ஜேஎன்யூவில் ஏழாவது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்: ’வீதிக்கு வா தோழா’ தமிழகத்திலிருந்து எழும் ஆதரவு பாடல்!

ஜவஹர்லால் நேரு பல்கலையில் ஏழுநாட்களாக, பல்கலை நிர்வாகத்தின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து 14 மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவர்களை ஆதரித்து வழக்கறிஞர் திவ்யா பாரதி, பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதன் இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=EiuGyykTXaE  

“நான் மனுஸ்மிருதியை எரிப்பேன்”: ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் அறிவிப்பு

“சாதிய ரீதியாக மக்களைப் பிரிக்கும் பெண்களை ஆண்களுக்குக் கீழானவர்களாக சித்தரிக்கும் மனுஸ்மிருதியை எரிக்கப் போகிறேன். பெண்கள் தினத்தில் இதை செய்யப் போகிறேன்” என அறிவித்திருக்கிறார் ஏபிவிபி அமைப்பின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் ஜாடின் கரோயா.

”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் கொண்ட எச். ராஜாவின் பேச்சு

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.  ராஜா, சனிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “டி. ராஜா உண்மையான தேசபக்தராக இருந்தால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும். என் மகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் நின்றிருந்தால் நான் அதைத்தான் செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். எச். ராஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. Arunan Kathiresan ரத்த தாகம் கொண்ட பா. ஜ. க. வின் எச் ராஜா "கம்யூனிஸ்டு டி ராஜா … Continue reading ”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் கொண்ட எச். ராஜாவின் பேச்சு

”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்). Countercurrents.org, 18 February, 2016 தளத்தில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழாக்கத்தை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதை நன்றியுடன் இங்கே மறுபிரசுரம் செய்கிறோம். மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் … Continue reading ”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

JNU மாணவர் சங்கத்தின் தலைவர் கண்ணையா குமாரைத் தேசவிரோத வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டதையொட்டி இந்திய ஊடகங்களில் மையமாக JNU வந்துள்ளது. காவிகளின் பாசிச ஊடகங்கள், JNUவின் பண்பாட்டினைத் திரித்துகூறி வருகின்றன. விவாதங்களுக்கும் மாற்று கருத்துவேறுபாட்டிற்கும் இடமளிக்கும் JNU வளாகத்தினை இந்துத்துவ கூடாரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. JNUவினைச் சுற்றி தடுப்புகளை உருவாக்கியுள்ள தில்லிக் காவல்துறை, முழுவளாகத்தினையும் தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. பல்வேறு மாணவ சங்கங்களில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் மீது FIR போடப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். … Continue reading ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

 ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆதரவு தெரிவித்திருந்தார்.  ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த சிலர் கட்சி பலகை மீது ‘பாகிஸ்தானின் ஏஜெண்ட்’ என எழுதிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி … Continue reading கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

’தேசத் துரோகி’ கன்னய்யா குமாரின் வீடு இதுதான்!

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமாரின் வீடு இதுதான். பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் மஸ்லன்புர்-பிஹத் என்ற கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு பழைய வீட்டில் வசித்து வருகின்றனர். சுவற்றில் ஆங்காங்கே நீல நிற சுண்ணாம்புப் பகுதிகள் உரிந்து தொங்க ஒரு பாலித்தீன் கவர் முழுதும் மருந்தும் மாத்திரைகளுமாக கன்னய்ய குமாரின் தந்தை தார்ப்பாய் ஒன்றில் அமர்ந்திருந்தார். இவர் ஒரு சிறு விவசாயி. … Continue reading ’தேசத் துரோகி’ கன்னய்யா குமாரின் வீடு இதுதான்!

#SaffronEmergency “காந்தியின் மரணத்தை கொண்டாடுபவர்களுக்கும் கோட்சேவை துதிப்பவர்களையும் என்ன செய்தீர்கள்?” #காவிபயங்கரவாதம்

தேசத்துரோக குற்றம் சுமத்தப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டார். இவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #SaffronEmergency என்ற ஹாஷ் டாகில் கருத்து தெரிவித்து வருகிறார். “காந்தியின் மரணத்தை கொண்டாடுபவர்களுக்கும் கோட்சேவை துதிப்பவர்களையும் என்ன செய்தீர்கள்?” #காவிபயங்கரவாதம் என்று கேட்கிறது ஒரு பதிவு https://twitter.com/shujakamili/status/698448885895843840 https://twitter.com/Georitg/status/698443628591652864 https://twitter.com/Dehaati_Indian/status/698442142071427072 https://twitter.com/Dehaati_Indian/status/698440987954249728 https://twitter.com/IamBittu0606/status/698435419927617536 https://twitter.com/tushizap/status/698403860444946432 https://twitter.com/shujakamili/status/698402419940712448 https://twitter.com/Shehzad_Ind/status/698400039824011264 https://twitter.com/thecompanionn/status/698399476856193024 https://twitter.com/ankitagrawal87/status/698385199671984128 https://twitter.com/PGuptaFE/status/698380836693905412 https://twitter.com/OffficeOffRG/status/698377723425652736 https://twitter.com/gary_1980in/status/698374220795916292 https://twitter.com/shreya_snh/status/698248795625279489 https://twitter.com/Tadaptiaatmaa/status/698218072738365441 https://twitter.com/realindian67/status/698215145030488064 https://twitter.com/Faaizdijoo/status/698206852358791168 #SaffronEmergency

தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?

நாட்டின் பிரபலமான, டெல்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (J.N.U) கடந்த செவ்வாய்க்கிழமை,  ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர்களில் ஒருவரான மக்பூல் பட், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மறைவுக்கு துயரம் அனுசரிக்கும் நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. ஜேஎன்யூ நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி, மற்றும் பாரதீய … Continue reading தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?