தோற்றுப்போன மோடியின் இராணுவ அஸ்திரம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்பாராத திருப்பமாக நடந்து முடிந்திருக்கிறது பாக் தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல். அரசு நிறுவனங்களின் இறுக்கத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் மக்கள் அபிநந்தனின் விடுதலையை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்பா, மகன், சிறைபிடிக்கப்பட்டிருக்கும் இந்திய வீரன் போன்ற அவர் மீதான பிம்பங்கள் ஊதப்பட்டதில், மோடி ஊதிப்பெருக்க விரும்பிய “இந்திய பராக்கிரமம்” எனும் பிம்பம் அதன் வசீகரத்தை இழந்து மூலையில் சாத்தப்பட்டதுதான் இந்த சம்பவத்தின் துயரம். இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுவது, நாற்பது … Continue reading தோற்றுப்போன மோடியின் இராணுவ அஸ்திரம்!

அம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா?

ஜி. கார்ல் மார்க்ஸ் பெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம்மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், வயலில் வேலை செய்யும் ஆட்கள் என வாரத்தில் இரண்டு நாட்களுக்கு குறைந்தது … Continue reading அம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா?

குடும்பம்தான் பெண்களுக்கு பாதுகாப்பா? இமையம் கருத்துக்கு ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்வினை

வன்முறையும் அரவணைப்பும் சேர்ந்தே குடும்பம் எனும் அமைப்பாக உருக்கொள்கிறது. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. குடும்பம் என்கிற அமைப்பிற்குள் இல்லாமல் அதன் சாதகங்களை அனுபவிக்க முடியாது என்பதே அதன் அபத்தம்

தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!…

ஜி. கார்ல் மார்க்ஸ் திமுக மீதான சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்கள் ஒன்றும் தமிழக அரசியலில் புதிதல்ல. அண்ணாவின் காலத்தில் அது முதலியார் கட்சி என்று விமர்சிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தேர்தலில், அண்ணாவின் சாதியப் பின்னொட்டுடன் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் அடிக்கப்பட்டபோது, “எங்கிருந்து புதிதாக முளைத்தது இந்த முதலியார் என்னும் வால்...” என்று பெரியார் விமர்சித்ததெல்லாம் ஆவணமாக இருக்கிறதுதான். திகவில் இருந்து பிரிந்து வெகுஜன தேர்தல் கட்சியாக திமுக வெளியேறிய போதே அதன் சமரசங்கள் தொடங்குகின்றன. இது திகவுக்கும் … Continue reading தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!…

கதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன்? அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் ?…

இந்த விவேகம் திரைப்படம் தொடர்பான செய்திகளையும் விவாதங்களையும் சமூக ஊடகங்களில் கவனிக்கையில் ஒன்று மட்டும் தெரிகிறது. நமக்கு சினிமா என்பது மதம். நடிகர்கள் கடவுள்கள். நமக்குப் பிடித்த கதை நாயகர்களை யாராவது விமர்சித்துவிட்டால் நாம் மிக ஆழமாகக் காயமடைகிறோம். அவ்வாறு விமர்சிப்பவர்களை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ காயப்படுத்த விரும்புகிறோம். குறைந்த பட்சம் நாம் இயங்கும் சைபர் வெளியிலாவது  ரத்தம் தெறிக்கவைத்தால்தான் நமக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அளவில் குறைந்தது என்றாலும் ஒருவித “தணிக்கை மனநிலையை” நோக்கி … Continue reading கதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன்? அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் ?…

பணம் சேர்ப்பது மட்டும் ஊழல் அல்ல என்பதை கமல் அறியாதவறா?

அங்கீகரிக்கப்பட்ட தார்மீக நெறிகளுக்கு மாறாக விலகி ஒன்றைச் செய்வதே ஊழல்தான். தமது வலதுசாரி சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்கும் விதத்தில் தமிழகத்தில் ஒரு ஊழல் அரசை பராமரித்து காப்பாற்றிவரும் மத்திய ஆளும் அரசின் செயல் ஊழலே. எதன் பொருட்டு மக்கள் வாக்களித்தார்களோ அதற்கு மாறாக கொல்லைப்புற பேரத்தின் வழியாக ஆட்சியை மாற்றுவதும் ஊழலே.

கருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்!

நாடு முழுக்க ஒரு வலது சாரி அச்சம் படர்ந்துகொண்டிருக்கும் வேலையில் அவர் பெயரால் நிகழும் இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு நகர்வு.

சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?

ஜி. கார்ல் மார்க்ஸ் சசிகலாவிடம், “ நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று தொண்டர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் வலியுறுத்துவதாகவும், அவர் இன்னும் ஜெயலலலிதாவின் மரணத்தில் இருந்து மீளாத துயரத்தில் இருப்பதாகவுமான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அத்தகைய நாடகம் கடுமையாக விமர்சிக்கவும் படுகிறது. கட்சியின் ஒரு பிரிவு தொண்டர்களால் சசிகலாவின் உருவம் பெரிதுபடுத்தப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதே. ‘ஜெயலலிதா’ இறந்து விட்டிருக்கிற ஒரு துயரார்ந்த சூழலில், அடுத்த தலைமைக்கான உடனடி நகர்வுகளை கட்சியின் தீவிரத் தொண்டன் … Continue reading சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?

ஜெயலலிதா ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார்?

ஜி. கார்ல் மார்க்ஸ் நேற்று மதியம் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கிளம்பினேன். மேல்மருவத்தூரைக் கடக்கும்போது, சாலையில் பதட்டத்தை உணர்ந்தேன். வாகனங்கள் தறிகெட்ட வேகத்தில் செல்லத்தொடங்கின. அப்போதுதான், ஜெயலலிதா இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி ஒலிபரப்பப் படுவதாக வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். சென்னையை நோக்கி வந்த வாகனங்கள், சென்னையில் இருந்து வெளியேறிய வாகனங்கள் எல்லாமே அதீத அச்சத்தில் சென்றுகொண்டிருந்ததை உணரமுடிந்தது. நிறைய பேருந்துகள் உடனே நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் சாலையின் இருபுறமும் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து செல்வதையும் காண முடிந்தது. என்ன … Continue reading ஜெயலலிதா ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார்?

ஜெயலலிதாவின் உடல்நலமும் சுயநல நோக்கங்களுக்காக நடத்தப்படும் நாடகங்களும்

ஜி. கார்ல் மார்க்ஸ் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலமின்மையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்றன. அவரது நிலை குறித்து விதவிதமான கருத்துகள் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. எல்லோரும் இந்த விஷயத்தில் அதீத மாண்பு காக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தொடங்கி எதிரிக்கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் உட்பட. அப்பல்லோ மருத்துவமனை ஒரு கோட்டையைப் போல பராமரிக்கப்படுகிறது. இதுவரை அவரது உடல்நிலை குறித்து வெளிவந்திருக்கும் எல்லாத் தகவல்களுமே உண்மைக்கும் பொய்க்குமான விளிம்பில் நிற்கின்றன. அந்த செய்திகளைச் சுற்றி உளுத்துப்போன செண்டிமெண்ட் காரணங்கள் … Continue reading ஜெயலலிதாவின் உடல்நலமும் சுயநல நோக்கங்களுக்காக நடத்தப்படும் நாடகங்களும்

காதல் புனிதங்களின் மீது நிகழ்த்தப்படும் கொலைகள்: ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ் காதல் என்ற பெயரில் அடுத்தடுத்து பெண்கள் மீதான நான்கு வன்முறைகள். அதில் இரண்டு அப்பட்டமான கொலைகளாக முடிந்திருக்கிறது. முதலில் இவற்றை ‘காதல் கொலைகள்’ என்று வகைப்படுத்துவதே தவறு. இதில் காதல் என்பதே கிடையாது. நமது ‘இளைஞர் திரள்’ காதல் என்று நம்பும் ஒன்றின் உள்ளீடற்ற மூர்க்கமே இத்தகைய கொலைகள். முன்பெல்லாம் காதல் சார்ந்த தற்கொலைச் செய்திகள்தான் காணக்கிடைக்கும். இப்போது அவை குறைந்திருக்கின்றன. இதன் பொருள் தற்கொலைகள் குறைந்துவிட்டன என்பதல்ல. அவை காதலித்தவளின் மீதான … Continue reading காதல் புனிதங்களின் மீது நிகழ்த்தப்படும் கொலைகள்: ஜி. கார்ல் மார்க்ஸ்

பத்தி: காவிரி, பாலாறு பிரச்சினையைவிட சசிகலா புஷ்பாவை சிறையில் அடைப்பதுதான் தமிழக அரசுக்கு முக்கியமா?

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயலலிதாவின் ஆட்சி என்பது அதிகார துஷ்பிரயோகத்துக்கு எப்போதுமே பெயர் போனது. கிட்டத்தட்ட அதுவொரு சர்வாதிகார ஆட்சி. அதே சமயம் சுரண்டப்படும் மக்களின் முன்னால், அதுவரை அதிகாரத்தை சுவைத்துக்கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி செருப்பால் அடிப்பதன் மூலம் மக்களை கிளுகிளுப்புக்கு உள்ளாக்குவதும் அவரது வாடிக்கை. இது அவரது எல்லா ஆட்சிக் காலத்திலும் நடக்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் சசிகலா புஷ்பா விவகாரம். அவரது குடும்பத்தினர் மீது, அவர்களது வீட்டில் வேலை செய்தவர்கள் கொடுத்த பாலியல் அத்துமீறல் … Continue reading பத்தி: காவிரி, பாலாறு பிரச்சினையைவிட சசிகலா புஷ்பாவை சிறையில் அடைப்பதுதான் தமிழக அரசுக்கு முக்கியமா?

#பத்தி:லவுகீக அற்பத்தனங்களின் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் – ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ் நா. முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டி, குடிப்பழக்கம் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. நமது சூழலில் கலைஞனாக இருப்பது என்பது அவமானகரமான ஒன்று. பரிவு என்ற போர்வைக்குப் பின்னால் தங்களது அற்பத்தனங்களையும் பத்தாம்பசலித் தனங்களையும் மறைத்துக்கொள்கிற ஒரு மக்கள் திரளில் முன்னால் அவன் அம்மணமாக நிற்க நேரிடும். அதற்கு கலைஞனின் உயிரற்ற உடலும்கூட தப்பமுடியாது என்பதுதான் முத்துக்குமாரின் விஷயத்தில் நாம் புரிந்துகொள்வது. ‘எங்களுக்கு உதவுகிறோம் என்று எங்களை சங்கடப்படுத்தாதீர்கள்’ என அவரது தம்பி அறிக்கை விட்டிருக்கிறார். … Continue reading #பத்தி:லவுகீக அற்பத்தனங்களின் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் – ஜி. கார்ல் மார்க்ஸ்

பத்தி: பூவரசி எனும் இறைவியின் வாழ்க்கையைப் படமாக்க தைரியமிருக்கிறதா?

ஜி. கார்ல் மார்க்ஸ் கீழே இருப்பது தினத்தந்தி செய்தி. இதை அப்படியே படமாக எடுப்பதற்கு யாருக்காவது தைரியம் இருக்கிறதா? நமது நிஜ வாழ்க்கை எவ்வளவு ராவாக இருக்கிறது பாருங்கள். தன்னைக் காதலித்தவளை 'வேறொருவனைக் கல்யாணம் செய்துகொள்' என்று அறிவுரை சொல்லும் ஒருவன். அவன் மீதுள்ள கோபத்தில் அவனது நான்கு வயது மகனைக் கொலைசெய்யும் இறைவியான காதலி. அன்பும், காமமும் துரோகமாக மாறும் புள்ளி அரூபமானது. நாம் கலையெனக் கொண்டாடுவதெல்லாம் எவ்வளவு போலியானவை என்று முகத்திலறைந்து உணர்த்துகிறாள் பூவரசி!! … Continue reading பத்தி: பூவரசி எனும் இறைவியின் வாழ்க்கையைப் படமாக்க தைரியமிருக்கிறதா?

தாம் ராஜா இல்லை என்பதை அவர்கள் அறிவர்: ஜி. கார்ல் மார்க்ஸ் பத்தி

ஜி. கார்ல் மார்க்ஸ் இளையராஜாவின் பையை விமானநிலையத்தில் சோதனையிடுகிறார்கள். தேங்காய் உள்ளிட்ட பிரசாதப் பொருட்கள் அதில் இருந்திருக்கிறது. சோதனை முடிந்தவுடன் அனுப்பி வைக்கிறார்கள். அவ்வளவு தான். உடனே ஒரு பெரிய அமளி நடந்து முடிந்துவிட்டது சோஷியல் மீடியாக்களில். நீங்கள் விமானத்தில் பயணிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் -இதற்கு நீங்கள் தொழிலதிபராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை- எதாவது ஒரு மத்தியக்கிழக்கு நாட்டில் வேலை செய்யும் தொழிலாளியாகக் கூட இருக்கலாம், அந்த சோதனை எப்படி நடக்கும் என்று தெரியும். … Continue reading தாம் ராஜா இல்லை என்பதை அவர்கள் அறிவர்: ஜி. கார்ல் மார்க்ஸ் பத்தி

“93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயா ஜெயித்ததற்காக அறச்சீற்றத்தில் கொந்தளிக்கும் அதே நேரத்தில் திமுக தோற்றதற்காகவும் சிலர் வெம்பி வெடிப்பது நகைமுரண். ஜெயலலிதா எப்படி வெற்றி பெறத் தகுதி இல்லாத ஒருவரோ அதே அளவுக்கு தகுதியற்ற ஒருவர்தான் கருணாநிதியும் என்பது தான் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி. ஒப்பாரியையும், வசையையும், முத்திரை குத்தலையும் நிறுத்திவிட்டு கட்சி அபிமானிகளுக்கு இதில் யோசிக்க சில விஷயங்கள் உண்டு. இப்போதும் கண்முன் இருக்கும் உதாரணங்கள் நிறைய: கருணாநிதி ஒன்றும் எம்ஜியார் கிடையாது படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு. … Continue reading “93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”

விற்கப்படும் வாக்கு; யாருடைய பணம் இது?

ஜி. கார்ல் மார்க்ஸ் எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வந்துவிட்டன. பிரச்சாரம் முழுவேகத்தில் நடக்கிறது. உண்மையான களப்பணியை ஒவ்வொரு கட்சியும் இனிதான் தொடங்கும். அது என்ன களப்பணி? வேறென்ன.. வாக்குக்கு பணம் கொடுப்பதுதான். இந்த தேர்தலில் ‘வாக்குக்குப் பணம்’ தரும் விவகாரம் எளியமக்களின் விவாதமாகக் கூட மாறியிருக்கிறது. தமிழகத்தில் இதொன்றும் புதிதல்ல. ஆனால், இதற்குப் பின்னுள்ள ‘சீரழிவுதான்’ முக்கியம். ‘வாக்குக்குப் பணம்’ என்பதை நாம் ஏன் அவமானமாகக் கருதுவதில்லை? இந்த மன மாற்றத்திற்குப் பின்னால், அரசியல் கட்சிகளின் … Continue reading விற்கப்படும் வாக்கு; யாருடைய பணம் இது?

“சபாஷ் நாயுடு” என்ற பெயரில் இருப்பது ஆபாசம்; கலகமோ பகடியோ அல்ல!

ஜி. கார்ல் மார்க்ஸ் பெயரில் சாதி அடையாளங்களைத் துறக்க வைத்ததில் பெரியாருக்கும் திராவிட இயக்கங்களுக்கும் பங்குண்டு. பங்கு என்ன பங்கு. செய்ய வைத்ததே அவைதான். பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக்கொள்ளும் ‘பின்னொட்டுக்கு’ விடை கொடுக்க வைத்தது ஒரு சாதனை. இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் நிலவும் பெயர்களைப் பார்த்தால் தெரியும். ‘பெயரில் இருந்து சாதியை நீக்கிவிட்டதால் சாதி நீங்கி விட்டதா, சமத்துவம் வந்துவிட்டதா’ என்று கேட்டால் இல்லைதான். அது மட்டுமே போதாது … Continue reading “சபாஷ் நாயுடு” என்ற பெயரில் இருப்பது ஆபாசம்; கலகமோ பகடியோ அல்ல!

பாளம் பாளமாக வெடித்து கிடக்கும் வட இந்தியா; தண்ணீர் பஞ்சத்துக்கு என்ன காரணம்?

ஜி. கார்ல் மார்க்ஸ் ‘தண்ணீர் பஞ்சம்’ என்பது மிகப்பெரிய சிக்கலாக மாறப்போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. வட இந்தியா பாதிப்புகளை அடையத் தொடங்கியிருக்கிறது. பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கும் வயல்களை பார்வையிடப் போன மாநில அமைச்சர், அங்கு நின்று செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தமது பொறுப்பை நிரூபித்திருக்கிறார். மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகள் கேட்டுக் கொள்கின்றன. நல்லது. எப்போதும் பற்றாக்குறை வரும்போது மக்கள் தான் சிக்கனமாக இருக்க வேண்டும். … Continue reading பாளம் பாளமாக வெடித்து கிடக்கும் வட இந்தியா; தண்ணீர் பஞ்சத்துக்கு என்ன காரணம்?

“இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

ஜி. கார்ல் மார்க்ஸ் எனக்குத் தெரிந்து இன்றைய அரசியலில், மிகவும் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி யாரென்றால் அது ஜெயலலிதாதான். எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முக்கியமாக கார்ட்டூனிஸ்டுகள் ஆகியோருக்கு தனது தேர்தல் பரப்புரை மூலம் ஜெயலலிதா அளித்துக்கொண்டிருப்பது பெரும் தீனி. ஜனநாயகத்துக்கு கொஞ்சமும் தகுதியில்லாத, பதட்டங்கள் நிறைந்த காமெடியனாக அவர் தோற்றம் கொண்டிருக்கிறார். ஒரு செருப்போ, ஒரு கல்லோ மேடையை நோக்கி வரக்கூடும் என்ற பதட்டம் அவரைச் சுற்றியுள்ள மற்றெல்லோருக்கும் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு உருட்டல் … Continue reading “இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

ஜெயலலிதாவின் படிப்படியான மதுவிலக்கும் கருணாநிதியின் பூரண மதுவிலக்கும்

ஜி. கார்ல் மார்க்ஸ் “மதுவிலக்கு படிப்படியாக அமலுக்கு வரும்” என்று ஜெயலலிதா தனது தொடக்க பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். தனது கடைசி அஸ்திரமாக, பூரண மதுவிலக்கைக் கூட அவர் அறிவிக்கக் கூடும் என்று நான் நினைத்திருந்தேன். அதே சமயம் மதுவிலக்கு பற்றி பேசும் தகுதி கருணாநிதிக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அது ஓரளவு உண்மையும் கூட. ஜெயலலிதாவின் அறிவிப்பு நாடகம் தான். அவரது புள்ளி விவரத்தில், விற்கும் மது புட்டிகளின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறது, அதனால் குடிப்பவர்களின் எண்ணிக்கைக் … Continue reading ஜெயலலிதாவின் படிப்படியான மதுவிலக்கும் கருணாநிதியின் பூரண மதுவிலக்கும்

திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

ஜி. கார்ல் மார்க்ஸ் நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது 'அதிருப்தி அலை' இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் … Continue reading திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!