வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!

அன்புசெல்வம் சாதி அரசியல் ஏற்படுத்துகிற வன்முறையைக் கருத்தில் கொண்டு வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம். "இந்துக்களிலேயே உன்னதமானவர்" என்றழைக்கப்பட்ட‌ காந்தியைப் பேசுவதற்கு இது ஒரு காரணம். ஆனால் காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த‌ முரண்பாட்டை மட்டுமே கூர்தீட்டுகிற‌ பழைய காலத்து அரசியல் இன்றைக்கும் இருக்கிறது. அது செயல்படுத்த வேண்டிய‌ சிறு, சிறு நம்பிக்கைகளை பொது நினைவுகளில் இருந்தே அகற்றி விடுகிறது. குறைந்தபட்சம் தலித்துகளுக்காக‌ காந்தி ஏதாவது சொல்லியிருந்தால் மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம். அதற்காக சில குறிப்புகள். … Continue reading வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!

ஆணைப் பெற்றவர்களுக்கும் சாதி ஆணவக் கொலை செய்யத் தெரியும்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் லாரி அதிபர் பழனிவேல் மகன் சந்தோஷ் (வயது 30). வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தேசிகன். பெல் நிறுவனத்தில் துணை பொதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சுமதி (29). வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி படித்து வந்தபோது சந்தோசுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சுமதியை அவருடைய பெற்றோர் … Continue reading ஆணைப் பெற்றவர்களுக்கும் சாதி ஆணவக் கொலை செய்யத் தெரியும்…

சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் படுகொலை

நாமக்கல்லில் சாதி மறுப்பு மற்றும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.இது சாதி ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் தில்லைபுரம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் சந்தோஷ். இவரது மனைவி சுமதி. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகாதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது குடும்பத்தில் இத்தம்பதியினரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனிடையே தனியார் … Continue reading சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் படுகொலை

கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றக் கோரி வழக்கு:அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நடைபெறும் கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கு புதிய சட்டத்தை இயற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வாராகி தாக்கல் செய்த மனுவில் , “தமிழகத்தில் மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்தக் கட்சிகள் கௌரவக் கொலைகளை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுயநலப் போக்குடன்தான் திராவிட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. … Continue reading கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றக் கோரி வழக்கு:அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது!

விடுதலை ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு 2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் பெயர் ''அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்'' என்பதாகும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 500 தம்பதியினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.ஆனால் இதுவரை இந்த நிதி உதவியை பயன்படுத்திக் கொண்டவர்கள் வெறும் 19 பேர் மட்டும்தான். தமிழகத்தின் … Continue reading ஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது!

இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் காதலுக்கு சாதி எதிர்ப்பு: திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகம்!

திருப்பூரைச் சேர்ந்த சக்தி காமாட்சி - ஆனந்த் தங்கள் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சாமிநாதன் அவர்களிடம் பாதுகாப்பு கோரிவந்தனர். ஆனந்த் ''இந்துமுண்ணனி''யின் தீவிர உறுப்பினர். இவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பாதுகாப்பளித்து சட்டப்படி 25.03.2016 அன்று திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து திவிக வெளியிட்ட குறிப்பில், “இணையரின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு பெண் வீட்டார் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இணையருக்கு … Continue reading இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் காதலுக்கு சாதி எதிர்ப்பு: திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகம்!

”எனது மாமாவையும், அம்மாவையும் கைது செய்துட்டீங்களா?” சாதியை மறுத்த கௌசல்யாவின் கேள்வி

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண் டதற்காக தலித் இளைஞர் சங்கர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கௌசல்யா தம்பதியை 6 பேர் கொண்ட கும்பல், ஞாயிற்றுக்கிழமையன்று உடுமலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டி யது. இதில் சங்கர் உயிரிழந்தார். கௌசல்யா தலையில் பலத்த காயங்களுடன் கோவை அரசுமருத்துமவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் உடுமலையில் விசாரணை மேற்கொண்டனர். உடுமலை காவல் நிலையத்துக்கு வந்த ஆணை யத்தின் ஆராய்ச்சி அலுவலரான … Continue reading ”எனது மாமாவையும், அம்மாவையும் கைது செய்துட்டீங்களா?” சாதியை மறுத்த கௌசல்யாவின் கேள்வி