‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களாக விளங்குகின்றன என்று அரசாங்கத்தின் ஆய்வறிக்கைகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.தேசியவாதம் மற்றும் பேச்சுரிமை தொடர்பான விவாதங்களில் மத்திய அரசின் படுமோசமான நடவடிக்கைகளின் மூலம் மாணவர் சமுதாயத்தின் மத்தியில் கோபாவேசத்தை எழுப்பியுள்ள இந்த இரு பல்கலைக் கழகங்களும் தான் நாட்டின் முதன்மையான பல்கலைக் கழகங்களில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளுக்கான வசதிகளைச் செய்து தருவதிலும் சரி, அவர்கள் படித்து முடிந்தபின் … Continue reading ‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

 கன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன்  மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி "தி வயரில்" கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டைம்ஸ் நவ், சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் செய்தி வெளியிட்டது. இதற்க்கு சித்தார்த் எழுதியுள்ள காட்டமான பதிலின் தமிழாக்கம் கீழே:   டைம்ஸ் … Continue reading டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

பூ.கொ.சரவணன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். பட்டதாரிகள் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள் என்று இடதுசாரிகள், போராளிகள் விமர்சித்த பொழுதெல்லாம் ‘அதுல என்ன இருக்கு?’ என்கிற ரீதியில் பதில்கள் இந்தியாவைக் குறைச்சொல்லி வந்தன. இட ஒதுக்கீட்டை முக்கியமான காரணமாக வேறு கைகாட்டினார்கள். அற்புதமான கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் நம்முடைய கல்விமுறை அடைந்த தோல்வியும் இப்படியொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. அது இருக்கட்டும்.பல கோடி மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு தேசபக்திக்குத் துரோகம் செய்யும்வகையில் காஷ்மீர் தீவிரவாதி ஒருவருக்கு … Continue reading மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

க. கனகராஜ் அவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேச விரோதி என்கிறார்கள். இந்திய அன்னை அடிமைத் தளையில் சிறைப்பட்டு உழன்று கொண்டிருந்த போது இவர்கள் சற்றும் மனம் கலங்காமல் கொண்டாடி திரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு ஆட்சி பீடம் கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போர் குறித்து அதில் தங்கள் பங்கு குறித்து சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை. அதை மீறி சொல்லத் துணிந்தால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் … Continue reading #அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

யார் தேசபக்தர்கள்? இந்திய சுதந்திரத்தை காவி கொடியேற்றி கொண்டாடியவர்களா?

ஏ.பாக்கியம் தேச விரோதிகள் தங்களை தேச பக்தர்கள் என நாமகரணம் சூட்டிக் கொண்டு, தேச பக்தர்களை வேட்டையாடும் அசிங்கங்களை அரங்கேற்றுகின்றனர். மதச்சார்பற்ற சக்திகள் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள்.. ஹிட்லரை பகிரங்கமாக புகழ்ந்தவர்கள். சிறுபான்மையினரை அழிக்க ஹிட்லரின் வழிதான் இந்தியாவிற்கு பொருந்தும் என்று மார்தட்டியவர்கள்... தங்களது முக்கிய எதிரிகள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் என பகிரங்கமாக அறிவித்தவர்கள்... 1947 -இந்தியா விடுதலை பெற்ற போது மூவர்ண கொடியை எதிர்த்து, அவர்களது காவிக் கொடியை … Continue reading யார் தேசபக்தர்கள்? இந்திய சுதந்திரத்தை காவி கொடியேற்றி கொண்டாடியவர்களா?

“பாகிஸ்தானின் ஏஜென்ட்”!

அ. குமரேசன் ஐந்தாறு பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாகக் கூறிக்கொண்டு தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் வந்தார்கள். திடீரென்று “வந்தே மாதரம்” என்று கோஷம் போட்டார்கள். பிறகு மார்க்சிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தி கோஷம் போட்டார்கள். நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகை மீது கறுப்பு மையால் “பாகிஸ்தான் ஏஜென்ட்” என்று எழுதினார்கள். கற்களை வீசி தாக்கினார்கள். ஓடிப்போனார்கள். ஒடியவர்களில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொள்ள, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் அல்ல, … Continue reading “பாகிஸ்தானின் ஏஜென்ட்”!

“ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி

மகிழ்நன் பா.ம தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர், காவி பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவராக இருந்திருக்கிறார். அவர் ஆற்றிய ஒரு உரையின் தமிழாக்கம் இது: “எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும் எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது … Continue reading “ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பேராசிரியர்களாக பணிபுரிய தகுதி இல்லையா?: வெளிச்சத்திற்கு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலை நிலவரம்…

Anoop Manav கிரண் என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், டெல்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பேராசிரியர்களோ, இணை பேராசிரியர்களோ  ஒருவர் கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, இதர பிற்படுத்தப்பட்ட இனத்தில் இருந்து 29 துணை பேராசியர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதும் கண்டறிய பட்டுள்ளது. பல்கலைகழகத்தில்  மொத்தமுள்ள 612  பேராசிரியர்களில், 29 பேர் மட்டுமே, அதுவும் துணை பேராசிரியர்களாக பணி புரிகிறார்கள் என்றால், … Continue reading பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பேராசிரியர்களாக பணிபுரிய தகுதி இல்லையா?: வெளிச்சத்திற்கு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலை நிலவரம்…