகள் ஏராளமாக உருவாகிக்கொண்டிருக்கின்றன. சிலவற்றை இங்கே தருகிறோம்... https://www.facebook.com/anbudan.in/videos/1106508396132183/ அறிவானந்தம் தமிழன் உருகி கவிதை படிக்குறமாதிரிய முதல்வரை கலாய்த்த ஒரே ஆளு நம்ம கவிஞர் சினேகன் தான். என்னமா பீல்பண்ணி வாசிக்கிறாப்புள்ள. டைனமிக் கல்யாணம் பண்ணி முடிச்சிட்டு அடுத்து இந்த சப்ஜெக்ட் இறங்கிட்டாப்புல. #என்னமா_ஆச்சி_உங்களுக்கு (...ம்ம் உடம்பு … Continue reading “அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” கவிஞர் சினேகனை பகடி செய்யும் சமூக ஊடகங்கள்!

அப்பலோ சென்றது ஏன்? திருமாவளவன் விளக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியது: "மாண்புமிகு முதல்வர்அவர்கள் நலமுடன் இருக்கிறார், விரைவில் குணமடைந்து ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார்" என்று அதிமுகவின் மூத்த தலைவர்களை நான் சந்தித்த போது கூறினார்கள். மருத்துவமனையில் எந்த கெடுபிடியும் இல்லை. இரண்டாவது தளம் முதல்வர் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிற தளமாகும். அங்கேயும் பொதுமக்கள் இயல்பாகவே நடமாடுகிறார்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமான முதல்வர் … Continue reading அப்பலோ சென்றது ஏன்? திருமாவளவன் விளக்கம்

“அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”

ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஏடான மாலெ தீப்பொறி வெளியிட்டுள்ள பதிவு: ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்து கருணாநிதி முதல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அவர் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வாழ்த்துச் சொன்னார்கள். மாபெரும் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திவிட்டதாக அனைவரும் தமக்குத் தாமே முதுகுத் தட்டிக் கொண்டிருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது. அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்! யாருக்கும் எந்த கால … Continue reading “அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”

வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?

மனுஷ்யபுத்திரன் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக காவல்துறை தினமும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்த வதந்திகள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன. இதை யார் பரப்புகிறார்கள்? இவை வைரலாக எப்படி தொடர்ந்து மக்களிடம் சென்று சேர்கின்றன? வதந்திகளை பரப்புவோரின் நோக்கம் என்ன? வதந்திகள் என்பவை தானாக உருவாகின்றவை அல்ல. அவற்றிற்குப் பின்னே திட்டவட்டமான … Continue reading வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?

முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?: கருணாநிதி

தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? என வினவியுள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா  ஒரு வார காலத்திற்கும் மேலாக - கடந்த  22ஆம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்குச்  சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவ மனையிலே இருக்க வேண்டுமென்று அப்பல்லோ … Continue reading முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?: கருணாநிதி

வணக்கம் மிஸ் தமிழச்சி: ஜெயலலிதா குறித்த அவதூறு பதிவுக்கு ஃபேஸ்புக் பிரபலத்தின் வீடியோ!

இணையம் மூலம் பிரபலமானவரான ஃபிரான்சில் வசிக்கும் தமிழச்சி, தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், பலரும் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளை எழுதிவருகின்றனர். இந்நிலையில் தமிழச்சியின் பதிவுக்கு ‘வணக்கம் மிஸ் தமிழச்சி’ என வீடியோ பதிவொன்றை இட்டிருக்கிறார் ஃபேஸ்புக் பிரபலமான ஸ்வாரா வைத்தி.. வீடியோ இணைப்பில் https://www.facebook.com/swaravaithee/videos/10202110641964791/

“முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”: மருத்துவர்கள்

காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமான நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வழக்கமான உணவுகளை உட்கொண்டார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடைய அதிமுக அமைச்சர்கள் பலர்  மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர். தொண்டர்கள்  பலர் குவிந்துள்ளதால் காவல்துறையினர் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி … Continue reading “முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”: மருத்துவர்கள்