“இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்!”: யெச்சூரி

ஏழை மக்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லாவிட்டால் என்ன; கேக் சாப்பிடுங்களேன் என்று பிரெஞ்சு புரட்சி காலகட்டத்தில் அந்நாட்டின் மகாராணி கூறியதை போல, இப்போது கையில் ரூபாய் நோட்டு இல்லாவிட்டால் என்ன, பிளாஸ்டிக் ரூபாய் வரப் போகிறது, அதைப் பயன்படுத்துங்கள் என்று இந்திய ஏழைகளை ஏளனம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் … Continue reading “இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்!”: யெச்சூரி

“மாநிலங்களை கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்”: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுகையில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு (ஜிஎஸ்டி) வகை செய்யும் விதத்தில் அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியது: இப்போது கொண்டுவந்திருக்கிற இந்தச் சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் மிகவும் முக்கியமான திருத்தம். … Continue reading “மாநிலங்களை கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்”: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி

மகாராஷ்டிர மாநிலத்தின் தலை நகரான மும்பையில் அமைந்துள்ள அம்பேத்கர் பவன் தாக்கப்பட்டதைக் கண்டித்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கான பிரம்மாண்டமான பேரணி மும்பையில் நடைபெற்றது. பேரணி இறுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சத்திரபதி சிவாஜி ரயில்வே நிலையத்திலிருந்து சீத்தாராம் யெச்சூரி உட்பட இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் மற்றும் தலித் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் இதயப் பகுதியாக விளங்கும் மத்திய மும்பை பகுதியில் உள்ள தாதர் என்னுமிடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பேத்கர் பவனும், பாரத் பூஷன் … Continue reading அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி

எது பழமையான ஜனநாயக நாடு? மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரையில் சொல்லப்படும் வரலாறு சரியா?

கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, நாடாளுமன்றக் குறிப்பேட்டில் பழமையான அமெரிக்க ஜனநாயகம், மிகப் பெரிய இந்திய ஜனநாயகத்தை வாழ்த்துகிறது என பொருள் வரும்படி ‘longest democracy wishes largest democracy’ என எழுதினார்.  இதற்கு, ஒபாமாவுடான சந்திப்பின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ‘இந்தியாவின் ஜனநாயம், அமெரிக்க ஜனநாயகத்தைவிட மூத்தது’ என விளக்கினார். இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா ஜனநாயகத்தின் தாய் … Continue reading எது பழமையான ஜனநாயக நாடு? மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரையில் சொல்லப்படும் வரலாறு சரியா?

இரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சி எப்படி இருக்கிறது? சீதாராம் யெச்சூரி நேர்காணல்

சேம நல அரசு என்பதை மெல்ல மெல்ல அழித்து அந்நிய மூலதனத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றதாக அரசாங்கத்தினை மாற்றக் கூடிய ஏற்பாட்டினை செய்து வருகிறது மோடி அரசு. உலக நிதி மூலதனத்தை வேண்டுமென்றே தாஜா செய்யும் மத்திய அரசாங்கத்தின் இந்த நோக்கத்தின் பின்னணியில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமில்லை. மாறாக பாரதீய ஜனதா கட்சியின் மிக ஆபத்தான பிரித்தாளும் நிகழ்ச்சி நிரலுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் நோக்கமே உள்ளது என்கிறார் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் … Continue reading இரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சி எப்படி இருக்கிறது? சீதாராம் யெச்சூரி நேர்காணல்

வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!

மதுரைவாயல் தொகுதி எம் எல் ஏவாக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க. பீம்ராவ். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மதுரவாயல் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றியதோடு, முடங்கிக் கிடந்த பல்வேறு மக்கள் நல பணிகள் குறிப்பாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றுதல்,கழிவு நீர் அகற்றுதல் மற்றும் போரூர் ஏரியை பாதுகாத்தது உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றியவர் க. பீம்ராவ். பட்டா இல்லாதோருக்கு பட்டா வாங்கி அளித்ததும் தொகுதி மக்களிடையே இவருக்கு … Continue reading வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!

சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?

  ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: அன்பார்ந்த சந்திரசேகர் ராவ்காரு, தங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள இன்று (புதன்) முழுவதும் முயற்சி செய்தேன். பல செய்திகள் அனுப்பப்பட்டும், உங்கள் ஊழியர்கள் அவற்றைப் பெற்ற போதிலும் பதிலேதும் இல்லை. உங்களைத் தொடர்புகொள்ள … Continue reading சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?

#JNU_FlashBack: இந்திரா காந்தியை வேந்தர் பதவியிலிருந்து விலகச் சொல்லி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் போராட்டம்; என்ன செய்தார் இந்திரா?

1977-ஆம் ஆண்டில் எமர்ஜென்ஸிக்குப் பிறகு, நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தோற்றார். அந்தக் காலக்கட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர், சீதாராம் யெச்சூரி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்). எமர்ஜென்ஸிக்கு எதிராக போராடிய காரணத்தால் சில காலம் தலைமறைவாக இருந்து, கைதாகி சிறையில் இருந்தவர். எமர்ஜென்ஸி விலக்கிக் கொள்ளப்பட்டப் பிறகு, இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் அவர் ஜேஎன்யூவின் வேந்தர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பதைக் கண்டித்து … Continue reading #JNU_FlashBack: இந்திரா காந்தியை வேந்தர் பதவியிலிருந்து விலகச் சொல்லி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் போராட்டம்; என்ன செய்தார் இந்திரா?

கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரிக்கு மதவெறியர்கள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்து மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவருடைய உரை, மதவெறியர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதாக அமைந்தது. அதற்குப் பதிலளித்து ஸ்மிருதி இரானி பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய் என்பது அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில், சீத்தாராம் யெச்சூரியின் ஆற்றல் மிக்க உரையால் ஆத்திரமடைந்துள்ள இந்துத்துவா மதவெறியர்கள் … Continue reading கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!

ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம். தமிழாக்கம்: ச. வீரமணி “நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை … Continue reading ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

எமர்ஜென்ஸி முன்னோட்டம்: சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசவிரோத வழக்கு!

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் தேசவிரோத கோஷங்களை ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார், உமர் காலித் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் மூவர் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கின்றனர். இவர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்பியதாக சொல்லப்பட்டது பொய்யான குற்றச்சாட்டு என பேசப்படும் நிலையில், இந்தியாவின் முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர்களான  சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக … Continue reading எமர்ஜென்ஸி முன்னோட்டம்: சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசவிரோத வழக்கு!

“இயற்கை உபாதை” என்று கூறுவது தவறா?: ஆபாச தாக்குதல் புகாரை கையிலெடுத்த ஸ்மிருதி இரானி !!!

ஜே.என்.யூ விவகாரம் குறித்து லோக்சபாவில்   ஆவேசமாக பேசி, பத்திரிக்கைகளில், இணையங்களில் பாராட்டு பெற்ற ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில்  அந்தளவு ஆவேசத்தை காண்பிக்க முடியாமல் நேற்று (25.02.16)அவஸ்தைக்கு ஆளாகினர். இரானியின் குற்றச்சாட்டுக்களுக்கு, உடனுக்குடன் கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ்  உறுப்பினர்கள்  பதில் அளித்ததால், அமைச்சர் தடுமாறினார். அத்துடன் மட்டுமல்லாமல், அவையில் நாகரீகங்கள் தெரியாமல், அநாகரீகமாக இரானி நடந்துகொல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில், "மகிசாசுரனை ஆதரித்து" ஜேஎன்யூ மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து லோக்சபாவில்  கூறிய அதே புகார்களை ராஜ்யசபாவில் முன் வைக்க  … Continue reading “இயற்கை உபாதை” என்று கூறுவது தவறா?: ஆபாச தாக்குதல் புகாரை கையிலெடுத்த ஸ்மிருதி இரானி !!!

கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

 ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆதரவு தெரிவித்திருந்தார்.  ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த சிலர் கட்சி பலகை மீது ‘பாகிஸ்தானின் ஏஜெண்ட்’ என எழுதிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி … Continue reading கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!