திராவிடம் மொழியா? திராவிடம் இனமா? திராவிடம் நாடா?

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னைப் பற்றிய குறிப்பில் தி திரவிடியன் ஸ்டாக் என்ற குறிப்பை சேர்த்தார். இது சர்ச்சையான நிலையில், தி திரவிடியன் ஸ்டாக் என்ற தலைப்பில் முரசொலியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கட்டுரை எழுதியிருந்தார். இதுகுறித்து தோழர் தியாகு ஆற்றியுள்ள எதிர்வினை: தோழர் சுபவீ … Continue reading திராவிடம் மொழியா? திராவிடம் இனமா? திராவிடம் நாடா?

“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்

அன்புள்ள திரு ரங்கராஜ் (பாண்டே) அவர்களுக்கு, வணக்கம். 'ஹிந்தி திணிப்பு உண்மையா?' என்னும் தலைப்பில், சாணக்கியாவில் நீங்கள் ஆற்றியுள்ள உரையைக் காணொளி வடிவில் முழுமையாகப் பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பின்,'புரட்சி வெடிக்கும், கிளர்ச்சி வெடிக்கும்' என்னும் குரல்கள் கேட்பதாக, ஒரு மெலிதான ஏளனத்துடன் தொடங்கும் அந்த உரை குறித்துச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவே இந்தத் திறந்த மடலை எழுதுகின்றேன். புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டதும், அதன் பிறகு, … Continue reading “நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்

#அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!

தமிழ் ஆதவன் சுப வீரபாண்டியனின் விவாதம் சிறுத்தைகள் அருந்ததியருக்கு போட்டியிட வாய்ப்புத் தரவில்லை என்ற பொய்யான செய்தியை பதிவு செய்வதோடு நிற்கவில்லை. நாம் அதை அந்த அளவோடு நிறுத்திப் பார்ப்பதும் சரியானதல்ல. தலித்கள் அதிகாரத்திற்கு வந்தாலும் மாற்றம் வராது, இன்னமும் இழிவை சுமக்கும் போது தலித்கள் அதிகாரம் குறித்து சிந்திக்க கூடாது. சிறுத்தைகள் அனைத்து பட்டியலினப் பிரிவினருக்குமான கட்சி அல்ல போன்ற செய்தியைகளை பல வார்த்தை ஜாலங்களில் பதிவு செய்தார் சுப வீரபாண்டியன். சுபவீ சிறுத்தைகளை குற்றம் … Continue reading #அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!