க்ரீஷ் கர்னாட்க்கு நீங்கள் செலுத்துவது அஞ்சலியா? விஷமத்தனமா?: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை

அன்புள்ள ஜெயமோகன்.. க்ரீஷ் கர்னாட்டுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி கட்டுரையை படிக்க நேர்ந்தது.. நீங்கள் அவரின் நாகமண்டலா, ஹயவதனா ஆகிய இரண்டு மட்டுமே முழுமையான கலைப்படைப்புகள் என்கிறீர்கள்.. ஒரு ஆளுமையை உங்கள் அளவுகோலில் மதிப்பிடுவது உங்கள் உரிமைதான்.. ஆனால் இந்த அஞ்சலிக்கட்டுரை விஷமத்தனத்தின் முட்களுடன் இருப்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது.. அவர் தகுதிக்கு மீறிய அங்கீகாரங்களைப்பெற்றார் என்றும் அதற்கு காங்கிரஸ் மேலிடத்துடன் அவருக்கிருந்த தொடர்புகளே காரணம் என்றும் விஷம் விதைக்கிறீர்கள்.. சங்பரிவாரங்களின் வகுப்புவாதத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் … Continue reading க்ரீஷ் கர்னாட்க்கு நீங்கள் செலுத்துவது அஞ்சலியா? விஷமத்தனமா?: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை

பார்ப்பனர்களின் அடித்தளங்கள் அப்பழுக்கற்றவையா? ஜெயமோகனுக்கு சுப.உதயகுமாரன் கேள்வி

“சாதிய அமைப்பின் கடந்தகாலக் கொடுமைகளுக்கான” (கவனிக்கவும், “கடந்தகால”) “பொறுப்பை பிராமணர் மேல் சுமத்திவிட்டு” நாமெல்லாம் கழன்றுகொள்கிறோம் என்று குறைபடுகிறார். இதைத்தான் victim-blaming (இரையைக் குறை சொல்வது) என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்?

எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் மிக மெதுவாக பணிபுரியும் வங்கி ஊழியர் ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்து, ஒரு பதிவை எழுதியிருந்தார். அந்தப் பணியாளர் குறித்த அவதூறான பதிவுக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்தது. எழுத்தாளர் ஜெயமோகன அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கேட்டார். எழுத்தாளர் ஜெயமோகனின் இத்தகைய அவதூறு எழுத்துகளுக்கு பின்னணியில் இருக்கும் மனநிலையை விவரித்து மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரை மீது சமூக ஊடகங்களில் விவாதங்கள் நிகழ்ந்தன. இந்த விவாதங்களின் … Continue reading மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்?

களையெடுப்பின் அரசியலும் ஜெயமோகனின் வன்மம் தோய்ந்த அந்த வரிகளும்

Dr.அரவிந்தன் சிவகுமார் "The construction of a lunatic asylum costs 6 million marks. How many houses at 15,000 marks each could have been built for that amount?" "ஒரு மனநலக்காப்பகம் கட்டுவதற்கு 6 மில்லியன் மார்க்குகள் செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே தொகை இருப்பின் 15000 மார்க்குகள் வீதத்தில் எத்தனை வீடுகள் கட்டியிருக்க முடியும்?"- (1934ஜெர்மானிய பள்ளி கணக்கு பாடப்புத்தகத்திலிருந்து) முதலாம் உலகப்போர் முடிந்த தருவாயில், ஜெர்மனியில் ஒரு … Continue reading களையெடுப்பின் அரசியலும் ஜெயமோகனின் வன்மம் தோய்ந்த அந்த வரிகளும்

“ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது”

அறிவழகன் கைவல்யம் இந்திய அரசு அலுவலகங்களில் வேலைத் திறனோ, பாலின வேறுபாடுகளோ, வேகமோ கணக்கில் வராது, இங்கே கணக்கில் வருவது அந்த அலுவலகத்தின் குறுக்கு அதிகார வழிமுறை மட்டுமே, சிலரை அலுவலகத்திலேயே மடக்கலாம், சிலரை வீட்டில், இன்னும் சிலரை உணவகங்களில், ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சட்டப்பூர்வமான நெறிகளைத் தாண்டி ரகசிய செயல்திட்டமும், கூட்டுப் பணப் பொதித் திட்டங்களும் உண்டு. இது ஒரு சங்கிலித் தொடர், இந்த சங்கிலித் தொடர் மாநில அரசின் தலைமைச் செயலகம் முதற்கொண்டு சட்டப்பேரவை வரையில் … Continue reading “ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது”

வங்கிப் பணியாளர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? வெளியான தகவல்

எழுத்தாளர் ஜெயமோகன், மெதுவாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு வங்கிப் பணியாளரின் வீடியோவைப் போட்டு அதுகுறித்து ‘தேவாங்கு’ எனும் பெயரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். இதுகுறித்து டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அது பரவலாகப் பகிரப்பட்டு,  சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், வங்கிப் பணியாளரை தேவாங்கு என்றும் ஒருமையில் விளித்து எழுதியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வங்கிப் பணியாளர் குறித்து, தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் பிரேமலதா ஷிண்டே என்றும் … Continue reading வங்கிப் பணியாளர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? வெளியான தகவல்

“கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு!” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன் 

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு வங்கி ஊழியர் குறித்து இப்படிச் சொல்கிறார் ’தேவாங்கு’. செந்தில்ராஜ் என்பவர் வங்கி ஊழியர் ஒருவர் (அநேகமாக அவர் ஏதேனும் மருத்துவ பிரச்சினைக்கு ஆளானவராக இருக்கலாம்) மிக மெதுவாக வேலைப் பார்க்கும் வீடியோ ஒன்றை அனுப்பி அது குறித்து ஜெயமோகனிடம் கருத்து கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் எழுதியவை: “நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் … Continue reading “கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு!” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன் 

“பெண்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் ஏன் இந்த கதகளி?”: ஜெயமோகனின் விமர்சனப் பதிவுக்கு சிங்கப்பூர் எழுத்தாளரின் எதிர்வினை

கடந்த மூன்று நாட்களாக எழுத்தாளர் ஜெயமோகன் குறித்தும் சிங்கப்பூர் எழுத்தாளர் குறித்தும் முகநூலில் தமிழ் எழுத்தாளர்கள்-வாசகர் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் குறித்து தொடர் பதிவுகளை தனது வலைத்தளத்தில் எழுதிவருகிறார். இதில் சிங்கப்பூர் எழுத்தாளர் சூர்ய ரத்னா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். அந்தப் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதில் எழுத்தாளர் சூர்ய ரத்னா எழுத்தின் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டதாக தெரிகிறது.  இதற்கு எதிர்வினையாக சூர்ய ரத்னா, பதிவு எழுதியதோடு தனக்கு அவமரியாதை தரும்விதமாக … Continue reading “பெண்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் ஏன் இந்த கதகளி?”: ஜெயமோகனின் விமர்சனப் பதிவுக்கு சிங்கப்பூர் எழுத்தாளரின் எதிர்வினை

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் விகடன் தடம் இதழுக்கு அளித்த நேர்காணலில் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை” என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் ‘நஞ்சுண்ட காடு’ நாவலின் ஆசிரியரான் குணா. கவியழகன், ஜெயமோகனுக்கு பகிரங்க விவாத அழைப்பை விடுத்திருக்கிறார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில், “எழுத்தாளர் திரு.ஜெயமோகன் விகடன் தடம் இதழின் பேட்டியில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லை என கூறியிருக்கிறார். இந்த கருத்துத் தொடர்பில் ஒரு பகிரங்க விவாதத்திற்கு திரு.ஜெயமோகனை அழைக்கிறேன். அரசறிவியல் … Continue reading இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு

“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”

டி. எம். கிருஷ்ணாவின் மகஸேசே விருது மற்றும் அதை பற்றிய ஊடக விமர்சனங்களை பற்றி ஊரூர் ஆல்காட் குப்பத்தின் தெளிவுபடுத்தல் ச. பாளையம், கா. சரவணன், ரா. வேலன் (மேலே குறித்த எழுத்தாளர்கள் ஊரூர் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், மற்றும் மீனவ கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள். ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவின் ஒருங்கிணைப்பில் மூவருக்கும் முக்கிய பொறுப்புகள் மற்றும் பங்கு உள்ளன.) நாங்கள் இந்த ஊரூர் ஆல்காட் குப்பத்து மக்களின் சார்பாக எழுதுகிறோம். ராமன் மகசேசே விருதுக்கு எழுத்தாளர் … Continue reading “எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”

ஜெயமோகனை போலவே எனக்கும் இசையைப்பற்றி ஒன்றும் தெரியாது: மனுஷ்யபுத்திரன்

கர்நாடக இசைப்பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு ரமோன் மகஸேசே விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்து எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன். தனது முகநூல் எழுதியுள்ள பதிவில், “ஜெயமோகனை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒருவர் நிதானமிழக்கும்போது எந்த அளவிற்கு செல்வார் என்பதற்கு திரும்பத் திரும்ப காணக்கிடைக்கும் உதாரணமாக அவர் இருக்கிறார். டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே விருது அளிக்கப்பட்டதை அவர் கடுமையாக தாக்குகிறார். ’’சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட … Continue reading ஜெயமோகனை போலவே எனக்கும் இசையைப்பற்றி ஒன்றும் தெரியாது: மனுஷ்யபுத்திரன்

“இந்தக் குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை”: டி. எம். கிருஷ்ணாவுக்கு மகஸேசே விருது குறித்து ஜெயமோகன்

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகசசே விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எழுத்தாளர் ஜெயமோகன் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே என்ற பெயரில் தனது வலைத்தளத்தில் பதிவொன்றை எழுதியிருக்கிறார். அதில் டி. எம். கிருஷ்ணா மிக மிக சுமாரான பாடகர் என்றும் தி ஹிந்து நாளிதழின் துணையால்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். பதிவு கீழே தரப்பட்டுள்ளது: டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில் வந்தது. உண்மையில் இவ்விருது எதற்காக என்றே புரியவில்லை. அவர் ஒரு பாடகர், அதற்காக என்றால் தமிழில் இன்று … Continue reading “இந்தக் குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை”: டி. எம். கிருஷ்ணாவுக்கு மகஸேசே விருது குறித்து ஜெயமோகன்

“குமரகுருபரன் ஒவ்வொரு நாளும் சின்னச்சின்னத் தற்கொலைகளையே செய்துகொண்டிருந்தார் என்று படுகிறது”: ஜெயமோகன்

  ஜெயமோகன் இப்போது பாரீஸில் இருக்கிறேன். காலை ஆறுமணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கவிஞர் கதிர்பாரதி பேசினார். குமரகுருபரன் மறைந்தார் என்று அவர் சொன்னபோது நெடுநேரம் யார் என்றே புரியவில்லை. மறையக்கூடியவர்கள் என்று சிலரை நம் மனம் கணக்கிட்டிருப்பதில்லை. புரிந்ததும் இறப்புச்செய்திகள் அளிக்கும் வெறுமை, சலிப்பு, எவரிடமென்றில்லாத ஒரு கோபம். தொலைதூர அயல்நிலத்தில் இறப்புச்செய்தியைக் கேட்பது மேலும் அழுத்தம் அளிக்கிறது. மனுஷ்யபுத்திரன் காலையிலேயே அழைத்திருந்தார். அதைப்பார்த்தபோது உடனே பேசவேண்டும் என்று மனம் எழுந்தது. பின்னர்  மீண்டும் சலிப்பு. … Continue reading “குமரகுருபரன் ஒவ்வொரு நாளும் சின்னச்சின்னத் தற்கொலைகளையே செய்துகொண்டிருந்தார் என்று படுகிறது”: ஜெயமோகன்

“ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்?

புத்தக வெளியீடுகள் அதிகமாக நடக்கும் காலக்கட்டங்களில் சர்ச்சைகளுக்கும் குறைவு இருப்பதில்லை. அண்மையில் கோவையில் உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு விழா நடத்தியது. இந்த விழாவில் உயிர்மை மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.  இந்தக் குழு கோவை அருகே மசினகுடியில் தங்கியிருந்தபோது, அங்கு நடந்த விவாதத்தில் சாருநிவேதாவை, குமரகுருபரன் அடிக்க கிளம்பியதாக சமூக வலைத்தளங்களில் எழுதிய சிலர், குமரகுருபரனை ‘200 கிலோ’ என உருவத்தைப் பற்றிய தாழ்ந்த பதிவுகளையும் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து மனுஷ்ய … Continue reading “ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்?

திருமண அழைப்பிதழ் அனுப்பிய தமிழ் முஸ்லீமுக்கு ஜெயமோகனின் பதில்!

சமீபத்தில் வகாபியம் குறித்த கட்டுரையை ஆதரித்து தனது இணையதளத்தில் பதிவு வெளியிட்டிருந்த ஜெயமோகன், “கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது” என எழுதியிருந்தார். ஜெயமோகனின் முழு பதிவும் இங்கே.. ஜெயமோகனின் கருத்து வினையாற்றும் வகையில் துபாயில் வசிக்கும் புஹாரி ராஜா தன்னுடைய அழைப்பிதழை ஜெயமோகனுக்கு அனுப்பியிருந்தார். அழைப்பிதழ் … Continue reading திருமண அழைப்பிதழ் அனுப்பிய தமிழ் முஸ்லீமுக்கு ஜெயமோகனின் பதில்!

’என்னை முஸ்லிம்கள் திருமணத்துக்கூட அழைப்பதில்லை’ என்ற எழுத்தாளர் ஜெயமோகனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பினார் ஒரு தமிழ் முஸ்லீம்!

சமீபத்தில் வகாபியம் குறித்த கட்டுரையை ஆதரித்து தனது இணையதளத்தில் பதிவு வெளியிட்டிருந்த ஜெயமோகன், “கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது” என எழுதியிருந்தார். ஜெயமோகனின் முழு பதிவும் இங்கே.. ஜெயமோகனின் கருத்து வினையாற்றும் வகையில் துபாயில் வசிக்கும் புஹாரி ராஜா தன்னுடைய அழைப்பிதழை ஜெயமோகனுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து … Continue reading ’என்னை முஸ்லிம்கள் திருமணத்துக்கூட அழைப்பதில்லை’ என்ற எழுத்தாளர் ஜெயமோகனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பினார் ஒரு தமிழ் முஸ்லீம்!

“ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்”: ஜெயமோகன் சொல்லும் தேர்தல் கூட்டணி ‘ரகசியம்’

பாஜகவுடன் திமுக கூட்டணி குறித்து பரபரப்பு கிளம்யிருக்கும் சூழலில் எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய  வலைப்பக்கத்தில், “ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்” என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து வாசகர் ஒருவரின் கேள்விக்கு  ஜெயமோகன் அளித்த பதில்... “அன்புள்ள செல்வராஜ், இதைவிட ‘அனல்பறந்த’ பாராளுமன்றத்தேர்தலிலேயே நான் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு இந்த அரசியலில் தரப்பே எடுக்கமுடியவில்லை. காரணம் பேசப்படுவன அனைத்தும் பொய்யான மிகைநாடகங்கள் என அறிவேன். உள்ளே நடப்பதை எவராவது என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக … Continue reading “ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்”: ஜெயமோகன் சொல்லும் தேர்தல் கூட்டணி ‘ரகசியம்’

பத்ம விருது மறுப்பு:ஜெமோவின் தனிமனித சுதந்திரத்தை சிதைக்கிறார்களா இணைய விமர்சகர்கள்?…

குமரகுருபரன்  ஜெயராமன் இது ஜெயமோகனுக்காக எழுதப்படும் கட்டுரை அல்ல. எனினும் அவரும் ஒரு தமிழ் எழுத்தாளரே என்கிற உண்மையின் அடிப்படையில் இதை அவருக்காக எழுதப்படும் ஒன்று எனவும் கொள்ளலாம். தூய இலக்கியம் என்கிற ஒன்று இன்னமும் இருக்கிறது,ஒவ்வொரு எழுத்தாளனும் தனது வாழ் லட்சியமாக அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறான் எம்மொழியிலும். தன்னுடைய முதல் வரியை எழுதும் எவனும் விருதைப் பற்றி யோசிப்பதில்லை. கடைசி வரியின் போதும். மூன்று தளங்கள் சாத்தியப் படுகின்றன,ஒரு எழுத்தாளனுக்கு,அவனது எழுதும் சூழலில். … Continue reading பத்ம விருது மறுப்பு:ஜெமோவின் தனிமனித சுதந்திரத்தை சிதைக்கிறார்களா இணைய விமர்சகர்கள்?…

டிவிட்டரில் கமல்ஹாசன் யாரை பின்தொடருகிறார் தெரியுமா? : பட்டியல் இதோ…

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் ஏற்கனவே கணக்கு வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன், டிவிட்டரிலும் இணைந்தார்.   https://twitter.com/ikamalhaasan/status/691984748223139841 ஏற்கனவே முப்பது லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை வைத்திருக்கும், சமூக ஊடக பிரபலமான  ஸ்ருதிஹாசன், டிவிட்டரில் புதிதாக இணைந்துள்ள தன்னுடைய  தந்தையை வரவேற்றுள்ளார். டிவிட்டரில் இணைந்த சில மணி நேரங்களில் கமல்ஹாசனை 25 ஆயிரம் பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர்.  ஆனால், கமல்ஹாசன் யாரை பின்பற்றுகிறார் என்று தெரிய வேண்டுமா ?? WinningWriters.com, Democracy At Work, Charlize Theron, Ryan … Continue reading டிவிட்டரில் கமல்ஹாசன் யாரை பின்தொடருகிறார் தெரியுமா? : பட்டியல் இதோ…

விருது மறுப்பின் அரசியல்:தானே வெட்டிய குழிக்குள் விழுந்த ஜெயமோகன்…

ஜி.கார்ல் மார்க்ஸ் ஜெயமோகன் பத்மஸ்ரீ விருதை மறுத்தவுடன், எனது நண்பர்கள் சிலர் கண்ணீருடன் நெகிழ்ந்திருந்தனர். ஜெமோவின் மாமனாருக்கும் மாமியாருக்கும் கூட விருதை மறுத்ததில் வருத்தம்தான் என்று அவரே பதிவு செய்திருந்ததால், அந்த ஈரத்தில் நானும் நனைந்து போனேன். விருதுக்காக முயற்சி செய்த நண்பர்களுக்கு கூட ஜெமோ வருத்தம் தெரிவித்திருந்த பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. நான் இந்த அரசு தரும் எந்த விருதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவர் முன்பே அறிவித்திருந்தார். பிறகு ஏன் அவரது நண்பர்கள் அது தெரியாமல் விருதுக்கு … Continue reading விருது மறுப்பின் அரசியல்:தானே வெட்டிய குழிக்குள் விழுந்த ஜெயமோகன்…

பத்மஸ்ரீ விருதை மறுத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்: அவதூறான விமர்சனங்களைத் தவிர்க்கவே இந்த முடிவெடுத்ததாக விளக்கம் …

கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு, வருடா வருடம் மத்திய அரசால்  வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதை, வேண்டாமென்று பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மறுத்துள்ளார். இது பற்றி அவர் தனது வலைதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் "பத்மஸ்ரீ" விருதுக்காக மணிரத்னம் உள்ளிட்ட பலர் தன்னை பரிந்துரை செய்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் " இன்று (ஞாயிறு) மாலை ஆறரை மணிக்கு டெல்லியில் இருந்து கலாச்சாரத்துறை உயரதிகாரியான சௌகான் என்பவர் அழைத்து வரும் குடியரசுதினத்தில் தனக்கு பத்மஸ்ரீ அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தாக"  எழுதியுள்ளார். இதையடுத்து "சௌகானிடம், தனக்கு விருது வேண்டாம் என்று மறுத்ததாகவும்" ஜெயமோகன் தன்னுடைய … Continue reading பத்மஸ்ரீ விருதை மறுத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்: அவதூறான விமர்சனங்களைத் தவிர்க்கவே இந்த முடிவெடுத்ததாக விளக்கம் …