சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?

நரேன் ராஜகோபாலன்முட்டாளாக போகும் தமிழக வாக்காளனுக்கு, ஒன்றும் செய்ய முடியாத, கையறு நிலையில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு குடிமகன் எழுதுவது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான திரு. எஸ். உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த affidavit விவரங்களை நேற்று பதிந்து இருந்தேன். சிரிக்கிறதுக்கான மேட்டர் இல்லை அது, ரொம்ப சீரியசான மேட்டர். உதயநிதி சமர்ப்பித்ததில் அவருடைய வருவாய் ரூ. 1,50,17,700 (2017-18) ரூ. 4,00,090 (2018-19) ரூ. 4,89,520 (2019-20) என்று சொல்லப்பட்டு … Continue reading சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?

ஈழ அரசியல்: குளத்து ஆமைகளும் கடல் ஆமைகளும்!

“மத்தியில் பிஜேபி அரசு அமைந்தால் போர் நிறுத்தம் வந்துவிடும்” என்று ஆசை காட்டுவதில் மொட்டு விட்ட இவர்களது கயமை “இலை மலர்ந்தால் ஈழல் மலரும்” என்பதாக விரிந்து ஈழத்தில் ரத்தம் குடிப்பதில் போய் முடிந்தது.

சீமானின் சாதிய முகம்!

சீமான் பல்லக்கு முறை கார் வந்ததால் மாறிவிட்டதாக சொல்கிறார். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு?

சிபிஐ-சிபிஎம் மட்டும்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளா? சீமான் மட்டும்தான் தமிழ்த்தேசியவாதியா?

பொலிட் பீரோக்களில், தலித் பிரதிநிதித்துவம் உண்டா? என்று சிபிஐ, சிபிஎம் கட்சிகளைத் தாண்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதை அறியாமலா பலரும் கேட்கிறார்கள்?

சீமான் பேசுவது இனவாதமா? தேசிய வாதமா?

சார்கோஸி பிற‌ப்பால் ஹ‌ங்கேரிய‌ர். அவ‌ர் பிரான்ஸில் பிற‌க்க‌வுமில்லை. சிறு வ‌ய‌தில் பெற்றோருடன் அக‌தியாக‌ புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர். இருந்தாலும் பிரெஞ்சு ம‌க்க‌ள் அவ‌ரை ஜ‌னாதிப‌தியாக‌ ஏற்றுக் கொண்டார்க‌ள்.

“எங்கள் மூதாதை மாயோன்”: நாம் தமிழர் கட்சியின் தமிழர் பட்டியலில் சேரும் கிருஷ்ணன்!

பழம் தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படும் மாயோன் தெய்வம் தான், தற்போதைய கிருஷ்ணனாகக் கொண்டாடப்படுகிறார் என சொல்கிறார் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ண ஜெயந்தி சுவரொட்டிகள். தமிழனின் முப்பாட்டன் முருகன்(குறிஞ்சி நிலத் தலைவன்) என சொன்னவர்கள், “எங்கள் மூதாதை மாயோன்” என இந்து மதக் கடவுளான கிருஷ்ணனை தமிழர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஐந்திணை நிலங்களில் மாயோன் முல்லை நிலத் தலைவன். இம்மக்கள் மேய்ச்சலில் ஈடுபடுவதால், இந்து புராணங்களில் மாடு மேய்க்கும் கடவுளாக குறிப்பிடப்படும் கண்ணனை, மாயோன் என … Continue reading “எங்கள் மூதாதை மாயோன்”: நாம் தமிழர் கட்சியின் தமிழர் பட்டியலில் சேரும் கிருஷ்ணன்!

வந்தேறி என்று சொன்னதில்லை; பெரியாரை விமர்சித்ததில்லை: சீமான் கடிதம்….

நாம் தமிழர் கட்சி இணையதள தொடர்களுக்கு, அக்கட்சி தலைவர் சீமான் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் வந்தேறி என்று சொன்னதில்லை எனவும், பெரியாரை விமர்சித்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சீமான் இணையத்தில் இயங்கும் என் ஆற்றல் மிகு தம்பிகளுக்கு... படித்து ருசித்தை பகிருங்கள்.. கண்டு ரசித்ததை எழுதுங்கள்.. அழகுக்கவிதை ஒன்றை வடியுங்கள்.. அநீதிகளுக்கு எதிராகக் கட்டுரைகளைத் தீட்டுங்கள்.. உங்கள் தனித்திறமை காட்டுங்கள். இவை ஏதும் இல்லையேல்.. தினம் ஒரு திருக்குறள் பகிருங்கள்.. தினம் ஒரு பாரதிதாசன் கவிதை … Continue reading வந்தேறி என்று சொன்னதில்லை; பெரியாரை விமர்சித்ததில்லை: சீமான் கடிதம்….

“என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்”: சீமான்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் விஜய் சேதுபதியை சாதி, இனத்தை பரிசோதனை செய்துகொண்டிருக்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பதில் சீமான், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்துநிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்..தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்.. அன்பின் நெகிழ்ச்சியோடு, சீமான்...” என … Continue reading “என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்”: சீமான்

“நான் தமிழர் இல்லையென்றால் கல்லால் அடித்துக் கொல்லட்டும்”: சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

தன்னை தெலுங்கர் என்று சொல்லும் நாம் தமிழர் கட்சியினருக்கு  தமிழர் முன்னேற்றப் படை  நிறுவனர் கி.வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார். தனது முகநூலில், “நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு காங்கிரசோ சிங்கள இனவாதமோ எதிரிகள் அல்ல ;இந்த வீரலட்சுமி மட்டும் எதிரியாம் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை பல்வேறு தரப்பட்ட மக்கள் மலையாளி என்று முகநூலில் பதிவு செய்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் எம்மை தெலுங்கர் என்று முகநூலில் பதிவிட்டுகொண்டிருக்கிறார்கள். முதலில் … Continue reading “நான் தமிழர் இல்லையென்றால் கல்லால் அடித்துக் கொல்லட்டும்”: சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

பேரா. அருணனுக்கு விட்ட சவால் என்ன ஆனது? சீமானின் பதில்!

கடந்த சில மாதங்களுக்கு முன் தந்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று பேசினார். இதைப் படியுங்கள்: #வீடியோ: “ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே! தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. நாம் … Continue reading பேரா. அருணனுக்கு விட்ட சவால் என்ன ஆனது? சீமானின் பதில்!

தன்னை பரதேசி என்று பேசிய இளங்கோவனுக்கு லெனினின் வரிகளை மேற்கோள் காட்டி பதில் சொன்ன சீமான்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி இலங்கை போரின் போது தமிழர்களுக்கு துரோக இழைததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரக்கூட்டங்களில் தொடர்ந்து பேசிவருகிறார். இது பற்றி மதுரை விமான நிலையத்துக்கு வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, “சீமான் என்கிற யாரோ ஒரு பரதேசிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார் இளங்கோவன். இளங்கோவனின் பேச்சுக்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஆத்துமேடு பகுதியில் … Continue reading தன்னை பரதேசி என்று பேசிய இளங்கோவனுக்கு லெனினின் வரிகளை மேற்கோள் காட்டி பதில் சொன்ன சீமான்!

#சபாஷ் நாயுடு;தேவர்மகன், விருமாண்டிக்கு பின் மற்றுமொரு ஜாதிப்பெயர் படமா ???: கமல்ஹாசனுக்கு தொடங்கும் எதிர்ப்பு…

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' என்ற புதிய படத்தின் தொடக்க விழா,  சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர். *சாதியை வெறுக்கும் நீங்கள், உங்கள் படத்துக்கு 'சபாஷ் நாயுடு' என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்? என்று பத்திரிகையாளர் ஒருவர் வினவினார். இதற்கு பதில் அளித்த கமல் "முதலில், நீங்கள் வசிக்கிற தெருவில் இருக்கிற சாதி பெயரை எடுங்க. அதுக்கு அப்புறம் பார்க்கலாம். உங்களுக்கு எப்படி ஒரு கேரக்டர் பிடிக்குதோ, அதேபோல் எனக்கு … Continue reading #சபாஷ் நாயுடு;தேவர்மகன், விருமாண்டிக்கு பின் மற்றுமொரு ஜாதிப்பெயர் படமா ???: கமல்ஹாசனுக்கு தொடங்கும் எதிர்ப்பு…

ரெட்டலை,சூரியனுக்கு வோட்டு போட்டா கையில குஷ்டம் வந்துரப் போகுது; மதுரையில் சீமான்!

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் பெண் வேட்பாளர் சாராளை ஆதரித்து பேசிய சீமான், அப்போது பேசியவற்றில் முக்கியமானவைகளை கீழே அளித்திருக்கிறோம். "அரிசி வைத்து அதிமுகவும் திமுகவும் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கு அரிசி போட்டார்கள். வாங்கி சாப்பிடமுடியவில்லை. அது கட்டுப்படியாகவில்லை என்பதால் ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டார்கள். அதையும் வாங்க வக்கில்லை. இப்போது இலவச அரிசி. ஜெயலலிதா கூட்டத்திற்கு போனால் 200 ரூபாய். ஒரேடியாக போனால் இரண்டு லட்சம். கூட்டிட்டு வாங்க. தூக்கிட்டு போங்க … Continue reading ரெட்டலை,சூரியனுக்கு வோட்டு போட்டா கையில குஷ்டம் வந்துரப் போகுது; மதுரையில் சீமான்!

சாதி வெறி, ஆணாதிக்க வெறி, நிலவுடமை ஆதிக்க மனநிலை இது தான் சீமானின் தமிழ் தேசியமா?

சமத்துவ படை கட்சியின் தலைவர் சிவகாமி ஐஏஎஸ், திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு பெற்றதை, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். முகப்பில் உள்ளது அவர் இட்ட முகநூல் பதிவு. இந்தப் பதிவிற்கு ‘சாதி வெறி, ஆணாதிக்க வெறி, நிலவுடமை ஆதிக்க மனநிலை இது தான் சீமானின் தமிழ் தேசியமா?’ என சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.   Veeramani Panneerselvam தமிழினத்தைக் காப்பாற்ற நான் ஒருவன்தான் இருக்கிறேன் என்பவரின் தம்பி … Continue reading சாதி வெறி, ஆணாதிக்க வெறி, நிலவுடமை ஆதிக்க மனநிலை இது தான் சீமானின் தமிழ் தேசியமா?

நாம் தமிழர் சீமானும் ஜெர்மன் தேசியவாதி ஹிட்லரும்!

த. கலையரசன் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஹிட்லரை ஆராதிப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு தீவிர வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் வேறெப்படி சிந்திக்க முடியும்? இங்கே ஒருவர் "ஹிட்லர் ஒரு தேசியவாதி" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே? ஹிட்லரும், நாஜிக் கட்சியினரும் தீவிர ஜெர்மன் தேசியவாதிகள் தானே? நான்அடிக்கடி "நாம் நாஜித் தமிழர்" என்று குறிப்பிட்டு எழுதுவதை கண்டிக்கும் சில நண்பர்கள், அதற்கு "அறிவுபூர்வமான" விளக்கம் கொடுக்கிறார்கள். நாம் … Continue reading நாம் தமிழர் சீமானும் ஜெர்மன் தேசியவாதி ஹிட்லரும்!

#வீடியோ ”விஜயகாந்த் முதலமைச்சரானால் நாண்டுக்கிட்டு சாகலாம்”: சீமான் சொன்னபடி செய்வாரா?

அதிரடி பேச்சுகளுக்கு பெயர் போன சீமானின் இந்த முறை விஜயகாந்தை குறி வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்., “விஜயகாந்த் முதல்வரானால் தமிழர்கள் நாண்டுக்கிட்டு சாகலாம்” என தெரிவித்துள்ளார். சவால் விடுவதில் பெயர் போன சீமான், ஒரு வேளை விஜயகாந்த் முதல்வரானால் என்ன செய்வார்? வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=JNHxxN37jPs

தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் சீமான்!

 நாம் தமிழர் கட்சியின் சார்பாக 314 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு என்ற தலைப்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் வெளியிடப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசின் முத்திரையாக திருவள்ளுவர் படம் பொறித்த முத்திரையும், தமிழ்நாட்டு கொடியாக சேர, சோழ, பாண்டியர்களின் கொடியான மீன், புலி, வில்அம்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக தலைநகர் ஐந்தாக பிரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை, … Continue reading தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் சீமான்!

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

வி. சபேசன் சீமான் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு நேர்காணல் சமூக வலைத்தளங்களில் பெருமளவு கிண்டலடிக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் சீமான் தான் எப்படி ஈழத்திற்கு போனேன் என்றும், தலைவர் தனக்கு எப்படி துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளித்தார் என்றும் சொல்கிறார். யாரும் உயிரோடு இல்லை என்கின்ற அசட்டுத் தைரியத்தில் சீமான் சற்று அதிகமாகவே 'ரீல்' விட்டிருப்பது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. சீமானுடைய அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சில உண்மைகளை நேர்மையாக ஒத்துக் … Continue reading சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

மதுரை சொக்கன் சீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும். கடைசியில் பாயை விரித்து வைத்துக் கொண்டு அதில் தொபுக்கடீர் என்று விழுவார். பார்த்தால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அப்படியும் விடாமல் “சின்னான்னா சும்மாவா” என்று கெத்தாக பேசுவார்.சீமானும் கிட்டத்தட்ட சின்னான் போல ஆகிவிட்டார். தமிழ்தேசியம் என்ற ஒரு … Continue reading பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

யுவகிருஷ்ணா தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இனி ஜெயா அரசு காபந்து அரசுதான். இன்னுமா விகடனாருக்கு பயம்? அண்ணன் ப.திருமாவேலன் அவர்கள் இவ்வார விகடனில் எழுதியிருக்கும் ’இன்னும் எத்தனை நாடகங்கள்?’ கட்டுரை, ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஈழப்பிரச்சினையில் ஒரே தராசில் சரிக்கு சமமாக நிறுத்திவைக்க முயற்சிக்கிறது. மநகூ என்கிற அதிமுகவின் ‘பீ’ டீம் செய்யும் அதே வேலையைதான் விகடனும் செய்கிறது. ஈழப்பிரச்சினையில் கலைஞர் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேரெதிரான கருத்தை ஜெ. சொல்லுவார் என்று கட்டுரை சொல்கிறது. உண்மைதான். … Continue reading ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை

பாவெல் தருமபுரி "சமூகத்தில் நிலவுகின்ற பிரதான முரண்பாடுகளை சரியானநேரத்தில் சரியான சக்திகள் தீர்க்காவிட்டால் தவறான சக்திகள் தவறான விதத்தில் தீர்த்துவிடும்." - மாவோவின் புகழ் மிக்க வரிகள் இவை. உண்மையில் இன்றைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்துக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி மக்களின் இருதயங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிமுக வாகட்டும் திமுக வாகட்டும் தத்தமது அந்திமகாலத் துடுப்புக்களை செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றன. நடிகர் விஜயகாந்த் ஒரு தலைமைக்கான … Continue reading ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை

சோ.ராமசாமி , எஸ்.வி.சேகர், எச்.ராஜா, சீமான்!

வி. சபேசன் இன்று சீமான் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். அப்படியே இருந்திருக்கலாம். தெரியாமல் 'தமிழ்.ஒன்இண்டியா' இணையத்தில் சீமானின் பேட்டியின் இரண்டாம் பாகத்தை படித்துத் தொலைத்து விட்டேன். 'சீமானின் கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்' என்று அதற்கு ஒரு தலைப்பு வேறு. வேள்வி என்றால் ஆடு வெட்டுவதா அல்லது நெருப்பு வளர்த்து இந்திரனைக் கூப்பிடுவதா என்பது தெரியவில்லை. அதைப் பிறகு ஒரு நாள் பார்ப்போம். அந்தப் பேட்டியிலே சீமான் சொல்கிறார் 'என்னையே எடுங்க.... இதுவரை … Continue reading சோ.ராமசாமி , எஸ்.வி.சேகர், எச்.ராஜா, சீமான்!

’ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களை சிதைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ அடியாள் சீமான்!’

வி. சபேசன் 2009இல் ஈழத் தமிழகளின் விடுதலைப் போர் மோசமாக தோற்கடிக்கப்பட்டது. தமிழினம் பேரழிவுக்கு உள்ளானது. இது பலரை ஒருவித மனப்பிறள்வுக்கு உள்ளாக்கியது. இந்த மனப்பிறள்வு தமிழர்களை நிதானமான முறையில் சிந்தித்து, எதிர்கால திட்டங்களை வகுக்க முடியாதபடி செய்தது. இந்த மனப்பிறள்வுக்கு உள்ளாகியவர்களில் சீமான் முக்கியமானவர். ஒரு நேரத்தில் அவரிடம் இருந்த தமிழினப் பற்றை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவருடைய மனப்பிறள்வு அவரை ஒரு மோசமான நிலையை நோக்கி கொண்டு சென்றது. சீமான் உண்மையில் ஒரு … Continue reading ’ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களை சிதைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ அடியாள் சீமான்!’

“மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் சீமான் “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேரா.அருணனை ஏசினார். இதைப் படியுங்கள்: தந்தி … Continue reading “மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

#வீடியோ: ”ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே!

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அதிமுக அகற்றுவதை முக்கியமான வேலை என்று சொல்லும் மக்கள் நலக் கூட்டணியின் முடிவை சொன்னார் பேரா. அருணன். அதற்கு சீமான் … Continue reading #வீடியோ: ”ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே!

’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்கிறாரா?

’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்வதாக இலங்கையைச் சேர்ந்த களப்பணியாளர் அருணா சுதர்சன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் அருணா சுதர்சன் , “இரண்டு நாட்களுக்கு முன்பு பாரிசில் இருந்து என் தோழியின் சகோதரர் பேசினார். சீமானுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருக்கிறதாமே.... ஆட்சியைப் பிடித்து விடுவாரா? என்று கேட்டார். அவர் பேசி முடித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு தொகுதியில் கூட சீமானால் வெற்றி பெற முடியாது … Continue reading ’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்கிறாரா?

#FollowUp:“நாம் தமிழர் கட்சி இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்காது” தலித்துகளை அவமதிக்கும் பதிவு குறித்து சீமான்

‘இழிசாதி தலித்’ என பின்னூட்டம் இட்ட நாம் தமிழர் கட்சியின் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் தமிழ்மணி மீது நெல்லை மாநகர ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் முருகன் இந்தப் புகாரை அளித்திருக்கிறார். இந்நிலையில், இந்தப் புகார் குறித்து தி ஹிந்து (ஆ) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில், நாம் தமிழர் கட்சி இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்காது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தொடர்புடையவரை … Continue reading #FollowUp:“நாம் தமிழர் கட்சி இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்காது” தலித்துகளை அவமதிக்கும் பதிவு குறித்து சீமான்

“அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை

அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடலூரில் நடந்த மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் க. தமிழ்மணி. இவர் முகநூலில் பதிவொன்றுக்கு இட்ட கருத்தில் ‘இழிசாதி தலித்தே’ என கடுமையாக பேசியிருக்கிறார். இது முகநூலில் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது.   Rajesh Dee இரா. முருகப்பன் சீமானின் சாதி வெறி அடையாளம். அவரது திருமங்கலம் வேட்பாளர். நிச்சயம் இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும்..இவரது தேர்தல் விண்ணப்பம் … Continue reading “அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை

ஆர்.கே.நகரில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகிறார் திருநங்கை தேவி!

கடலூர் மஞ்சக் குப்பத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கேரளாவின் தேவிக்குளம் தொகுதிக்கான வேட்பாளர் உள்பட 235 வேட்பாளர்களை ஒரே மேடையில் ஏற்றி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேவி என்கிற திருநங்கையை வேட்பாளராக அறிமுகப்படுத்தினார்.

“அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன்” தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு நல ஆர்வலர்!

யுவகிருஷ்ணா ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்று. ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் சொல்கிறார். “அப்படியே தடை வந்துட்டாலும் கூட எங்கிட்டே இருபது ஏக்கர் இடம் இருக்கு. முன்னூறு காளைகள் இருக்கு. நான் நடத்திட்டுப் போறேன். யாரென்ன பண்ணுவாங்கன்னு பார்த்துக்கறேன்” அவருக்கு பதிலடியாக ராதா ராஜன் என்கிற விலங்குகள்நல ஆர்வலர் சொல்கிறார். “அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன். என்னை வந்து நீங்க கேட்கக்கூடாது” நெறியாளர் குணசேகரன் அப்படியே திகைத்துப் போகிறார். … Continue reading “அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன்” தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு நல ஆர்வலர்!

“புரட்சி பேசிவிட்டு யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்” மக்கள் நலக் கூட்டணியினர் பற்றிசீமான்

மக்கள் நல கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் புரட்சி பேசிவிட்டு, தற்போது யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருப்பது வருத்தம் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தில் பூட்டிக்கிடக்கும் நெசவாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை சமுதாயக்கூடமாக மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெசவாளர் கட்டிடத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால் … Continue reading “புரட்சி பேசிவிட்டு யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்” மக்கள் நலக் கூட்டணியினர் பற்றிசீமான்

ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும்: சீமான்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு உதவும் வகையில் மகளீர் சுய உதவிக்கடன்களையும் விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையையும்,கடலூர் மாவட்டத்தையும் அழித்துக் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிற பெரும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீண்டு வர இயலாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். உறைவிடம், உடை, பொருட்கள், ஆவணங்கள் என அனைத்து அடையாளங்களை இழந்து மக்கள் நிர்கதியாய் … Continue reading ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும்: சீமான்