விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்

மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக, உண்டதற்காக  இஸ்லாமியர்களும் தலித்துகளும் சரமாரியாக  கொல்லப்பட்ட இந்துத்துவ ஆட்சியில், ஒடுக்கப்பட்டவர்களுக்கான  எழுச்சியாக நிமிர்ந்து நிற்கும்  குஜராத் மாநில எம்எல்ஏ, செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி ஹிந்து இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்படியே பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அதில் லயோலாவில் நடைபெற்ற கலந்துரையாடலும் ஒன்று. அந்த கலந்துரையாடல் முடிவில், ஒரு பேட்டி வேண்டி அங்கிருந்த  பத்திரிக்கையாளர்கள், ஜிக்னேஷை கேட்டிருக்கிறார்கள். பேட்டி  தொடங்குவதற்கு முன்னதாக, அங்கிருந்த (அர்னாப் கோஸ்வாமியின்)  ரிபப்ளிக்  டிவி  மைக்கைப் பார்த்ததும், … Continue reading விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்

“நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

குஜராத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் செத்த மாட்டின் தோலை உரித்த காரணத்துக்காக தாக்கப்பட்ட தலித் இளைஞர்களுக்கு ஆதரவாக எழுந்த தலித் மக்களின் எதிர்வினை, இந்தியா முழுமைக்கு அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறையை எதிர்த்து, வெகுண்டெழுந்து இனி செத்த மாடுகளை தோலுரிக்க மாட்டோம் என அரசு அலுவலகங்கள் முன் செத்த மாடுகளை தூக்கி எறிந்த் நடத்திய போராட்டமும் அதற்குப் பிறகு தன்னெழுச்சியாக கட்டி எழுந்த ‘உனா பேரணி’யும் பெரும் அதிர்வலைகள்தான். அந்த அதிர்வலைதான் பசு பாதுகாப்பு கும்பலுக்கு … Continue reading “நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

#சலோஉனா சுதந்திர யாத்திரைக்கு அமெரிக்க அம்பேத்கரிய அமைப்புகள் ஆதரவு

குஜராத்தின் உனா நகரில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சலோ உனா சுதந்திர யாத்திரையை தலித் அமைப்புகள் கடந்த பத்து நாட்களாக நடத்தி வருகின்றன. குஜராத்தின் பல ஊர்களைக் கடந்து இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 இந்த யாத்திரை உனா நகரில் முடிவடைகிறது. யாத்திரைக்கு இஸ்லாமிய, இடதுசாரி அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் அம்பேத்கரிய அமைப்புகள் உனா யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து தாங்கள் வசிக்கும் ஊர்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். அமெரிக்க … Continue reading #சலோஉனா சுதந்திர யாத்திரைக்கு அமெரிக்க அம்பேத்கரிய அமைப்புகள் ஆதரவு