அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு அவலங்களை பட்டியலிடுகிறார் அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் ஜெயா அதீதத் தன்னம்பிக்கையுடன் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். எதிர்க் கூட்டணிகளின் முக்கிய ஆயுதமான 'பூரண மதுவிலக்கு' என்பதையும் 'படிப்படியான மதுவிலக்கு' என்பதன் மூலம் கலகலக்க வைத்துவிட்டார் (உண்மையில் அதுதான் நடைமுறைச் சாத்தியம். இதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்). அது இருக்கட்டும். மக்களின் மறதி ஆள்பவர்களுக்கும், ஆண்டவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். பழைய வரலாறுகள் இருக்கட்டும். இந்த ஐந்தாண்டு ஆட்சியில் நடந்துள்ள சிலவற்றை நாம் நினைவுபடுத்துவது அவசியம். பதவி ஏறியவுடன் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாது எனச் சொல்லி, … Continue reading அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு அவலங்களை பட்டியலிடுகிறார் அ. மார்க்ஸ்

பாலைவனமாகும் தமிழ்நாடு: கண்ணீரை வரவைக்கும் தண்ணீர் நிலவரம்!

மூன்று மாதங்களுக்கு முன் சென்னையை முழ்கடித்தது வெள்ளம். அதே சென்னை இன்று நீர்வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. காரணத்தை சொல்கிறது எழுத்தாளர் ஷாஜஹான் தரும் இந்தப் புள்ளிவிவரம்... 'இந்தியாவில் நிலத்தடி நீர்வளங்கள்' இப்படியொரு தலைப்பில் ஒரு நூல் 2011இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. 2014 இறுதியில், திருத்திய பதிப்புக்காக நூலாசிரியர் திருத்தங்கள் செய்து அனுப்பினார். 2015 மார்ச் மாதம் நான் அந்தத் திருத்தங்கள் செய்து அனுப்பும்போது, இந்திய அளவில் ஏற்பட்ட மாற்றங்களை, குறிப்பாக தமிழகத்தின் நிலையைப்பற்றி பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். தப்பிப்போயிற்று. … Continue reading பாலைவனமாகும் தமிழ்நாடு: கண்ணீரை வரவைக்கும் தண்ணீர் நிலவரம்!

மோடி அரசு சாதனை: இந்திய தொழில் உற்பத்தி மன்மோகன் அரசைவிட ’ரொம்ப’ கீழே இறங்கியது!

பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரங்களில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா அனைத்து  துறையிலும் அசுர வளர்ச்சிக் காணும்’ என்று முழங்கினார். அதை நம்பிய வாக்காளர்கள், அவருக்கு அமோகமாக ஆதரவு தந்து ஆட்சியில் அமரவைத்தார்கள். ஆனால் கடந்த ஒன்றே முக்கால் வருட ஆட்சிக்காலத்தில் இந்திய வளர்ச்சியில் பின்னோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தைகள் இறங்கு முகத்தில் இருக்கின்றன.  பணவீக்க விகிதம் தொடர்ந்து சரிவில் இருக்கிறது. இப்போது இந்திய தொழில் உற்பத்தில் 2011-ஆம் ஆண்டைவிட கீழே இறங்கி … Continue reading மோடி அரசு சாதனை: இந்திய தொழில் உற்பத்தி மன்மோகன் அரசைவிட ’ரொம்ப’ கீழே இறங்கியது!

பெருவெள்ளத்தின் மையப்பிரச்சனை ரியல் எஸ்டேட் மாஃபியா என்பதை ஏன் பேச மறுக்கிறார்கள்?

கண்ணன் சுந்தரம் செம்பரம்பாக்கம் நீர் முன்னறிவிப்பின்றி வெளியேறி சென்னையில் பல பகுதிகளை மூழ்கடித்தமை இன்று மையமான பிரச்சனையாகத் தொடர்கிறது. அடை மழையில் நீர் திறப்பு தவிர்க்கமுடியாததாக இருந்தாலும் சரியான முன்னேற்பாடுகள், முன் எச்சரிக்கை, நிவாரணம் அனைத்திலும் அலட்சியமும் பொறுப்பின்மையும் வெளிப்படுத்தி பல பல உயிர்கள் பலியாகக் காரணமான அரசு இது. அரசை கண்டிக்கும் விசாரணையை கோரும் அதே நேரத்தில் பெருவெள்ளத்தின் மையப்பிரச்சனை ரியல் எஸ்டேட் மாஃபியாவும் முறையற்ற வளர்ச்சியும் தான். நீர்நிலைகளை அழித்தது, நீர்வழிப் பாதைகளை அழித்தது, … Continue reading பெருவெள்ளத்தின் மையப்பிரச்சனை ரியல் எஸ்டேட் மாஃபியா என்பதை ஏன் பேச மறுக்கிறார்கள்?

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு கட்டுரை: விகடனுக்கு சில கேள்விகள்!

சந்திரசேகரன் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் தாமதம் எதுவும் இல்லை என பொறியாளர் சொன்னதாக விகடனில் கட்டுரை வெளியாகியுள்ளது. http://bit.ly/1kLc0na http://www.vikatan.com/…/57266-secret-behind-sembarambakkam… //ஏரிக்கு அப்பால் நடக்கப்போவதையோ, ஏரிக்கு முன்னால் நடப்பதையோ பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அது அவர்களுடைய வேலையும் இல்லை. // என்று பொறியாளர் கூறியுள்ளார். *இதற்காகவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 900 என்பது திடீர்னு நேரடியாக 26 ஆயிரம் ஆகுமா அல்லது படிப்படியா ஆயிரம், ரெண்டாயிரம்னு ஏறுமா? *அந்த கூடுதல் தண்ணி திடீர்னு செம்பரம்பாக்கம் … Continue reading செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு கட்டுரை: விகடனுக்கு சில கேள்விகள்!

வெள்ள நிவாரண தொகை நாளை வங்கிகளில் : பொங்கலுக்குள் மீதமுள்ள நிவாரண தொகை வழங்கப்படுமென ஜெ.உறுதி.

வரலாறு காணாத பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையை எனது அரசு விரைந்து வழங்கி வருகிறது  என்றும்   இன்று 700 கோடி ரூபாய் அளவில் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்றும்  ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 14 லட்சம் குடும்பங்களுக்கான நிவாரண உதவித் தொகை இன்றே அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு,  நாளையே அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் ஜெயலலிதா உறுதிவெளியிட்டுள்ளார். மீதமுள்ள குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு வரும் … Continue reading வெள்ள நிவாரண தொகை நாளை வங்கிகளில் : பொங்கலுக்குள் மீதமுள்ள நிவாரண தொகை வழங்கப்படுமென ஜெ.உறுதி.

நாஞ்சில் சம்பத்: ஓர் எளிய மேடைப் பேச்சாளன் அரசின் தவறை சுமக்க முடியுமா?

கார்ல் மார்க்ஸ் நாஞ்சில் சம்பத் கட்சிப் பதவியான ''கொள்கை பரப்புத் துணைச் செயலாளர்'' பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். என்ன இது என்ன ஆச்சர்யம்; வழக்கமாக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தல்லவா முழுவதுமாகத் தூக்குவார்கள், என்று நினைத்துக்கொண்டே தான் அந்த முழு நேர்காணலையும் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆமாம். நிறைய பேருக்கு நாஞ்சில் சம்பத்தின் 'அரசியல் பாத்திரம்' என்ன என்பதில் குழப்பம் இருக்கிறது என்றே நினைக்கிறேன். அவர் ஒரு மேடைப்பேச்சாளர். தனது கட்சி என்ன நினைக்கிறதோ, அதன் கொள்கைகள் என்னவோ, … Continue reading நாஞ்சில் சம்பத்: ஓர் எளிய மேடைப் பேச்சாளன் அரசின் தவறை சுமக்க முடியுமா?

கட்டுப்பாடு மிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? விஜயகாந்தின் விவாதம்

தஞ்சையில், பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் தேமுதிகவை சார்ந்தவர்கள்தான் தரம் தாழ்ந்து நடந்துகொண்டதாக ஜெயலலிதா குறிப்பிட்டதை அடுத்து கட்டுப்பாடுமிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? என்ற தலைப்பில் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில்  "2011-ம் ஆண்டு  கூட்டணி வைக்கும் போது, தேமுதிகவினர் தரம் தாழ்ந்தவர்கள் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா தலைமையில் உள்ள அதிமுகவின் தரம் எப்படி இருக்கிறதென்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாக குறிப்பிட்ட விஜயகாந்த்,  ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா … Continue reading கட்டுப்பாடு மிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? விஜயகாந்தின் விவாதம்

சென்னை பெருவெள்ளத்தை இப்படியும் நினைவு கூறலாம்: பவதாரிணி,ஷாலினியின் குரலில் மழைப்பாடல்

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணியும், பிரபல திரைப்பட பின்னணி பாடகியுமான பாப் ஷாலினியும் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக "The Rain Song" என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். பெரு வெள்ளம் வந்த பொது, அதை எதிர்கொண்ட சென்னை மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்த பாடலை உருவாக்கியதாக பவதாரிணியும் ஷாலினியும் கூறியுள்ளனர். http://www.youtube.com/watch?v=b06_dRfhIxY

சென்னை மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் மேதா பட்கர்

Arul Doss Borntowin தமிழகத்தில் கடுமையான வெள்ளம் பாதித்த பகுதிகளை எமது இயக்க தேசிய ஆலோசகரும் , சமூக போராளி மேதா பட்கர் கடந்த 18ம் தேதி பார்வையிட்ட பின் தமிழக மக்களின் நிலைமைகள் , குடிசைப் பகுதி மக்களின் சூழ்நிலைகள் , குடிசைகளை அகற்றுவது குறித்து அரசின் நடவடிக்கைகள் , தமிழக அரசை எதிர்கொள்ள நமது இயக்க எதிர்கால திட்டங்கள் என பல கேள்விகளோடு மேதா அவர்கள் தொடர்ந்து 7 நாட்களாக என்னிடம் தொலைபேசியில் பேசி … Continue reading சென்னை மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் மேதா பட்கர்

தமிழக வெள்ளத்தால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்: மத்திய அமைச்சர் சொல்கிறார்

தமிழக வெள்ளத்தால் 14 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  சென்னையில் உள்ள தொழிற்பேட்டைகளான கிண்டி, ஈக்காடு தாங்கல், அம்பத்தூர், பாடி, திருமுடிவாக்கம் ஆகியவையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் தொழிற்பேட்டையும் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, சனிக்கிழமை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், “இந்த நிறுவனங்களில் பெரும்பால நிறுவனங்கள் எந்தவித இன்ஸ்யூரன்ஸும் செய்யவில்லை.  வெள்ளத்தால் இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை … Continue reading தமிழக வெள்ளத்தால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்: மத்திய அமைச்சர் சொல்கிறார்

ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும்: சீமான்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு உதவும் வகையில் மகளீர் சுய உதவிக்கடன்களையும் விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையையும்,கடலூர் மாவட்டத்தையும் அழித்துக் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிற பெரும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீண்டு வர இயலாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். உறைவிடம், உடை, பொருட்கள், ஆவணங்கள் என அனைத்து அடையாளங்களை இழந்து மக்கள் நிர்கதியாய் … Continue reading ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும்: சீமான்

மியாட் மருத்துவமனையில் 18 பேர் உயிரிழந்த வழக்கு என்ன ஆனது?

கடந்த மாதம் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருக்கும் சென்னை மியாட் மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் புகுந்ததால் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மருத்துவமனையின் ஜெனரேட்டர் அறையும் நீரில் மூழ்கியது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் 18 நோயாளிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜோதிலிங்கம் என்பவர் … Continue reading மியாட் மருத்துவமனையில் 18 பேர் உயிரிழந்த வழக்கு என்ன ஆனது?

சென்னையை சுத்தம் செய்ய வந்த ஹீரோக்களை கவனித்த ஹீரோக்கள்!

பெருமழை வெள்ளத்தால் குப்பை மேடாக மாறிய சென்னை நகரத்தை சுத்தம் செய்ய ஈரோடு, திருச்செங்கோடு,சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர்.  தமிழக அரசே இவர்களை அழைத்திருந்தாலும், இவர்களுக்கு சரியான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படவில்லை. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தார். சென்னையை சுத்தம் செய்த இவர்களை நடிகர் ராகவா லாரன்ஸ் உதவிகள் வழங்கி கரவித்தார்.

உ.பியில் பாலீத்தின் பைகளுக்குத் தடை: தமிழகத்தில் சாத்தியமாகுமா?

உத்திர பிரதேச அரசு வெள்ளிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து தெரிவித்துள்ள உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், “அலகாபாத் நீதிமன்றம் பரிந்துரைத்தை அடுத்து, அரசு பாலீத்தின் பைகளுக்கு மாநிலம் முழுவதும் தடைவிதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். சமீபத்தில் தமிழகத்தில் பெய்த பெருமழையில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்கு பிளாஸ்டிக் பைகள் நீர் செல்லும் வழிகளில் அடைப்பை ஏற்படுத்தியதும் ஒரு காரணம் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற … Continue reading உ.பியில் பாலீத்தின் பைகளுக்குத் தடை: தமிழகத்தில் சாத்தியமாகுமா?

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: சில கட்டுக் கதைகளும் சில உண்மைகளும்

தளவாய் சுந்தரம் சென்னை வெள்ளம் இயற்கைப் பேரிடரா செயற்கைப் பேரிடரா என்ற விவாதம் இன்னும் முடிந்தபாடில்லை போலிருக்கிறது. நேற்று ஒரு நண்பர், உதவி இயக்குநராக இருப்பவர், என்னைத் தேடி வந்து ஒரு மணிநேரம் அவரது ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்துவிட்டுச் சென்றுவிட்டார். இரண்டு வாரங்களாக அவரது உள்ளக் கொதிப்புகளை எல்லாம் கொட்ட இடம் இல்லாமல் அலைந்திருக்கிறார். என் இரண்டு காதுகளும் நிறைந்துவிட்டன. நேற்று அவர் நிம்மதியாகத் தூங்கியிருப்பார். என் தூக்கம் போச்சு. குறிப்பிட்ட நாளில், ஒரு லட்சம் கன … Continue reading செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: சில கட்டுக் கதைகளும் சில உண்மைகளும்

சுந்தர் பிச்சை தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து ஏன் பேசவில்லை?

இந்தியாவில் ரயில் நிலையங்களில் வை ஃபை வசதியை தங்கள் நிறுவனம் அடுத்தாண்டு இறுதிக்குள் தரும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வை ஃபை வசதியை தங்கள் நிறுவனம், ரெயில் டெல் அமைப்புடன் இணைந்து வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். முதல் கட்டமாக மும்பை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வைஃபை செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழரான சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவன தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இந்தியா … Continue reading சுந்தர் பிச்சை தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து ஏன் பேசவில்லை?

நேற்று நீக்கப்பட்ட ஆர்.நட்ராஜ் இன்று மீண்டுகள் கட்சியில் சேர்க்கப்பட்டார்!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் சரியான நேரத்தில் திறந்து விடாததால் சென்னை நகரத்திற்கு பேரழிவு ஏற்பட்டது என்றும், சம்மபந்தபட்ட அதிகாரிகள் சரியான நேரத்தில் முதலமைச்சருடன் தொடர்புகொள்ள முடிந்திருந்தால், இந்த அழிவை தடுத்திருக்கலாம் என்றும், அரசியல் விமர்சகர் நடராஜ் என்பவர் கூறியதை தந்தி டிவி சனிக்கிழமை வெளியிட்டது. ஆனால் கருத்தை தெரிவித்த நடராஜ் புகைப்படத்திற்கு பதிலாக முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் புகைப்படத்தை அந்த தொலைக்காட்சி தவறுதலாக வெளியிட்டது. இந்த விவகாரம் காரணமாக ஆர். நட்ராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும், … Continue reading நேற்று நீக்கப்பட்ட ஆர்.நட்ராஜ் இன்று மீண்டுகள் கட்சியில் சேர்க்கப்பட்டார்!

வெள்ள மீட்பு பணியில் உயிர்த்தியாகம் செய்த இம்ரான்!

சென்னையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூரை சார்ந்த இம்ரான் விஷப்பூச்சி கடித்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார் . சென்னை திருவெற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வரும் ஜாபர் என்பவரின் மகனான 17 வயது இம்ரான் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அவருடைய மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வெள்ள நிவாரணப் பணியில் நடிகர் அரவிந்த் சாமி

தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் கோலிவுட் நடிகர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகர் அரவிந்த் சாமி. வெள்ளம் பாதித்த மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் அளித்தார் அவர்.

ஜனவரி புத்தகக் கண்காட்சி ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைப்பு

2016 ஜனவரி மாதம் நடைபெற இருந்த சென்னை புத்தகக் கண்காட்சி மழை வெள்ள பேரிடர் காரணமாக ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கமான பபாசி.

ரஜினிகாந்த் ரூ.10 கோடி வெள்ளநிவாரண நிதி

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 10 கோடி வெள்ளநிவாரண நிதி அளித்தார். முன்னதாக வரவிருக்கும் டிசம்பர் 12-ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

சென்னை பள்ளிகளுக்கு 13-ஆம் தேதி வரை விடுமுறை

பெருமழையால் பாதிப்புகளுக்கு உள்ளான சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியாத நிலை நீடிப்பதால் டிசம்பர் 13-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

‘செம்பரம்பாக்கம் ஏரியால் பேரழிவு: முதல்வர், தலைமைச்செயலர் காரணமா?’

“செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால் சென்னையின் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கின. இதற்கு முதல்வர், தலைமைச்செயலர் காரணமா?” என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணா மழை மற்றும் வெள்ளத்திலிருந்து சென்னை நகரம் மீண்டு வரத் தொடங்கியிருப்பது சற்றே நிம்மதி அளிக்கிறது. ஆனால், இத்தனை அழிவுக்கும் காரணம் செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏரிகளில் இருந்து திட்டமிடலின்றி கண்மூடித்தனமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது தான் எனும்போது அது பற்றி … Continue reading ‘செம்பரம்பாக்கம் ஏரியால் பேரழிவு: முதல்வர், தலைமைச்செயலர் காரணமா?’

வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார் கருணாநிதி

சென்னையில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் திமுக தலைவர் மு. கருணாநிதி. சிந்தாதிரிப் பேட்டை, சைதாப்பேட்டை ,  கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவராண உதவிகளை வழங்கினார் அவர்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்: ஜவாஹிருல்லா

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக பெய்துவரும் தொடர்மழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். சென்னை, … Continue reading வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்: ஜவாஹிருல்லா

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு!

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு தொடர்பாக கட்டுரைகளை வெளியிட்டதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தினமலர் நாளேடுகள் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்கு காரணமே செம்பரம்பாக்கம் ஏரி நீரை முறையின்றி அதிக அளவு திறந்துவிட்டதுதான் காரணம் என ஆதாரங்களின் அடிப்படையில்  டிசம்பர் 12-ந் தேதி  டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தினமலர் நாளேடுகள் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. இந்த கட்டுரைகளை வெளியிட்டதற்காக இந்த இரு நாளேடுகள் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் … Continue reading செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு!