ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத் தாக்குதல்

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 வரை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. விமானப்படை விமானங்களில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பீமர், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் செயல்பட்டு வந்த 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள இந்திய ராணுவம், நமது … Continue reading ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத் தாக்குதல்

தொண்டர்களின் கருத்தை மதிக்காத சோனியாவின் அறிவிப்பு; போராடிய தொண்டர் மரணத்தின் பிடியில்…

அண்மையில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.  புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பாக யார் முதல்வராவார்கள் என்கிற எதிர்பார்க்க எல்லா மட்டத்திலும் இருந்தது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை முதல்வராக அறிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் போலீஸார் தடியடியில் ஈடுபட்டனர். பல தொண்டர்கள் காயமடைந்தனர். விஜயன் என்பவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் … Continue reading தொண்டர்களின் கருத்தை மதிக்காத சோனியாவின் அறிவிப்பு; போராடிய தொண்டர் மரணத்தின் பிடியில்…

சோனியாவுக்கு எதிராக கருப்புகொடி!

 சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.  புதுச்சேரியில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் சோனியா, அதைத் தொடர்ந்து மாலை தீவுத் திடலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். சோனியாவின் வருகையைக் கண்டித்து சென்னை உழைப்பாளர் சிலை முன்பு மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://twitter.com/mahajournalist/status/728175593615970304

போராளியா விஜயதாரணி எம்.எல்.ஏ.?: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டியதாக நெகிழ்ச்சி!

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கடந்த மாதம் 22-ம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த பொன்னம்மாளின் பேத்தி எம்.ஜான்சி ராணி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் செவ்வாய்கிழமை விஜயதாரணி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது, மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், அது தொடர்பான பிரச்னைகள் குறித்தும் சோனியா காந்தியிடம் அவர் விளக்கி இருக்கிறார். இதையடுத்து சோனியா … Continue reading போராளியா விஜயதாரணி எம்.எல்.ஏ.?: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டியதாக நெகிழ்ச்சி!

லீவிஸ் எம். சிமோன்ஸ்:இரவு விருந்தில் இந்திரா காந்தியை, சஞ்சய் காந்தி அறைந்த கதை என்ன?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்த தகவல் தனக்கு எப்படி  கிடைத்தது, அதைப்பற்றிய தன்னுடைய கட்டுரை வெளியான பின் , ராஜீவ்காந்தி, சோனியா காந்தியுடனான சந்திப்பு எப்படி இருந்தது என்றெல்லாம் நினைவு கூறுகிறார் புலிட்சர் விருது பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபர் லீவிஸ் எம். சிமோன்ஸ். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப் படுத்திய காலகட்டத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் டெல்லி நிருபராக பணியாற்றியவர் … Continue reading லீவிஸ் எம். சிமோன்ஸ்:இரவு விருந்தில் இந்திரா காந்தியை, சஞ்சய் காந்தி அறைந்த கதை என்ன?

மீண்டும் திமுகவுடன் கூட்டணியா ? : சோனியா, ஈவிகேஎஸ் ஆலோசனை

கேரளாவின் வர்கலாவில் நாராயண குருவின் 83-வது ஆண்டு நினைவு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது "சமூக சீர்திருத்தவாதிகளை சொந்தம் கொண்டாட முயற்சிக்கும் பாரதிய ஜனதா,  சமூகத்தில் பிளவை ஏற்படுத்தவும்  முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார். இதனிடையே கேரளா வந்த சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீரென  சந்தித்து பேசினார். அப்போது திமுகவுடனான சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்து … Continue reading மீண்டும் திமுகவுடன் கூட்டணியா ? : சோனியா, ஈவிகேஎஸ் ஆலோசனை

சோனியாவின் தந்தை பாசிஸ்ட் ராணுவ வீரர் – காங்கிரஸ் பத்திரிகை கடும் விமர்சனம்…

மும்பையில் இருந்து வெளிவரும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "காங்கிரஸ் தர்ஷனி"ல் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் தந்தை ஒரு பாசிஸ்ட் ராணுவ வீரர்; காஷ்மீர் விவகாரத்தில் ஜஹர்லால் நேரு தவறு செய்தார் என்ற விமர்சனங்களை முன்வைத்து கட்டுரை வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 131-வது நிறுவன நாள் இன்று கொண்டாட படுகிறது. இதை ஒட்டி மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான "காங்கிரஸ் தர்ஷனி"ல் சிறப்பிதழ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சோனியா காந்தியின் தந்தை, இத்தாலி … Continue reading சோனியாவின் தந்தை பாசிஸ்ட் ராணுவ வீரர் – காங்கிரஸ் பத்திரிகை கடும் விமர்சனம்…

#NationalHerald வழக்கு: பரபரப்பான நகர்வுகளின் நேரடி தொகுப்பு இங்கே…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜராக இருக்கின்றனர். டெல்லி வட்டாரங்கள் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. சோனியா, ராகுலுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம் https://twitter.com/ndtv/status/678146596463206400 சோனியா, ராகுலுக்கு பிணை வழங்கக் கூடாது: சு.சாமி வாதம் https://twitter.com/manojprabakar4/status/678145738556104704 வழக்கு விசாரணை ஆரம்பமானது https://twitter.com/ndtv/status/678144756841504768 பாஜகவின் பழிவாங்கும் அரசியலின் விளைவு இந்த வழக்கு என்பதை நாடறியும்: குலாம் நபி ஆசாத் https://twitter.com/ghulamnazad/status/678120019939622912 நேஷனல் ஹெரால்டு வழக்கை … Continue reading #NationalHerald வழக்கு: பரபரப்பான நகர்வுகளின் நேரடி தொகுப்பு இங்கே…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் கைதாவார்களா?

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜராக இருக்கின்றனர். இந்நிலையில் சோனியா, ராகுல் கைதாவார்களா என்கிற வகையில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.  இந்த வழக்கு இதுவரை கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்... ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை. தற்போது வெளிவராத இந்தப் பத்திரிகை அசோசியேடட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது.  இந்தப் பத்திரிகைக்கு அவ்வவ்போது கடனைத் … Continue reading நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் கைதாவார்களா?