அயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டு பெண்கள் மீது தேச துரோக வழக்கு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில் அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு குறித்து ‘வன்முறையை தூண்டும் விதத்தில்’ பேசியதாகவும் மதத்தின் பெயரால் இரு சமூகங்களுக்கிடையே பகையைத் தூண்டியதாகவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரு பெண்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தகவல்படி, சாயிதாபாத்தைச் சேர்ந்த ஜிலி ஹுமா, அவருடைய தங்கை சபிஸ்டா ஆகியோர் உஜாலேசா ஈத்காவில் பெண்கள் சந்திப்பில் ‘வன்முறையை தூண்டுவிதத்தில் பேசியதோடும், முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். அதே இடத்தில் பாபர் மசூதி கட்டுவோம் என்றும் ராமர் கோயிலை இடிப்போம் என்றும் அவர்கள் பேசினர்” என்கிறார் சாயிதாபாத் ஆய்வாளர் கே. சீனிவாஸ்.

இந்துக்களுக்கு ஆதரவாக ஆயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஹூமா விமர்சித்ததாகவும் போலீசு தரப்பு கூறுவதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாயிதாபாத் துணை ஆய்வாளர் தீன் தயால் சிங், நிகழ்விடத்தில் இருந்ததாகவும் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 124A, 153A, 505, 295 மற்றும் 109ன் படி தேச துரோகம், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துக்கு எதிராக  தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

முசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், தாங்கள் பெரும்பான்மை சமூகத்தால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்கிற விரக்தியில் வெளிப்படும் வார்த்தைகளுக்குக்கூட தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படுவது, முசுலீம் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. 

பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்

இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும்; கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!

அண்மையில் இயக்குநர் பா. ரஞ்சித், சோழ மன்னர் ராஜன்ராஜன் குறித்து முன்வைத்த கருத்தொன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, என்னதான் மிகச்சிறந்த ஆட்சியைத் தந்திருந்தாலும் ஒரு அரசர் அல்லது ஒரு ஆட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். நன்மையை பேசுவதுபோல, அந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளையும் சேர்த்தே பேசுவதே கருத்துரிமை. கருத்துரிமைக்கும் அவதுறுக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது கருத்துரிமையின் பேரில் வருமே தவிர, அது அவதூறு அல்ல.

தமிழகத்தின் மிக முக்கியமான வரலாற்றாசிரியர்கள் ராஜன்ராஜன் குறித்து எழுதிய பல்வேறு கருத்துக்கள், வெகுமக்கள் அறியாதவை; விவாதத்துக்குரியவை. பா. ரஞ்சித் இல்லாத ஒன்றை பேசிவிடவில்லை.

சமூகத்தின்பால் அக்கறை கொண்ட படைப்பாளியாக ஒவ்வொரு சமூக பிரச்சினையிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பா. ரஞ்சித், அதே அக்கறையின்பேரிலேயே ராஜராஜன் குறித்த கருத்தை பேசியுள்ளார். இந்தக் கருத்து குறித்து விவாதிக்க வேண்டுமே அன்றி, அதைச் சொன்னார் என்றே ஒரே காரணத்துக்காக, பா. ரஞ்சித் மீது வழக்குகள் தொடுப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

அடுக்கடுக்கான வழக்குகள் போடப்படுவது, பா. ரஞ்சித் என்னும் சமூக அக்கறை கொண்ட படைப்பாளியை அலைக்கழிக்க வைக்கும்; சமூகத்தின் மீது அக்கறை கொண்ட படைப்பாளிகளை வாயடைக்க வைக்கும்.

எனவே, இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற்று, கருத்துரிமையைக் காப்பாற்ற வேண்டும் என தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கேட்டுக்கொள்கிறது. அதுபோல, சக கலைஞரான பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்களையும் கண்டிக்கின்றோம்.

இவண்
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்.

மாதம் ரூ.3000 ஓய்வூதியம் என்ற அறிவிப்பு ஒரு மோசடி : ஏஐடியுசி

அமைப்புச் சாரா தொழிலாளிக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தரப்போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய விளம்பரம் செய்யப்பட்ட து. பத்திரிக்கைகள் பாராட்டின. ஆனால் இதனால் தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மோடி அறிவித்து உள்ள திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே சேர முடியும். இது ஒரு விருப்பபூர்வமான(optional) திட்டம்தான்; அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு தொழிலாளியும் 18 வயது முதல் 40 வயதுவரை மாதாமாதம் ( 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை ) பிரிமியம் செலுத்த வேண்டும். இதற்கு ஈடான தொகையை மத்திய அரசு தன் பங்கிற்கு செலுத்தும். இப்படி செலுத்தி வரும் தொழிலாளிக்கு இருபது ஆண்டுகள் கழித்து 60 வயது ஆனவுடன் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட அமைப்புச்சாரா நலவாரியங்களில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் 60 வயது ஆனவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் தற்போது ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஓரளவு நல்ல திட்டமாகும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு அறிவித்துள்ள திட்டமாகும். இதற்கு சொற்பமான நிதியே (ஐநூறு கோடி ரூபாய் மட்டுமே) மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வழங்கப்டும். 41 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.

இந்த திட்டத்தினால் ஏற்கெனவே நடைமுறையில் மாநில அரசால் நல்ல முறையில் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிற ஓய்வூதியத்திற்கும் பாதிப்பு வரும் அபாயம் உள்ளது.

எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை ஏஐடியுசி நிராகரிக்கிறது. 60 வயதான அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியுசி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

இந்தியாவின் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை தேசியமாக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த சந்தா கொச்சார் விதிமுறைகளை மீறி தன் கணவர் பணிபுரிந்த வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து 5000 கோடி ரூபாய்களுக்கு நட்டம் ஏற்படுத்தி உள்ளார். எனவே அவர் வங்கியின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எதிர் கொண்டு உள்ளார்.

ஏற்கெனவே இந்த வங்கியில் இருந்த போது சிறப்பாக பணியாற்றியமைக்காக மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி இருந்தது. ஐசிஐசிஐ வங்கியை விட நன்கு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகிகளுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் சமூகநலம் சார்ந்த திட்டங்களுக்கு பெருமளவில் கடன் வழங்கி இருந்தன. தனியார் வங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன என்று காட்டுவதற்காக மத்திய அரசு சந்தா கொச்சாருக்கு இந்த விருதை வழங்கி இருந்தது.

இந்நிலையில் இ.அருணாச்சலம் தலைமையில் சமீபத்தில் கூடிய தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க மாநில மாநாட்டில் ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட து. இந்திரா காந்தி வங்கிகளை 1969 ஆண்டு தேசியமயமாக்கினார். அதன் பொன்விழா ஆண்டு இது. இந்நிலையில் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

அரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்!

சந்திரமோகன்

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மலையடிவார கிராமமான சிட்லிங்கி ஊராட்சியைச் சார்ந்தவர் அண்ணாமலை. மலையாளி பழங்குடி இனத்தைச் சார்ந்த இவரின் மகளான செளமியா (வயது 16) பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். தீபாவளி விடுமுறைக்காக விடுதி மூடப்பட்டதால், நவம்பர் 5 ந் தேதியன்று ஊருக்கு திரும்பியுள்ளார். பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் வேலைக்கு சென்றுவிட்டனர்.

காலை 11.30 மணியளவில், இயற்கை உபாதையாக ஓடை பக்கம் தனியாக சென்ற பொழுது, அதே பகுதியைச் சார்ந்த சாராய வியாபாரி ஒருவரின் மகன் சதீஷ் மற்றும் அவனது கூட்டாளி ரமேஷ் இருவரும் பலாத்காரமாக பாலியல் வன்கொடுமை (Rape) செய்துவிட்டனர். உதிரப்பெருக்குடன் மாணவி செளமியா வீட்டுக்கு திரும்பினார். வேலைக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகளது நிலையறிந்து உடனே அழைத்து கொண்டு 10 கி.மீ தொலைவில் உள்ள கோட்டப்பட்டி காவல்நிலையம் சென்றனர்.

அவப்பெயர் மிக்க கோட்டப்பட்டி காவல்நிலையம்

குற்றவாளி சதீஷ் தாயார் சாராய வியாபாரி என்பதாலும், கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு “மாமூல் ” உடனடியாக குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர். பிறகு, செளமியா பெற்றோரிடம் ரூ. 5000 பணம் வாங்கிக் கொண்டு முதல் தகவல் அறிக்கை FIR போட்டுள்ளனர். அதிலும் பாலியல் வன்கொடுமை (RAPE) எனப் பதிவு செய்யாமல், பாலியியல் பலாத்கார முயற்சி தான் / Attempt to Rape எனப் பதிவு செய்துள்ளனர்.

கூடுதலான குற்றமய அலட்சியம் /Criminal negligence என்னவெனில், உதிரப்போக்கு மற்றும் உடல் வலி, காய்ச்சல் உடனிருந்த மாணவியை அருகாமையில் உள்ள அரூர் அரசு மருத்துவமனை அல்லது தருமபுரி அரசு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கவில்லை.

மாறாக, அடுத்த நாளான நவ.6 ந் தேதியன்று கோட்டப்பட்டி காவல்நிலையம் சார்ந்த ஒரு பெண் போலீஸ் & ஆண் போலீஸ் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.4000 பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர். (இணைப்பிலுள்ள மாணவியின் தந்தை அண்ணாமலை கடிதங்களை படிக்கவும்). பணத்தை பறித்துக் கொண்ட போலீசார், உதிரப் போக்கு & காய்ச்சல் உடனிருந்த மாணவிக்கு மருத்துவ சிகிச்சைக்கு எதுவும் செய்யாமல், மனசாட்சியே இல்லாமல் CWC கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி வள்ளலார் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அங்கும் எந்த மருத்துவ உதவிகளும் தரப்படவில்லை.

அடுத்த நாள் நவம்பர் 7 ந் தேதி குழந்தைகள் காப்பகம் சென்ற பெற்றோர், மகளின் நிலையைப் பார்த்து பரிதவித்து, காப்பக பொறுப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்து, மாலையில் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி செளமியா சிகிச்சை பலனின்று, நவம்பர் 10 ந் தேதி உயிரிழந்தார்.

ஆனால், அதுவரையிலும் பாலியல் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை; குற்றவாளிகள் தரப்பில் பெரும் தொகையை இலஞ்சாமாக வாங்கிக் கொண்டு தப்பவிட்டு விட்டனர். சிட்லிங்கி ஊர் பொதுமக்கள் கூட்டுரோட்டில் அணிதிரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் தடியடி செய்து விரட்ட தான் கோட்டப்பட்டி காவல்துறை வந்தது.

நவம்பர் 10, 11 இரண்டு நாட்கள் மக்கள் போராட்டத்தின் காரணமாக தாசில்தார், ஆர்டிஓ, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மக்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கித் தருவதாக வாக்குறுதி தந்துள்ளனர். குற்றவாளி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

இலஞ்ச ஊழல், கிரிமினல் அக்கிரமங்கள், சாராய வியாபாரிகள், வேலனூர் ஆற்று மணல் கொள்ளையர் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து, இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையில் மொத்த கோட்டப்பட்டி காவல்நிலையமும் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! கடந்த மாதத்தில் இதே சிட்லிங்கி ஊராட்சியில் கொல்லப்பட்ட பழங்குடி பாட்டி ஒருவர் விஷயத்தில் கொலையாளிகளை விசாரணை செய்து அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியில் விட்டுவிட்டு, பேத்தியை கைது செய்த அவப்பெயர் மிக்கது, கோட்டப்பட்டி காவல்நிலையம்.

காவலர்களை கூண்டோடு பணிநீக்கம் செய்க!

தமிழ்நாட்டில் எஸ்சி மற்றும் எஸ்டி சிறுமிகள், பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் அரசாங்கத்தால் சரியாக கையாளப் படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

1)சட்டங்களை மதிக்காததும், பாலியல் வன்கொடுமையை வெறும் முயற்சி என வழக்கு பதிவு செய்ததும், தங்களது கடமைகளை செய்யத் தவறியதும் மட்டும் அல்லாமல் … மனசாட்சியே இல்லாமல், பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை கூட வழங்காமல், இலஞ்ச நலன்களுக்காக, கிரிமினல் அலட்சியத்துடன் செயல்பட்ட கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் உள்ள அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

2)காவல்நிலையத்தின் அலட்சியம் காரணமாகவே பழங்குடி ST இனம் சார்ந்த மாணவி செளமியா உயிரிழந்ததால், எஸ்சி & எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் / SC& ST (POA) Amendment Act 2015 ன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கோட்டப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீதும் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு.  ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் போது ராமர் சிலை கட்டுமானம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

என்.டி.டீ.விக்கு உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா இதுகுறித்து உறுதிபடுத்தாவிட்டாலும், ‘அயோத்தியில் மிகப்பெரிய சிலையை அமைப்பதை யார் தடுத்து விடுவார்கள்?’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘பாபரின் பெயரால் இனி யவரும் அயோத்தியில் எதுவும் செய்துவிட முடியாது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்’ என கூறினார்.

பாஜக அரசின் ராமர் சிலை அறிவிப்பு குறித்து காங்கிரசைச் சேர்ந்த சசி தரூர் விமர்சித்துள்ளார். ‘ஒற்றுமைக்கான சிலை, ராமர் கோயில், அயோத்தியில் ராமர் சிலை போன்ற விவகாரங்கள் திசை திருப்பும் வகையில் உருவாக்கப்படுபவை. மக்கள் இந்த திசை திருப்பலில் விழுந்துவிடாமல் தங்களுடைய அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!

கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார்.
கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது.
காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.

தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.

“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.

“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.
அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.
அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.

பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.


நினைவில் உறுத்தும் சமரசங்களும் சரணடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை தேர்தல் அரசியலின் வரம்பும், பிழைப்புவாதக் கட்சியின் நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்திய தெரிவுகள்.
இந்திராவுடனும், பாஜக வுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகள், அபாண்டமாக சுமத்தப்பட்ட ராஜீவ் கொலைப்பழியை எதிர்த்து நிற்கத்தவறிய அச்சம், தில்லிக்குப் பணிந்து ஏவப்பட்ட அடக்குமுறைகள், ஈழத்தின் இனப்படுகொலையின் போதும் கூட துறக்க முடியாத பதவி மயக்கம், இன்னும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குரிய சீரழிவுகள் பலவற்றைப் பட்டியலிடலாம்.

அவை, இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புக்குள் நின்று இலட்சிய சமூகத்தைப் படைக்க விழையும் எந்த ஒரு தனிநபரும், அரசியல் கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய வீழ்ச்சிகள். “திமுக என்ற கட்சி வேறு விதமாக இருந்திருக்க இயலுமா” என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான விடையை திமுக வின் வரலாற்றில் தேடுவதே பொருத்தமானது. அந்த அளவில், தான் ஆற்றிய பாத்திரத்துக்கு அவரும் பொறுப்பு.

அன்றி, “கலைஞர் நினைத்திருந்தால்” என்று பேசுவோரின் பார்வை பிழையானது, தனிநபரின் வழியாக அரசியலையும் வரலாற்றையும் பார்ப்பவர்கள் தனிநபரை வழிபடுகிறார்கள், அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றப்படுத்துகிறார்கள்.

இவ்வீழ்ச்சிகள் அனைத்தும் திராவிட இயக்கமும் அதன் சமூக அடித்தளமாக அமைந்த மக்கட்பிரிவினரும், மெல்ல அரசதிகாரத்தில் நிறுவனமயமானதுடன் தொடர்பு கொண்டவை. இந்திய தேசிய அரசமைப்பில் நிறுவனமயமானவர்களுள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினரா, கம்யூனிஸ்டுகளா, சோசலிஸ்டுகளா, தலித் இயக்கத்தினரா என்றொரு ஒப்பாய்வு வேண்டுமானால் இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவக்கூடும்.


ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே.
எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.

டில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.

1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது. அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.

எந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.
ஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.

கருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.


கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.

இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.

காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.

கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.

கலைஞரின் குடும்பத்தினர்க்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

07-08-2018
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

“எட்டுவழிச்சாலை மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?”

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் தர மறுப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள்:

தொழிற்சங்க செயல்பாட்டாளர் மாதவராஜ்

சேலம் – சென்னை எட்டுவழிச்சாலைக்கு தன் நிலம் பறிபோவதைத் தாங்க முடியாமல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நிலமே என் உயிர், நிலமே என் வாழ்க்கை என அந்த எளிய மனிதர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இரக்கமும், மனிதாபிமானமும் அற்றவர்களின் செவிகளில் இந்த உயிரின் வேதனைக் குரல் கேட்காமல் போகலாம் அல்லது முக்கியமற்றுப் போகலாம்.

பூச்சி மருந்தைக் கையில் வைத்துக்கொண்டு அவர் என்னவெல்லாம் சிந்தித்து இருப்பார்? அனாதரவாக விடப்பட்டதாக எப்படியெல்லாம் உணர்ந்திருப்பார்?

எட்டுவழிச்சாலை அவரது மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?

அரசியல் செயல்பாட்டாளர் சந்திரமோகன்:

எட்டுவழிச் சாலை திட்டத்தால் முதல் உயிர்பலி. விவசாயி சேகர் துயர மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பசுமை வழி சாலைக்காக, எதிர்ப்பையும் மீறி, மேல் வணக்கம்பாடியைச் சேர்ந்த சேகர் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளிட்டவை அளவீடு செய்யப்பட்டது.

இதனால் அவர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானார். இந்நிலையில் திடீரென அவரது விளை நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து சேகர் உயிரிழந்துள்ளார்.

எட்டுவழிச் சாலையும் வேண்டாம்; விவசாயிகள் உயிர்ப்பலியும் வேண்டாம்.
Stop Green Corridor 8way Project!

“விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க!”:  அ.மார்க்ஸ் 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நீண்ட காலசிறைவாசிகளை விடுதலை செய்வது என்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்  முடிவை சென்னையில், சனியன்று  நடந்த தேசிய மனித உரிமைகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக நடந்த கலந்துரையாடல்  பாராட்டியது. அதேவேளையில் விடுதலையில் பாகுபாடு  காட்டக்கூடாது; நிபந்தனைகள் போடக்கூடாது; பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்ட து.
“கடந்த காலங்களில் விடுதலைக்கு தகுதியானவர்கள் அனைவரும் ஒரே நாளில், குறிப்பிட்ட விழா நாளன்று விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் அறிவிப்பு வந்த சில மாதங்கள் கடந்த பின்னரும் இதுவரை  இருநூறுக்கும் சற்று அதிகமானவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன் விடுதலைக்கு தகுதியான, பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த  1500க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இன்னமும் சிறையில் உள்ளனர். சிறை என்பது ஒரு சீர்திருத்தம் நடைபெறும் இடம்தானே தவிர, வாழ்நாள் முழுவதும்  குற்றவாளியை அடைத்து  வைக்கும் இடம் இல்லை ” என்று  தியாகு குறிப்பிட்டார்.
நீண்டகால சிறைவாசிகளை  விடுதலை செய்வதில் கடந்த காலங்களில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு  முன்னோடியாக இருந்துள்ளது. இது குறித்து சட்டத்துறை  அமைச்சரையும், முதலமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் பேரா. அ. மார்க்ஸ், தியாகு ஆகிய இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.

மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம் என மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான சி. ராஜு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மீனவர்களின் மனுவை சாக்காக வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி, என பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்க தக்கது. பாசிச இந்துத்வா கொள்கையை வைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி தீவிரவாதம், பயங்கரவாதம் என பேசுவது, வேடிக்கையானது” எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவ பிரதிநிதிகளின் மனுவை மேற்கோள் காட்டி விளக்கமளிக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

“காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம்.
தற்போது அந்த 2 வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே 22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.

‘‘தூத்துக்குடி வன்முறை சம்பவத்துக்கும் மீனவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டி மே 22 போராட்டத்தில் பங்கேற்க செய்தனர்’’ என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் 29-6-2018 அன்று மனு அளித்தனர்“.
மொத்த மனுவின் சாரம் மேற்கண்ட சில வரிகள்தான்.

நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்து, யாரை வேண்டுமானாலும் கைது செய்கிறது போலீசு. ஸ்டெர்லைட்டைவிட அதிக ஆபத்து போலீசின் இந்த அடக்குமுறைதான். ஒரு சில மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும், மக்கள் அதிகார அமைப்பின் மீதும் அவதூறு பிரச்சாரத்தை போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மே 22 போராட்டம் மீனவ அமைப்புகள் முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை. மீனவ சங்க பிரதிநிதிகள் கொடுத்த மனுவில் போலீசின் தற்போதைய அடக்குமுறையை கண்டித்து, துப்பாக்கிச்சூடு படுகொலையை கண்டித்து ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்த புகாரை கொடுக்கவில்லை. இரு வழக்கறிஞர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அல்ல. போலீசு தனது பித்தலாட்ட நடவடிக்கையை நியாயபடுத்த அவ்வாறு இட்டுகட்டி பரப்பி வருகிறது.

போராடும் மக்களுக்கு உண்மையாக உதவியதற்காக இன்று வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் எண்ணற்ற வழக்குகளில் போலீசின் சித்ரவதையில் பாளையம் கோட்டை சிறையில் உள்ளார். எப்போது வெளியே வருவார் என தெரியாது. எதையும் செய்ய தயங்காத போலீசார் உயிரோடு விடுவார்களா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. பல கோடிகள் புரளும் மதுரை பல்கலைகழக துணைவேந்தரை உச்சநீதிமன்றம் வரை சென்று பணி நீக்கம் செய்தவர் வாஞ்சிநாதன். வழக்கறிஞர் தொழிலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் திறமை உடையவர்.

வழக்கறிஞர் அரிராகவன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார் நீிமன்றத்தில் அவரை பற்றி விசாரித்து பாருங்கள். மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை செயல்பாடு பற்றி தமிழக மக்கள் அறிவார்கள். இந்நிலையில் போலீசார் சொல்வதை வேறு வழியில்லாமல் புகாராக கொடுத்த மீனவ பிரதிநிதிகளின் மனுவை அப்படியே அனைத்து பத்திரிக்கைகளும் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு போல் வெளியிட்டதன் நோக்கம் நேர்மையற்றது.
மே 22 போராட்டம் தூத்துக்குடி மக்கள் நடத்திய மாபெரும் தன்னெழுச்சி போரட்டம். ஜல்லிகட்டுபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக பெரும் மக்கள்திரள் அமர்ந்து விட்டால் என்ன செய்வது?. அதனால்தான் ஸ்டெர்லைட்டும். போலீசாரும் திட்டமிட்டு வன்முறை வெறியாட்டத்தை நடத்தி போராட்டத்தை முடித்து உள்ளனர். தமிழகத்தில் இனி யாரும் எதற்கும் போராடகூடாது என்பதன் அச்சுறுத்தல்தான் தூத்துக்குடி மாடல் துப்பாக்கிசூடு படுகொலை. அதன்பிறகான போலீசின் அடக்குமுறைகள்.

இந்த படுகொலை குற்றத்தை திசை திருப்ப யார்மீது பழிபோடுவது என பொறியில் அகபட்ட எலியாக தூத்துக்குடி போலீசு துடிக்கிறது. தென் மாவட்டங்களில் மக்கள் அதிகார தோழர்களை, ஏறத்தாழ அனைவரையும் மோசடியாக ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜோடித்து எழுதி வைத்துக்கொண்டு வீடுவீடாக வேட்டடையாடி வருகிறது. ஆறு தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம். இரண்டு தோழர்கள் மீது 52 க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது. 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் மீது என்.எஸ்.ஏ. சரவணன் என்ற கூலித்தொழிலாளி வலிப்பு நோயால் அவதி பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சையின்றி சித்ரவதையை அனுபவத்து வருகிறார். அவரை ஈவு இரக்கமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளார்கள்.

மக்கள் அதிகாரத் தோழர்கள் எந்த வன்முறை தீ வைப்பு சம்பவத்திலும் ஈடுபடவில்லை. எந்த ஆதாரத்தையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யோ, அல்லது பா.ஜ.க அமைச்சர் பொன்னாரோ காட்ட முடியாது. தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தை பா.ஜ.க. அதிமுக. தவிர தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அங்கு சென்று ஆதரித்தார்கள். எந்த பாகுபாடு, வேறுபாடுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இதில் மூளைச்சலவை எங்கு வருகிறது. வெளியிலிருந்து தூண்டுவது எங்கு வருகிறது?. இதில் யார் சமூக விரோதிகள்?. ஸ்டெர்லைட்டை மூடி விட்டார்கள் என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் பா.ஜ.க பொன்னாருக்கு ஒருவிதமாகவும், ஜக்கி வாசுதேவ், பாபா ராம் தேவ் சாமியாருக்கு வேறுவிதமாகவும் வெளிப்படுகிறது.

பா.ஜ.க. அமைச்சர் “ பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக வலம் வருகின்றனா். அரசியல் கட்சிகளிலும் பயங்கரவாதிகள் நுழைந்து இருக்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தால் வேறு பெயரில் செயல்படுவார்கள் அதனால் அவா்களை கரு அறுக்க வேண்டும். வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். என தூக்கத்தில் நடக்கும் வியாதிபோல் பிதற்றிவருகிறார்.

“மீத்தேன், கெயில், சேலம் விமான நிலைய விரிவாக்கம், எட்டுவழிச்சாலை, சாகர்மாலா, ஆகியவற்றால் பாதிக்கபட்ட மக்கள் போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக சென்று ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முடியாத இந்த பாசிச கோழைகள்தான், மக்களோடு மக்களாக நின்று போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகளை பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி என பீதியூட்ட முயல்கிறார்கள்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சதி வழக்கை உயிர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கட்டும். கொலைகார போலீசே கொலைக்கான காரணத்தை விசாரிக்கிறது. ஸ்டெர்லைட்டிடம் கோடிகணக்கில் பணம் பெற்ற பா.ஜ.க கட்சியை சார்ந்த அமைச்சர் தீவிரவாதம், பயங்கரவாதம் என போலீசை உசுப்பேற்றி விடுகிறார். இதன்மூலம் அனைத்து மக்கள் போராட்டங்களையும் போலீசு அடக்கி ஒடுக்க வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார்கள். பொது அமைதிக்கு, பொது ஒழுங்குக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் இவர்களை தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தால்தான் தமிழகத்தில் அமைதி நிலவும். அதற்காக அனைவரும் போராட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு

உயர்நீதிமன்ற உத்தரவை காலில் மிதித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டப் போலீசு போராட்டக்காரர்களை  சித்திரவதை செய்வதாக மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“கடந்த மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ர வழக்கறிஞருமான தங்கபாண்டியன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் சந்தேகப்படுவோரின் வீடுகளுக்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு வழங்குகிறது. இந்த உத்தரவை போலீசு எப்படி மதிக்கிறது என்பதற்கு சில சம்பவங்கள்.

சம்பவம் :1

கடந்த வாரம் (தீர்ப்பு வழங்கி 20 நாட்கள் பின்னர்) கோவில் பட்டியைச்சேர்ந்த மாரிமுத்து என்ற மக்கள் அதிகாரம் உறுப்பினரின் வீட்டுக்கு இரவு இரண்டு மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட போலீசு திடீரென நுழைகிறது. உறங்கிக்கொண்டு இருந்த அவரின் அம்மாவைப்பார்த்து “ தூங்கறீயா, ஒழுங்க எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மெதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒருபோலீசு. என்ன புள்ளய வளத்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும் என்று கண்டபடி கத்துகிறார். மற்ற போலீசு சேர்ந்து கொண்டு வசை பாடுகிறது. பள்ளியில் படிக்கும் அவரது தம்பியின் முகவரியை வாங்கிக்கொண்டு டேய் மாரி வரல உன்னை நாளைக்கு தூக்கிக்கிட்டு போயிடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறது. வீட்டில் உள்ள பொருட்களை கலைத்துப்போடுகிறது. தொடர்ந்து வந்து வீட்டில் மிரட்டிக்கொண்டே இருக்கிறது. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமத்தான நான் எம் மவன வளர்த்தேன், அவனை கொலைகாரன்னு சொல்றாங்களே என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார் அந்தத்தாய்.

சம்வம்: 2

தூத்துக்குடி இலுப்பையூரணி

ராமர் என்பவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளர். ராமரின் மனைவியும் அவரின் தம்பி மனைவியும் சிறு வயது குழந்தைகள் மட்டுமே இம்மாதம் 10ம் தேதி இரவு 3 மணி அனைவரும் உறங்கிக்கொண்டு இருக்கும் போது சுமார் 40 போலீசுக்காரர்கள். சுவரேறி குதிக்கிறார்கள். பெண்கள் உறங்கொக்கொண்டு இருக்கும் போது டார்ச் லைட் அடித்துப்பார்க்கிறார்கள். கதவுகளை ஓங்கி டமால் டமால் என்று அடிக்கிறார்கள். பதறி என்ழுந்த பெண்களை வெளியே வரச்சொல்லி வீடுகளுக்குள் சென்று துழாவுகிறார்கள். சுவரேறி குதித்து வந்த போலீசு வெளியே செல்வதற்கு கதவை திறந்து விடச்சொல்லியிருக்கிறது. எதுக்கு இந்த நேரத்துக்கு வந்தீங்க, பகல்ல தினமும் வரீங்க, பதில் சொல்றோமா இல்லையா , சுவரேறி குதிச்சு வரீங்கலே இதெல்லாம் சரியா இருக்கா என்று இரு பெண்களும் கேட்க, சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும் என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிரோம் கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும் பூட்டாம வெக்கிறோம் என்று பதிலளித்து இருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் கழித்து மாறு வேடத்தில் வந்த போலீசு வண்டி வாடகை எடுத்துட்டு காசு தராம இருக்கான் உன் வீட்டுக்காரன், போனும் எடுக்க மாட்டேங்கிறான் என்று காலையில் சத்தம் போட்டு இருக்கிறது. பின்னர் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போய் தனியே விசாரிக்க ஆரம்பித்தவுடன், போலீசை கண்டறிந்த பெண்கள் கேள்விகேட்டவுடனேயே செல்கிறது. எப்போது போலீசு வீட்டுக்கு வருமோ என்ற பயத்தில் இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள் பெண்களும் குழந்தைகளும்.

இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் ராமரின் வீட்டுக்கு 10 வீடு தள்ளி இருக்கும் ஜெபமாலை என்பவரை பிடித்துச்சென்று சித்தரவதை செய்கிறது அதனால் உடலெல்லாம் காயங்கள் ஏற்படுகின்றன. அவரை ரிமாண்ட் செய்கிறது.

சம்பவம் : 3

இடம் :ஒத்தகடை

இப்பகுதியில் உள்ள எவர்சில்வர் தொழிலாளரான சரவணன் என்பவரது வீட்டின் கதவை இரவு 3 மணிக்கு ஓங்கி பலமாக அடிக்கிறது போலீசு. சரவணனின் மனைவி யார்” என்று கேட்கிறார். போலீசு வந்திருக்கோம், கதவைத்திற என்கிறார்கள். “நைட் 3 மணிக்கு வந்தா கதவைத்திறக்க முடியாது, பகல்ல வாங்க” என்கிறார். ஒரு மணி நேரம் அந்த ஏரியாவையே அதகளப்படுத்திவிட்டு செல்கிறது போலீசு. தொடர்ந்து பக்கத்து வீட்டுல் சரவணனின் போட்டோவை காட்டி யார் தெரியுமா என்று பீதியூட்டிக்கொண்டு இருக்கிறது போலீசு.

சம்பவம் : 4

இடம்: திருமங்கலம்

பரமன் வயது 55 மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளராக இருக்கிறார். இவரை கடந்த 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசு ஒரு நாள் முழுக்க விசாரித்துவிட்டு தூத்துக்குடிக்கு செல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு விடுவித்தது. இந்த நிலையில் 22.06.2018 அன்று காலை 9 மணிக்கு 7 தூத்துக்குடி போலீஸார் பரமனை வீட்டில் இருந்து கடத்திக்கொண்டு செல்கின்றனர். போலீசு வேனில் வைத்து பலமாக அடித்துள்ளனர். பின்னர் கண்ணில் துணியைக்கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப்பார்க்கச் சொல்லி அங்கேயும் அடித்துள்ளனர். ”டேய் அவுசாரி மவனே இந்தத் துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி” என்று தொரந்து அடித்துள்ளனர். இரவு வரை வண்டியில் தூக்கிக்கொண்டு சென்ற போலீசு பின்னர் ஒரு லாட்ஜில் வைத்து இரவு 9 வரை அடித்துள்ளனர். பிறகு திருமங்கலம் தாண்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர். கிளம்பும் போது “உன்னை பாவம்னு மன்னிச்சுட்டேன், குருசாமி போன் செஞ்சா இந்த நம்பருக்கு சொல்லு என்று” ராஜமாணிக்கம் என்ற எஸ்.ஐ சொல்லிவிட்டு சென்றுள்ளார். மகனோ ராணுவத்தில் உள்ள நிலையில் மாடு கன்றை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ள அவரால் வீட்டை விட்டும் போக முடியாத நிலை. வீட்டில் இருந்தாலும் எப்போது வந்து போலீசு கடத்திக்கொண்டு செல்லும் என்ற நிலை.

இவ்வாறு அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பணி நீக்கம் செய்யப்படட்டு செல்லத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கிற்காக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் டெல்லி சென்றார். வழக்கை முடித்து விட்டு வரும் போது சென்னை விமான நிலையத்தில் 20-6-2018 அன்று இரவு 12 மணியளவில் மப்டியில் வந்த போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீசு வேனில் தூத்துக்குடி அழைத்து செல்லப்பட்டார்.
ஸ்டெர்லைட் பாதிப்பே பரவாயில்லை என நினைக்கும் அளவிற்கு தூத்துக்குடி மக்களுக்கு போலீசு தொல்லை, அச்சுறுத்தல் தொடர்கிறது. கிராம போராட்டக்குழுவினர் பலர் இன்றுவரை தலைமறைவாக உள்ளனர். கிராமங்களில் ஆண்கள், இளைஞர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. பெண்கள் இரவில் போலீசுக்கு பயந்து மாதா கோவிலில் தங்குகின்றனர்.  உயர்நீதி மன்றம் இப்படி சட்ட விரோத கைதுகளை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் அதை மதிக்காமல் தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு சட்ட உதவிகளை செய்ததற்காக பழிவாங்கும் நோக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலர் வழக்கறிஞர் அரிராகவன் மீதும், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் இருபதுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். இதை அம்பலப்படுத்தி இருவரும் சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.
மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடும் பொழுதெல்லாம், அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் களத்திலும், சட்ட ரீதியாகவும் போராடியுள்ளது.  வாழ்வுரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு சட்ட உதவிகளையும் போராட்டத்திற்கு ஆதரவு தருவது குற்றமல்ல. அது வழக்கறிஞர்களின் கடமை. அதற்காக கைது, சிறை, பொய் வழக்கு என்றால் அதை அனைவரும் ஒன்று திரண்டு போராடி முறியடிக்க வேண்டும்.
நடப்பது போலீசு ஆட்சி, கிரிமினல்களின் ஆட்சி. சட்டம், நேர்மை, நியாயம், மக்கள் நலன் எதற்கு மதிப்பில்லை. போராட்டம் ஒன்றே தீர்வு. அதைதான் தூத்துக்குடி மக்கள் செய்தார்கள். தமிழக மக்களும் செய்வார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் மனதில் உருவாக்கத்தான்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மீது வழக்குகள் பதிவு செய்வது என்பது சட்டத்தினை தவறான வழியில் அரசு பயன் படுத்துவதாகும். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் மீது ஏற்கனவே உள்ள பழியைத் தீர்ப்பது போலாகும். வீடீயோ பதிவுகளை வைத்து அதில் குரல் எழுப்பும் அனைவரையும் குற்றவாளிகளாக்கப் பார்க்கிறது காவல்துறை. ஊரில் உள்ள ஆண்கள் ஊரைவிட்டே செல்லக்கூடிய கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிகிறது.

நடந்த படுகொலைகளுக்காக அரசு தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதிலிருந்தே அரசு போராடிய அப்பகுதி மக்கள் மீது தங்கள் வன்மத்தை தீர்த்துக் கொள்ளமுயல்கிறது என்பது தெளிவாகிறது.

தூத்துக்குடி மட்டுமின்றி, சேலத்தில் பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய பியூஷ் மனுஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், வளர்மதி போன்றோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கிறது. இம்மாதிரி மக்கள் நலன் குறித்த அக்கறையில் ஜனநாயக ரீதியாக குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் அரசு அடக்க நினைப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனவே தூத்துக்குடியில் காவல்துறை கைது வேட்டை நடத்துவதையும், ஏற்கனவே கைதானவர்கள் மீது மேலும் மேலும் வழக்குகளை புனைவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பி.யு.சி.எல். கோருகிறது.

தூத்துக்குடியில் பதட்டம் குறைக்கப்பட்டு, அமைதியை உருவாக்குவதற்கு பதிலாக அரசே பதட்டநிலையை அதிகரிக்கச்செய்வது நியாயமல்ல.

தூத்துகுடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் சேலம் பசுமைவழி எதிர்ப்பு போராட்டத்தில் கைதான அனைவரையும் மக்கள் நலனையும், நாட்டில் பாதுகாக்கப்படவேண்டிய ஜனநாயகப் பண்பாட்டையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என பி.யு.சி.எல் கோருகிறது.

கண.குறிஞ்சி
மாநிலத்தலைவர்

இரா.முரளி மாநிலச்செயலர்

மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு.
( People’s Union for Civil Liberties — PUCL )

தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!

தூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்திருக்கிறது. கேட்டால் தடுப்புக் காவல் – கைது என்கிறது.

மதுரை நகரின் ஒத்தக்கடை அருகே உள்ள தாமிரப்பட்டியைச் சேர்ந்த தோழர் முருகேசன், தாயாம்பட்டியைச் சேர்ந்த தோழர் சதீஷ் ஆகிய மக்கள் அதிகாரம் உறுப்பினர்களை நேற்று நள்ளிரவு கைது செய்திருக்கிறது. இருவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் தோழர்கள். அவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

தற்போது தென்மாவட்டங்களில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டிவிட்டது. அறிவிக்கப்படாத அடக்குமுறையை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசின் ஒடுக்குமுறையை அனைவரும் கண்டிக்குமாறு கோருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள போஸ்டர்.

கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேசத் தடை : சுற்றறிக்கையை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேச அழைக்கக்கூடாதென தமிழ்நாடு அரசின் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில்,

பல்கலைக்கழகம் ,கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டவர்கள்களை பேச அழைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். கல்வி நிலையங்கள் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் தளங்கள். விடுதலைப் போராட்ட காலத்திலும் ,பின்னரும் இராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா போன்றோர் கல்லூரி ,பல்கலைக்கழகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியுள்ளனர். சமகால அறிவினை இத்தகு அறிஞர்களின் கருத்துரைகளே வழங்கும்.எனவே தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையினை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

பாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.!

சமீபத்தில் நடந்த நான்கு மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பாஜக இழந்த இரண்டு தொகுதிகளிலில் முக்கியமானது உத்தரபிரதேச மாநிலத்தின் கைரானா தொகுதி. பாஜகவை வெற்றி கொண்டவர், ஒரு முஸ்லிம் பெண். முஸ்லிம்கள் கணிசமாக வாழும் உ.பி.யில் 2014 மக்களவை, 2017 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. இந்நிலையில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் சார்பில் கைரானா தொகுதியில் போட்டியிட்ட தபஸும் ஹசன் வெற்றி கண்டுள்ளது, மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

தபஸும் ஹசனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தபஸும் வெற்றி கண்டுள்ளார்.  ‘ஜின்னாவைவிட உணவு நமக்கு முக்கியம்’ என்பதை முழக்கமாக முன்வைத்து ராஷ்ட்ரிய லோக் தள் பிரச்சாரம் செய்தது.  உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீதான மக்களின் கசப்புணர்வு இடைத்தேர்தல் வெற்றியில் பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் இணைந்தால் மட்டுமே, மதவாத சக்திகளை அப்புறப்படுத்த முடியும் என்பதை உணர்வதாக எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

2014- ஆம் ஆண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக, இதுவரை நடந்த 27 இடைத்தேர்தல்களில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. பாஜக கோட்டையான உ.பி.யில் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் முதல்வர், துணை முதல்வர்  வகித்த மக்களவை தொகுதிகளை இழந்தது குறிப்பிடத்தகுந்தது. பிளவுபடுத்தும் அரசியல் மூலம் கடந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்ட கைரானா தொகுதியை இழந்திருக்கிறது பாஜக. இந்தத் தொகுதி பாஜக எம்.பி. ஹகும் சிங் மறைந்ததை அடுத்து இங்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஹகும் சிங்கின் மகளான மிராங்கா சிங் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெறாதநிலையில் அதிக இடங்களைப் பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த நாளே நடைபெற்றது. கர்நாடக விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை கொண்டாடினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜக, ஆர்.எஸ். எஸ்ஸை கடுமையாக சாடினார் ராகுல் காந்தி.

அவர் பேசியதிலிருந்து…

“நீங்கள் கவனித்தீர்களா? கர்நாடக விதான் சபையிலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரும் தேசிய கீதம் முழுவதும் இசைத்து முடிக்கும் முன்பே கிளம்பிவிட்டதை… அதிகாரத்தில் இருந்தால் எல்லா அமைப்புகளையும் அவர்கள் அவமதிப்பார்கள் என்பதையே இது காட்டுகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்த அவமரியாதையை செய்வார்கள் இதை எதிர்த்துதான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். அதிகாரத்தில் இருக்கும் மமதையில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் அவமதிக்கலாம். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இதை மீண்டும், மீண்டும், மீண்டும் செய்கின்றன..

ஜனநாயக விதிகளை தளர்த்தி முறையற்ற வழிகளில் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற முனைவார்கள்.  கர்நாடகத்தில் நடந்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் அன்றி வேறில்லை. அதை காங்கிரஸும் ம.ஜ.த.வும் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.

எம்.எல்.ஏக்களை வாங்க பிரதமரே நேரடியாக அங்கீகரிக்கிறார் என்பதை நேரடியாக பார்த்திருப்பீர்கள் என்பதை நான் இந்திய மக்களுக்கு , குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சொல்ல விரும்புகிறேன். ஊழலுக்கு எதிராக போராடுவேன் என்பதெல்லாம் சுத்த பொய். அவரே ஊழல்மயமானவர்தான். நாட்டின் அமைப்புகளை சீர்குலைக்கும்படியாகவே அனைத்தையும் அவர் செய்கிறார். பாஜகவினர் எம்.எல்.ஏக்களை விலைபேசும் தொலைபேசி பேச்சுக்கள் உள்ளன. அவையெல்லாம் டெல்லி மேலிடத்தின் மேற்பார்வையில் நடந்தவை.

கர்நாடகா, கோவா, மணிப்பூரில் மக்கள் அளித்த தீர்ப்பை அவர்கள் அமதிப்பார்கள். அதிகாரமும் பணமும் அனைத்தையும் சாதித்துவிடாது என அவர்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களின் விருப்பமே அனைத்தையும் தீர்மானிக்கும்.

மோடியும் அமித் ஷா அனைத்து அமைப்புகளையும் அழித்து விடலாம் என நினைக்கிறார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தருகிறார். இந்திய அமைப்புகள் பாஜகவால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை.

மக்களைவிட பிரதமர் பெரியவரல்ல. இந்திய அமைப்புகளைவிட தான் பெரியவர் என நினைப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும்.  ஆர்.எஸ்.எஸ்ஸால் வாழ்க்கை முழுவதும் பயிற்சி தரப்பட்ட அவர் அப்படித்தான் நடந்துகொள்வார் என நான் சந்தேகிக்கிறேன்.

உங்கள் அகந்தைக்கு அளவு உண்டு. நீங்கள் இந்த நாட்டை எப்படி நடத்த விரும்புகிறீர்கள் என்பதற்கு ஒரு எல்லை உண்டு.  நாட்டின் அமைப்புகளை அவமதிக்க முடியாது என்பதை ஆர்.எஸ். எஸ். புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன்.  பிரதமரின் ஆட்சி, ஜனநாய முறையிலானது அல்ல, எதேச்சதிகாரமானது.  இது அனைவருக்கும் தெரியும். ஏன் பிரதமரும் அறிவார்.

ஆளுநருக்கு வேறு வழியில்லை. அவருக்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் பிரதமரிடத்திலும் ஆர்.எஸ்.எஸ்ஸிடமும் இருக்கிறது. அவர் ராஜினா செய்தால் நல்லது, ஆனால் அந்த இடத்துக்கு வரும் வேறு நபர் இதையேதான் செய்வார்.

ஊடகங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மீதான பெரும் தாக்குதல், மக்கள் மீது நிகழ்த்தப்படும் நேரடி தாக்குதலாகும்!”

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்...

எம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder!

நரேந்திர மோடி – அமித் ஷா கூட்டணியின் சாணக்ய தனத்தை மெச்சிய பெரும்பாலான ஊடகங்கள், பெரும்பான்மை இல்லாதபோதும் பாஜக கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் என நம்பினர்.  அவர்களுடைய ராஜதந்திரங்களுக்கு உதாரணமாக சமீபத்திய திரிபுரா வெற்றியை சொல்லலாம். வாக்கு வங்கியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விலைக்கு வாங்கி, இடது முன்னணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. எனவே, இந்தக் கூட்டணி நினைத்தால் ‘எப்படியாவது’ ஆட்சியைப் பிடித்து விடலாம் என பலர் ‘நம்பிக்கை’ தெரிவித்தனர்.

ஆனால், தேர்தல் அரசியலில் காங்கிரஸ் சில சமயம் தூங்கிவிட்டாலும் மேகாலயா, கோவா, மணிப்பூரில் அதன் காரணமாக ஆட்சியை இழந்தாலும் கர்நாடகாவில் விழித்துக்கொண்டது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்ற சான்றிதழ்களை வாங்கிய பிறகு, அவர்கள் எல்லோரையும் பேருந்து மூலம் ஈகிள்டம் ரிசார்ட்டுக்கு அழைத்துப் போனது காங்கிரஸ் தலைமை.  எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதில் அனுபவமுள்ளவர்கள் என்றபோது, இந்த முறை செல்போனை பிடிங்கி வைக்கவில்லை. அனைத்து எம்.எல்.ஏக்களையும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த அன்று வரை போனில் தொடர்புகொள்ள முடிந்ததாக செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஏன் இதைச் செய்தார்கள்?

அனைத்து எம்.எல்.ஏக்களையும் அட்டோமெடிக் கால் ரெக்கார்ட்டர் செயலியை செல்போனில் ஏற்றி செயல்படுத்துமாறு காங்கிரஸ் தலைமை பணித்துள்ளது. இதுதான் பாஜகவினரிடமிருந்து அணி மாறச் சொல்லி வரும் அழைப்புகளை பதிவு செய்திருக்கிறது.

ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பாவின் மகன், எடியூரப்பா ஆகிய மூவர் காங்கிரஸ் எம்.எல். ஏக்களிடம் பேசிய ஆடியோவை இப்படித்தான் சேகரித்து தக்க சமயத்தில் வெளியிட்டு, பாஜக-வின் நகர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது காங்கிரஸ்.

இந்த ஆடியோக்களை ஒன்றன் பின் ஒன்றாக ஊடகங்களில் வெளியிட்டதன் மூலமாக மக்களிடையே பாஜக குறித்த எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்தவும் தங்களுடைய தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு நியாயம் சேர்க்கவும் இதை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் விதான் சபையில் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரிடம் பேச முயற்சித்ததாக ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி!

கர்நாடக தேர்தல் முடிந்து, பெரும்பான்மையில்லாதா நிலையில் அவசர அவசரமாக முதல்வர் பதவியேற்றார் பாஜக தலைவர் எடியூரப்பா. காங்கிரஸ், மஜத தேர்தல் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரிய போதும் ஆளுநர் வாலா, பாஜவுக்கு வாய்ப்பளித்தார். இது உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. எப்படியாவது எம்.எல்.ஏக்களை சேர்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக உள்ளது.  கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய ரெட்டி சகோதரர்களும் அவர்களின் கூட்டாளியான பாஜக பிரமுகர் ஸ்ரீராமுலுவும் எம்.எல்.ஏக்களை ‘பிடிக்கும்’ பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

ரூ. 100 கோடி விலை பேசப்படுகிறது என மஜத தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டிய நிலையில், ஜனார்த்தன ரெட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ பசன்கவுடா தத்தாலுடன் பேரம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளது.

அதில், “உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள், நமக்குள்ளே பேசிக்கொண்டு அடுத்த கட்டத்துக்குப் போகலாம்… ஆனால், இன்று நீங்கள் அமைச்சராக முடியும்.  பெரிய மனிதர்களுடன் தனியாக சந்தித்து பேச நான் உறுதி தருகிறேன். அவர்கள் சொன்னதை செய்வார்கள். அவர்கள் நாட்டை ஆள்கிறார்கள். நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்” என அதில் பேசுகிறார் ஜனார்த்தன ரெட்டி.

ஆடியோ விவரங்கள்…

ஜனார்த்தன ரெட்டி: இது பசன்கவுடா? ஃப்ரீயா?

பசன்கவுடா: ஆமா நாந்தான்.

ஜ: நடந்தெல்லாம் மறந்துடுங்க, கெட்டதையெல்லாம் மறந்துடுங்க. நான் சொல்றேன்..என்னோட நல்ல நேரம் வந்துடுச்சி. அப்புறம், எங்களோட தேசிய தலைவர் (அமித் ஷா)கிட்ட மீட்டிங் அரேஜ் பண்ணித் தர்றேன். அவர்கிட்ட நீங்க நேரடியா, அடுத்த கட்டத்தைப் பத்தி பேசலாம்.

ப: இல்ல சார், எங்க போறதுன்னு தெரியாம இருந்த சமயத்துல அவங்கதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினாங்க.

ஜ: நான் உங்கிட்ட ஒரு விஷயத்தை சொல்றேன். நான் கட்சி ஆரம்பிச்சப்போ, நம்ம நேரம் சரியில்லை. நமக்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. எங்களை நம்பினதால உனக்கு நிறைய இழப்புன்னு எங்களுக்குத் தெரியும். ஆனால், ஒன்னு சொல்றேன், இப்போ 100 மடங்கு வளர முடியும். சிவன்னா கவுடா நாயக் என்னாலதான் அமைச்சர் ஆகியிருக்காரு. இப்போ அவரு பலமாகிட்டாரு, அவர அவரால பார்த்துக்க முடியும். இதெல்லாம் என்னாலதான் முடிஞ்சது. ராஜு கவுடாகூட என்னாலதான் பலன் அடைஞ்சிருக்காரு.

ப: ஆமா.

ஜ: உனக்கு அதிருஷ்டம் இல்லாததாலதான் நேரம் சரியில்லாம போச்சு. இன்னிக்கு சிவன்னாகவுடா ஜெயிச்சிருந்து பிரயோசனம் இல்லை. நீ அமைச்சர் ஆக முடியும். சொன்னது புரிஞ்சதா? நேரடியா அந்த பெரிய மனுஷரை மீட் பண்ண வைக்கிறேன். நான் அவர்கிட்ட பேசறேன்…நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்.

ப: என்ன மன்னிச்சுடுங்க சார். வழிதெரியாம இருந்தப்போ அவங்கதான் எனக்கு டிக்கெட் கொடுத்தாங்க, ஜெயிக்க வெச்சாங்க. இந்தமாதிரி சூழ்நிலையில அவங்களுக்கு நான் துரோகம் பண்ண முடியாது. நான் உங்களை மதிக்கிறேன்…

19.05.2018 அன்று 8.25க்கு பதிவு மேம்படுத்தப்பட்டது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்

கர்நாடக ஆளுநா் வஜுபாய் வாலாவின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தொிவித்துள்ள கேரளா முதல்வா் பினராயி விஜயன் இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கருத்து தொிவித்துள்ளாா்.

தனது ட்விட்டா் பக்கத்தில், “இன்று கா்நாடகாவின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். கர்நாடகம் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாள். கர்நாடகா கவர்னர் பிஜேபிக்கு அழைப்பு விடுக்கும் முடிவை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை குறைத்து விடும். ஆளுநரின் இச்செயல் குதிரை பேரத்திற்கு வழிவகை செய்யும்” என்று கருத்து தொிவித்துள்ளாா்.

அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பம்: பிரகாஷ் ராஜ்

அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், நடந்துமுடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார். தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களைப் பிடித்த பாஜக ஆட்சியமைத்துள்ளது. பெரும்பான்மை பெற இன்னும் 7 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு தேவை. காங்கிரஸ், ம.ஜ.தா தேர்தலுக்கு பின்பு கூட்டணி அமைத்திருக்கின்றன. போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாத பாஜக இந்தக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள பிரகாஷ் ராஜ்,

“அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பம்..இனி மக்களின் பிரச்சினைகள் எதுவும் அறிக்கையாகாது. ஆனால்… யார் எந்த கட்சிக்கு தாவினார்கள், ரிசாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களின் பிரத்யேக படங்கள், சாணக்கியரின் திறமைகள் என நீங்கள் போதை ஏற்றப்படுவீர்கள்..மகிழ்ச்சியாக பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

 

“மோடி ஒரு ஹிட்லர்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிரூபிக்கிறார்”: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

நீதிமன்றம், ஆளுநர் மாளிகையில் நேரடியாக அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் மோடி தன்னை ஒரு ஹிட்லர் என நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என கர்நாடக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ரமேஷ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெரும்பான்மையை பெறாத நிலையில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை அரசமைக்க அழைத்தார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனத தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாகவும் ஆட்சியமைக்க அழைக்கும்படியும் ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தது. ஆனால், எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர் முதல்வராகவும் பதவியேற்றார்.

இந்த நிலையில், எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம். எல். ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ரமேஷ் குமார், ‘மோடி தன்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஹிட்லர் என நிரூபித்துக்கொண்டிருக்கிறார்’ என கடுமையாக சாடினார்.

மிரட்டும் தொனியிலான பேச்சை பிரதமர் நிறுத்த வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்

பிரதமர் நரேந்திர மோடியின் மிரட்டும் தொனியிலான பேச்சு குறித்து எச்சரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

“எதிர்க்கட்சி தலைவர்களை குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரை, அரசுக்கு தலைமை தாங்கும் பிரதமர் அச்சுறுத்தும் முறையில் பேசுவது மக்களாட்சி முறையில் சிந்திக்க முடியாதது” என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தல் பரப்புரையில் மே 6-ஆம் தேதி ஹூப்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி, ‘காங்கிரஸ் தலைவர்களே, கவனமாகக் கேளுங்கள்…உங்கள் எல்லையை மீறினால், நினைவில் வையுங்கள்…இது மோடி, அதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்’ என பேசியதாக கடிதம் கூறுகிறது.

தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக, பிரதமர் பதவியை மிரட்டுவதற்கு பயன்படுத்துவதாகவும் அதில் காங். தலைவர்கள் எழுதியுள்ளனர்.

 

“1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பு படி தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரின் ‘மொழி’ இப்படி இருக்கக்கூடாது. பிரதமரின் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என எழுதப்பட்டுள்ளது.

 

கர்நாடக தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் பிரதமர் தன் தகுதியை மறந்துவிட்டு கீழிறங்கி பேசுவதாக தெரிவித்திருந்தார்.

“எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை; என் வேலையல்ல!”: பொன். ராதா.

போலீஸாரால் தேடப்படும் பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகரை சந்தித்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகர் இரண்டு முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். இரண்டு முறையும் முன் ஜாமீன் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இரண்டாவது முறையாக ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி ராமதிலகம், “எஸ். வி. சேகர் உள்நோக்கத்துடன் முகநூல் பதிவை பகிர்ந்திருப்பதாக தெரிகிறது. அந்த கருத்து தனிநபருக்கு எதிரான கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களுக்கும் எதிரான கருத்து. பணிபுரியும் பெண்களை அந்தப் பதிவில் சொன்னதைவிட கடுமையாக சொல்ல முடியாது. இதுபோன்ற கருத்துக்களால் பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வரமுடியாத நிலை ஏற்படும்” என தெரிவித்திருந்தார்.

போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருவதாக ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எஸ். வி.சேகரும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சந்தித்து உரையாடுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.   அந்த விழா இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பிறந்தநாள் விழா என்பதும்  விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் பங்கேற்றனர் என்பதும் பின்னர் தெரியவந்தது. போலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், போலீசாரால் தேடப்படும் எஸ்.வி சேகரை விழா ஒன்றில் சந்தித்தது உண்மைதான் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பொன்.ராதாகிருஷ்ணனின் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், “எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை; என் வேலையல்ல” என்று தெரிவித்ததோடு, “எஸ்.வி. சேகர் மீது கட்சிதான் நடவடிக்கை எடுக்கும்” எனவும் கூறினார்.

வெளிமாநிலங்களில் நீட் எழுத செல்லும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி; பட்டியல் இங்கே…

வரும் ஞாயிற்றுக்கிழமை (6-5-2018) அன்று மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக மத்திய அரசு நடத்தும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழக மாணவர்கள் ஒருசிலருக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை மாற்றித்தரக்கோரி உச்சநீதி மன்றம் சென்றநிலையில், நீதிமன்றம் கடைசி நேரத்தில் எதையும் மாற்ற முடியாது என கைவிரித்துவிட்டது.

அதிர்ச்சிக்குள்ளான தமிழக மாணவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மாநில அரசு தரப்பில் மாணவர்களின் போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தன்னார்வலர்கள் முன்வந்து, வேறு மாநிலங்களில் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

இராஜஸ்தான் செல்ல உதவி!

நீட் தேர்வு எழுத இராஜஸ்தான் செல்ல இருக்கும் தமிழக மாணவர்களுக்கு ஜெய்ப்பூரில் உள்ள இராஜஸ்தான் தமிழ் சங்கம், போக்குவரத்து, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட தேவையான வசதிகளை செய்து தர முன்வந்துள்ளது.

திரு. முருகானந்தம் (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு. பாரதி (7357023549)

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநில மையங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள் உதவ முன்வந்துள்ளார் தாம்பரத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபு காந்தி

தொலைப்பேசி எண்: 97511 72164

நீட் தேர்வுக்காக வெளி மாநில மையத்துக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவுவதாக தெரிவித்துள்ளார் சேலம் நன்செய் அமைப்பைச் சேர்ந்த தர்மராஜ்.

போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு: 72000 69979 

நன்றாக படித்தும் வசதி இல்லாமல் நீட் தேர்விற்கு செல்ல முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு உதவுகிறோம் – திருச்சி எய்ம்டூஹை முகநூல் நண்பர்கள் அறிவிப்பு.

தொடர்பு கொள்ள: 99940 37722

கேரளாவில் நீட் தேர்வு எழுத போகும் வசதி இல்லாத மாணவர்களுக்கு எங்கள் சிங்கப்பூர் இணையதள குழு சார்பில் பஸ் வசதி ஏற்பாடு செய்துதரப்படும்.

தொடர்ப்புக்கு: +65 91834946 or +919655 333311‬

 If any of you know students going to Rajasthan and need any help or finanical support there pls comment with details will do whatever possible .. a few of us are working on it …

Karthikeya Sivasenapathy

வெளிமாநிலங்களில் தேர்வு எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டோர் யார்? எத்தனை பேர்? அவர்கள் சொல்வதும் எதிர்பார்ப்பதும் என்ன? என்பது குறித்து சிறப்பு நேரலையை இன்று முழுவதும் ஒளிபரப்புகிறது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி.
பாதிக்கப்பட்டோர்  044 28282860 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பேசலாம்.

I am Dr saravanan from Bangalore . Any tamilnadu student want help from Bangalore please contact me 9845311001 & 9738602959

– ட்விட்டரிலிருந்து.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் கேரளாவுக்கு நுழைவு தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவும் விதமாக உதவி எண்களை அறிவித்துள்ளார்.

 

 

 

4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்!

சென்னை, நந்தம்பாக்கத்தில் இந்தியன், டிரக்ஸ் & பார்மசூட்டிக்கல்ஸ் என்ற புகழ்பெற்ற மருந்து நிறுவனம் இருக்கிறது. இது மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தில் 32 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்; அத்தனை பேரும் தினக்கூலி தொழிலாளர்கள். ( இது தவிர ஒப்பந்தக்காரர் மூலம் பணி அமர்த்தப்பட்ட தொழிலாளர்களும் உண்டு ) இந்த 32 பேருக்கும் கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.போனஸ் சட்டப்படி கடந்த மூன்று வருடங்களாக போனஸ் வழங்கப்படவில்லை.

குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து கிடைக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் அனைத்து வேலைகளையும் செய்வது இந்த தினக்கூலி தொழிலாளர்களே.

தங்களை நிரந்தரப்படுத்தக் கோரி வழக்குத் தாக்கல் செய்ததில் 2002 ஆம் ஆண்டிலிருந்து நிரந்தரம் செய்யுமாறு 30/11/2017 அன்று தீர்ப்பு தரப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்து வரும் நிர்வாகம் கடந்த நான்கு மாதமாக ஏற்கெனவே வழங்கி வந்த சம்பளத்தையும் வழங்காமல் நிறுத்திவிட்டது.வீட்டுவாடகை கொடுக்க முடியாமலும், உணவுக்குக்கூட வழி இல்லாமலும் தொழிலாளர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

சம்பளத்தையும், போனசையும் உடனே வழங்கக் கோரி இன்று நந்தம்பாக்கம் ஐடிபில் ஆலை முன்பு சங்க செயலாளர் இ. ஆனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

” இன்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடக்கிறது. மக்களுக்கு சலுகைவிலையில் மருந்து தருவதற்காக இருக்கும் இந்தப் பொதுத்துறை நிறுவனம் தன் தொழிலாளர்களை நடத்தும் விதம் இதுதான். இது குறித்து இன்று ஆய்வு செய்வாரா மோடி ” என்று கேள்வி எழுப்பினார் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி.

”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை, தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.  ஆர்.எஸ். எஸ். அமைப்போடு தொடர்புடையவரை துணைவேந்தராக நியமிப்பதா என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, திரு. தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவர்கள், தமிழக ஆளுநராக பொறுப்பேற்றபோது, “ஆளுநர் மாளிகை அரசியலுக்கு பயன்படுத்தப்படமாட்டாது”, என்று பேட்டியளித்தார். இந்நிலையில் சங் பரிவார் தத்துவங்களை, பொது ஊழியராக இருந்து பரப்பிய ஒருவரை, மதச்சார்பின்மைத் தத்துவத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக நியமித்திருப்பது பெரிய முரண்பாடு. மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டப்ம் 1996ல் குறிப்பிட்டுள்ள விதி 12(1) மற்றும் 12(2) படி, சர்ச் கமிட்டி இறுதிசெய்து கொடுக்கும் மூன்று பேரில் ஒருவரைத்தான் மாண்புமிகு ஆளுநர், வேந்தர் என்றமுறையில் நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, ஒருவேளை சர்ச் கமிட்டி அளித்திருக்கும் மூன்று பெயர்களில் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அவர் முன்பு இருக்கும் ஒரே வழி, புதிதாக ஒரு சர்ச் கமிட்டியை நியமிக்க உத்தரவிடுவதுதானே தவிர, சர்ச் கமிட்டி பரிந்துரைத்த மூன்று பேரில் இல்லாத ஒருவரை துணைவேந்தராக நியமிப்பது அல்ல.

பல்கலைக்கழக வேந்தர் என்றமுறையில் மாண்புமிகு ஆளுநர் அவர்களே பல்கலைக்கழக சட்டப்த்தை மீறியிருப்பது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. அதிலும் தி.மு.க. ஆட்சி இருந்தபோது, இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான திரு. சூரிய நாராயண சாஸ்திரியை அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருப்பது, “சட்டப்த்தின் ஆட்சியை” மீறிய எதேச்சாதிகாரமான நடவடிக்கையாக அமைந்து, மாண்புமிகு ஆளுநரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

சட்டப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் எண்ணற்ற இளைஞர்கள்தான் இந்த நாட்டின் நீதிபதிகளாகவும், பிரபல வழக்கறிஞர்களாகவும் உருவாகிறார்கள். அப்படிப்பட்ட புகழ்மிக்க ஒரு பல்கலைக்கழகத்திலேயே, ‘ஒழுங்கு நடவடிக்கைக்கு’ உள்ளானவரை, சங் பரிவார் நிழலில் வாழ்ந்து வந்த ஒருவரை, துணைவேந்தராக நியமிப்பது சட்டப்த்தின் ஆட்சிமீது பெருத்த அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, ஆளுநர் மாளிகையை அரசியலுக்குப் பயன்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியை நிலைநாட்ட, சங் பரிவார அமைப்புகளுடன் தொடர்புள்ள, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி, கறைபடிந்திருக்கும் திரு. தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமித்திருப்பதைத் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் திறமையானவர்கள் பலர் இந்தப் பதவிக்கு தகுதியானவர்களாக இருக்கும்போது, தமிழகத்திலிருந்து துணைவேந்தர் பதவிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், இப்படி துணைவேந்தரை வெளிமாநில கல்லூரிகளில் இருந்து இறக்குமதி செய்து, தமிழகத்தை இழிவுபடுத்துவதைக் கட்டாயம் தவிர்க்கும்படியும் மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி என்பவரை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அந்த பல்கலைக்கழகத்தின் விதிகளின்படி தெரிவுக்குழு தேர்வு செய்து அளிக்கும் பட்டியலில் இருந்து ஒருவரைத்தான் ஆளுநர் தேர்வு செய்யவேண்டும். ஆனால், தெரிவுக்குழு அளித்திருந்த மூவரையும் நிராகரித்து புனே பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சூர்ய நாராயண சாஸ்திரியை இறக்குமதி செய்து ஆளுநர் நியமித்திருப்பது முற்றிலும் வரம்பு மீறிய செயலாகும்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டதிலிருந்து மாநில அரசின் அதிகாரங்களில் அத்துமீறி தலையிடுகிறார். ஆய்வு என்ற பெயரில் ஊர் ஊராகச் சென்று மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களை அழைத்து உத்தரவு பிறப்பித்து போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இதைத் தட்டிக்கேட்கும் தைரியம் மாநில அதிமுக அரசுக்கு இல்லாததால் அவருடைய அடாவடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மேலும், தற்போது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூர்ய நாராயண சாஸ்திரி 2006-2009 கால கட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழத்தில் இளநிலை சட்டக்கல்வி இயக்குநராக பணியாற்றிபோது பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர். அப்படிப்பட்ட ஒருவரை சட்டப்பல்கலை கழக துணைவேந்தராக திணித்திருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

எனவே, சூர்ய நாராயண சாஸ்திரியின் நியமனத்தை ரத்து செய்து தெரிவுக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தகுதியான ஒருவரை துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான பேராசிரியர் அருணன் , ‘நடப்பது அதிமுக ஆட்சியா? ஆளுநர் ஆட்சியா?’ என காட்டமாக விமர்சித்துள்ளார்.  இதுகுறித்து அவர் முகநூலில் எழுதிய குறிப்பில் ‘அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரிய
நாராயண சாஸ்திரி என்பாரை நியமித்திருக்கிறார் தமிழக ஆளுநர்
புரோகித். தேர்வுக் குழுவின் பரிந்துரையில் அவர் பெயர் இல்லையாம்!
அப்படிப்பட்டவரை இவராக நியமித்திருக்கிறாராம்! காரணம் சாஸ்திரி
பக்கா ஆர்எஸ்எஸ்காரர் எனப்படுகிறது. நடப்பது அதிமுக ஆட்சியா
அல்லது ஆளுநர் ஆட்சியா? இவர்களுடையது பினாமி ஆட்சி இல்லை
யென்றால் இந்த நியமனத்தை எதிர்க்க வேண்டும். அதற்கு தில் இருக்கிறதா?” எனக் கேட்டுள்ளார்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2017 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறும் போது, துயரங்களையும், படிப்பினைகளையும் தந்துவிட்டு சென்றுள்ளது.

மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டு காலத்தில் மாநில ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் உள்ளது. மாநில உரிமைகள், நலன்கள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஆளுநர் மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமான கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருவது தமிழக சட்டமன்றத்தையும், அமைச்சரவையினையும் அலட்சியப் படுத்தும் செயலாகும்.

நீட்நுழைவுத் தேர்வில் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது. இதன் விளைவாக மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவு மாணவர்களுக்கு பகற்கனவானது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த போதும், நீட் தேர்வில் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டு, தன்னைப் போன்ற மூட்டைத் தூக்கும் கூலி தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகள் மருத்துவர் ஆக வாய்ப்பில்லை என்ற நிலையில் நிகழ்ந்த அரியலூர் அனிதாவின் மரணம் பேரதிர்ச்சியாகும்.

இயற்கை சீற்றத்தால் தமிழக விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதும், அவர்கள் மேற்கொண்ட இயக்கங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிக்காமல், அவர்களது உணர்வுகளை மதிக்காமல் அலட்சியப் படுத்தியதும், நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் உயிருக்கும், உடமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்கின்றது. ஓகி புயலால் மீனவர்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது மட்டுமல்ல. 400 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது இந்நாள் வரை அறிய முடியாதது மிகுந்த சோகமாகும்.

உயர்மதிப்பு நோட்டு செல்லாது, ஜிஎஸ்டி வரி போன்ற பிரச்சனைகளால் தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு ஆகியவை பெரும் பாதிப்பிலிருந்தது இன்றுவரை மீள முடியாத துயரம் தொடர்கின்றது.

தமிழகத்தில் சாதியின் பெயரால் தொடரும் காட்டுமிராண்டித் தனமான ஆணவக் படுகொலைகள் தொடர்வது அருவருக்கத் தக்கது.

மதத்தின்; பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்வது நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் புறம்பான முறையில் செயல்படுவது நம்மை பின்னோக்கி இழுக்கும் முயற்சியாகும்.

மக்கள் ஒற்றுமை காக்க அனைவருக்கும் மகிச்சியான வாழ்க்கை அமைந்திட அனைவரும் உறுதிபூண்டிட வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஐந்து சுற்று எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினகரன் 24,550 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். மதுசூதனன் 10687 வாக்குகளும் மருதுகணேஷ் 5519 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கலைகோட்டுதயம் 962 வாக்குகளும் பாஜகவின் கரு. நாகராஜன் 318 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஆளுநர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை: வலுக்கும் எதிர்ப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், கோவை ஆட்சியருடன் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் ஆட்சிப் பணிகளில் தலையிடுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகைக்கு எதிரே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கவின் கலை கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்

சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் கடந்த மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். கல்லூரியின் துறைத்தலைவர் ரவி்க்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோரின் சாதிய, மதவெறிக்கொண்டு கொடுத்த சித்ரவதை காரணமாகவே தான் தற்கொலை செய்வதாக அவர் கடிதம் மூலமாகவும் வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரகாஷின் மரணத்துக்கு நீதி கேட்டு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 15-ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை

பத்திரிக்கைச் செய்தி தமிழகம் இதுவரைக் கண்டிராத அளவிற்கு சிவில் மற்றும் உரிமை மறுப்பு மாநிலமாக மாறி உள்ளது. ஜல்லிக்கட்டுப் போரட்டத்திற்குப் பின் அரசின் திட்டங்களுக்கு, செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதப் பொதுநிகழ்வுகளுக்கும் காவல் துறை அனுமதி அளிப்பதில்லை. அரசை பொது வெளிகளில் விமர்சிக்கும் பலர் பொருத்தமில்லா சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இங்கு ஜனநாயக வெளிகள் சுருக்கப்பட்டு வருகிறது. இன்று அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜனநாயக பூர்வமான செயல் பாடுகள் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.

மக்கள் குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வழக்கறிஞர் முருகன், இயற்கைப்பாதுகாப்புக்குழு வளர்மதி, மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி மற்றும் அவர் நண்பர்கள், கதிராமங்கலம் போராட்டத்திற்காக பேராசிரியர் ஜெயராமன், நெல்லை வழக்கறிஞர் செம்மணி, கார்டூனிஸ்ட் பாலா, சுற்று சூழல் போராளி முகிலன், அறப்போர் நக்கீரன், நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், என்று பலரை எந்த வித சட்ட நியாயமுமின்றி கைது செய்து சிறையில் அடைத்து, காவல் துறை தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல் எங்கு எழுந்தாலும் மூடிவருகிறது. பெரும்பாலான கைதுகள் உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி சட்ட விதிமுறைகளை பின் பற்றாமல் செய்யப்படுகின்றன.

காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது. (Tamilnadu has become the Police State) கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு, தர்ணா நடத்த அனுமதி மறுப்பு, ஊர்வலம் செல்லத் தடை என்பது இன்று தமிழகத்தில் காணப்படும் நிலை. இது விரிவடைந்து அரசின் மீது சமூக வலைதளங்களில் மற்றும் பிற பொது வெளிகளில் எதிர் கருத்து கூறுபவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுத்து சிவில் சமூகத்தை அச்சுறுத்தும் பணியை அரசு செய்து வருகிறது. அடிப்படை உரிமைகள்கூட மறுக்கும் சூழல் இன்று நிலவுகிறது. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள தற்போதைய தமிழக அரசு அச்சத்தினால், காவல்துறையை எல்லா ஜனநாயகச் சக்திகளின் மீதும் ஏவிவருகிறது. இப்படி தேவையற்று கைது செய்யப்பட்டவர்களை, நீதி மன்றம் பிணையில் வெளியே விடுகிறது. இதனால் பெருத்த பாதிப்புக்கு கைதானவர்கள் உள்ளாகிறார்கள். இப்படிப்பட்டத் தங்களின் தவறான நடவடிக்கைக்கு காவல் துறை பொறுப்பேற்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் மீது தவறான நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும்.

வளர்மதி, திருமுருகன் காந்தி போன்றோர்கள் மீது தவறாக குண்டர் சட்டம் ஏவியதால் அவர்களின் தனி வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அதற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, தவறிழைத்த காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தன்னுடைய ஜனநாயக விரோத செயல்பாட்டை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் ஜல்லிக் கட்டு போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், பிற சம்பந்தமே இல்லாத பலர் மீது போடப்பட்ட வழக்குகள் யாவையும் அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக்கழகம் அரசைக் கோருகிறது. மக்கள் இம்மாதிரியான காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிராக எழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும் என மக்களை பி.யு.சி.எல் வேண்டுகிறது. அரசின் இம்மாதிரியான ஜனநாயக குரல் நசுக்கும் போக்குக்கு எதிராக குரல் எழுப்ப பி.யு.சி.எல் தமிழகத்தின் அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் இணைத்துப் போராட முடிவு செய்துள்ளது.

– கண.குறிஞ்சி, இரா.முரளி (மாநிலத் தலைவர் மாநிலச்  செயலாளர்.)

கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?

கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கேலிச்சித்திரங்களை வரையும் ஓவியர் ‘கார்டூனிஸ்ட்’ பாலாவைத் தமிழகக் காவல்துறை திடீரென கைது செய்துள்ளது. அவர் தனது கேலிச்சித்திரங்களின் மூலம் ஆபாசத்தை பரப்பினார் என வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

அண்மையில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து அவர் தீட்டிய கேலிச்சித்திரம் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், பொதுமக்களிடையே வெகுவாக அம்பலப்பட்டுள்ளனர்.

கடந்த 23.10.2017 அன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே நடந்த கொடூர சம்பவம், பார்த்தோர் நெஞ்சை பதறவைத்தது. உள்ளத்தை அதிர்ச்சியில் உறையவைத்தது. இசக்கிமுத்து என்னும் கூலித்தொழிலாளியின் குடும்பமே பட்டப்பகலில் தீவைத்து உயிரை மாய்த்துக்கொண்டது. இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் இரு பிஞ்சுக்குழந்தைகள் என நான்குபேரும் தீயில் கருகி மண்ணில் சாய்த்து வீழ்ந்தனர். இந்தக் கொடூரம் கந்துவட்டி கொடுமைகளின் தாக்கம்தான் என்பதை தங்களின் சாவின் மூலம் உலகுக்கு உணர்த்தினர்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் இசக்கிமுத்து கந்துவட்டி கொடுமைகள் குறித்து மீண்டும் மீண்டும் முறையிட்டும் கூட அவரால் அதிகார வர்க்கத்தைச் சிறிதும் அசைக்க முடியவில்லை. உழைக்கும் மக்களின் குருதியை உறிஞ்சும் கந்துவட்டிக் கும்பலுக்கு அதிகார வர்க்கம் துணை போகிறது என்பதை அறிந்து விரக்தியின் விளிம்புக்கு சென்றதன் விளைவாகவே இசக்கிமுத்துவின் குடும்பம் இந்தக் கொடூரமான முடிவிற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அந்த துயரத்தைக் காட்ட கேலிச்சித்திர ஓவியர் பாலா தனது ஆற்றாமையையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தீட்டிய கோட்டோவியம் இலட்சக்கணக்கான மக்களுக்குச் சற்று ஆறுதல் அளிப்பதாகவே அமைந்தது. அது நாகரீக வரம்புகளை மீறியதாகவும் ஆபாசம் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது என்று கருதினாலும், அந்த நான்கு உயிர்களும் கருகியக் கொடுமைக்கு வேறு எப்படி எதிர்வினை ஆற்ற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. அதுவும் வன்முறை தவிர்த்து அறவழியில் தமது கண்டனத்தை வெளிப்படுத்த, அடிவயிற்றில் பற்றி எரியும் ஆவேசத் தீயை அணைத்திட, வேறு என்ன வடிவம் தான் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கந்துவட்டிக் கொடுமைகளை ஒழிப்பதற்கு துளியளவும் முயற்சிக்காதது மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது அவர்தம் புத்தியில் உறைக்கும்படி நியாயத்தை உணர்த்துவதற்கு வேறென்ன தான் வழியிருக்கிறது?

ஓவியர் பாலாவின் கோட்டோவியம் ஆபாசமானது என்றால், இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் பிஞ்சு குழந்தைகள் வைத்துக்கொண்ட தீயில் அவர்களின் உடைகள் எரிந்து- உடல்கள் வெந்து நிர்வாணமாய் மண்ணில் வீழ்ந்து கிடந்தார்களே, அது ஆபாசமில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. சட்டப்படியான தமது கடைமைகளையாற்றத் தவறிவிட்டோம் என்றும் அதனால் தான் இத்தகைய விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறோம் என்றும் உணர்ந்து வெட்கப்பட வேண்டியவர்கள், அதற்கு நேர்மாறாக ஆத்திரப்படுகிறார்கள் என்பது வேடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஓவியர் பாலாவைக் கைது செய்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் மீதான பொய் வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.”

பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் மோகன் மரணம்

சென்னை பத்திரிகையாளர் சங்கம்(எம்யுஜே) பொது செயலாளர் மோகன்(வயது 54). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மோகன்

இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  உடனடியாக அவர் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கல்யாணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மோகன் சென்னை தினகரன் பத்திரிகையில் மூத்த நிருபராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

 

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நிலமைகள் மோசமாகிக் கொண்டு இருக்கின்றன; பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இடதுசாரி கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன .

வகுப்புவாத அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது கூர்மையாக நடக்கிறது ; பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது ; ஜனநாயக உரிமைகள் மீதும் , குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன.

எதேச்சதிகார முறையில், திடீரென்று பணமதிப்பு நீக்கத்தை பிரதம மந்திரி அறிவித்து ஓர் ஆண்டு ஆகிறது.இடதுசாரி கட்சிகள் எதிர் பார்த்தது போலவே இந்திய பொருளாதாரத்தின் மீதும் வெகுமக்கள் மீதும் சொல்லவொன்னா சுமைகளை இது சுமத்தி உள்ளது.பணமதிப்பு நீக்க நடவடிக்கை அதற்காக சொல்லப்பட்ட எந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை. ஏறக்குறைய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட எல்லா பணமும் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது;அதனால் கறுப்பு பணம் நல்ல பணமாக மாற்றப் பட்டுவிட்து; ஒருவர் கூட இதனால் தண்டிக்கப்படவில்லை .கள்ளநாணயம் சட்டபூர்வமாக மாற்றப்பட்டுவிட்டது .
தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக இராணுவ வீரர்களும், பாதுகாப்பு படை வீரர்களும், பொதுமக்களும் தீவிரவாத தாக்குதல்களினால் உயிர் இழந்து உள்ளனர்.உண்மையைச் சொல்லப் போனால் ஊழலின் அளவு இருமடங்கு அதிகரித்து உள்ளது.

மறுபுறத்தில் மூன்றிலொரு பங்கிற்கு மேல் ஜி்டிபியில் முக்கிய பங்கு வகிக்கும் , 60 சத தொழிலாளர்களுக்கு வேலையளிக்கும் அமைப்புச்சாராத்துறை நிலைகுலைந்து உள்ளது . தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி குறைப்பு,நிலைகுலைந்துள்ள பொதுவிநியோக துறை, ஆதார் அட்டை மூலம் போடப்படும் நிபந்தனைகள் போன்ற காரணங்களால் மிக வறிய மக்கள் மேலும் அல்லல் படுகின்றனர்.

அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை என மூன்று துறைகளும் மந்தமாகி உள்ளன. இது வேலையின்மையை அதிகரித்து, விவசாய நெருக்கடியை தீவிரப்படுத்தி உள்ளது.இளைஞர்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவில் அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை; அவர்கள் சமூக ,பொருளாதார பாதுகாப்பின்மைக்கு ஆளாகி உள்ளனர்.விவசாயிகளின் தற்கொலை முன்னெப்போதும் இல்லாத விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.இதனால் கிராமப்புறங்களில் விவசாய நெருக்கடி முற்றி மக்களின் வாழ்க்கைத்தரம் குலைந்துவிட்டது.பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.

பன்னாட்டு நிறுவனங்களின்,உள்நாட்டு முதலாளிகளின் நலனை பாதுகாக்கின்றன வகையில் அரசினுடைய கொள்கைகள் அமைகின்றன என்பதை இது நிரூபிக்கிறது.இதனால் சாதாரண மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.
இந்த நாட்டு பொருளாதாரத்தையும், வெகுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் மத்தியிலும் ,மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 8 ம் நாள் அன்று கண்டனநாள் என அனுசரிக்க உள்ளனர்.

மோடி அரசாங்க மானது , 2014 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிப்படி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் , உற்பத்தி செலவைவிட ஒன்றரை மடங்கு அதிகம் இருக்கும் வகையில் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆண்டுதோறும் இரண்டு கோடி போருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்; அதாவது பாஜக ஆட்சிக்காலத்தில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.

எப்படிப்பட்ட போராட்ட முறையை முடிவு செய்வது என்பதை நாடு முழுவதும் உள்ள இடதுசாரி கட்சிகளின் அந்தந்த மாநிலக்குழுக்கள் முடிவு செய்யும். அனைத்து மக்களும் திரண்டு வந்து இந்த அரசுக்கு எதிராக , அதனுடைய கொள்கைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கேட்டுக் கொள்கின்றன. ஜனநாயக, மதச்சார்பற்ற மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் சேரவேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கேட்டுக் கொள்கின்றன.

CPM/CPI/CPI(ML)/RSP/AIFB/SUCI கூட்டறிக்கை.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான திருமுருகன்காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் தகல்களும், நெல்லை பணகுடி காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து போராட்டம் நடத்திய நெல்லை பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பது, கட்டுப்பாடற்ற தமிழக அரசின் கையாலாகாத நிர்வாக முறையையே காட்டுகிறது. இதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

சனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிக்கையாளர்களின் சட்டையை கிழித்து, செல்போனை உடைத்து மண்டையை பிளந்து, தனது சர்வாதிகாரப் போக்கை சனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கையாளர்கள் மீது காட்டிருப்பதும், மத்திய பா.ச.க அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து போராடி வரும் திருமுருகன்காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதும், மத்திய மோடி அரசை திருப்தி படுத்த எடுக்கப்படிருக்கும் நடவடிக்கையாகவே தெரிய வருகிறது. மத்திய பா.ச.க அரசின் கைக்கூலியாக செயல்பட்டு தமிழக உரிமைகளை பறிகொடுப்பதோடு, அடக்குமுறை கொடுமைகளை ஏவும் தமிழக எடப்பாடி அரசின் மக்கள் விரோத போக்கை தமிழக மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

நெல்லை பத்திரிக்கையாளர்களை தாக்கிய காவல்துறையினர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப் பெறவேண்டும், காயம் அடைந்த பத்திரிக்கையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட வேண்டும் என்பதோடு, திருமுருகன்காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. 

விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில்  மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள ‘நீட்’ என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் அனிதாவுக்கும்; மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் களமாடியதால்  படுகொலையான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும்; சாதிய- மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர்கள்  சிவகங்கை-வேம்பத்தூர் முருகன், மதுரை-வடபழஞ்சி முத்தமிழன், .விரகனூர் கார்த்திக்ராஜா, ஓடைப்பட்டி கருப்பையா, பெருங்குடி மாரிச்சாமி, அரியலூர்- சிறுகடம்பூர் நந்தினி, பெரம்பலூர்- குரும்பலூர் ஐஸ்வர்யா, திருச்சி- திருப்பாஞ்சலி கதிரேசன், வந்தவாசி- புளியரம்பாக்கம் வெங்கடேசன், ஆகியோருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

2.மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும்!

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றுக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தலாம். அன்னிய படையெடுப்பு போன்ற ஆபத்தான காலங்களில் மட்டும் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே கையாளலாம். மற்ற நேரங்களில் மாநிலங்கள் தமது அதிகாரங்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். இதுதான் நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் விளக்கம். ஆனால் கடந்த எழுபதாண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றைப் பார்த்தால், மாநிலங்களின் அதிகாரங்கள் மெள்ள மெள்ள பறிக்கப்பட்டு பெருவாரியாக மத்தியில் குவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

மத்திய – மாநில உறவுகளை ஆராய்வதற்கென மத்திய அரசும், தமிழக அரசும் அவ்வப்போது பல்வேறு ஆணையங்களை அமைத்துள்ளன. அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்கள் போதிய அக்கறைகாட்டவில்லை. அதற்கு மாறாக, மாநிலங்களுக்கென இருக்கும் ஒருசில அதிகாரங்களையும் பறிப்பதிலேயே முனைப்பாக உள்ளனர்.
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில், மாநிலங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று கேட்பது பிரிவினைவாத கோரிக்கையும் அல்ல. மாநில மக்களுக்குரிய பிரச்சினைகளையும் தேவைகளையும் மத்திய அரசைவிட அந்தந்த மாநில அரசுகளே சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தமுடியும்.

” இந்திய சுதந்திரத்தை சாதித்த தேசிய இயக்கமானது, பிராந்திய உணர்வுகளைச் சரியாக உள்வாங்கிக் கட்டப்பட்டதே ஆகும். ஒவ்வொரு பகுதியிலும் பேசப்படுகிற மொழிகளின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்ட பிறகுதான், காங்கிரஸ் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுத்தது. தேசிய உணர்வுக்கும் மாநிலங்களின் ஒருமைப்பாட்டுக்கும் இடையிலான கூட்டுறவே நாம் சுதந்திரத்தை வென்றெடுக்க உதவியது “ என 1955 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியது இன்றைக்கும் பொருந்தகூடியதாக உள்ளது..

தேசிய ஒருமைப்பாடு என்பது ’மாநில சுயாட்சி’ உரிமையை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடும், மாநில சுயாட்சியும் எதிரெதிரானவை அல்ல. அவை, கூட்டாட்சி என்னும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.
உண்மையில் இந்தியாவை வலிமையானதொரு நாடாகக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், மாநிலங்கள் தன்னாட்சியோடு செயல்படுவது அவசியமாகும்.
எனவே, இத்தகைய மாநில சுயாட்சி உரிமையை வென்றெடுக்க, தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டுமென இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது. .

3.மத்திய – மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைத்திட வேண்டும்!

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்- 11 ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. அதற்கு எதிரான உரிமைக் குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கின. எனவே, மத்திய அரசு 1966-லேயே மத்திய மாநில உறவுகளை ஆய்வுசெய்வதற்காக “நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை” அமைத்தது. அது பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் மன நிறைவுகொள்ளாத அன்றைய திமுக அரசு, 1969 ஆம் ஆண்டு நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அத்துடன், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பியது . அன்று தமிழக அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம், இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
பின்னர்,1973-இல் பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அனந்தபூர் சாகிப் தீர்மானத்தை இயற்றவும்; 1979-இல் மேற்குவங்கத்தில் ஆட்சி செய்துவந்த இடதுசாரி அரசு மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவும் அதுவே தூண்டுகோலாக அமைந்தது.

அவற்றின் காரணமாக மத்திய மாநில உறவுகளை ஆராய 1983-ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையமும் 2007-ஆம் ஆண்டு நீதிபதி பூஞ்சி ஆணையமும் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. .
இந்நிலையில், தற்போதைய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகள் இதுவரை அமைதி காத்துவந்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. கர்நாடகத்தில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்படுகின்றன; கேரளத்தில் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்படுகிறது.
இவ்வாறான தற்போதைய அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளில் நிலவும் சிக்கல்களை அடையாளம் காணவும், மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் கூடுதலாக அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளின் தேவைகளை ஆராயவும் ஏதுவாக, மீண்டும் ஆணையம் ஒன்றை அமைத்திடவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4.இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைத் திணிக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்!

“மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்பது திராவிட இயக்கம் (திமுக), இந்திய சனநாயகத்துக்கு வழங்கிய கொடை எனலாம். 1960-களில் தமிழ்நாட்டில் வெடித்தெழுந்த மொழி உரிமைப் போராட்டத்தின் நீட்சியாக முன்வைக்கப்பட்டதே ‘ மாநில சுயாட்சி’ முழக்கம். 1960- களில் இருந்ததைவிட தற்போது மிகவும் முனைப்போடும் மூர்க்கத்தோடும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

மத்தியில் ஆளும் பாஜக அரசு கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவிப்பதில் தீவிரமாக உள்ளது.
அத்துடன், இந்தியாவின் பன்மைத்துவத்தைச் சிதைக்கும் வகையில், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி , ஒரே தேர்தல், ஒரே ஆட்சி” என்கிற ஃபாசிச நிலையை நோக்கி இந்தியாவைக் கொண்டு செல்கிறது. குறிப்பாக, தற்போதுள்ள நாடாளுமன்ற சனநாயக முறையை ஒழித்துவிட்டு ‘ அதிபர் ஆட்சி ‘ முறையிலான ஒரு சர்வாதிகார ஆட்சி முறையை இந்தியாவில் அமைப்பதே அவர்களின் நோக்கமென தெரியவருகிறது.

1999- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவதற்கென நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் ஆணையம் ஒன்றை பாஜக அரசு அமைத்தது. அப்போது நாடெங்கும் எழுந்த வலுவான எதிர்ப்பின் விளைவாக அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதே நோக்கத்தோடுதான் இன்றும் பாஜக அரசின் நகர்வுகள் உள்ளன என்பதை அறியமுடிகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற ஜனநாயக முறையை பலவீனப்படுத்தி படிப்படியாக இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையைத் திணிக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என இம்மாநாடு உறுதியேற்கிறது.

5.ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்!

நாடாளுமன்றத்துக்கும் இந்தியா முழுவதுமுள்ள சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என சட்ட வல்லுனர்கள் பலர் எச்சரித்துவருகின்றனர். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டவும், கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்ப்பதற்கும்தான் இது வழிவகுக்குமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1999-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 16 சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடந்துள்ளது. அதில் வாக்களித்த 77 சதவீதம் பேர் நாடாளுமன்றம் சட்டமன்றம் ஆகிய இரண்டுக்கும் ஒரே கட்சிக்கே வாக்களித்துள்ளனர் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1999-ல் இந்தப் போக்கு 68 சதவீதமாக இருந்தது, 2014-ல் அது 86 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தேசிய அளவிலான பிரச்சினைகளே முதன்மை பெறும். அதில் தேசிய கட்சிகளே மேலாதிக்கம் செலுத்தும். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கட்சிகளும், மாநில நலன்களை முன்னிறுத்தும் மாநிலக் கட்சிகளும் ஓரங்கட்டப்படும். இந்தப் போக்கானது, அடித்தள மக்களை நோக்கி சனநாயகம் பரவலாவதற்குத் தடையாக அமைந்துவிடும். எனவே, மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது என்னும் முயற்சியைக் கைவிட வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6.அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்!

மத்திய, மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள், ‘மத்திய பட்டியல்’ ‘மாநிலப் பட்டியல்’ ‘பொதுப்பட்டியல்’ – என அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பின்வரும் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது:

1)மாநிலங்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்களை அளித்து அவற்றைச் செயல்படுத்தப் பணிக்கும் வகையில், சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்ட உறுப்புகளான( பிரிவுகள்) 154 மற்றும் 258 ஆகியவை நீக்கப்படவேண்டும்.

2)அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இதர அதிகாரங்கள் ( Residuary Powers ) யாவும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.

3)மாநிலங்களுக்குச் சிலவற்றைச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 256, 257, 339(2), மற்றும் 344(6) ஆகியவை நீக்கப்படவேண்டும்.

4)பொதுப்பட்டியல் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும்;
பொதுப் பட்டியலில் உள்ளவை தொடர்பாக மாநில அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகுமென ஆக்கப்படவேண்டும். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 254 திருத்தப்படவேண்டும்.

5)மாநில அரசு அவசர சட்டம் இயற்றுவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 213 (1) நீக்கப்படவேண்டும்.

6)மாநிலப் பட்டியலிலுள்ள அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வகை செய்யும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 249 நீக்கப்படவேண்டும்.

7)சட்ட மேலவையை உருவாக்கவும், கலைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 169 திருத்தப்படவேண்டும்.

8)மாநிலங்களில் மத்திய படைகளை ஈடுபடுத்த வகைசெய்யும் சட்ட உறுப்பு 257(ஏ) நீக்கப்படவேண்டும்.
9)வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மீதான அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்காணும் திருத்தங்களைச் செய்ய வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

 

7.ஆளுநர் பதவி ஒழிக்கப்படவேண்டும்!

ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே, தம்மை நியமிக்கும் கட்சியின் முகவர்களாகவே அவர்கள் செயல்படுகின்றனர்.மத்தியில் ஆளுகிற கட்சியல்லாத பிற கட்சிகளின் அரசுகள் மாநிலங்களில் அமையுமெனில் அவற்றுக்கு தேவையற்ற நெருக்கடிகளைத் தருவதற்கும் குழப்பங்களை உருவாக்குவதற்கும் ஆளுநர்கள் மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றனர். சிலவேளைகளில் மாநில அரசுகளைக் கலைப்பதற்கும் ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசின் ஆட்சிநிரவாகத்திற்கு ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே, ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைப் பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன. இந்நிலையில்,மாநில மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8.மாநிலங்களுக்குப் பொருளாதார தற்சார்புநிலையை உருவாக்க வேண்டும்!

மாநில அரசுகள்அனைத்துவகை பொருளாதார தேவைகளுக்கும் மத்திய அரசையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. மாநில அரசுகள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதையும் எவ்வளவு செலவழிக்கலாம் என்பதையும் மத்திய அரசே தீர்மானிக்கிறது. கிராமப்புற வேலை உறுதித்திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உட்பட மாநில அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் பெரும்பாலானவை மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட திட்டங்களாகும், மத்திய அரசின் நிதி நல்கை இல்லாவிட்டால் அவற்றைத் தொடரமுடியாது என்ற இக்கட்டான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 (3) உட்பிரிவு (a) ன் படி நிதி ஆணையம்தான் மத்திய அரசின் வரி வருவாயை எந்த விகிதத்தில் மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவது என முடிவுசெய்கிறது. இந்த நடைமுறை ஒழிக்கப்படவேண்டும்.

வரியை வசூலிப்பது மத்திய அரசு, செலவுசெய்வதற்கு மட்டும் மாநில அரசு என்ற நிலை மாற்றப்படவேண்டும். மத்திய அரசின் வரி வருவாயில் 75 விழுக்காட்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வகை செய்யவேண்டும். இதற்கு ஏற்றவகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படவேண்டுமென இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

9.ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும்!

’ஒரே நாடு ஒரே வரி’ என்ற கவர்ச்சியான முழக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி என்னும் ‘சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு’ முறை மிகபெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரே வரி என்று சொல்லப்பட்டாலும் 5% 12% 18% 28% என நான்குவகையான வரிகள் வசூலிக்கப்ப்படுகின்றன. சுமார் 60 விழுக்காடு பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே 28 % ஜிஎஸ்டி வரி விதிக்கும் நாடு இந்தியா மட்டும்தான். இந்த வரிவிதிப்பு முறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
அத்துடன், ‘பணமதிப்பு அழிப்பு’ நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு தணிவதற்கு முன்பே எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதால் சிறு வணிகர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்துவருகிறது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மாநிலங்களை கிராமப் பஞ்சாயத்துகளின் நிலைக்குத் தள்ளிவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சிபெற்ற மாநிலங்களின் வரி வருவாய் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஜிஎஸ்டியால் ஏற்படும் வருவாய் இழப்பை சில ஆண்டுகளுக்கு மட்டும் ஈடுசெய்வதற்காக குளிர்பானங்கள், புகையிலை, நிலக்கரி, ஆட்டோமொபைல் முதலான குறிப்பிட்ட சில பொருட்களின்மீது மட்டும் விதிக்கப்பட்டிருக்கும் கூடுதல் வரி அரசியல் சட்டத்துக்கும் ஜிஎஸ்டி சட்டத்தின் நோக்கத்துக்கும் எதிராக உள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் தமிழ்நாடு மட்டுமின்றி அகில இந்தியாவின் பொருளாதார நிலை மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. எனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை முற்றாக கைவிட்டு, மாநிலங்களுக்கும் வரிவசூலிக்கும் அதிகாரமளிக்கும் வகையில் வரிவிதிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டுமென இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

10.மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்!

மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான தொகுதிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதால், பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே இந்தியாவின் பிரதமாராவதற்கும், கேபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்குமான சூழல் உருவாகிறது. இதனால், சிறிய மாநிலங்கள் பலவகைகளில்
வஞ்சிக்கப்படும் நிலை உருவாகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், ஆட்சியதிகாரப் பகிர்வு மற்றும் பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்ட வலுவான அதிகாரமுள்ள பதவிகள் ஆகியவற்றில் சிறிய மாநிலங்களுக்கும் சுழற்சி அடிப்படையில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

அத்துடன், தற்போது மக்களவைக்கு நடைமுறையில் இருப்பதைப் போல மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளிலும் கேபினட் அமைச்சரவையிலும் தலித் மற்றும்
பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும் என இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

11.நீதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்!

நமது அரசியலமைப்புச் சட்டம் இந்தியா முழுமைக்கும் ஒருங்கிணைந்த நீதிமுறை அமைப்பை உருவாக்கியுள்ளது. உச்சநீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும்,
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் மாநில அரசின் ஆலோசனைகள் பெறப்படவேண்டும். ஆனால், நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை.

அடுத்து, மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்குகளில் பெரும்பாலும் மத்திய அரசின் மேலாதிக்கத்துக்கு ஊறு நேராவகையில்தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நீதி நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்கு எத்தகைய அதிகாரமுமில்லை என்னும் நிலையே இவற்றுக்கு காரணமாகும். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதி நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவேண்டும். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 217, 222, 223, 224, 224 ஏ ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12.தேசியப் புலனாய்வு முகமையை (என்ஐஏ) கலைக்கவேண்டும்!

சட்டம் ஒழுங்கைப் பேணுவது உள்ளிட்ட காவல்துறை அதிகாரங்கள் மாநிலப் பட்டியலில் உள்ளன. மத்திய அரசிடமிருக்கும் சிபிஐ என்னும் புலனாய்வு அமைப்பு மாநிலத்தில் ஒரு வழக்கை விசாரிக்கவேண்டுமெனில் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் பெறப்படவேண்டும், அல்லது நீதிமன்றத்தின் ஆணை பெறப்படவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், மாநில அரசின் காவல்துறை அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் ‘தேசிய புலனாய்வு முகமை’ (என்ஐஏ ) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பயங்கரவாதக் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கென தனிச் சட்டம் ஒன்றின்மூலம் இந்த அமைப்பு உருவாக்கபட்டது. நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் அந்த மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே பயங்கரவாதக் குற்றம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு இந்த தேசிய புலனாய்வு முகமை என்னும் அமைப்புக்கு அச்சட்டம் வகை செய்கிறது.

சிபிஐ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்துவரும் நிலையில், மதச்சார்பின்மைக்கு எதிரான வகுப்புவாத கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு முகமையை ஏவிவிடக்கூடிய பேராபத்து உள்ளது.

எனவே, மாநில அரசின் காவல்துறை அதிகாரத்துக்கு எதிராகவுள்ள தேசிய புலனாய்வு முகமை என்னும் என்ஐஏ அமைப்பைக் கலைக்கவேண்டுமெனவும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை மாநில அரசுகளுக்கே அளித்திட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

13.கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும்!

அரசியலமைப்புச் சட்ட அவையில் நடைபெற்ற விவாதங்களின்போதே கல்வியைப் பொதுப் பட்டியலில் வைக்கவேண்டும் என்ற திருத்தம் சில உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டது. பள்ளிக் கல்விக்கு மேலுள்ள மாநில அதிகாரங்களைக் குறைத்திட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தத் திருத்தங்கள் டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்றவர்களின் வாதத்தால் நிராகரிக்கப்பட்டன.

அடுத்து, உயர் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றலாம் என 1965 ஆம் ஆண்டு ‘சப்ரூ கமிட்டி’ பரிந்துரை செய்தது; கல்வி முழுவதையும் பொதுப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்பதற்காக அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா 1971 இல் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இறுதியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட 42-ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம்தான் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால்தான் தற்போது ‘நீட்’ என்னும் ‘தேசிய தகுதி மற்றும்
நுழைவுத் தேர்வு’ நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்களிக்கவேண்டும் எனத் தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கும், இதனால் தான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
கல்வி வளர்ச்சியிலும், கல்விக்கான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியிருப்பதிலும் ஒப்பீட்டளவில் பிற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு மேம்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.
தமிழகத்தில் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மாவட்டம்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி’ என்னும் திட்டத்தைப் போன்றதொரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

இவ்வாறு, மருத்துவக் கல்வியில் மிகவும் சிறப்பான நிலையில் வளர்ச்சியடைந்திருக்கும் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வைத் திணிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
மாநில அரசின் கல்வி அதிகாரத்தை முற்றிலும் பறித்து, அவற்றை மத்தியில் குவிக்க முனையும் பாஜக அரசின் அணுகுமுறை தமிழக மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது.

எனவே, நீட் நுழைவுத் தேர்வை இந்திய அளவில் முற்றாக ரத்து செய்வதோடு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

14.இந்தி மற்றும் சமற்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்!

1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்த மொழிப்போர்த் தியாகிகளைக்கொண்ட பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. எனினும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது இந்தியைப் பயிற்று மொழியாகக்கொண்ட நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்கவேண்டும் என்கிற ஒரு நெருக்கடியை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் மூலமாகஉருவாக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு, தமிழ்நாட்டின்மீதும் இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீதும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி இந்திய அளவில் மிக மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என இம்மாநாடு எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில், அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும்; அதுவரை ஆங்கிலமே அலுவல் அல்லது இணைப்பு மொழியாக நீடிக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தின் அலுவல் மொழியாகவும் ஆங்கிலமே இருக்கவேண்டும். உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாநில அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியே இருக்கவேண்டும். மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள் அந்தந்த மாநில மொழிகளில் தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.

எனவே, இந்தியை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 343 ம், இந்தி மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 351 ம் நீக்கப்படவேண்டும்; எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாக நடத்தவேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ ஜக்கையன் நேரில் விளக்கம் அளித்தார். விளக்கம் அளிக்காத மற்ற 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் சார்பாக சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர், கீழ்க்காணும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் விவரம்:

தங்க தமிழ்ச்செல்வன் – ஆண்டிபட்டி தொகுதி

ஆர்.முருகன் – அரூர்

மாரியப்பன் கென்னடி – மானாமதுரை

கதிர்காமு – பெரியகுளம்

ஜெயந்தி பத்மநாபன் – குடியாத்தம்

பழனியப்பன் – பாப்பிரெட்டி பட்டி

செந்தில் பாலாஜி – அரவக்குறிச்சி

எஸ். முத்தையா – பரமக்குடி

வெற்றிவேல் – பெரம்பூர்

என்.ஜி.பார்த்திபன் – சோளிங்கர்

கோதண்டபாணி – திருப்போரூர்

ஏழுமலை – பூந்தமல்லி

ரெங்கசாமி – தஞ்சாவூர்

தங்கதுரை – நிலக்கோட்டை

ஆர்.பாலசுப்பிரமணி – ஆம்பூர்

எஸ்.ஜி.சுப்ரமணியன் – சாத்தூர்

ஆர்.சுந்தரராஜ் – ஒட்டப்பிடாரம்

கே.உமா மகேஸ்வரி – விளாத்திகுளம்

 

கௌரி லங்கேஷ் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: பினராயி விஜயன்

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

12 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்களா?இதுதான் நீட் தரும் சமூக நீதியா?…

*தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 859

*நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570

*தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534.

**************************

*தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டதின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 838.


*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575.
**************************

*மாநிலக் கல்வி பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள 83 ஆயிரம்  மாணவர்களுக்கு கிடைப்பது 2 ஆயிரத்து 224 மருத்துவ இடங்கள் (0.27 %)

*சிபிஎஸ்இ  பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்ச்சி அடைந்துள்ள  12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆயிரத்து 310 இடங்கள் (11%).


**************************