கடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன்

பிரம்மாண்டமான பிரமிக்கவைக்கும் அழகிய விமானமாம் பூமி தற்போது சில வல்லரசு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா எனும் ஐந்து கடத்தல்காரர்கள் அழித்தொழிக்கும் அணுகுண்டுகள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி, நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் இந்த அரிய அற்புதமான விமானத்தை கண நேரத்தில் தகர்க்க முடியும் என்றும், பயணிகள் அனைவரின் உடைமைகளையும், உயிர்களையும் அழிக்க முடியும் என்றும் மிரட்டுகின்றனர்.

2009-ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்துக்காக ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது!

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, மதுரையில் இன்று கைது செய்யப்பட்டார். 2009-ஆம் ஆண்டு விடுதி வசதி கேட்டு மாணவர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக திவ்யா கைது செய்யப்பட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைக்கு வராத காரணத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மனிதர்கள் சக மனிதர்களின் கழிவுகளை அள்ளும் அவலம் குறித்து திவ்யபாரதி, 'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தை எடுத்தவர். இந்தப் படத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகள் விருது அளித்துள்ளன. … Continue reading 2009-ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்துக்காக ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது!

பார்ப்பனர்களின் அடித்தளங்கள் அப்பழுக்கற்றவையா? ஜெயமோகனுக்கு சுப.உதயகுமாரன் கேள்வி

“சாதிய அமைப்பின் கடந்தகாலக் கொடுமைகளுக்கான” (கவனிக்கவும், “கடந்தகால”) “பொறுப்பை பிராமணர் மேல் சுமத்திவிட்டு” நாமெல்லாம் கழன்றுகொள்கிறோம் என்று குறைபடுகிறார். இதைத்தான் victim-blaming (இரையைக் குறை சொல்வது) என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.

கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா? சுப. உதயகுமாரன் கேள்வி

ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்

“காவிகளை எதிர்க்கும் தமிழகக் கட்சிகள் உடனடியாக ஒன்றுகூடி ஆலோசிக்க வேண்டும்”

சுப. உதயகுமாரன் தாங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பெரும்பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள பிரயத்தனிக்கும் ஒரு கூட்டமும், அவர்களுக்கு ஒத்தாசையாக செயல்பட்டு கொல்லைப்புறம் வழியாக கோட்டைக்குள்ளே நுழைய விரும்பும் இன்னொரு கூட்டமும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை கடத்தி வைத்து அரசியல் நாடகங்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், ஒரு மாபெரும் மக்கள் தலைவரை பல மாதங்களாக மக்களுக்குக் காட்டாமல் ஒளித்து வைத்திருப்பது, அவரது இரத்த உறவுகளைக்கூட அண்டவிடாமல் தடுத்து நிற்பது, வெற்று அறிக்கைகள் மட்டும் விடுத்து மக்களை மதிக்காமல் நடப்பது … Continue reading “காவிகளை எதிர்க்கும் தமிழகக் கட்சிகள் உடனடியாக ஒன்றுகூடி ஆலோசிக்க வேண்டும்”

“கொள்கை இல்லை; ஆனால் தேசியம், முற்போக்கு, திராவிடம் எல்லாம் பெயரில் உண்டு!”

 சுப. உதயகுமாரன் "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பார்கள். தமிழக அரசியலின் அவல நிலையைப் புரிந்துகொள்ள தே.மு.தி.க. என்கிற ஒரு கட்சியை அவதானித்தாலே போதும். கொள்கை என்பது அறவே கிடையாது. தேசியம், முற்போக்கு, திராவிடம் என மனதிற்கு தோன்றிய வெறும் வார்த்தைகளை போட்டுக் குழப்பி ஒரு சொற்றொடரை உருவாக்கி, தமிழர்களுக்கு பண்ருட்டியார் போன்றோர் சேர்ந்தளித்த மாபாதகப் பரிசுதான் இந்தக் கட்சி. "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்பதுதான் இவர்கள் நாட்டுக்கு வழங்கியிருக்கும் மார்க்சிசத்துக்கு அடுத்த மாபெரும் … Continue reading “கொள்கை இல்லை; ஆனால் தேசியம், முற்போக்கு, திராவிடம் எல்லாம் பெயரில் உண்டு!”

#பச்சைத்தமிழகம்: தமிழகம் புதிய அரசியல் சிந்தாந்த கட்சிகளை எதிர்நோக்கி உள்ளதா?

ஆழி.செந்தில்நாதன் ஏன் என்றால் மிக நெடுங்காலத்துக்குப் பின் தமிழ்நாட்டின் சாதாரண மனிதர்களின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவாக அது உருவாகியிருக்கிறது. அந்தப் போராட்டத்தின் ஆதரவாளரான தொடர்ந்து அவர்களோடு பயணித்துவந்த நாங்கள் இந்த தேர்தலில் பச்சைத் தமிழகத்தோடு முழுமையாக இணைந்து பயணிக்கவிரும்புகிறோம். முதலில் ஒரு அறிவிப்பு: நானும் எனது நண்பர்கள் பெ பழநி, நா.த. தமிழினியன், தாண்டவ மூர்த்தி, ஸ்டாலின் ஆகியோரும் இணைந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உருவாக்கிய மக்கள் இணையம் என்கிற அரசியல் அமைப்பு தொடர்ந்து … Continue reading #பச்சைத்தமிழகம்: தமிழகம் புதிய அரசியல் சிந்தாந்த கட்சிகளை எதிர்நோக்கி உள்ளதா?

செல்ஃபி ராஜாவும் ஸ்டிக்கர் ராணியும்

சுப. உதயகுமாரன் ஒரு ஊர்ல ஒரு ராஜாவும், ஒரு ராணியும் இருந்தாங்களாம். அந்த ராஜாவுக்கு விதவிதமா டிரஸ் போட்டுட்டு கண்ணாடில பாத்துக்கறதும் ஊர சுத்தி வர்றதும் ரொம்பப் புடிக்குமாம். இதப் பாத்து மக்கள் எல்லாம் செல்ஃபி ராஜா, செல்ஃபி ராஜான்னு அவர கூப்பிட்டாங்க. வடக்கூர் செங்கோட்டையிலதான் செல்ஃபி ராஜா தர்பார் நடந்துச்சு. ஆனா அவரு பெரும்பாலும் வெளிநாட்டுலதான் இருப்பாரு. ராஜா மாதிரியே ராணிக்கும் ஒரு பிரச்சினை. என்னான்னா அவுங்க படத்தைய அங்கங்க வெச்சுப்பாங்க. அரசகட்டளைய எல்லாபேரும் மதிக்கமாட்டாங்கனு … Continue reading செல்ஃபி ராஜாவும் ஸ்டிக்கர் ராணியும்