கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா : தமுஎகச புகழஞ்சலி

தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதியினை முதலில் உருவாக்கியவர், தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, மக்கள்மொழியின் வழிகாட்டி, கடித இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்தவர் நாவலாசிரியர் கி.ரா என்றழைக்கப்படும் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் நேற்றிரவு (17.05.2021) புதுச்சேரியில் காலமானார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகேயுள்ள இடைசெவல் என்ற சிற்றூரில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. முப்பத்தைந்து வயசுக்குப் பிறகு எழுத ஆரம்பித்து தமிழ் இலக்கியத்தில் உன்னதமான இடத்தைப் பிடித்தவர். தமிழ் இலக்கியவெளியை ஆக்கிரமித்திருந்த … Continue reading கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா : தமுஎகச புகழஞ்சலி

பிடிமண் எடுத்தது பிற்போக்கா?: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

இந்து மதம் எனப்படுகிற சைவ, வைணவ, வைதீக மதங்களுக்கும் பிடிமண்ணுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது எந்த மதமும் சாராத நாட்டுப்புற வழிபாட்டு மரபில் உள்ள ஒரு சடங்கு.

ஏன் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்: ச. தமிழ்ச்செல்வன்

Tamil Selvan கொங்கு வட்டாரத்தில் சாதிய அணிதிரட்டல் அரசியலை முன்னெடுக்க நினைப்போரும் மதவாத அரசியல் அணிதிரட்டலுக்காக உழைப்போரும் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.அந்தப்பகுதி மக்களின் மனம் காயப்பட்டதைப் பற்றி உருகி உருகிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். This is called Appeasing. இந்த சக்திகளைத் தாண்டி பொதுமக்கள் மனம் இவர்கள் தூண்டியதால் காயப்பட்டிருந்தாலும் கூட எழுத்தாளர் பெருமாள் முருகன் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை விட என் எழுத்து முக்கியமில்லை. நான் மன்னிப்புக் கேட்கிறேன். திருச்செங்கோடு என்ற ஊர்ப்பெயரை நாவலிலிருந்து நீக்குகிறேன் … Continue reading ஏன் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்: ச. தமிழ்ச்செல்வன்

குருமூர்த்தியின் ஆபத்தான கட்டுரை

ச. தமிழ்ச்செல்வன் மற்ற பத்திரிகைகள் எல்லாம் பெருமாள்முருகன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கருத்துரிமையை இத்தீர்ப்பு நிலைநாட்டியுள்ளதாகக் கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதிக்கொண்டிருக்கும்போது தினமணி மட்டும் சங் பரிவார அறிவாளியான திரு.எஸ்.குருமூர்த்திஜியிடம் இரண்டு கட்டுரைகளை வாங்கி தொடர்ந்து நேற்றும் இன்றும் வெளியிட்டு தன் “நடுநிலை”யை நிலை நாட்டியுள்ளது. இத்தீர்ப்பு கொங்கு வட்டாரத்தின் ஒரு சாதி மக்களின் / பெண்களின் புண்பட்ட உணர்வுகளை கணக்கில் கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டுள்ளதாக ஜீ எழுதியுள்ளார். 2010 இல் மாதொருபாகன் வெளியாகி 2012 … Continue reading குருமூர்த்தியின் ஆபத்தான கட்டுரை

கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா!

ச. தமிழ்ச்செல்வன் கோவை அரசு மருத்துவமனையில் ஒரு சர்வதேச அனாதையைப்போல கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா. காதல் மணம் புரிந்த சங்கர் கண் முன்னால் வெட்டிச் சாய்க்கப்பட்டதைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்.. இதுவரை மார்க்சிஸ்ட் கட்சித்தோழர்கள், ஜனநாயக மாதர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அய்யா வைகோ, அறிவியல் இயக்கத்தோழர்கள் மோகனா, உதயன் போல வெகு சிலரே சென்று அந்தப் பெண் குழந்தையைக் கண்டு வந்துள்ளனர். குறைந்த பட்சம் கோவை வட்டாரத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் முறை வைத்துத் … Continue reading கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா!