“கொள்கை வேறுபட்டிருக்கலாம்; ஆனால் சகித்துக்கொள்ளமாட்டேன்”: லெனின் சிலை தகர்ப்பு குறித்து மமதா

திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்காத நிலையில் பாஜகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையை அரங்கேற்றி வருகின்றன. இடதுசாரி அரசியல்வாதிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். தெற்கு திரிபுராவில் உள்ள பெலோனா நகரத்தின் கல்லூரி சதுக்கத்தில் அமைந்திருந்த புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் ஜெசிபி இயந்திரம் துணையுடன் அகற்றினர். லெனின் சிலை மண்ணில் வீழ்ந்தபோது 'பாரத் மா கி ஜெய்' என அவர்கள் முழங்கினர். இது வீடியோவாக வெளியாகி … Continue reading “கொள்கை வேறுபட்டிருக்கலாம்; ஆனால் சகித்துக்கொள்ளமாட்டேன்”: லெனின் சிலை தகர்ப்பு குறித்து மமதா

20 ஆண்டுகளுக்குப் பிறகு ராவண லீலா; ராமலீலாவை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாடுகிறது!

பெரியாரிய அமைப்புகளில் ஒன்றான "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" வரும் 12-ம் தேதி (நாளை) சென்னையில் "ராவண லீலா" என்ற மிகப்பெரும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்து "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து...... ஆரிய பார்ப்பனக் கூட்டம், திராவிடர்களை வென்றதாக சித்தரிக்கப்பட்டதே இராமாயணம். இராமாயணத்தில் வரும் குரங்குகள், அசுரர்கள், அரக்கர்கள் யாவரும் திராவிடர்கள் தான். ஆக … Continue reading 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராவண லீலா; ராமலீலாவை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாடுகிறது!