ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயா ஜெயித்ததற்காக அறச்சீற்றத்தில் கொந்தளிக்கும் அதே நேரத்தில் திமுக தோற்றதற்காகவும் சிலர் வெம்பி வெடிப்பது நகைமுரண். ஜெயலலிதா எப்படி வெற்றி பெறத் தகுதி இல்லாத ஒருவரோ அதே அளவுக்கு தகுதியற்ற ஒருவர்தான் கருணாநிதியும் என்பது தான் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி. ஒப்பாரியையும், வசையையும், முத்திரை குத்தலையும் நிறுத்திவிட்டு கட்சி அபிமானிகளுக்கு இதில் யோசிக்க சில விஷயங்கள் உண்டு. இப்போதும் கண்முன் இருக்கும் உதாரணங்கள் நிறைய: கருணாநிதி ஒன்றும் எம்ஜியார் கிடையாது படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு. … Continue reading “93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”
குறிச்சொல்: சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்)
“இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”
ஜி. கார்ல் மார்க்ஸ் எனக்குத் தெரிந்து இன்றைய அரசியலில், மிகவும் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி யாரென்றால் அது ஜெயலலிதாதான். எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முக்கியமாக கார்ட்டூனிஸ்டுகள் ஆகியோருக்கு தனது தேர்தல் பரப்புரை மூலம் ஜெயலலிதா அளித்துக்கொண்டிருப்பது பெரும் தீனி. ஜனநாயகத்துக்கு கொஞ்சமும் தகுதியில்லாத, பதட்டங்கள் நிறைந்த காமெடியனாக அவர் தோற்றம் கொண்டிருக்கிறார். ஒரு செருப்போ, ஒரு கல்லோ மேடையை நோக்கி வரக்கூடும் என்ற பதட்டம் அவரைச் சுற்றியுள்ள மற்றெல்லோருக்கும் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு உருட்டல் … Continue reading “இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”
ஜெயலலிதாவின் படிப்படியான மதுவிலக்கும் கருணாநிதியின் பூரண மதுவிலக்கும்
ஜி. கார்ல் மார்க்ஸ் “மதுவிலக்கு படிப்படியாக அமலுக்கு வரும்” என்று ஜெயலலிதா தனது தொடக்க பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். தனது கடைசி அஸ்திரமாக, பூரண மதுவிலக்கைக் கூட அவர் அறிவிக்கக் கூடும் என்று நான் நினைத்திருந்தேன். அதே சமயம் மதுவிலக்கு பற்றி பேசும் தகுதி கருணாநிதிக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அது ஓரளவு உண்மையும் கூட. ஜெயலலிதாவின் அறிவிப்பு நாடகம் தான். அவரது புள்ளி விவரத்தில், விற்கும் மது புட்டிகளின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறது, அதனால் குடிப்பவர்களின் எண்ணிக்கைக் … Continue reading ஜெயலலிதாவின் படிப்படியான மதுவிலக்கும் கருணாநிதியின் பூரண மதுவிலக்கும்
வேல்முருகனும், சரத்குமாரும் தேடிய ‘சுயமரியாதை’ அதிமுகவில் கிடைத்ததா?
ஜி. கார்ல் மார்க்ஸ் 'தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின்' வேல்முருகனுக்கு அதிமுக கூட்டணியில் இடம் ஒதுக்காமல் கைவிடப்பட்டதைக் கிண்டலடித்து சமூக ஊடகங்களில் நிறைய பதிவுகள். தமிழ் ஹிந்துவில் கூட அவர் குறித்து செய்தி வந்திருக்கிறது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள். எங்களிடம் கேட்டிருந்தால் நாங்கள் கோரிய வேட்பாளர்கள் எண்ணிக்கையைக் கூட குறைத்திருப்போம். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம், அதைத் தராமல் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள் என்று கண்ணீர் விட்டிருக்கிறார் வேல்முருகன். சரத்குமார் கூட இப்படியான ஒரு மனநிலையில்தான் … Continue reading வேல்முருகனும், சரத்குமாரும் தேடிய ‘சுயமரியாதை’ அதிமுகவில் கிடைத்ததா?
திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!
ஜி. கார்ல் மார்க்ஸ் நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது 'அதிருப்தி அலை' இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் … Continue reading திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!
சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!
ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!