“எல்லாவற்றுக்கு ‘அம்மா’ பெயர் வைத்துக்கொள்வதுதான் அர்ப்பணிப்பா?”

“முதலமைச்சர் ஜெயலலிதா “வாட்ஸ் அப்” மூலமாக உருக்கமாகப் பேசி விட்டார்! மழை வெள்ளத் துன்பத்தில் இருந்து மக்களை மீட்பதற்காக உறுதி கூறி விட்டார்! பின்னர் என்ன? கேழ்வரகில் நெய் வடிகிறதாம், கேட்ப வர்களே, நம்புங்கள், நம்ப முயற்சி செய்யுங்கள்!” என காட்டமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாட்ஸ் அப்பில் ஆற்றிய உரை குறித்து விமர்சித்திருக்கிறார் திமுக தலைவர் மு.கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “வாட்ஸ்-அப்” மூலமாக “அசரீரியாகப்” பேசுகிறார். ரோம் நகரம் தீப்பற்றி … Continue reading “எல்லாவற்றுக்கு ‘அம்மா’ பெயர் வைத்துக்கொள்வதுதான் அர்ப்பணிப்பா?”

அவசியம் படியுங்கள்: “இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழல் பணம் வசூலிக்கப்படுவது யாருக்காக?”

“சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும், கடலூர் மாவட்டத்தையும் மூழ்கடித்த மழை, வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், 15 நாட்களாக அவர்களை எட்டிக்கூட பார்க்காத ஜெயலலிதா இப்போது வாட்ஸ்-அப் மூலம் அவர்களின் துயரத்தை நினைத்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவின் ஆறுதலைக் கேட்கும் போது, துக்க வீட்டில் கொலை காரன் வந்து ஆறுதல் கூறும் போது என்ன உணர்வு ஏற்படுமோ, அதே உணர்வு தான் ஏற்படுகிறது.” என தமிழக முதல்வர் வெளியிட்ட வாட்ஸ் அப் … Continue reading அவசியம் படியுங்கள்: “இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழல் பணம் வசூலிக்கப்படுவது யாருக்காக?”