அம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்

அம்பேத்கரியமும் மார்க்சியமும் இந்திய சூழலில் தராசின் எதிர் முனைகள் அல்ல மாறாக சமத்துவம் என்னும் தேரின் இருபெரும் சக்கரங்கள். ஒன்று இன்னொன்றை புறம்தள்ளுவது என்பது அந்த தேரை சாய்த்து விடும்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?

பிரபாகரன் அழகர்சாமி உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கலின் போது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, இந்த மசோதாவை முதலில் தேர்வு குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி செய்த முயற்சிக்கு சி.பி.எம் ஆதரவளித்தது, அதுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் டி.கே.ரங்கராஜன் கனிமொழிக்கு ஆதரவாகதான் வாக்களித்திருக்கிறார். அவர் நேற்று அவையில் பேசிய உரையிலும் இந்த மசோதவின் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்துதான் பேசியிருக்கிறார். மசோதாவில் இரண்டு திருத்தங்களை சி.பி.எம் முன்மொழிந்தது, அதுவும் பாஜகவால் நிராகரிக்கப்பட்டது. இத்தனைக்கு … Continue reading பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?

“நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள்”: திமுகவினருக்கு கௌசல்யா பதில்!

தன்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைவதாக  சாதி ஆவணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவியும் செயல்பாட்டாளருமான கௌசல்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் விரிவாக எழுதியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக சொந்தங்களுக்கு... திராவிட முன்னேற்ற கழகம் குறித்து பதிவிட்டிருந்ததற்காக சில தோழர்கள் அவரவர் கருத்துகளை பதிவிட்டிருந்தீர்கள். தி. மு.க தலைவரும், தொண்டர்களும், தோழர்களும் சமூகநீதி உணர்வு உள்ளவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை. சங்கரின் இறப்புக்கு மனம் வருந்திய திமுகவினரின் உணர்வை இன்றும் மதிக்கிறேன். தனிப்பட்ட … Continue reading “நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள்”: திமுகவினருக்கு கௌசல்யா பதில்!

பெண் விடுதலையே சாதி ஒழிப்பு!: சமூக செயல்பாட்டாளர் கௌசல்யா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலை இலக்கிய அமைப்பான ‘விடுதலை கலை இலக்கியப் பேரவை’ விசிக தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாளை ‘திருமா 55’ என்ற பெயரில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சி சிதம்பரம் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உடுமலையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவியும் சமூக செயல்பட்டாளருமான கௌசல்யா கலந்துகொண்டு பேசினார். தன்னுடைய உரையை அவர், தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்...அது இங்கே... “நீங்கள் எனக்குத் தந்திருக்கும் இந்தத் தலைப்பு என் வயதிற்கும், அனுபவத்திற்கும் பொருத்தமில்லாதது; … Continue reading பெண் விடுதலையே சாதி ஒழிப்பு!: சமூக செயல்பாட்டாளர் கௌசல்யா