சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4

ப. ஜெயசீலன் முதல் மூன்று பகுதிகளை படிக்க பகுதி 1 பகுதி 2 பகுதி 3 < div> சமூக விலங்கான மனிதர்கள் அடிப்படையில் கூடி, இசைந்து வாழக்கூடியவர்கள். கூடியிருத்தல்,கூடுதல் எப்பொழுதுமே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆதி மனிதர்கள் கூடிஇருக்கையில் பயமற்று,ஆபத்துகளை சந்திக்கும் வல்லமையோடும், தேவையான உணவை கண்டடையும் வாய்ப்புகளோடும் இருந்தார்கள்.எனவே by instinct அவர்கள் கூடியிருப்பதை விரும்பினார்கள். அதனால் தான் இன்றும் நாம் மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால், சடங்கின் பெயரால், கலையின் பெயரால்,விளையாட்டின் பெயரால் என … Continue reading சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4

பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்

மீனவர்களின் துயரப் பாடுகள் நிறைந்த வாழ்வியலை, ஒக்கிப் புயல் பாதிப்புகளை அரசு நிர்வாகங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மறைத்த மறந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்.

சில சாதிகளின் கேளிக்கை விளையாட்டு தமிழர் கலாச்சாரம் ஆகுமா?

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி- 2 ப. ஜெயசீலன் கலாச்சாரம் என்றால் என்ன? by definition ஒரு மக்கள் திரளின் அறிவார்ந்த கூட்டு பங்களிப்பில், முயற்சியில் உருவாக்கப்பட்ட/ செழுமையாக்கப்பட்ட கலை மற்றும் இன்ன பிற வாழ்வியல் விழுமியங்களையும் நடைமுறைகளையும் கலாச்சாரம்/ பண்பாடு என கொள்ளலாம். ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் நம்பிக்கை சார்ந்த அடையாளங்களை/சடங்குகளை/பழக்கவழக்கங்களை சம்பிரதாயம்/ மரபு(tradition) என்று கொள்ளலாம். சம்பிரதாயம்/மரபென்பது நம்மை கடந்த காலத்தோடு தொடர்ப்பு கொள்ள செய்கிறது. … Continue reading சில சாதிகளின் கேளிக்கை விளையாட்டு தமிழர் கலாச்சாரம் ஆகுமா?

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி 1

ப. ஜெயசீலன்  "ஓடுகின்ற காளையின்மேல் லாவகமாய் தாவுகின்ற வித்தையை வீரமென்று பிதற்றுகின்ற மூடரே காளையின் கூர்கொம்பு குதத்தை கிழிக்க தேடுகையில் புழுதியில் புரள்வது எதனாலோ ?" மெரினாவில் நிகழ்ந்த தமிழக மக்களின் கும்பமேளா போன்ற ஒன்று கூடல் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. மக்களின் உணர்வுகளை எவ்வளவு எளிதாக ஊடகங்களால் தூண்டிவிடமுடியும் என்பதற்கும், மக்களின் தர்க்கமில்லாத அரசியல்மயப்படுத்தப்படாத  உணர்ச்சிவேகத்தை சில தற்குறிகள் சில்லறைகள் எவ்வளவு எளிதாக பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதற்கும்(திருமுருகன் காந்தி போன்ற மக்கள்  போராளிகளை சொல்லவில்லை), மக்களின் உணர்ச்சிவேகத்தை ஆட்சி … Continue reading சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி 1

“நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம்;சாகித்ய விருதை திருப்பி அளிக்கிறேன்”: எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார்

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் களம் இறங்கியுள்ள நிலையில், முதல் படைப்பாளியாக மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார் லக்ஷ்மி சரவணகுமார். இதுகுறித்து தனது முகநூலில் அவர் பதிந்துள்ள தகவலில்... வணக்கம். இந்த மொழி என் அடையாளம். இதை நேசிக்கிற ஒவ்வொருவரும் என் உறவுகளே. நீண்ட பல வருடங்களாய் தமிழ் சமூகம் தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவது தொடர்ந்தபடிதான் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக … Continue reading “நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம்;சாகித்ய விருதை திருப்பி அளிக்கிறேன்”: எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார்

”தேர்தல் லாபம் இல்லை என்பதற்காக தமிழக உரிமைகளை பறிக்கிறது மோடி அரசு!”

மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடியும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தியும், தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் நேரடியாகச் சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர … Continue reading ”தேர்தல் லாபம் இல்லை என்பதற்காக தமிழக உரிமைகளை பறிக்கிறது மோடி அரசு!”

நாளைய கடையடைப்புக்கு மக்கள் நல கூட்டியக்கம் ஆதரவு

சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க. கூட்டறிக்கை: தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பிரதிபலிப்பான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக தமிழகமெங்கும் மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள போராட்டச் சூழலுக்கு மத்திய, மாநில அரசுகளின் … Continue reading நாளைய கடையடைப்புக்கு மக்கள் நல கூட்டியக்கம் ஆதரவு

ஏறுதழுவுதலுக்காக நடக்கும் இளைஞர் – மாணவர் எழுச்சி: தமுஎகச முழு ஆதரவு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் இருவரும் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகிய ஏறு தழுவுதல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் , மாணவர்கள் நடத்திவரும் அமைதி வழியிலான அறப்போருக்கு தமுஎகச தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களில் தமுஎகசவின் எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஏற்கெனவே தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இப்போது … Continue reading ஏறுதழுவுதலுக்காக நடக்கும் இளைஞர் – மாணவர் எழுச்சி: தமுஎகச முழு ஆதரவு

ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதிக்கு பீட்டா அமைப்பு விருது ; “Man of the Year” அளித்து கவுரவம்….

ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ண பணிக்கருக்கு பீட்டா அமைப்பு விருது அளித்து கவுரவித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பீட்டா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் "எந்த ஒரு விளையாட்டிலோ, அல்லது ஜல்லிக்கட்டிலோ, அல்லது போட்டியிலோ காளைகளை பயன்படுத்த கூடாது. விலங்குகள் மதிக்கப்பட வேண்டும் " என்று  பீட்டா இந்தியாவுக்கும் , இந்திய விலங்குகள் நல வாரியத்திற்கும் ஆதரவான முறையில் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பை வெளியிட்ட, நீதிபதி கே.எஸ். பணிக்கர் ராதாகிருஷ்ணனுக்கு … Continue reading ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதிக்கு பீட்டா அமைப்பு விருது ; “Man of the Year” அளித்து கவுரவம்….

மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்: பெ. மணியரசன்

ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என சொல்லிக்கொண்டிருக்கும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது பதவி விலக வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் நேற்று (16.11.2016), “சல்லிக்கட்டு” எனப்படும் தமிழர் ஏறுதழுவல் விழாவிற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோகிந்தன் நாரிமன் ஆகியோர் அமர்வு, தடைக்கானக் காரணங்களாகக் கூறியிருப்பவை … Continue reading மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்: பெ. மணியரசன்

சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவப்படத்தை எரித்துப் போராட்டம்; விலங்கு நல வாரியம் விளக்கம்

விலங்கு நல வாரியத்தின் தூதராக ரஜினியின் இளைய மகளும் இயக்குநருமான செளந்தர்யா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருடைய நியமனத்தை எதிர்த்து திருச்சியில் தமிழர் வீரவிளையாட்டுப் பேரவைக் கழகமும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு நடைபெறுவதைத் தடுத்த விலங்கு நல வாரியத்தின் தூதராக செளந்தர்யா பணியாற்றக்கூடாது. அப்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். செளந்தர்யாவின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன. தமிழர் வீரவிளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ், "முரட்டுக் காளை படத்தில் காளையை அடக்குவது போல நடித்து, அதனால் … Continue reading சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவப்படத்தை எரித்துப் போராட்டம்; விலங்கு நல வாரியம் விளக்கம்

கெயில் வழக்கு : தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் நீதிமன்றம் போகாததே தமிழக அரசின் வழக்கு தள்ளுபடிக்குக் காரணமா?

பால் முருகன் இயற்கை எரிவாயு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியபோதே தமிழக அரசின் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி இன்னும் வரவில்லை அவர்தான் வாதிட உள்ளார் என்று கூறினார். அப்போது கெயில் நிறுவனத்தின் வாதத்தை கேட்கத் தொடங்கினர் நீதிபதிகள். பின்னர் அரை மணி நேரம் சென்ற பின் தமிழகத்தின் கருத்தை அறிய நீதிபதிகள் பாலாஜியிடம் திரும்பினர். அப்போது அவர் மூத்த வழக்கறிஞர் இன்னும் வரவில்லை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதனை … Continue reading கெயில் வழக்கு : தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் நீதிமன்றம் போகாததே தமிழக அரசின் வழக்கு தள்ளுபடிக்குக் காரணமா?

தடையை மீறி ஜல்லிக்கட்டு : சீமானை கைது செய்ய அவர் தங்கியுள்ள ஹோட்டலை சுற்றிலும் போலீஸ்

உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து மதுரை புறநகர் பகுதியில் சீமானின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்த பாலமேடு செல்ல இருப்பதாக சீமான் அறிவித்துள்ளதால், சீமானைக் கைது செய்ய தற்போது மதுரையில் அவர் தங்கியுள்ள ஓட்டலில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

பீட்டா அமைப்பின் பெண் சி.ஈ.ஓ.வை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த தமிழர்கள்: பலாத்கார மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக  பீட்டா அமைப்பின் இந்திய பிரிவி தலைவரான பூர்வா ஜோஷிபுரா, தன்னுடைய கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்திருந்தார். அதில் "பாரம்பர்யம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை அனுமதித்தோமென்றால்,  சதி, குழந்தை திருமணம், வரதட்சணை போன்றவைகளையும் சட்டபூர்வமாக்க வேண்டி இருக்கும்" என்று கருத்து வெளியிட்டிருந்தார். ஜல்லிக்கட்டு தடையால் கொந்தளிப்புடன் இருந்த தமிழ் இளைஞர்கள், ஜோஷிபுராவின் ட்வீட்டினால் மேலும் ஆத்திரமடைந்தனர். ஜோஷிபுராவுக்கு அரேபிய முறையில் தண்டனை அளிக்க வேண்டும் என்றும், அவரை யாராவது பலாத்காரம் செய்ய வேண்டும் என்றும் கருத்துக்களை அள்ளி … Continue reading பீட்டா அமைப்பின் பெண் சி.ஈ.ஓ.வை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த தமிழர்கள்: பலாத்கார மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி!

#சர்ச்சை“மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி” ஒரு முற்போக்காளரின் அறைகூவல்!

இளங்கோ கல்லாணை என்னிடம் சல்லிக்கட்டு நடக்குமா என்று கேட்பவர்களுக்கு, ஏற்கனவே நடக்க ஆரம்பிச்சாச்சு. இன்று பயிற்சி காளைக்கு பக்கத்தில போயி லேசா கையில கீறல். உடம்பு மனசு எல்லாம் ஒரு சந்தோசம். ஊரில் எல்லோரும் தடையை மீறுவது பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தமிழ் உணர்வாளர்கள் தனி நாடு என்பதை ஏன் நாம் இந்த சமயத்தில் உயிர்ப்பிக்கக் கூடாது என்கின்றனர். இருக்கட்டும். போராட்டங்களை விட மக்கள் காளைகளை தயார் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசைக் கொண்டு … Continue reading #சர்ச்சை“மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி” ஒரு முற்போக்காளரின் அறைகூவல்!

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மொட்டை போட்டு போராட்டம்!

மதுரை அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, கடைகள் அடைப்பு, சாலைமறியல், கருப்புக்கொடி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு, நூற்றுக்கணக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், இதற்கு அரசியல்வாதிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மதுரையில் பாலமேட்டில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு துணிகளை கட்டியும், மொட்டையடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய, … Continue reading ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மொட்டை போட்டு போராட்டம்!

“அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன்” தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு நல ஆர்வலர்!

யுவகிருஷ்ணா ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்று. ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் சொல்கிறார். “அப்படியே தடை வந்துட்டாலும் கூட எங்கிட்டே இருபது ஏக்கர் இடம் இருக்கு. முன்னூறு காளைகள் இருக்கு. நான் நடத்திட்டுப் போறேன். யாரென்ன பண்ணுவாங்கன்னு பார்த்துக்கறேன்” அவருக்கு பதிலடியாக ராதா ராஜன் என்கிற விலங்குகள்நல ஆர்வலர் சொல்கிறார். “அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன். என்னை வந்து நீங்க கேட்கக்கூடாது” நெறியாளர் குணசேகரன் அப்படியே திகைத்துப் போகிறார். … Continue reading “அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன்” தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு நல ஆர்வலர்!

#Exclusive: சமூக நீதிக்கு எதிரானதை பெரியாரியம் கைவிடும்; ஜல்லிக்கட்டில் தலித்துக்கான இடம் தப்படிப்பது மட்டும்தானா?

கார்ல் மார்க்ஸ் ஜல்லிக்கட்டு' தொடர்பான விவாதங்களை உற்று நோக்குகையில் அது பலரை முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் தலித்தியம் பேசுபவர்களும் அடக்கம். இப்போது பெரியார் இருந்திருந்தால், ஜல்லிக்கட்டை ஆதரித்திருப்பாரா அல்லது எதிர்த்திருப்பாரா என்ற சுவராஸ்யமான விவாதத்தையும் பார்க்க முடிந்தது. ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. இந்தப் பாரம்பரியத்தில் தலித்துகளின் இடம் என்ன என்ற கேள்விதான் தலித்தியர்கள் எதிர்கொள்ள விழைவது. அதை ஒரு பாரம்பரியம் இல்லை என்று அவர்களால் முழுக்கவும் … Continue reading #Exclusive: சமூக நீதிக்கு எதிரானதை பெரியாரியம் கைவிடும்; ஜல்லிக்கட்டில் தலித்துக்கான இடம் தப்படிப்பது மட்டும்தானா?

தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!

Thamizh Thamizh ஜல்லிக்கட்டு பற்றி பெரியார் திடலில் பேசிய எனது உரையின் விரிவான சுருக்கம்! அரங்கத்தில் திரண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். வேலை விசயமாக சென்னை பணி மாற்றல் ஆனாலும் அதில் இன்னொரு தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அது தந்தை பெரியாரின் திடலுக்கு அடிக்கடி செல்லலாம், கருத்துக்களை கேட்கலாம்...அய்யா வாழ்ந்த இடத்தை அவ்வப்போது பார்க்கலாம் என்பதுதான். அப்படிப்பட்ட பெரியார் திடலில் எனக்கு மேடை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தோழர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். முதலில் இந்த அரங்கத்தில் பேசுவது … Continue reading தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!

ஜல்லிக்கட்டு: கவனிக்கப்படாத 10 உண்மைகள்!

செந்தில் குமார் 1.  ஜல்லிக்கட்டு நிகழ்வைக் குறிப்பிடும் போது ஆங்கில பத்திரிகைகளில் bull taming என்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் காளைகளை அடக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது தவறான பிரயோகம். தமிழில் அதைப் பற்றிய சரியான குறிப்புகள் ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்றுதான் கூறுகின்றன. வாடிவாசலிலிருந்து கிளம்பும் காளைகளின் திமிலின் மீது குறிப்பிட்ட தூரம் தொங்கிச் செல்வதுதான் இந்த நிகழ்வு. காளைகளின் இரு கொம்புகளையும் இணைக்கும் வகையில் அதன் அடிப்பகுதிகளில் கட்டப்பட்ட பொருளை எடுப்பதை வைத்து இதை … Continue reading ஜல்லிக்கட்டு: கவனிக்கப்படாத 10 உண்மைகள்!

அம்மா ஸ்டிக்கர் ஜல்லிக்கட்டு: களைகட்டுது மதுரை!

ஜல்லிக்கட்டுக்கு  நாள் குறித்து விட்டதால்அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில், அத்தனை ஏற்பாடுகளும் படு ஜோராக  நடந்து வருகின்றன. கேலரி அமைப்பது, வாடி வாசல்களுக்கு வெள்ளை அடித்து வர்ணம் பூசுவது என ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களும், ஊர் மக்களும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருக்கின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கான இதர ஏற்பாடுகளும் மறுபக்கம் களை கட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக,  மாடுபிடிவீரர்கள் அணிந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா படம் போட்ட ஜெர்சிகள் ரெடியாகி வருகின்றனவாம். முகப்பில் அம்மா ஸ்டிக்கர் … Continue reading அம்மா ஸ்டிக்கர் ஜல்லிக்கட்டு: களைகட்டுது மதுரை!

”காவி கால்சட்டைகள்தான் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றினர்” அரவிந்தன் நீல்கண்டன்

ஜல்லிக்கட்டு தடை நீக்கம் குறித்து வரவேற்பும் எதிர்ப்பும் கலந்தே வருகிறது. காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். சேகர் குப்தா போன்ற ஊடகவியலாளர்கள் சிலரும் ஜல்லிக்கட்டு தடை நீக்கம் தவறானது என கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சார இதழான ‘ஸ்வராஜ்ஜியா’வில் ஜல்லிக்கட்டு தடை நீக்கம் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் அரவிந்தன் … Continue reading ”காவி கால்சட்டைகள்தான் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றினர்” அரவிந்தன் நீல்கண்டன்

‘அண்டா போட்டி’யில் வெல்வது யார்? அ. பொன். ராதாகிருஷ்ணன், ஆ. அன்புமணி, இ. கருணாநிதி வாரிசுகள்…

Narayanan Ananth நாகப்பட்டினம் மாவட்டத்தில்,வழுவூரில் சேரி ஆட்கள் செத்தால் என்ன? செத்தாலும், புதைக்கமுடியாமல் நாறினாலும் என்ன? சமூக நீதி பேசும் நமக்கு இதெல்லாம் ஒரு செய்தியா? சிங்காரச்சென்னையில், அபூர்வமாக ''நூறாண்டாக வராத''வரலாறு காணாத மழை வெள்ளத்தில, சேரிகள் அடிச்சிக்கிட்டுப் போய், காக்கா முட்டைகள் பாலங்களுக்கு அடியில் தூங்கினால் என்ன?, அல்லது, சென்னைக்கு வெளியே, கான்கிரீட் சூப்பர் சேரிகளுக்கு அனுப்பப்பட்டால் என்ன? இதெல்லாம் ஒரு தலையாயப் பிரச்சனையா? நம்மூரிலே, பாதிக்கும் மேற்பட்டவங்க, திறந்த வெளியில கக்கூஸ் போறாங்க.  ஆமாங்க … Continue reading ‘அண்டா போட்டி’யில் வெல்வது யார்? அ. பொன். ராதாகிருஷ்ணன், ஆ. அன்புமணி, இ. கருணாநிதி வாரிசுகள்…

“ஜல்லிக்கட்டு காட்டு மிராண்டித்தனமானது” என்கிறார் பாஜகவின் டெல்லி முதல்வர் வேட்பாளரான கிரண் பேடி

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இது வரவேற்பைப் பெற்றிருக்கும் அதேவேளையில், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டவருமான கிரண் பேடி,  “ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது. சமூகத்து தேவையில்லாத ஒன்று” என்று கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் https://twitter.com/thekiranbedi/status/685413475112243200 https://twitter.com/thekiranbedi/status/685335503835537408 https://twitter.com/thekiranbedi/status/685322530433830912  

#Breaking ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி: பொன்.ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளார். https://twitter.com/PonnaarrBJP/status/685314828102164480 https://twitter.com/PonnaarrBJP/status/685312356835045376 https://twitter.com/PonnaarrBJP/status/685312290695049218 https://twitter.com/PonnaarrBJP/status/685311878847983617

முரட்டு காளைகள் நேருக்கு நேர் மோதுமா? அமைச்சரின் கேள்வியால் தலை கிறுகிறுத்த ஜல்லிக்கட்டு குழுவினர்

தமிழக ஜல்லிக்கட்டு குழுவினர் டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ்  ஜவடேகரை மூன்று முறை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். தற்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது , மத்திய அமைச்சர் தரப்பில் "முரட்டு காளைகளை, களத்தில் நேருக்கு நேர் மோத விடுவீர்களா" என்று கேள்வி எழுப்பபட்டிருக்கிறது. இந்த கேள்வியால் அதிர்ச்சியான தமிழக ஜல்லிக்கட்டு குழுவினர், தங்கள் கையில் கொண்டு சென்றிருந்த ஜல்லிக்கட்டு விடியோவை திரையிட்டு காண்பித்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாமல் பேச்சு வார்த்தை நடத்துகிறார்களே என்ற வேதனையில் … Continue reading முரட்டு காளைகள் நேருக்கு நேர் மோதுமா? அமைச்சரின் கேள்வியால் தலை கிறுகிறுத்த ஜல்லிக்கட்டு குழுவினர்

“ஜல்லிகட்டை தடை எல்லாம் செய்ய முடியாது”: ஆய்வாளர் தொ.பரமசிவன் சொல்லும் காரணம் இதோ…

தொ.பரமசிவன் ஜல்லிக்கட்டு விளையாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ? “ஆமாம் , ஜல்லிகட்டு என்பது ஒரு வேட்டை சமூகத்தை சார்ந்த விளையாட்டு, மாட்டின் திமிலைப் பிடித்துக் கொண்டு ஒரு 30 அடி ஓடினாலே அவன் வெற்றி பெற்றவன்தான். அவனுக்கு பரிசு உண்டு. மாடு அடக்குதல் என்பதை விட மாட்டை அணைத்தல் என்பதுதான் சரி.  இதை wild animal என்று எவன் சொன்னது ? it not a wild animal it 's a pet animal. மாடு … Continue reading “ஜல்லிகட்டை தடை எல்லாம் செய்ய முடியாது”: ஆய்வாளர் தொ.பரமசிவன் சொல்லும் காரணம் இதோ…

NO JOKE: ஜல்லிக்கட்டு மாடு முட்டி பொன்.ராதாகிருஷ்ணன் காயம்!

அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்திற்கு சென்றிருந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது, ஜல்லிக்கட்டு மாடு மோதி சிறுகாயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் காலத்து  கொள்வதற்காக காரில் சென்ற பொன்.ராதாக்ரிஷ்ணனை,  காளை மாடுகளுடன் திரண்டு நின்ற பொதுமக்கள் பலர் திடீரென காரை மறித்து, மனு கொடுத்தனர். அதில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது பொன் ராதாகிருஷ்ணன் காளை மாடு ஒன்றை தடவி கொடுத்த போது, … Continue reading NO JOKE: ஜல்லிக்கட்டு மாடு முட்டி பொன்.ராதாகிருஷ்ணன் காயம்!

நெருங்கி வரும் பொங்கல்: ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்கிறதா மத்திய அரசு?

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து விவாதிக்கப்படவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து நீதிமன்ற  மேற்பார்வையில் 2014ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. விலங்கு நல ஆர்வலர்களின் தொடர் புகார்கள், விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. இந்நிலையில் நடந்த முடிந்த பாராளுமன்ற  குளிர்காலகூட்டத் தொடரின் இறுதி நாளன்று, … Continue reading நெருங்கி வரும் பொங்கல்: ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்கிறதா மத்திய அரசு?

#சர்ச்சை: ஞாநி, ஆனந்த விகடன், திமுக மிரட்டல், மனுஷ்யபுத்திரன், சமஸ்

 விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நேர்படப் பேசு நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அதில் பத்திரிகையாளர்கள் ஞாநி, விஜயசங்கர், மணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விவாதத்தில் ஞாநி கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது திமுகவில் இணைந்திருக்கும் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், இதுகுறித்து வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ‘ அவருக்கு வயதாகிவிட்டது. அவரை அவரது குடும்பத்தினர் இம்சித்து அரசியலில் நீடிக்க செய்கிறார்கள். இது மனிதாபிமானமல்ல’ … Continue reading #சர்ச்சை: ஞாநி, ஆனந்த விகடன், திமுக மிரட்டல், மனுஷ்யபுத்திரன், சமஸ்

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக சார்பில் டிசம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அலங்காநல்லூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் கென்னடி கண்ணன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலர்கள் மூர்த்தி, மணிமாறன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் பரந்தாமன் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று சொல்லும் பிரபலங்கள்!

பெடா விலங்குகள் நல அமைப்பு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறது. இதில் பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், பிபாஷா பாசு, எமி ஜாக்ஸ்ன், ரவீனா டாண்டன், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், ஷில்பா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா, நடிகர்கள் ஜான் அப்ரஹாம், வித்யூத், கபில் சர்மா, கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஷிக்கார் தவான் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கையெழுத்து இயக்கம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள எமி ஜாக்ஸன் பெடா கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு … Continue reading ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று சொல்லும் பிரபலங்கள்!

ஜல்லிக்கட்டில் நடக்கும் கொடுமைகள்: இந்த விடியோவைப் பாருங்கள்

பொங்கல் நெருங்கி வருவதை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்தலாமா வேண்டாமா என்று விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு வேண்டும் என்கிறவர்கள் வைக்கும் காரணத்தைவிட ஜல்லிக்கட்டு வேண்டாம் என்கிறவர்கள் வைக்கும் காரணம் அழுத்தமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகளுக்கு நடக்கும் இந்தக் கொடுமைகளைப் பாருங்கள்... http://www.youtube.com/watch?v=coZvTRHt2m4