தாமிர பரணி ஆற்று நீரை மீட்க சத்தியாகிரக போராட்டம்!

தாமிரபரணி நீரை பன்னாட்டு குளிர்பானக் கம்பெனிகள் எடுத்துக் கொள்ளலாம் எனத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் நேரில்வந்து தாமிரபரணி ஆற்றைப் பார்வையிட வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பேசினார்.நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் … Continue reading தாமிர பரணி ஆற்று நீரை மீட்க சத்தியாகிரக போராட்டம்!

நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கொடியேற்றத்துடன் துவக்கம்

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு நவ.7ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், … Continue reading நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கொடியேற்றத்துடன் துவக்கம்

பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

“நடப்பாண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி முற்றிலும் செய்யப்படவில்லை. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் படி தண்ணீர் திறக்காததாலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடாததாலும் இவ்வாண்டு சம்பா சாகுபடியும் டெல்டா பிரதேசத்தில் முழுமையாக செய்யப்படவில்லை. ஒரு பகுதி விவசாயிகள் நாற்று விட்டு நடவு செய்வதற்கு பதிலாக நேரடி நெல்விதைப்பு செய்தனர். இதற்கும் போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்காததால் நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்ட சம்பா பயிரும் பெரும்பான்மையாக … Continue reading பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகம் வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆர். எஸ். எஸ். கொலை மிரட்டல்!

தமிழகம் வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆர். எஸ். எஸ். அமைப்பினர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகார் மனுவை தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு அளிக்கப்பட்டது. அம்மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள்: “அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக விவசாயிகள் சந்திக்கிற முக்கிய பிரச்சனைகளான விவசாயத்தை பாதுகாப்பது, … Continue reading தமிழகம் வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆர். எஸ். எஸ். கொலை மிரட்டல்!

கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு சுமார் 5ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை இங்கேயே பாதுகாத்து ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென தமுஎகச மற்றும் சமூக ஆர்வலர்கள், கீழடி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இவர்களது கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் … Continue reading கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலையானதை அடுத்த நடத்தப்பட்ட வன்முறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22.9.2016 இரவு கோவை துடியலூர், சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த திரு. சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது. ஆனால், இந்தக் கொலையைப் பயன்படுத்தி இந்து … Continue reading கோவை வன்முறைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

மக்கள் பாடகர் திருவுடையான்: அஞ்சலி!

தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான் (48) சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு காரில் திரும்பி சென்ற போது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அவருடன் காரில் சென்ற அவரது சகோதரரும், ஓட்டுநரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திலேயே திருவுடையான் உயிரிழந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. “இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தோழர் திருவுடையான் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் … Continue reading மக்கள் பாடகர் திருவுடையான்: அஞ்சலி!

8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

  பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் … Continue reading 8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

பொதுவுடமைவாதிகள் சுயநல அடிப்படையில் முடிவு எடுப்பதில்லை: திமுக தலைவருக்கு ஜி. ராமகிருஷ்ணன் பதில்

திமுக தலைவர் கருணாநிதி கம்யூனிஸ்டுகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லை என வருத்தப்படுவதாக கேள்வி பதில் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பதில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.  “திமுக தலைவர் கலைஞர் அவர்கள் 27.7.2016 முரசொலி ஏட்டில் “பொதுவுடமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டு காலமாக ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய் மூடப்பட்டுவிட்டதே” என்று கேள்வியெழுப்பி, அதற்கு பதிலாக, “அதைப்பற்றி நாம் கூறினால் … Continue reading பொதுவுடமைவாதிகள் சுயநல அடிப்படையில் முடிவு எடுப்பதில்லை: திமுக தலைவருக்கு ஜி. ராமகிருஷ்ணன் பதில்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மனைவியுடன் சென்று வாக்களித்தார்

சென்னை ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளியில் CPIM மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார். இதேபோல் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான உ. வாசுகியும் க. பீம்ராவும் வாக்களித்தனர். படங்கள்: கவாஸ்கர்.

சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

கார்ட்டூனிஸ்ட் பாலா இரு தினங்களுக்கு முன் கவிஞர் சல்மா அவர்கள் பதட்டமாக போனில் தொடர்பு கொண்டார். அவருக்கு தெரிந்த ஒரு காதல் தம்பதியை பிரித்து பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் செய்ய முயற்சி நடக்கிறது.. ஏதாவது உதவ வாய்ப்புண்டா என்று கேட்டார். இதுபோன்ற பஞ்சாயத்துகளை கவனிக்கும் சாகசம் என்ற அமைப்பினரின் தொடர்பு எண் கொடுத்தேன். அதன்பிறகு எப்படியோ காவல்துறையினர் மூலம் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியிருக்கிறார்கள். காதலுக்கு குறுக்கே நிற்கும் வழக்கமான சாதி பிரச்னைதான் இந்த காதல் தம்பதியை பிரிக்க முயற்சிப்பதற்கும் … Continue reading சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

“அதிமுகவை விமர்சிக்க அச்சமும் இல்லை; ஊழல் வழக்குகள் மிச்சமும் இல்லை!”

திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவை நேரடியாக விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அச்சம் என்று குறிப்பிட்டுள்ளார். “இரண்டு திராவிடக் கட்சிகளுடைய ஆட்சியில் ஏழையெளிய மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், அவர்களின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். 1967ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 1977ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 1980ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 1989ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 2006ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும் … Continue reading “அதிமுகவை விமர்சிக்க அச்சமும் இல்லை; ஊழல் வழக்குகள் மிச்சமும் இல்லை!”

“வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5000 தலித்துகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மரணம் அடைவதாக தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஸ்தாஸ் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் … Continue reading “வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

மதுரை மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திருமா என்னதான் பேசினார்?

மதுரையை அடுத்த ஒத்தக்கடையில், மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் … Continue reading மதுரை மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திருமா என்னதான் பேசினார்?

“சகாயம் அறிக்கை குறித்து கருணாநிதி ஏன் மவுனம் சாதிக்கிறார்?”

“சகாயம் அறிக்கை குறித்து கருணாநிதி ஏன் மவுனம் சாதிக்கிறார்?” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் 18.12.2015 பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில், “தற்போதைய மழை நீர் வெள்ள பிரச்சனைக்கு ஒரு சிலர் திமுக ஆட்சியையும் சேர்த்து குறை சொல்கிறார்களே?, குறிப்பாக “நால்வர் அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனே சொல்லியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பி அதற்கு “அதிமுக அரசை நேரடியாக விமர்சிக்க அஞ்சுபவர்கள், … Continue reading “சகாயம் அறிக்கை குறித்து கருணாநிதி ஏன் மவுனம் சாதிக்கிறார்?”

விஜயகாந்துடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்!?

கடந்த வாரம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த விஜயகாந்த், “மக்கள் நலக் கூட்டணி ஊழல் கறைபடியாத கட்சிகளை உள்ளடக்கி இருக்கிறது. அதன் செயல்பாடுகள் மெச்சும்படி இருக்கின்றன” என்று பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, “தேமுதிக தலைவர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்” என மீண்டும் அழைப்பு விடுத்தார். இதேபோல் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனும் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். … Continue reading விஜயகாந்துடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்!?