உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா பிணையில் விடுதலை!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாகக் கூறி தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா இருவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். உமர், அனிர்பென் விடுதலை கொண்டாடும் ஜேஎன்யூ மாணவர்கள் http://www.youtube.com/watch?v=bcb4-MAUJCY

கன்னையாக்களும் மொண்ணையாக்களும்

புதியவன் • நம்முடைய வரிப்பணத்தில் சலுகை பெற்றுக்கொண்டு 28 வயதாகியும் வேலை செய்யாமல், குடும்பத்தையும் காப்பாற்றாமல் கூத்தடித்துக்கொண்டிருக்கிற கன்னையாவுக்கு தேசத்தைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? இப்படியொரு போஸ்ட் சுற்றிக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல அரைவேக்காடுகள் இதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னே இருக்கும் விஷயம் என்ன, விஷமம் என்ன? • 28 வயதில் சுந்தர் பிச்சை மிகப்பெரிய நிறுவனத்துக்கே தலைவராக இருக்கிறார். கன்னையா....? இப்படி ஒப்பீடு செய்த ஒரு படமும் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை அரைவேக்காடுகள் மட்டுமல்ல, அறிவுஜீவிகள் என்று … Continue reading கன்னையாக்களும் மொண்ணையாக்களும்

தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் கன்னய்யா குமாருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், ஹெல்மெட்,  காவலர் சீருடை அணிந்து,  நீதிமன்றம் அழைத்து வருகிறது டெல்லி போலீஸ். வழக்கறிஞர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு என சொல்கிறது டெல்லி போலீஸ்.   தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக அறிவித்த வழக்கறிஞர்கள் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள் … Continue reading தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?

போலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்…

ஜே.என்.யூ பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர், கன்னையா குமார் தேசத்திற்கு விரோதமாக கோஷமிட்டதாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில், அதற்கு ஆதாரமாக, அனைத்து ஊடகங்களாலும் ஒளிபரப்பப்பட்ட வீடியோ, போலியானது என்று இந்தியா டுடே தொலைக்காட்சி, தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டது. இந்நிலையில், ஜோடிக்கப்பட்ட அந்த வீடியோ  குறித்த கட்டுரை ஒன்றில், "டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் அதை ஒளிபரப்பியதாக" தி வயர் இணையதளத்தின் நிறுவனரும், செய்தி ஆசிரியருமான சித்தார்த் வரதராஜன் கட்டுரை எழுதினார். ஆனால்,  அந்த கட்டுரை தவறு என்றும் அந்த வீடியோவை … Continue reading போலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்…

ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!

என் அன்பிலா தேசபக்தர்களே! என் இந்தியத் தாயின் வீர நெஞ்சங்களே (வீர மகன்களே என கூற இயலாது. ஏனெனில் இந்தியத் தாய்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்திக்கொண்டே பாரத் மாதா கி ஜே என கோஷம் போடும் உங்களை பாரத மாதா கூட மகன்களாக ஏற்க மாட்டாள்). ஜே.என்.யூ.காரனான நான் உங்கள் தேசபக்தியின் வெளிப்பாடு கண்டு திக்கு முக்காடி நிற்கிறேன். இதே தீரமிக்க பக்தியினை பதான்கோட் தாக்குதலிலும் காட்டியிருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். பொன்னாடை-புடவை-சூட்-மாம்பழம்-நேரில் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள்வாழ்த்து- திடீர் … Continue reading ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!

ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம். தமிழாக்கம்: ச. வீரமணி “நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை … Continue reading ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

#வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!

தேசவிரோத குற்றம்சாட்டப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்காக சென்னை ஐஐடி வளாகத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகத் தொடர்பு குழுவைச் சேர்ந்த ஜோஸுவா ஐசக் ஆசாத் கலந்துகொண்டார். அவர் இந்த பேரணியில் கலந்து கொண்டு பேச மாணவர்களால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை வளாகத்துக்குள் பாதுகாப்பு காவலர்கள் அனுமதிக்க முடியாமல் தடுத்துள்ளனர். தான் “ஜெய் பீம்” என முழங்கியது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் ஆசாத் அவருடைய முகநூல் பதிவில்... Joshua Isaac … Continue reading #வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!

#Video: JNU வில் சங் பரிவாரங்கள் கண்டெடுத்த மதுபாட்டில்கள், காராசேவ் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை

JNU வில் சங் பரிவாரங்களின் சோதனை அவர்கள் கண்டெடுத்தார்கள்...! 2000 இந்திய வெளிநாட்டு மதுமான பாட்டில்கள் 10,000 பயன்படுத்தி தூக்கிப் போட்ட சிகரெட் துண்டுகள் 4000 பீடி துண்டுகள் 50,000 சின்ன, பெரிய எலும்பு துண்டுகள் (அசைவம் உண்டதற்கான சாட்சி) 2000  சிப்ஸ், காராசேவ் பாக்கெட்டுகள் 3000 பயன்படுத்திய காண்டம்கள் 500 கருச்சிதைவு ஊசிகள் சங் பரிவாரங்களின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தவர் க்யான் தேவ் அஹுஜா, பாஜக சட்டமன்ற உறுப்பினர் (இராஜஸ்தான்) http://www.youtube.com/watch?v=j3aw_zUH61U Thanthugi Blogspot இவ்விடத்தில் உபயோகப்படுத்திய காண்டம்கள்,. மது பாட்டில்கள், … Continue reading #Video: JNU வில் சங் பரிவாரங்கள் கண்டெடுத்த மதுபாட்டில்கள், காராசேவ் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”