ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்

எழுத்தாளர் ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் ``...இவர்கள் (ஆர்எஸ்எஸ்) பேசுகிற அறிவார்ந்த பண்பாட்டுப் (புரட்டுப்) பேச்சுக்களுக்குத் தமிழர்கள் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். ஆனாலும் இந்திய அரசியலில் இவர்களுக்குப் பின்பலமாக இருந்து ஊக்கி விடுபவர்களையும், இவர்களது அன்னிய சர்வதேசத் தொடர்புகளையும், கருத்துக்களையும் பார்க்கிறபோது மறுபடியும் ஒரு சவாலைச் சந்திக்க நமது மக்கள் காந்திஜியின் மார்க்கத்தில் ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்கிறேன். இவர்களை எதிர்த்தும், இவர்களது மதநெடி வீசுகிற கருத்துக்களைக் காறித் துப்பியும், வெறும் ஹிந்து வீரம் பேசி மதத் துவேஷம் … Continue reading ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்

‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !

எழுத்தாளர் ஜெயகாந்தன், கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது,எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.‘ என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.எவ்வளவு தீர்க்கமான பார்வையுடன் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் பிறந்த நாளை ( ஏப்ரல் 24) முன்னிட்டு வாசகர்களுக்காக தருகிறோம். ...................................................................................................... `ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது. 1945, 46, … Continue reading ‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !

“சென்னையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியவை என்னைப் பொறுத்தவரை ஆபாசம்”: எழுத்தாளர் கரன் கார்க்கி

“சென்னையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியவை என்னைப் பொறுத்தவரை ஆபாசம்” என்கிறார் கறுப்பர் நகரம் நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் கரன் கார்க்கி. தி டைம்ஸ் தமிழ் இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அவர் இதைத் தெரிவித்துள்ளார். வீடியோ இணைப்பு கீழே... https://youtu.be/WbjIEyy9qkQ    

“கம்யூனிஸ்டுகளை சினிமாவுக்குள் வளரவிடக்கூடாது”: சொன்னவர் ஒரு மூத்த ‘திராவிட’ நடிகர்!

வாசுதேவன் ஜெயகாந்தனுக்கும் திரைப்படத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ்த் திரைப்படத்துறை வணிக கரங்களில் சிக்குண்டதால், ஜெயகாந்தன் போன்ற கலைஞர்களால் தாக்குபிடிக்கமுடியவில்லை. வங்காளத்திலும், கேரளத்திலும் இன்றும் சீரியஸ் திரைப்படங்கள் வருகிறது. அங்கே இதற்கு வளமான மரபு உண்டு. தமிழ்நாட்டிலும் இதற்காக 1950 களிலே ஜெயகாந்தன் மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்களால் போட்ட அஸ்திவாரம், அப்போதே ஆபத்தை உணர்ந்த பெரும் வணிக முதலாளிகளால் அடித்து நொறுக்கப்பட்டது. இதைப்பற்றி அறந்தை நாராயணன் ‘தமிழ் சினிமாவின் கதை என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். 1959ம் … Continue reading “கம்யூனிஸ்டுகளை சினிமாவுக்குள் வளரவிடக்கூடாது”: சொன்னவர் ஒரு மூத்த ‘திராவிட’ நடிகர்!

#சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா?

தமயந்தி உயிர்மையில் இமையத்தின் கதை படித்தேன்...துபாய்காரன் பொண்டாட்டி. பெண்களின் கதையை , வாழ்க்கையை பெண்கள் மூலமாகவே சொல்லி பெண்களை சாவடிக்கும் கதை. இன்னொருவனுடன் இருந்த, அவனாலேயே அவமானப்படுத்தப்பட்ட துபாய்காரன் பொண்டாட்டி என்ன செய்ய வேண்டும்? அவனோடு படுத்தாயே என்று முலையை அடிக்க வேண்டும். தண்டவாளத்தில் தலை வைத்து சாக வேண்டும். துபாய்காரன் வீட்டுக்கு வருகிறான். எதுக்கு வருகிறான்.. விஷயம் தெரிந்தா என்று பயப்படும் பத்மாவதி இப்படி நினைக்கிறாள்..." எடுத்ததுமே அடிப்பானா......எது செய்தாலும் தடுக்க முடியாது. ஊர் மெச்ச தாலி … Continue reading #சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா?