அறிமுகம்: கலை இலக்கிய சூழலியல் இதழ் ‘ஓலைச்சுவடி’!

தமிழில் கலை இலக்கிய சூழலியல் இதழாக மலர்ந்துள்ளது ‘ஓலைச்சுவடி’.  இதழின் ஆசிரியர் கி.ச. திலீபன் பகிர்ந்துகொண்ட குறிப்புகள் இங்கே: ‘மீட்சியும் உயிர்த்தெழுதலுமே மேலதிக அர்த்தம் உடையது’ ஓலைச்சுவடிக்கு படைப்பு கேட்பதற்காக அணுகியபோது அய்யா வண்ணதாசன் சொன்ன வார்த்தைகள் இவை. ஓலைச்சுவடி மீண்டும் உயிர்கொள்கிறது. ஓலைச்சுவடியின் இரண்டாவது இதழே அதன் மறுபிறப்பாக இருக்கிறது என்பதை நினைக்கையில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளுக்கு உரித்தான பல அம்சங்களுடன் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓலைச்சுவடியின் முதல் இதழ் வெளியானது. ஒரு இதழைத் … Continue reading அறிமுகம்: கலை இலக்கிய சூழலியல் இதழ் ‘ஓலைச்சுவடி’!

யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷா மையத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

VetriSelvan Muthuraj மனித செயல்களால் யானைகள் இறப்பதும், யானைகள் காரணமாக மனிதர்கள் இறப்பதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை கோவை மாவட்டத்தில் இத்தகைய சம்பங்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம், யானைகள் வழித்தடங்களான வனப்பகுதிகள் அனைத்தும் மத /ஆன்மீக குரு நிறுவனங்களாலும், கல்வி நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தான். யானைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அவை நகர்ந்துகொண்டே இருப்பவை. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஒவ்வொரு இடமாக நகரும் யானைகள் வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றுகின்றன. … Continue reading யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷா மையத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

பூவுலகின் நண்பர்களுக்கு கூடங்குளம் மட்டும்தான் சூழலியல் பிரச்சினையா? யானைகளுக்காகவெல்லாம் போராட மாட்டார்களா?

Arun Mo காளை சண்டையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றியடையும் தயிர் சோறு க்ரூப், எல்லாம் ஏன் யானையை வைத்து இத்தனை அராஜகம் செய்யும் அரசாங்கத்தையும், கார்ப்பரேட் சாமியார்களையும், கல்லூரி நிறுவனங்களையும் எதிர்த்து வாய்த்திறப்பதே இல்லை. ஒருவேளை காளை சண்டை கூட கார்ப்பரேட் சாமியார்களின் ஆசிர்வாதத்துடன் நடந்திருந்தால் எந்த வித எதிர்ப்பும் வந்திருக்காது என்றே நினைக்கிறேன். காளை சண்டையை நடத்தும் அமைப்புகள் எல்லாம், சட்டப்பூர்வ அனுமதியை எதிர்பாராமல், கார்ப்பரேட் சாமியார்களை இதில் இணைத்துக்கொண்டால் அடுத்த காளை … Continue reading பூவுலகின் நண்பர்களுக்கு கூடங்குளம் மட்டும்தான் சூழலியல் பிரச்சினையா? யானைகளுக்காகவெல்லாம் போராட மாட்டார்களா?

“வாழ்நாள் நோய்க்கு வெறும் 500 டாலர் நஷ்ட ஈடா?” : போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சோஃபியா அஷ்ரஃப் புதிய ராப்!

ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் கொடைக்கானல் பாதரச கழிவுகள் மக்களையும் சுற்றுச்சூழலையும் நாசாமாக்கி வருவதையும் அதற்காக எவ்வித நஷ்ட ஈட்டையும் அந்த நிறுவனம் வழங்கவில்லை என்றும் தனது ராப் பாடலின் மூலம் உலகின் கவனத்தை கவர்ந்தார் சோஃபியா அஷ்ரஃப். பல ஆண்டுகளாக போராடிவரும் தன்னார்வல அமைப்புகளுடன் சேர்ந்து அவர் இதைச் செய்திருந்தார். சமூக வலைத்தளங்களில் தீவிர பிரச்சாரத்துக்குப் பின் ஹிந்துஸ்தான் லீவர் நஷ்ட ஈட்டை வழங்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த பிரச்சாரமாக போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட … Continue reading “வாழ்நாள் நோய்க்கு வெறும் 500 டாலர் நஷ்ட ஈடா?” : போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சோஃபியா அஷ்ரஃப் புதிய ராப்!

“பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”

முகிலன்  நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 36 ஏக்கர் நிலத்தில் தினசரி தாமிரபரணி ஆற்றில் இருந்து 15லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து குடிநீர், குளிர்பானம் தயாரிக்க அமெரிக்காவின் பெப்சி ஆலைக்கு, தமிழக அரசிடம் ஜனவரி - 2014 இறுதியில் கேட்ட விண்ணப்பத்திற்க்கு 05.02.2014 அன்று பத்தே நாட்களில் அனுமதி அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு . நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் 86,000 ஏக்கர் விவசாயத்திற்கும், நெல்லை-தூத்துகுடி- விருதுநகர் மாவட்ட மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது தாமிரபரணி. … Continue reading “பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”

காகங்கள் எப்போது லேஸ் சிப்ஸ் சாப்பிட ஆரம்பித்தன?

நாம் உண்ணும் அத்தனை உணவுகளையும் நம்முடன் சேர்ந்து வசிக்கும் காகங்களும் உண்ணத் தொடங்கிவிட்டன. அதற்கொரு உதாரணம் இந்தப் படம். குழந்தைகளின் விருப்பமான நொறுக்குத் தீனியாகிவிட்ட லேஸ் சிப்ஸை உண்கின்றன இந்தக் காகங்கள். உணவில்லா நிலையில் கிடைப்பதை உண்டு வாழும் நிலைக்கு காகங்கள் தள்ளப்பட்டனவா என்கிற கேள்வி எழுகிறது. படம்: Wahab Shahjahan