மீண்டும் ஒரு ஆணவக் கொலை; சாம்பலாக்கப்பட்ட சுகன்யா

எவிடென்ஸ் கதிர் மதுரை - பேரையூர் அருகில் உள்ள வீராளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகன்யா. அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் ஈரோடு அருகில் சித்தோடு பகுதியை சேர்ந்த பூபதி என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். இந்த காதலுக்கு சுகன்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததனால் கடந்த ஜனவரி 2017 மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு உள்ளனர். பூபதி நாடார் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் பூபதியிடம் சுகன்யா குடும்பத்தினர், இங்கு கோவில் திருவிழா … Continue reading மீண்டும் ஒரு ஆணவக் கொலை; சாம்பலாக்கப்பட்ட சுகன்யா

8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

  பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் … Continue reading 8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றக் கோரி வழக்கு:அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நடைபெறும் கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கு புதிய சட்டத்தை இயற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வாராகி தாக்கல் செய்த மனுவில் , “தமிழகத்தில் மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்தக் கட்சிகள் கௌரவக் கொலைகளை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுயநலப் போக்குடன்தான் திராவிட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. … Continue reading கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றக் கோரி வழக்கு:அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவியதாக கர்ப்பிணிப் பெண் சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை!

தலித் இளைஞன் விஸ்வநாதன் - தேவர் இனம் சார்ந்த காவேரி இருவரும் கல்லூரி காலத்திலேயே காதலித்து வந்துள்ளனர். எதிர்ப்புகளை மீறி இந்த காதலர்கள் மணம் முடிக்க உதவியவர் கல்பனா . இவர் , விஸ்வநாதனின் சகோதரி. சமீபத்தில் நடைபெற்ற இந்த கலப்புமணத்தை நடத்திவைத்தவர் கல்பனா என்பதையறிந்த காவேரி குடும்பத்தினர்  கல்பனாவின் வீட்டுக்கு வந்து, தங்கள் பெண்ணை வீட்டுக்கு அனுப்பச்சொல்லி பிரச்சினை செய்துள்ளனர். அவர்கள் அங்கில்லை என்பதை கல்பனா கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த காவேரி குடும்பத்தினர், கல்பனாவை வெட்டி கொன்றுள்ளனர். கல்பனா … Continue reading சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவியதாக கர்ப்பிணிப் பெண் சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை!

நெல்லையில் சாதி ஆணவகொலை

 திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த விசுவநாதன் (இரயில்வே ஊழியர்) என்ற தலித் இளைஞனும் தச்சநல்லூரை சேர்ந்த சங்கர் (தேவர்) என்பவரின் மகள் காவேரியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 3 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டு பெற்றோரின் மிரட்டலுக்குப் பயந்து இருவரும் தலைமறைவாக உள்ளனர். காவேரியின் தந்தை தொடர்ந்து விசுவநாதனின் குடும்பத்தை மிரட்டி வந்துள்ளார். விசுவநாதனின் குடும்பத்தார் காவல்துறை துணை ஆணையரிடம் புகார் கொடுதுதுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடு்க்கவில்லை. புகார் கொடுத்ததால் மேலும் ஆத்திரம் … Continue reading நெல்லையில் சாதி ஆணவகொலை

சங்கரின் சமாதியில் ஒரு மணி நேரம் அழுத கௌசல்யா…

சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, தற்கொலைக்கு முயன்று கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தற்கொலைக்கு  தன் கணவரின் பிரிவுத் துயரலிருந்து மீளாததே காரணம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கரின் மறைவுக்குப் பிறகு, தனது படிப்பைத் தொடரப் போவதாகவும் சங்கரின் குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்றும் சொல்லி வந்த கௌசல்யாவுக்கு பல்வேறு அமைப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாகக் காணப்பட்ட கௌசல்யா, முந்தினம் சங்கரின் … Continue reading சங்கரின் சமாதியில் ஒரு மணி நேரம் அழுத கௌசல்யா…

”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்

என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிறமலை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் … Continue reading ”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்

தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் மரணம்: சாதிவெறியர்கள் பின்னணிக்கு வலுவான காரணங்கள்..

ஓலக்குடி காலனி தெருவில் வசித்துவரும் நாகப்பன் மகன் குரு மூர்த்தி என்பவரும், அதேஊரைச் சேர்ந்த மெயின் ரோட்டில் வசிக்கும் சுப்பிர மணியன் மகள் சரண்யாவும் காதலித்து வந்துள்ளனர்.  குரு கட்டட வேலை பார்த்து வந்தார். DYFIல் அங்கம் வகித்தவர். தங்கள் காதலுக்கு சாதியைக் காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியதால் குருவும் சரண்டாவும் தங்கள் வீட்டை விட்டு 16.4.16 வெளியேறியுள்ளனர். குருவின் குடும்பத்தினர் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்று கருதியிருக்கின்றனர். சரண்யாவின் தந்தை சுப்பரமணியம்  தங்கள் பெண்ணைக் காணவில்லை என … Continue reading தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் மரணம்: சாதிவெறியர்கள் பின்னணிக்கு வலுவான காரணங்கள்..

காதலை கொல்லும் சாதி: சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணங்களாக மீட்பு

மனிதர்களை மனிதர் காதலிப்பதற்கு எத்தனை எதிர்ப்புகள்...அதுவும் சாதியைக் காட்டி காதலர்களை கொலை செய்யும் கலாச்சாரம் இந்தியாவில் மட்டுமே நடக்கும். தமிழகத்தில் காதல் சாதிய கொலைகள் நடந்தபடியே இருக்கின்றன. ஒன்று காதலர்கள் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள், இல்லையேல், விரக்திக்குத் தள்ளப்பட்டு தங்களையே கொலை செய்துகொள்கிறார்கள். தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு இணையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தீக்கதிர் வெளியிட்டுள்ள செய்தி கீழே... நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதர்காடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் … Continue reading காதலை கொல்லும் சாதி: சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணங்களாக மீட்பு

அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு அவலங்களை பட்டியலிடுகிறார் அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் ஜெயா அதீதத் தன்னம்பிக்கையுடன் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். எதிர்க் கூட்டணிகளின் முக்கிய ஆயுதமான 'பூரண மதுவிலக்கு' என்பதையும் 'படிப்படியான மதுவிலக்கு' என்பதன் மூலம் கலகலக்க வைத்துவிட்டார் (உண்மையில் அதுதான் நடைமுறைச் சாத்தியம். இதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்). அது இருக்கட்டும். மக்களின் மறதி ஆள்பவர்களுக்கும், ஆண்டவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். பழைய வரலாறுகள் இருக்கட்டும். இந்த ஐந்தாண்டு ஆட்சியில் நடந்துள்ள சிலவற்றை நாம் நினைவுபடுத்துவது அவசியம். பதவி ஏறியவுடன் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாது எனச் சொல்லி, … Continue reading அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு அவலங்களை பட்டியலிடுகிறார் அ. மார்க்ஸ்

”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!

2013-ஆம் ஆண்டு ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்டி, அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த 10 எண்ணிக்கைக்குள் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி ”தே...பசங்களா! க...பசங்களா!” எனக் கூறி நீண்ட கட்டையை எடுத்து அடிக்கப் பாய்கிறார் இரா. அருள். இவர் பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர். தற்போது பாமக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத பொழுதே, காவல்துறையினரை மிரட்டி கட்டுப்படுத்தி தங்கள் கட்சித் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை … Continue reading ”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!

“சாதியொழிப்பு வேலைகளைச் செய்வேன்”: கௌசல்யா 

ரமேசு பெரியார் கௌசல்யா அது வெறும் பெயர்ச்சொல் அல்ல.,! ஆதிக்க சாதிவெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கபோகும் வினைச்சொல்..!! அவளுடைய கண்ணில் சாதிவெறியர்களை களையெடுக்க வேண்டும் என்ற கோவமும், சாதிமறுப்பு திருமணம் செய்யும் காதலர்களை பாதுகாக்க வேண்டுமென்ற ஆதங்கமும் தெரிகிறது...சாதிவெறி பிடிச்ச என்னுடைய பெற்றோர்களையும் கடுமையாக தண்டிக்கனும், தூக்குத்தண்டனை வாங்கிதரணும்ண்ணா..!!! நான் இப்படியே இருந்திரமாட்டேன் விரைவிலே இதிலிருந்து மீண்டுவருவேன் என்னால் இயன்றவரை சாதியொழிப்பு வேலைகளை செய்வேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள்...,கழிப்பிட வசதிகூட இல்லாத ஏழையான சங்கரை காதலிச்சு அவன் … Continue reading “சாதியொழிப்பு வேலைகளைச் செய்வேன்”: கௌசல்யா 

சமூக ஊடகங்களின் தாக்கம்: வீட்டுக் காவலில் இருந்து மீட்கப்பட்டார் பிரியங்கா

தலித்தை காதலித்த காரணத்தால் தன்னை ஆணவக் கொலை செய்ய தன்னுடைய அப்பா திட்டமிடுவதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ப்ரியங்கா என்ற பெண் அனுப்பிய குறுஞ்செய்தி திங்கள் கிழமை சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது. ப்ரியங்கா காதலித்த வினோத் இந்த குறுஞ்செய்தியை வைத்து காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.  இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது. இந்நிலையில்  இந்த விஷயத்தை கையில் எடுத்த திவிக உள்ளிட்ட இயக்கங்களின் முயற்சியால் பிரியங்கா மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து  தமிழ் இராசேந்திரன் தனது முகநூல் பதிவில், “சகோதரி பிரியங்காவை … Continue reading சமூக ஊடகங்களின் தாக்கம்: வீட்டுக் காவலில் இருந்து மீட்கப்பட்டார் பிரியங்கா