தமிழக அரசின் வனக்கொள்கை 2018 ஓர் ஆபத்து: ச.பாலமுருகன்

ச.பாலமுருகன் நாட்டின் வனக்கொள்கை அதன் பின்னிட்டு அரசு வனம் தொடர்பாக நிறைவேற்றும் திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு வழிகாட்டியாய் அமையக்கூடியது. நமது நாடு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த சமயம் கடந்த 1894 ஆண்டு வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. வனத்தையும் அதன் இயற்கை வளங்களையும் ஆங்கிலேய அரசாங்கம் சொத்தாக பாவித்தது. அதன் அடிப்படையில் வனத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அந்த சமயம் உருவாக்கிய வனக்கொள்கை உதவியது. வனத்தில் வாழ்ந்து அந்த வனத்தை நிர்வகித்து வந்த பழங்குடி மக்கள் உரிமைகளை அதன் … Continue reading தமிழக அரசின் வனக்கொள்கை 2018 ஓர் ஆபத்து: ச.பாலமுருகன்

எரியும் பனிக்காட்டுக்கு வயது பத்து: இரா. முருகவேள்

புத்தகத் திருவிழா அறிவிக்கப்பட்டதும் பட்டியல்கள் வரும். எப்படியோ நண்பர்களின் அன்பால் ஏதாவது ஒரு பட்டியலில் எனது நூல்களுக்கு ஒரு மூலையில் சிறிய இடம் கிடைத்து விடுகிறது. ஆனால் எந்தப் பட்டியலிலும் இடம் பெறாத எந்த விருதும் கிடைக்கப் பெறாத எனது நூல் ஒன்று இருக்கிறது. எரியும் பனிக்காடுதான் அது. இதுவரை மூல ஆசிரியர் பி.எச். டேனியலுக்கோ மொழிபெயர்ப்பாளனான எனக்கோ அந்த நூலுக்காக எந்த விருதும் கிடைத்ததில்லை. தொடக்கத்திலிருந்தே எரியும் பனிக்காடு விசித்திரமான பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது. அதன் முதல் … Continue reading எரியும் பனிக்காட்டுக்கு வயது பத்து: இரா. முருகவேள்

ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!

ச. பாலமுருகன் இன்று 14.10.2016 கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும் அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் வதந்தி பரப்புதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்து காவல்துறை சிறைபடுத்தியுள்ளதை அறிய முடிகின்றது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அடிப்படை சனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாக உள்ளது. தனது இரண்டு நண்பர்கள் தமிழக முதல்வர் குறித்து உரையாடுவதே குற்றசெயலாக … Continue reading ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!

ஜோக்கர்: அரசியல் வேண்டும் என்கிற அரசியலைப் பேச முயல்கிறது

சு. இரவிக்குமார் காலை 10.30 மணிக்கு மினிப்பிரியாவில் ஜோக்கர் முதல் நாள் முதல்காட்சி பார்த்தாச்சு! Mockery Cinemaவுக்கு முயன்றிருக்கிறார்கள். ராமசாமியின் நாடகம் போன்ற நாடகத்துக்குள் கொஞ்சம் சினிமா தூவியிருக்கிறார்கள். சாமானியனின் குரல், அரசியல், சமூக அவலம் என்று படம் முழுக்க மனப்பிறழ்வாளனின் முற்போக்குக் குரலை எழுப்ப முயல்கிறது. எழுத்தாளர்கக், நாடகக்காரர்கள் என்று பலரும் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். சுய வாழ்வில் காயம் பட்டவனே சமூக உணர்வோடு வெளியில் வருவான் என்பதும், இந்த அரசமைப்பை வெறும் கோமாளித்தனமாக சாகசங்களால் அதன் … Continue reading ஜோக்கர்: அரசியல் வேண்டும் என்கிற அரசியலைப் பேச முயல்கிறது

வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு ச. பாலமுருகனின் பெருங்காற்று

ஒடியன் லட்சுமணன் வலியில்லாத, அலைக்கழிக்காத எதையும் என்னால் எழுதமுடியாது என்ற பிடிவாதத்தோடு தொடர்ந்து களத்தில் இயங்கும் ச. பாலமுருகன், சோளகர் தொட்டிக்குப்பிறகு நீண்ட இடைவெளியெடுத்து எந்தவித ஆர்பாட்டமுமில்லாமல் பெருங்காற்றை சமீபத்தில் கொண்டு வந்திருக்கிறார். யாரும் அதிகம் தொடாத, போராட்டங்களோடு தான் பங்கெடுத்த களங்களை பின்புலமாக வைத்து மிகுந்த பிராசையோடும் அவருக்கே உரித்தான லாவகத்தோடும் கதைகளை அடர்த்தியாகப் பின்னியிருக்கிறார். வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு அவ்வளவு சிறப்பாய் வந்திருக்கிறது பெருங்காற்று. முதலிரண்டு கதைகளான ஒரு கடல் இருகரைகளும் வேர்மண்ணும் நம்மை … Continue reading வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு ச. பாலமுருகனின் பெருங்காற்று

ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்

ச.பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வழக்குரைஞர்கள் சட்டத்தில் பிறப்பித்த சட்டத்திருத்தத்தின் படி நீதிமன்றத்தில் போராட்டம் நடத்துவது, பதாகைகளை பிடிப்பது மற்றும் நீதிபதி பெயரைச்சொல்லி பணம் பெறுவது, நீதிபதிகளை ஆதாரமற்று விமர்சிப்பது மற்றும் குடி போதையில் நீதிமன்றத்திற்கு வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதியானவர் வழக்குரைஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். உடனடியாக குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபர் வழக்குரைஞராக தொழில் செய்வதை தடுத்து உத்திரவிடலாம். இது உடனடியாக தமிழக அரசிதழில் வெளியாகி … Continue reading ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்

அருந்ததிய மக்களுக்காக குரல் கொடுக்கும் எழுத்தாளர் மதிவண்ணனை பழிவாங்கும் முயற்சியில் அரசு கல்லூரி நிர்வாகம்

ச.பாலமுருகன் தமிழ் கவிதை சூழலில் தலித் கவிதைகளின் வழியாகவும் மேலும் ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களின் உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்பவராகவும் உள்ள செயல்பாட்டாளர் கவிஞர் மதிவண்ணன். இவரின் இயற்பெயர் ம.மோகன்ராஜ் மாணிக்கராஜ் என்பதாகும். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரசு போக்குவரத்து கழகத்தின் ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ் ரே பிரிவில் பணிபுரிந்து வருகின்றார். தொடர்ந்து அருந்ததிய மக்களின் அரசியல் உரிமைக்களை முன்னெடுத்த காரணத்தால் இவர் மீது உள்ளூர் ஆளும் கட்சி மந்திரி வகையறாக்களுக்கு கோபம் இருந்து … Continue reading அருந்ததிய மக்களுக்காக குரல் கொடுக்கும் எழுத்தாளர் மதிவண்ணனை பழிவாங்கும் முயற்சியில் அரசு கல்லூரி நிர்வாகம்