திருச்சி வெடி மருந்து தொழிற்சாலை விபத்து: அலட்சியமே 18 பேரின் உயிரிழப்புக் காரணம்!

அதிகாரிகள் மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தின் விளைவாகவே திருச்சி மாவட்டத்தில் மிகப்பெரும் வெடிவிபத்து துயரம் நேர்ந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் வெடிமருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், … Continue reading திருச்சி வெடி மருந்து தொழிற்சாலை விபத்து: அலட்சியமே 18 பேரின் உயிரிழப்புக் காரணம்!

தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

திமுக - அதிமுக ஆட்சிகளில் கொள்ளையடிக்கப்பட்ட தாது மணலில் உள்ள தோரியத்தின் மதிப்பு மட்டும் ரூ.60 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த மெகா கொள்ளைக்கு துணை நின்ற திமுகவும் அதிமுகவும்,இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாது; ஆனால் அதற்கு மாறாக திமுக - அதிமுக தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதி அளித்திருப்பது மக்களை ஏமாற்றவே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கனிமவள … Continue reading தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா?

ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தால் வெற்றி உறுதி என்பது இத்தேர்தலில் நிரூபணமானது. இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு தமிழகத்தில் செயல்பட்டு வந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டு சேர்ந்து பாடுபட்டு காங்கிரஸ் அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிய தேர்தல். அதற்குப்பின் காங்கிரஸ் கடந்த 49 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்வதற்கு படாதபாடு படுகிறது. ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜ் 1963ஆம் ஆண்டில் கட்சிப்பணி முக்கியம் என்று கூறி அவரே கொண்டு … Continue reading 1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா?