வளர்ச்சியின் பெயரால் அதிகாரவர்க்கம் ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறது!

ரபீக் ராஜா   மதுரையில் இருந்து, கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள ஊர் தாமரைக்குளம். காரியாபட்டியிலிருந்து இடது புறம் திரும்பி, குண்டுங்குழியுமான சாலையில், தையத்தக்கா பயணம். தோழர் தமிழ் தாசன் லாவகமாக வண்டி ஓட்டினாலும், கொஞ்சம் பயம் தான். சாலைதான் குண்டுங்குழி., காற்று ரம்மியம். சில்லென்ற சூழல். சீமைக்கருவேல மரங்கள் வழியெங்கும் தென்பட்டாலும், ஊர்கள் என்னவோ சீமையின் தாக்கமில்லாமல் இயல்பாக இருந்தன. பனைமரங்கள் மிகுந்த பாதைகள். மயில்கள் அதிக அளவில். பாம்புகள், கீரிகள், முயல்கள். பருத்திக்காடுகள். … Continue reading வளர்ச்சியின் பெயரால் அதிகாரவர்க்கம் ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறது!

அயல்நாட்டுக்காரர்கள் உள்ளாடை அணிய நாம் ஏன் சாகவேண்டும்?: நக்கீரன்

நக்கீரன்   மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை நான்கு பருவ காலங்களை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் முதலீட்டியம் இன்னொன்றையும் கூடுதலாகச் சேர்த்து இதனை அய்ந்து பருவ காலங்களாக மாற்றியுள்ளது. அந்த அய்ந்தாவது காலம் விடுமுறை காலம் என அழைக்கப்படும் வணிகக்காலம் ஆகும். இந்த 5 காலத்துக்கும் தகுந்தாற்போல் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு விற்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஸ்வீடன் நாட்டின் எச்&எம் நிறுவனம் உலகின் மூன்றாவது பெரிய சில்லறை வணிக ஆடை நிறுவனமாகும். இதன் வணிக உத்தி என்னவெனில் இந்நிறுவனத்தின் … Continue reading அயல்நாட்டுக்காரர்கள் உள்ளாடை அணிய நாம் ஏன் சாகவேண்டும்?: நக்கீரன்

நியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை!

நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் குறித்த தனது காத்திரமான அறிவியல் பூர்வ விமர்சனத்தால், அத்திட்டம் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தவர் மக்கள் அறிவியலாளர் விடி பத்மபநாபன். அடிப்படையில் அவர் ஓர் ஜனநாயகவாதி, நியூட்ரினோ திட்டத்தின் மீதான அவரது விமர்சனங்கள் அனைத்தும் அறிவியலை ஜனநாயகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானவை. நியூட்ரினோ திட்டத்தின் மீதான அவரது விமர்சனங்களின் மொழியாக்க தொகுப்பு ‘நியூட்ரினோ அறிவிப்புகளும் உண்மைகளும்’. இந்நூலை நாணல் நண்பர்களும் பூவுலகின் நண்பர்களும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விடி பத்மநாபன் கட்டுரைகளை தமிழில் தந்திருக்கிறார் அருண் நெடுஞ்செழியன். நூலிலிருந்து ‘இந்திய நியூட்ரினோ … Continue reading நியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை!

உங்கள் துப்பாக்கிகளை ஏ சி சி சிமெண்ட் பேக்டரி, ஈசா யோகா மையம், காருண்யா ஆக்கிரமிப்புகளை நோக்கி திருப்புங்கள்!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.10 மணிக்கு  புறப்பட்ட பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில், கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தது. வாளையார் புதுச்சேரி செக்‌ஷன் வட்டப்பாறை அருகே வந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் யானை மீது ரயில் மோதியது. இதில், யானை தூக்கிவீசப்பட்டு அருகில் இருந்த டிராக்கில் விழுந்து இறந்தது. எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான ஒடியன் லட்சுமணன் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 30ஐத் தொட்டிருக்கிறது என்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் அவர் பதிந்த கருத்து.. “வாளையாருக்கு … Continue reading உங்கள் துப்பாக்கிகளை ஏ சி சி சிமெண்ட் பேக்டரி, ஈசா யோகா மையம், காருண்யா ஆக்கிரமிப்புகளை நோக்கி திருப்புங்கள்!

சிறுத்தைக் கொலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு புலி கொல்லப்பட்டுவிட்டது!

ஆர். ராமமூர்த்தி எது இனி நடக்கவே கூடாது என நினைத்தோமோ அது நடந்தேவிட்டது... சிறுத்தைக் கொலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் சத்தம் ஓயவே இல்லை அதற்குள் ஒருபுலி கொல்லப்பட்டுவிட்டது... அதுவும் சிறுத்தைச் சம்பவத்தைப் போலவே வனத்துறையினர் முன்பாகவே நடந்திருக்கிறது என்பதை அறியும்போது வனவிலங்களை நினைத்து வருத்தப்படுவதா ? பரிதாபப் படுவதா ? அதிகாரிகள்மீது கோபப் படுவதா ? மக்களின் அறியாமையை எண்ணி எண்ணி சிரிப்பதா? என்ன செய்வது ?... அந்த வேதனைச் சம்பவம் கடந்த வியாழன்ன்று(24.11.16) வடகிழக்கு மாநிலமான … Continue reading சிறுத்தைக் கொலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு புலி கொல்லப்பட்டுவிட்டது!

மக்களின் கும்பல் வன்முறை: சிறுத்தை புலி அடித்துக்கொலை

ராமமூர்த்தி அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் உள்ள மந்தவார் கிராமத்தினுள் ஆரவல்லிமலைக் காட்டிலிருந்து வழிதவறிய சிறுத்தை நுழைந்துவிட்டது... குர்கான் என்பது மிக தொலைதூர இமயமலைக்காட்டுப் பகுதியில்லை நமது தலைநகர் டெல்லிக்கு மிக அருகிலிருக்கும் இடம்தான்.... சிறுத்தை நுழைந்த தகவலை கேள்விப்பட்ட அருகருகே உள்ள கிராம மக்கள் 1500 பேர் சேர்ந்து கோடாரி மற்றும் கம்புகளால் சிறுத்தையை தாக்கி அடித்தே கொன்றிருக்கிறார்கள்... அதுவும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் முன்பாகவே இது நடந்திருக்கிறது அவர்களால் இந்த மனிதர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை … Continue reading மக்களின் கும்பல் வன்முறை: சிறுத்தை புலி அடித்துக்கொலை

இயற்கை கடிகாரம்: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கார்க்காலம். அப்போதிருந்த எங்கள் வயலுக்குச் சென்றிருந்தேன். அடைமழைப் பிடித்துக்கொண்டதில் பகலிரவு தெரியவில்லை. கடிகாரமும் இல்லாததால் நேரத்தை அறிய முடியவில்லை. இரவுப்போலவே இருந்தது. அப்போது அங்கிருந்த பெரியவர், ‘தம்பி, பொழுது சாய்ஞ்சிடுச்சே கிளம்பலீயா” என்று கேட்டார். எனக்குத் திகைப்பு. எந்தக் கடிகாரத்தில் இவர் மணி பார்த்தார்? அவரிடமே கேட்டேன். “இது என்ன கம்பசித்திரமா தம்பீ, அதோ பாருங்கள் பீர்க்கம் பூ பூத்திடுச்சு’ என்றார். இதையே வேறு வகையில் சொல்லியிருக்கிறது சங்க இலக்கியத்தின் … Continue reading இயற்கை கடிகாரம்: சூழலியலாளர் நக்கீரன்

அணுக் காலனியம் …!

அருண் நெடுஞ்செழியன் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுடன், முதன் முறையாக தனது அணு உலைகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஜப்பான். (இவை போக ஜப்பானிடம் இருந்து அதிவேக ரயில், போர் விமானங்கள் வாங்குகிற ஒப்பந்த்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது) சிவில் பயன்பாடு ராணுவப் பயன்பாடு என்ற வகைமையில் தனது அணுசக்தி திட்டங்களை பிரித்த வைக்காத, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாத காரணத்தால் இந்தியாவுடனான ஜப்பானின் அணு உலை … Continue reading அணுக் காலனியம் …!

மணல்கொள்ளை மாபியாக்களின் கூட்டாளி போல் செயல்படுவதாக கரூர் ஆட்சியர் மீது குற்றச்சாட்டு

முகிலன் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்  ஒருங்கிணைப்பு குழுவின்   கலந்தாய்வுக்  கூட்டம் நேற்று மாலை (01-11-2016)   புகழூரில்  விசுவநாதன்  அவர்கள் இல்லத்தில் ஒரம்புபாளையம். காளியப்பன்  அவர்கள்   தலைமையில்,   தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் அவர்களின்  வழிகாட்டலில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மணல் கொள்ளையர்களால் நமது காவிரி ஆறு வேகமாக கொல்லப்பட்டுக் கொண்டு உள்ளது.  காவிரி ஆற்றில் கரூர் மாவட்டத்தில் கடம்பன்குறிச்சி  அரசு மணல் குவாரியில்  முறைகேடாகவும், மற்ற இடங்களில்  சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்துபவர்களாகவும்  … Continue reading மணல்கொள்ளை மாபியாக்களின் கூட்டாளி போல் செயல்படுவதாக கரூர் ஆட்சியர் மீது குற்றச்சாட்டு

தெளிவான அரசியல் பொருளாதார வரலாற்றுப் பார்வையில் சிந்தியுங்கள்; பிறகு நடுப்பக்கத்துக்கு வரலாம்!: சூழலியல் செயற்பாட்டாளர் அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது,சரி ...உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?என்ற தலைப்பிலான திரு சமஸின் தமிழ் இந்து கட்டுரை மீதான விமர்சனம்... திரு சமஸ் கட்டுரையின் ஒட்டுமொத்த சாரத்தை தொகுத்தோமென்றால் //காவிரி நதி நீர் உரிமையை நீதிமன்றங்களில் வழக்காடி தீர்த்துக்கொள்ள முடியாது,அவ்வாறு பெற்றாலும் அதில் வரலாற்று நியாயம் வேண்டும்.நமக்கான தண்ணீர் வேண்டும் என்று கோருவதற்கான வரலாற்று நியாயம் என்ன?அப்படி கோருவது ஆதிக்க வரலாறு,ஆதிக்க நியாயம் என்கிறார்.தீர்வாக மாநிலத்தில் முறையாக நீர் மேலாண்மையை கையாள வேண்டும் … Continue reading தெளிவான அரசியல் பொருளாதார வரலாற்றுப் பார்வையில் சிந்தியுங்கள்; பிறகு நடுப்பக்கத்துக்கு வரலாம்!: சூழலியல் செயற்பாட்டாளர் அருண் நெடுஞ்செழியன்

மழையும் ஆயுதம்!: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன் கடந்த ஒரு வாரமாகவே கீழத்தஞ்சைப் பகுதியில் பனிமூட்டம் மிகுந்து காணப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் பனி என்பது அதிசயமே. மார்கழியில் வரவேண்டிய பனி பருவமழைக் காலத்தில் நிலவுவது மக்களுக்கு வியப்பாக இருக்கிறது. இது பருவநிலை மாற்ற அறிகுறியா என்றும் தெரியவில்லை. பொதுவாகப் பனி பெய்தால் மழை இருக்காது என்பதால் உழவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். கர்நாடகாவிலிருந்து வரும் நீர் போதாத நிலையில் பருவமழை இம்மாத இறுதியில் வரும் என்கிற வானிலை அறிவிப்புதான் இப்போது இருக்கும் ஒரே ஆறுதல். மழை … Continue reading மழையும் ஆயுதம்!: சூழலியலாளர் நக்கீரன்

சூழலியல் அழிப்பில் எல் அண்ட் டீ நிறுவனம்; பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவுடன் நடப்பதாக புகார்!

குமரி மாவட்டத்தில் எல் & டீ நிறுவனம் சூழலியல் அழிப்பில் ஈடுப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இந்தக் கொள்ளைக்குத் துணைப்போகிறாரா எனவும் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளவை: குமரி மாவட்டம் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 47-ஐ விரிவுபடுத்தும் வேலையில் L & T Pvt Ltd. எனும் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் அதே நேரம் 180 … Continue reading சூழலியல் அழிப்பில் எல் அண்ட் டீ நிறுவனம்; பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவுடன் நடப்பதாக புகார்!

தமிழ் ஒரு சூழல் மொழி

நக்கீரன் ஒவ்வொரு மொழியும் அது பேசப்படும் நிலத்தின் சூழலில் இருந்தே உருவாகிறது. ஒரு நிலத்தின் சூழல் அழியும்போது அங்குப் பேசப்படும் மொழியும் அழிகிறது. காலனி ஆதிக்கத்தால் பிடுங்கப்பட்ட தம் நிலத்தை இழந்த பல பழங்குடிகள் அத்தோடு தம் சூழலையும் இழந்ததால் படிப்படியாக மொழியையும் இழந்தனர். பல மொழிகள் பேசுவதற்கு ஆளின்றி இறந்துவிட்டன. ஆகவே மொழியும் சூழலும் வேறு வேறு அல்ல. அவ்வகையில் தமிழ் ஒரு சூழல் மொழியாகும். உயிரினவளம் மிகுந்த ஒரு நிலத்தில் தோன்றும் ஒரு மொழி … Continue reading தமிழ் ஒரு சூழல் மொழி

தேயிலைத் தோட்டங்களின் பெருக்கமும் வறண்ட காவிரியும்: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன் ஒரு காவிரிப்படுகை மாவட்டக்காரனாக இது எனக்கொரு துயரமான ஆண்டு. என் வீட்டையொட்டியே வெறும் நான்கடியில் தொடங்கி கண்ணுக்கெட்டிய வரை வயல்கள்தாம். உழவும், நடவுப்பாட்டும், கொக்குகள் கூட்டமுமாக இருந்திருக்க வேண்டிய பசுமை வயல்கள் பழுதடைந்து கிடக்கின்றன. என் வாழ்நாளில் இவ்வளவு வறட்சியாக இவ்வயல்களை நான் கண்டதில்லை. கடந்த 2012க்கு பிறகு குறுவைச் சாகுபடி மறுக்கப்பட்ட வயல்களே இன்னமும் வலியை தந்துக்கொண்டிருக்கையில், சம்பாவும் மறுக்கப்பட்ட இவ்வாண்டு மனதைக் குலைக்கிறது. பத்தடிக்குக் கீழ் தண்ணீர் கிடைத்து வந்த ஊரில் இவ்வாண்டு … Continue reading தேயிலைத் தோட்டங்களின் பெருக்கமும் வறண்ட காவிரியும்: சூழலியலாளர் நக்கீரன்

இயற்கையை அழித்து ‘வளர்ச்சி’: கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்து காமராஜர் துறைமுகம்!

தண்ணீருக்கான பொது மேடை எண்ணூர் கழிமுகமும், பக்கிங்காம் கால்வாயும்,கொசஸ்தலை ஆறும் காமராஜர் துறைமுகம் மற்றும் எண்ணூர் அனல் மின் நிலையங்களின் விரிவாக்கத் திட்டத்திற்காக வேகமான வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வடசென்னையின் நிலத்தடி நீர்மட்டம், சாம்பல் கழிவு மற்றும் வெந்நீர் கலப்பால் அழிவுக்குள்ளாகியிருக்கும் பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்த்தலை ஆற்றின் பல்லுயிரியம் இவற்றோடு இன்னும் வளர்ச்சியின் பேரால் மேற்கொள்ளப்பட்டு வருகிற துறைமுக, அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் பேரழிவின் எல்லைக்கு இப்பகுதியை தள்ளிக்கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் … Continue reading இயற்கையை அழித்து ‘வளர்ச்சி’: கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்து காமராஜர் துறைமுகம்!

“தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

தொழிலாளர்களின் விரோதியும் கார்ப்பரேட் முதலாளியுமான கோவை பிரிக்கால் ஆலை இயக்குனர் வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல்” விருது வழங்குகிற கேலிக்கூத்து நிகழ்வைக் கண்டித்து புறக்கணிப்போம்” என சூழலியல் செயல்பாட்டாளர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “யாரிந்த வனிதா மோகன்? கோவை,பிரிக்கால் ஆலையின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர். தொழிலாளர் முன்னோடிகள் 8  பேருக்கு போலீஸ், நீதிமன்றத் துணையுடன்  இரட்டை ஆயுள் பெறுவதற்கு காரணமாக இருந்தவர். ஆலைத் தொழிலாளர்களின் அனுமதியின்றியே தனது … Continue reading “தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

பியூஸ் மானுஷை விமர்சித்த சந்திரமோகன் யார்?

மதிவாணன் பியூஷ் மனுஷ் ஏதோ ஒரு வகைப்பட்ட வணிகம் செய்கிறார். அந்த வணிகத்தின் அங்கமாக/ ஏதோ ஒரு பகுதியாக அவரின் சமூகச் செயல்பாடும் இருக்கிறது என்று மதிப்பிடுபவன் நான். சந்திரமோகனுக்கு அவர் அளித்த பதில் அதனை உறுதி செய்கிறது. வணிக நடவடிக்கையின் அக்கம்பக்கமாக சமூக சேவை செய்வது அவருடைய உரிமை. வணிக நடவடிக்கை மூலம் பயன் பெற்று அந்தப் பணத்தில் சமூக சேவை செய்வது கூட அவரின் உரிமை. அது போன்ற நடவடிக்கைகளில் அவர் காவல்துறையால் தாக்கப்பட்டால், … Continue reading பியூஸ் மானுஷை விமர்சித்த சந்திரமோகன் யார்?

கிரிவலப்பாதையில் மரம் வெட்டும் திட்டத்தை கிறித்துவ, இடதுசாரி அமைப்புகள் முடக்குகின்றன: இந்து முன்னணி

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அகற்றப்படும் மரங்களைக் காக்கக் கோரி பல்வேறு அமைப்பினர் இணைந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு, இந்து மதத்துக்கு எதிராக கிறித்துவ, இடதுசாரி அமைப்புகள் இணைந்து மரங்கள் வெட்டி சாலை அகலப்படுத்தப்படுவதை தடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க துணைப்பொதுச்செயலாளர் எஸ்.கருணா அளித்த பேட்டியில், “மலை சுற்றும் பாதையில் உள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மரங்கள், காடுகள், அரியவகை மூலிகைகள் கொண்ட காட்டுப்பகுதியை அழித்து … Continue reading கிரிவலப்பாதையில் மரம் வெட்டும் திட்டத்தை கிறித்துவ, இடதுசாரி அமைப்புகள் முடக்குகின்றன: இந்து முன்னணி

மக்கள் போராட்டத்தால் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட 100 வயது ஆலமரம்!

முகிலன் ஈரோடு மாவட்டம் -பவானி வட்டம், பெருந்தலையூர் ஊராட்ச்சிக்கு உட்பட்ட செரையாம்பாளையம் என்ற கிராமத்தில் "சாரல் பசுமை தன்னார்வ அமைப்பு" என்ற அமைப்பினர் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் முன்முயற்சியில் ஊரில் உள்ள பல்வேறு அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த நசசு மரமான வேலிக்கருவை என்ற சீமை கருவேல மரத்தை அழித்து மண்ணை பண்படுத்தி, சுமார் 700 மரங்கள் (ஆல்-அரசு- வேம்பு-பழம் தரும் மரம்கள்) நட்டு வளர்த்து, முன்மாதிரியாக இருந்து வருகின்றனர். அங்கு 100 ஆண்டுகள் ஆன … Continue reading மக்கள் போராட்டத்தால் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட 100 வயது ஆலமரம்!

தீர்ப்பாய தடைக்குப் பின்னும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வெட்டப்படும் மரங்கள்; சூழலியல் ஆர்வலர்கள் போராட முடிவு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் விதமாக சாலையோரம் உள்ள மரங்களை வெட்டும் பணியை அரசு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பசுமைத் தீர்ப்பாயம் தாமே முன்வந்து மரங்களை வெட்டக்கூடாது என அறிவுறுத்தியது. மரம் வெட்டும்  பணி நிறுத்தப்பட்ட நிலையில், இரவு நேரங்களில் மரம் வெட்டும் பணி தொடர்வதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மரங்களை பாதுகாக்க போராட்டத்தில் இறங்குவோம் என அறிவித்துள்ளது மலைவலப் பாதை சூழல் பாதுகாப்புக்குழு. இக்குழு சார்பில் கருப்பு கருணா தனது முகநூல் பதிவில் விடுத்துள்ள அழைப்பு... “திருவண்ணாமலை … Continue reading தீர்ப்பாய தடைக்குப் பின்னும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வெட்டப்படும் மரங்கள்; சூழலியல் ஆர்வலர்கள் போராட முடிவு

யார் இந்த பியூஸ் மனுஷ்?

R.r. Srinivasan யார் இந்த பியூஸ் மனுஷ்? - ஒரு காலத்தில் குப்பைகளாலும், கழிவுகளாலும் அழிந்து போன 53 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில் மீட்டெடுத்து இன்று அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார் குறிப்பு: சென்னையில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள சேத்துப்பட்டு ஏரியினை புனரமைக்க அரசாங்கம் செலவழித்த தொகை 43 கோடி. - தர்மபுரியில் வற்றிப்போன … Continue reading யார் இந்த பியூஸ் மனுஷ்?

இந்த மலபார் அணில் லேஸ் சிப்ஸ், சாக்லேட் சாப்பிடும்; ஆச்சரியப்படாதீர்கள் இது காடுகளில் வாழக்கூடியது!

R.r. Srinivasan கும்பவுருட்டி அருவியில் மலபார் அணில் படும் பாடு... கும்பவுருட்டி அருவியில் மாலை 4 மணிக்கு மேல் இரண்டு பறக்கும் அணில்கள் மக்களைப் பார்க்க வருகின்றன. தினமும் மக்கள் அதற்கு லேஸ் பிஸ்கட், சாக்லேட் மற்றும் அனைத்து தீங்கான பொருட்களையும் வாரி வழங்குகிறார்கள். மேலும் போட்டோக்களுக்கு போஸும் கொடுக்கிறது. அருவியில் தண்ணீர் வராத போது யார் உணவு வழங்குவார்கள்? உணவு தேடும் அடிப்படை குணத்தையே அணில்கள் இழந்துவிட்டன.  வனத்துறை இதனை கண்டும் காணாமல் இருக்கிறது. வால்பாறையில் சிங்க வால் குரங்கை … Continue reading இந்த மலபார் அணில் லேஸ் சிப்ஸ், சாக்லேட் சாப்பிடும்; ஆச்சரியப்படாதீர்கள் இது காடுகளில் வாழக்கூடியது!

யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷா மையத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

VetriSelvan Muthuraj மனித செயல்களால் யானைகள் இறப்பதும், யானைகள் காரணமாக மனிதர்கள் இறப்பதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை கோவை மாவட்டத்தில் இத்தகைய சம்பங்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம், யானைகள் வழித்தடங்களான வனப்பகுதிகள் அனைத்தும் மத /ஆன்மீக குரு நிறுவனங்களாலும், கல்வி நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தான். யானைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அவை நகர்ந்துகொண்டே இருப்பவை. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஒவ்வொரு இடமாக நகரும் யானைகள் வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றுகின்றன. … Continue reading யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷா மையத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

பூவுலகின் நண்பர்களுக்கு கூடங்குளம் மட்டும்தான் சூழலியல் பிரச்சினையா? யானைகளுக்காகவெல்லாம் போராட மாட்டார்களா?

Arun Mo காளை சண்டையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றியடையும் தயிர் சோறு க்ரூப், எல்லாம் ஏன் யானையை வைத்து இத்தனை அராஜகம் செய்யும் அரசாங்கத்தையும், கார்ப்பரேட் சாமியார்களையும், கல்லூரி நிறுவனங்களையும் எதிர்த்து வாய்த்திறப்பதே இல்லை. ஒருவேளை காளை சண்டை கூட கார்ப்பரேட் சாமியார்களின் ஆசிர்வாதத்துடன் நடந்திருந்தால் எந்த வித எதிர்ப்பும் வந்திருக்காது என்றே நினைக்கிறேன். காளை சண்டையை நடத்தும் அமைப்புகள் எல்லாம், சட்டப்பூர்வ அனுமதியை எதிர்பாராமல், கார்ப்பரேட் சாமியார்களை இதில் இணைத்துக்கொண்டால் அடுத்த காளை … Continue reading பூவுலகின் நண்பர்களுக்கு கூடங்குளம் மட்டும்தான் சூழலியல் பிரச்சினையா? யானைகளுக்காகவெல்லாம் போராட மாட்டார்களா?

யானை செத்துவிட்டது; மகராஜ் என்று பெயர் வைத்துக் கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டார்கள்: வா. மணிகண்டன்

வா. மணிகண்டன் யானை செத்துவிட்டது. மகராஜ் என்று பெயர் வைத்துக் கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டார்கள். சொர்க்கத்தில் ‘என் பேரு மதுக்கரை மகராஜ்..தெரியுமா?’ என்று கெத்தாகச் சுற்றிக் கொண்டிருக்கும். ஃபேஸ்புக்கில் அழுவார்கள். அநியாயமாகக் கொன்றுவிட்டீர்களே படுபாவிகளா என்று மணிகண்டன் மாதிரியானவர்கள் பொங்கல் வைப்பார்கள். மாலை நேரத்தில் விஜய் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி இருக்கும். அனுஷ்காவும் ஸ்ரேயாவும் இடுப்பை வெட்டி வெட்டி ஆடுவார்கள். கிளுகிளுப்பாக படுத்துத் தூங்கினால் அடுத்த நாள் எப்படியும் இன்னொரு ஹாட் விவகாரம் சிக்கிக் கொள்ளும். … Continue reading யானை செத்துவிட்டது; மகராஜ் என்று பெயர் வைத்துக் கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டார்கள்: வா. மணிகண்டன்

கொடைக்கானல் நீரோடையை ஆக்கிரமிப்பு செய்த நடிகர் மாதவன்; உடந்தையாக அதிகாரிகள்

  திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த என்.கணேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கொடைக்கானலில் தொடங்கும் ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி கிராமங்கள் வழியாக பாலாறு அணையில் முடிவடைகிறது. இது இப்பகுதியின் முக்கிய நீராதாரம். பாலசமுத்திரத்தில் ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தை நடிகர் ஆர்.மாதவன் வாங்கினார். அந்த நிலம் வழியாக செல்லும் ராஜவாய்க்காலில் ஒரு பகுதியை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளார். இவருக்காக வாய்க்காலில் மின் கம்பங்களை … Continue reading கொடைக்கானல் நீரோடையை ஆக்கிரமிப்பு செய்த நடிகர் மாதவன்; உடந்தையாக அதிகாரிகள்

காலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி: அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன?

ஷாஜஹான் R அமெரிக்காவில் கைதட்டல் வாங்கிய மோடி குறித்து பக்தர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பேசுவது ஒன்றாகவும் உள்நாட்டில் செயல்கள் வேறாகவும் இருப்பதை தெள்ளத்தெளிவாக எழுதினால், அதில் உள்ள விஷயங்களில் ஒன்றுக்கும்கூட பதில் தராமல் எப்போதும் போல தேய்ந்துபோன ஒரே வாதத்தை முன்வைக்கிறார்கள் — பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆயிற்று. 60 ஆண்டுகளாக சீர்கெட்ட இந்தியாவை இப்போதுதான் சீர்செய்து கொண்டிருக்கிறார். பக்தர்களிடம் வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது. போகட்டும். சிட்டிசன் டாட் இன் தளத்தில் ரபீர் … Continue reading காலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி: அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன?

கோககோலா நிறுவனத்தின் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு

கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே பிளாச்சிமடாவில் நிலத்தடி நீரை உறிஞ்சி, நீரை மாசுபடுத்திய கோககோலா நிறுவனத்தின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் விளைவாக இந்த நிறுவனம் மூடப்பட்டாலும், இன்னனும் இந்த பகுதிகளில் நீர் குடிக்க பயனற்றதாகவே இருக்கிறது. இரவலா என்ற ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்த மக்கள் இந்தப் பகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வன்கொடுமை சட்டத்தின் படி அவர்களின் நீராதாரத்தை மாசுபடுத்துவம் குற்றமாகும். … Continue reading கோககோலா நிறுவனத்தின் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு

#புத்தகம்2016: 8 புதிய சூழலியல் நூல்கள்!

2016-ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும் சூழலியல் சார்ந்த புத்தகங்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. பதிப்பகங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பத்துக்கும் குறைவான சூழலியல் நூல்களே  வெளிவந்துள்ளது கவலை கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்த ஆண்டு வெளியான விடுபட்ட சூழலியல் நூல்கள் இருந்தால் தெரிவிக்கலாம். 1. அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை  கிளாட் ஆல்வாரஸ் தமிழில்: ஆயிஷா இரா. நடாராஜன் எதிர் வெளியீடு 2. செர்னோபிலின் குரல்கள் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் எதிர் வெளியீடு “இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் … Continue reading #புத்தகம்2016: 8 புதிய சூழலியல் நூல்கள்!

இந்தப் பறவைகள் எங்கு போகும்?

Chembarambakkam Lake photos பறவைகள் பூத்து குலுங்கும், மனித அலட்சியத்தால் - கழிவுகளால் நாறி கிடக்கும் 35 ஆண்டுகள் பழமையான துணைக்கோள் நகரமான மறைமலைநகர் ஏரி (கீழைகரணி ஏரி) https://www.facebook.com/533485510013617/videos/1241305429231618/ Chembarambakkam Lake photos “செம்பரம்பாக்கம் ஏரியில் எட்டு நீர்பாசன மதகுகளும், இதிலிருந்து செல்லும் பதினைந்திற்கும் மேற்ப்பட்ட பாசன கால்வாய்களும் இருந்தன. அவைகள் பூந்தமல்லி மதகு, மேப்பூர் மதகு, செட்டி மதகு அல்லது மணப்பாக்கம் மதகு, கோண மதகு அல்லது மலையம்பாக்கம் மதகு, பெரிய மதகு, குன்றத்தூர் மதகு, … Continue reading இந்தப் பறவைகள் எங்கு போகும்?

அம்மா ஸ்டிக்கர் பாணியில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற ரயில்களில் ஃபட்னாவிஸ் ஸ்டிக்கர்!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களில் அதிமுகவினர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் போட்ட ‘அம்மா ஸ்டிக்க’ரை ஒட்டியதுபோல், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் லத்தூர் பகுதிக்கு சிறப்பு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.  இந்த ரயிலில் பாஜகவின் முதலமைச்சர் ஃபட்னாவிஸ் படம் போட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தனது முகநூல் பதிவில், “ஆறு மாதங்களுக்கு முன் சென்னையை வெள்ளம் சூறையாடியபோது, நாடெங்கிலும் இருந்து … Continue reading அம்மா ஸ்டிக்கர் பாணியில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற ரயில்களில் ஃபட்னாவிஸ் ஸ்டிக்கர்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களைப் பாதிக்கும் எந்தப் போராட்டத்தில் திமுக பங்கெடுத்தது?

 முகிலன் தி.மு.க.வினர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் அணு உலையை எதிர்த்த போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவோம் என அறிவித்து உள்ளனர். கூடங்குளம் அணு உலை பிரச்சினையில் கடந்த 1987 முதல் தொடர்ந்து நடந்து வரும் போராட்டமும், கடந்த 2011 ஆகஸ்டு முதல் கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருப்பதும், பாசிச ஜெயலலிதா அரசு எங்கள் மீது போட்டுள்ள நூற்றுக்கணக்காண பொய் வழக்குகளை திரும்பப் பெற வைப்பதற்காக … Continue reading கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களைப் பாதிக்கும் எந்தப் போராட்டத்தில் திமுக பங்கெடுத்தது?

பாலைவனமாகும் தமிழ்நாடு: கண்ணீரை வரவைக்கும் தண்ணீர் நிலவரம்!

மூன்று மாதங்களுக்கு முன் சென்னையை முழ்கடித்தது வெள்ளம். அதே சென்னை இன்று நீர்வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. காரணத்தை சொல்கிறது எழுத்தாளர் ஷாஜஹான் தரும் இந்தப் புள்ளிவிவரம்... 'இந்தியாவில் நிலத்தடி நீர்வளங்கள்' இப்படியொரு தலைப்பில் ஒரு நூல் 2011இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. 2014 இறுதியில், திருத்திய பதிப்புக்காக நூலாசிரியர் திருத்தங்கள் செய்து அனுப்பினார். 2015 மார்ச் மாதம் நான் அந்தத் திருத்தங்கள் செய்து அனுப்பும்போது, இந்திய அளவில் ஏற்பட்ட மாற்றங்களை, குறிப்பாக தமிழகத்தின் நிலையைப்பற்றி பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். தப்பிப்போயிற்று. … Continue reading பாலைவனமாகும் தமிழ்நாடு: கண்ணீரை வரவைக்கும் தண்ணீர் நிலவரம்!

பெங்களூரு கழிவில் மிதக்கும் நகரம்!

வா. மணிகண்டன் அல்சூர் ஒரு காலத்தில் தமிழர்களின் பேட்டை. இப்பொழுதும் கூட தமிழர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் இங்கே ஒரு வீடு வைத்திருந்தாராம். பங்களா. அவரிடம் சாவியை வாங்கிக் கொண்டு அந்தக் காலத்து நடிகர்கள் வந்து குடித்து கும்மாளமடித்துவிட்டுச் செல்வார்களாம். மலை வாசஸ்தலத்தைப் போன்ற குளிரும் மரங்களும் பெங்களூருவை நோக்கி நடிகர்களை ஈர்த்திருக்கின்றன. அவை தவிரவும் ஏகப்பட்ட காரணங்கள் இருந்திருக்கக் கூடும். யாருக்குத் தெரியும்? கும்மாளமடிப்பதோடு நில்லாமல் வீட்டை நாறடித்து விடுவார்களாம். பார்க்கும் … Continue reading பெங்களூரு கழிவில் மிதக்கும் நகரம்!

இனி “ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை” எதிர்ப்பவர்களும் தேச விரோதிகளா ?…

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரில் மார்ச் 11-ம் தேதி முதல் மூன்று நாட்கள் நிகழ்ச்சி ஒன்றை யமுனா நதிக்கரையில் நடத்த உள்ளார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 120  வீரர்கள் யமுனா நதியின் மேல் பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு லிவ் யமுனா என்னும் ‘யமுனா நதி பாதுகாப்பு இயக்கம்‘ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த … Continue reading இனி “ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை” எதிர்ப்பவர்களும் தேச விரோதிகளா ?…

புற்றுநோயாளிகளை உருவாக்கிய காயல்பட்டினம் DCW தொழிற்சாலை மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது பசுமைத் தீர்ப்பாயம்:மக்கள் இத்தொழிற்சாலையை எதிர்ப்பது ஏன்?

புற்றுநோயாளிகளை உருவாக்கிய காயல்பட்டினம் DCW தொழிற்சாலை மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது பசுமைத் தீர்ப்பாயம்.  DCW தொழிற்சாலை பற்றிய முழுவிவரங்களுடன் 2013-ஆம் ஆண்டில் எம்.எஸ்.முகம்மது சாலீகு எழுதிய ஆவணம் இங்கே... DCW தொழிற்சாலை 1925ஆம் ஆண்டில், தற்போதைய குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள தாரங்கதாரா நகரில் சோடா ஆஷ் என்ற பொருளை தயாரிப்பதற்காக துவக்கப் பட்டது. பின்னர் 1939ஆம் ஆண்டில், இந்நிறுவனம் சாஹ¨ ஜெய்ன் குடும்பத்தால் வாங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சுமார் 43% பங்குகளை (நவம்பர் 2012 நிலவரப்படி சுமார் … Continue reading புற்றுநோயாளிகளை உருவாக்கிய காயல்பட்டினம் DCW தொழிற்சாலை மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது பசுமைத் தீர்ப்பாயம்:மக்கள் இத்தொழிற்சாலையை எதிர்ப்பது ஏன்?

அவசியம் படியுங்கள்: ஆட்சியாளர்களின் பேரிடர்!

“கடந்த நவம்பர் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களாகத் தமிழகத்தை உருக்குலைத்து, தமிழக மக்களது வாழ்வுக்குச் சர்வநாசம் விளைவித்தது இயற்கைப்பேரிடரால் நேர்ந்தவை அல்ல. இவை ஆட்சியாளர்களே விளைவித்த பேரிடர், பேரழிவுகள்தாம்” என்கிறது மக்கள் அதிகாரம் அமைப்பு. அரசு மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் இந்த அமைப்பு அண்மையில் தமிழகத்தை ஸ்தம்பிக்க வெள்ளம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இங்கே... “இயற்கைப் பேரிடர், பேரழிவுக்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் நாசம்” மட்டுமல்ல, நிவாரணங்கள் என்ற பெயரில் உள்ளிட்டு … Continue reading அவசியம் படியுங்கள்: ஆட்சியாளர்களின் பேரிடர்!