ரயில்வே கேட்டரிங் பணிக்கு அகர்வால் சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்!

அ. குமரேசன்

  • ரயில்வே ஃபுட் பிளாசா மேனேஜர்
  • ட்ரெய்ன் கேட்டரிங் மேனேஜர்
  • பேஸ் கிச்சன் மேனேஜர்
  • ஸ்டோர் மேனேஜர்

-ஆகிய பணிகளுக்கு, பிளஸ் டூ படித்த, நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போய் வேலை செய்யத் தயாராக இருக்கிறவர்களிடமிருந்து விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக ஒரு விளம்பரம் ஆறு நாட்களுக்கு முன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வந்திருக்கிறது.

முக்கியமான தகுதி, விண்ணப்பதாரர்கள் அகர்வால் வைஷ் சாதியைச் சேர்ந்தவர்களாக இருகக வேண்டும்.

தனியார்மயமாக்கப்பட்டு வரும் ரயில்வேயில் உணவு விநியோக காண்டிராக்ட் எடுத்துள்ள பிரந்தாவன் ஃபுட் பிராடக்ட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் இது. நமக்கிருந்த பரபரப்புகளில் இதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம்.

ஐஆர்சிடிசி நிர்வாகம் தலையிட்டு, இப்படியெல்லாம் சாதி அடிப்படையில் ஆளெடுக்கக்கூடாது என்றும், எந்தச் சாதி, பிரிவு, மதம், வட்டாரமானாலும் பொருத்தமானவர்களை நியமிக்குமாறும் கூறியிருககிறதாம். இந்த விளம்பரத்தைப் பத்திரிகைக்குக் கொடுத்ததற்காக நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக காண்டிராக்டர் தெரிவித்திருக்கிறார். (செய்தி: இந்தியா டுடே)

மேற்படி விளம்பரத்திற்கு உடனடியாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதுவே இந்த நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது எனலாம். ஒருவேளை சமூக ஊடக விழிப்புணர்வாளர்கள் இதைக் கவனிக்காமல் அல்லது பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால்?

எந்தச் சாதி, பிரிவு, மதம், வட்டாரமானாலும் பொருத்தமானவர்களை நியமிக்குமாறு ஐஆர்சிடிசி கூறிய அளவில் சரிதான். ஆனால், பிரைவேட் என்று போய்விட்டதால், அனைத்துச் சமூகத்தினருக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் இட ஒதுககீடு, ரயிலின் சமையலறைப் பெட்டியிலிருந்த தானிய மூட்டை திருடப்பட்டது போல, துடைத்தழிக்கப்பட்டுவிட்டதே?

முடிந்துபோன ஒரு நிகழ்வின் செய்தியை எதற்காக நினைவூட்ட வேண்டும்? முடிந்து போய்விட்டதா என்ற கேள்வி முடியாமல் தொடர்வதால்தான். தனியார்மய எதிர்ப்பு நாட்டின் பொதுச்சொத்தை யாரோ கொள்ளைகொண்டு போவதைத் தடுப்பதற்கு மட்டுமேயல்ல, சமூகநீதிப் பொது அறம் கடத்தப்படாமல் காப்பதற்கே என நினைவூட்டத்தான்.

அ. குமரேசன் மூத்த பத்திரிகையாளர்.

சீமானின் சாதிய முகம்!

கண்ணன் ராமசாமி

கண்ணன் ராமசாமி

சீமான் vs ரஞ்சித் விடியோக்களை ஒன்று விடாமல் நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒன்று தெளிவாக தெரிகிறது. சீமான் எல்லோருக்கும் அண்ணன் என்கிற மனோபாவத்தில் அனைவரையும் ஒருமையில் பேசிவருதற்கும் அவருடைய கருத்தியலுக்கும் தெளிவான தொடர்புள்ளது.

சில நாட்கள் முன்பு நான் இட்ட பதிவொன்றில் வர்ணம் மற்றும் மனுநீதி இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வரை (இந்துலா) பரவி இருப்பதையும், சமூகத்தில் நமக்கு காணக் கிடைக்கின்ற எடுத்துக்காட்டுகள் மூலமாக எவ்வாறு மனுநீதியின் பல அம்சங்கள் இன்னும் வழமையில் உண்டென ஆதாரத்துடன் வாதிட்டேன். அதில் குறிப்பிட்டுள்ள ஒன்றைக் கூட ஆதாரத்துடன் மறுக்க முடியாமல் இது என் கருத்து; கிடையேவே கிடையாது என்று வாதிட்டுக் கொண்டிருந்த ஒருவர் தன் சாதி அடையாளைத்தை விடமாட்டேன் என்றும், அதே நேரம் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்காக கையிலெடுக்கும் தலித்திய அரசியல் சாதியை தூக்கிப் பிடிக்கும் அரசியல் என்றும் வாதிட்டுக் கொண்டிருந்தார் (நகை முரண்). அவரிடம் வர்க்க வேறுபாட்டை ஒழிக்க மேம்போக்கான ஒரு திட்டம் உள்ளது. அது தான் பொருளாதார ஏற்றமடைந்தால் சாதி ஒழிந்துவிடும் என்பது. ஆச்சரியமே இல்லாமல் சீமானும் அதையே சொல்கிறார்.

(தலைவர்கள் பொதுமக்கள் என்றில்லாமல் ஒத்த சிந்தனை உள்ள மேட்டுக்குடி போக்கை முன்வைக்கவே என் நட்பு வட்டத்தில் உள்ள அவரை எடுத்துக்காட்டுகிறேன். இதை அவருக்கு எதிரான தனிப்பட்ட ரீதியிலான தாக்குதலாக அவர் எண்ண வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.) சீமான் பல்லக்கு முறை கார் வந்ததால் மாறிவிட்டதாக சொல்கிறார். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு? அப்படியானால் சவுக்கார்பேட்டை சேட்டு வீட்டில் கொண்டித்தோப்பு மிதிவண்டி ரிக்ஷாக்காரர் சம்மந்தியாக உட்கார்ந்து பீடா சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பாரே! பல்லக்கு முறை ஒழியவில்லை. பொருளாதார மாற்றத்தால் வேறு வடிவம் பெற்றிருக்கிறது. இது போல பல சாதிய வழக்கங்களை பற்றி சொல்ல முடியும்.

தலித் என்கிற வார்த்தைக்குக் கூட சாதிய அண்ணன்களுக்கு பொருள் தெரியுமா எனத் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் தாம்பராம் பக்கத்தில் தலித்துகளின் தவறை சுட்டிக்காட்டி திருத்தப்பார்க்கிறோம் முடியவில்லை என்று வேறு ஆசிரியர் தோரணை காட்டிக் கொள்கிறார்கள் பிராமண நண்பர்கள். சீமானும் ரஞ்சித் சின்ன பையன் விரக்தியில் பேசுகிறான். அவன் தான் சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார். இரண்டுக்கும் வித்யாசமில்லை. தலித் என்பது ஓர் சாதிச் சொல் அல்ல. பறையன், சக்கிலியன், என்று மேட்டுக் குடியினர் தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாக விளிப்பதற்கு எதிராக கிளம்பிய கருத்தியல் கோட்பாட்டின் அடையாளமே தலித் என்கிற சொல். இப்போது யாரும் அப்படி விளிப்பதில்லை எனலாம்.

போன மாதம் கூட நான் ஆதி திராவிடரை சேர்ந்த ஒருவரை இடைநிலை சாதியை சேர்ந்த ஒருவர் குப்பக்காரவங்க என்று அழைத்ததை கண்ணால் பார்த்தேன். தலித்தியம் தற்போது தனக்கான இலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. முழுமையான அரசியல் இயக்கமாக உருமாறி இருக்கிறது. இது தான் அண்ணன்களுக்கு பிரச்சனை. பிராமணர்கள் சங்கம் வைத்து முன்னேறுவதற்கு எதிர் திசையிலும், தமிழ் தேசியத்தை இரண்டாம் பட்சமாகவும் கருதும் தலித்தியத்தை கண்டு இவர்கள் அஞ்சுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

கண்ணன் ராமசாமி எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நாவல் ‘ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு’.

பாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்?

அண்மையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலித் மாணவர்கள் மீது சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமையை கடைப்பிடிப்பதாக இரண்டு ஆசிரியர்கள் மீது பள்ளி மாணவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய கல்வி துறை அதிகாரிகளிடம் ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவர்கள் பேசினர்.

வன்னியர் சாதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஆசிரியர் தலித் மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்குவதாகவும் டியூசனும்கூட எம்பிசி மாணவர்களுக்கு எஸ்சி மாணவர்களுக்கு என தனித்தனியாக நடத்துவதாகவும் கூறினர். பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்வது, ஆசிரியர் உண்ட தட்டை கழுவது, ஆசிரியர்களின் பைகளை சுமப்பது போன்ற ஒடுக்குமுறைகளையும் அந்த ஆசிரியர் ஏவியதாக அவர்கள் கூறினர். ஆசிரியர் ஆறுமுகம் மாணவர்களை சாதிப் பேர் சொல்லியே தலித் மாணவர்களை அழைத்திருக்கிறார். இதில் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. பறையன் என சொல்ல (கீழ்மைப் படுத்த, இழிபடுத்தும்படி சொல்ல) இந்த உலகம் பயப்பட வேண்டும் என அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வா. விஜய் வன்னியன் என்பவர், (இவர் தன்னை பாமகவின் வீரத் தொண்டர் என குறிப்பிட்டுக் கொள்கிறார்)  அந்த மாணவி குறித்து,

‘பறையன பார்த்தா உலகமே பயப்படும்னு சொன்ன வருங்கால ஐயிட்டத்த தூக்கி வச்சிக்கிட்டு ஒரு பதிவுல கத்திட்டு இருந்தானுங்க அரை புத்தி பசங்க….!!

“உள்ளே இறங்கி ஒரு காட்டு காட்டின உடனே ப்ளாக்க போட்டு ஓடுறானுங்க ஒசி வாங்கற பிசிஆர் பசங்க….!!

“உங்கள பார்த்தாடா உலகமே பயப்படனும்…?
பிசிஆர் இல்லாம பேசி பாருங்கடா…
அரை புத்தி பசங்களா” என தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். 

பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர் அறிக்கைகள், போராட்டங்கள் மூலம் வலியுறுத்தி வரும் நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒருவரே 9-ஆம் வகுப்பு மாணவியை ‘எதிர்கால ஐயிட்டம்’ என சொல்லியிருப்பது சமூக ஊடகங்களில் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 

8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

 

பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில்,

பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி.

பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் என்று வேலை தலத்தில் எதிர்நோக்கும் வன்முறை; போராட்டங்களின் போது அரசு/காவல்துறை கட்டவிழ்த்து விடும் வன்முறை; தலித்/பழங்குடியின பெண் என்பதால் வரும் சாதிய வன்முறை, மதவெறித் தாக்குதலில் நடக்கும் வன்முறை. இவை அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் கட்சி அணியினர் முன்வரிசை படையாக நிற்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, கட்சி உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளில் ஒன்றாகப் பாலின சமத்துவத்தை வலியுறுத்துகிறோம். எங்கள் கட்சியின் திட்டத்திலேயே, பாலின சமத்துவ போராட்டம், ஜனநாயகத்துக்கான ஒரு பகுதி என்பதையும், குடும்ப ஜனநாயகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இடம்பெற வைத்திருக்கிறோம். குடும்ப வன்முறையை ஒழுங்கு நடவடிக்கைக்கு உரிய குற்றமாகக் கருதுகிறோம்.

தமிழகத்தில் அன்றாடம் நடந்து வரும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்வுகளில் கட்சியும், பெண்கள், வாலிபர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் அயராமல் தலையிட்டு வருகின்றன.

காதலுக்கு எதிரி அல்ல என்று ஒரு புறம் நீங்கள் சொன்னாலும், மறுபுறம் காதல் திருமணங்கள் மீதான வெறுப்பு, குறிப்பாக வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் திருமணம் குறித்து தீர்மானிப்பதில் உங்களுக்கு ஒவ்வாமை இருப்பது வெளிப்படுகிறது.

காதல் வழி சாதி மறுப்பு திருமணம் சாதிகளை ஒழிக்காது என்று கூறியிருக்கிறீர்கள். அது மட்டுமே உதவாது என்பது உண்மை தான். தலித் மக்களுக்குப் பொது சொத்தின்/நிலத்தின் மீதான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பன போன்ற பொருளாதார நடவடிக்கைகளும் இணைந்து எடுக்கப்பட வேண்டும் அதே சமயம், அகமணமுறை என்பது சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கும் கோட்டை என்னும் போது, அதில் மாற்றம் வந்தால், கட்டமைப்பு பலவீனப்படும் என்பது சரியானது தானே? ஒரு வாதத்துக்கு  – இல்லை என்றே வைத்துக் கொள்வோம்அதற்காகக் காதல் திருமணங்களே வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா? வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் திருமணம் செய்கிறார்கள் என்றும் கூற முடியாது. விரும்புகிறவர்கள் வாழ்க்கையில் இணைகிறார்கள். இது அரசியல் சட்டம் அளித்திருக்கும் ஜீவாதார உரிமை.

பெற்றோர் விருப்பத்துடன் திருமணங்கள் நடப்பது நல்லது தான். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்கள், பெற்றோரையும் உடன்பட வைக்கும் போராட்டத்தை நடத்துவது தேவையானது. அதே சமயம், காரண காரியமின்றி, சாதியை மனதில் வைத்து அல்லது தன் மகன்/மகள் சுயமாக முடிவெடுப்பதை விரும்பாமல் பெற்றோர் மறுக்கும் போது, வேறு வழியில்லாமல் நண்பர்கள் உதவியுடன் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள் என்பதே யதார்த்தம். இது குறித்து பொது வெளியில் விவாதிப்பது கூட பயன் தரும்.

ஏமாற்றுவதும், மோசடி செய்வதும் காதல் திருமணங்களில் மட்டும் நாம் பார்ப்பது இல்லை; வெவ்வேறு சாதி இணையும் திருமணங்களில் மட்டும் நடப்பதில்லை. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில், ஒரே சாதிக்குள்ளான திருமணங்களில் கூட எத்தனை எத்தனை ஏமாற்று, மோசக்கார வேலைகள், வரதட்சணை கொடுமைகள்! நெருக்கமான உறவினர் குடும்பத்திலிருந்து மாப்பிள்ளை வந்தாலும், பெண் வன்முறைக்குத் தப்புவதில்லை. ஏராளமான வழக்குகள் எங்களுக்கும் வருகின்றன. பெண்ணின் தாழ்ந்த சமூக அந்தஸ்து, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பு போன்றவை தான் இந்த ஏமாற்று வேலைகளுக்கும், கொடுமைகளுக்கும் களம் அமைத்துக் கொடுக்கின்றன. நோயின் வாய் நாடி சிகிச்சைக்கு முயற்சிக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

காதலை கார்பைடு வைத்து கனிய வைப்பதில் எங்களுக்கும் உடன்பாடு கிடையாது. அதே போல் திருமணத்தில் இரு மனங்கள் கனிய வேண்டும், நமது குழந்தைகள் என்பதாலேயே கார்பைடு வைத்துத் திருமணத்தைக் கனிய வைக்கக் கூடாது. கட்டாய காதல் அல்லது கட்டாய திருமணத்தை எதிர்த்து தொடர்ந்து போதிக்க வேண்டும். காதலிக்க மறுத்தாலும் பெண்ணுக்கு வன்முறை, காதலித்து திருமணம் செய்தாலும் சாதி ஆணவ கொலை இரண்டும் வேண்டாம் என்று உரத்து குரல் கொடுப்போம்.

அதே சமயம், காதலுக்கு சம்பந்தமே இல்லாமல் நடக்கிற வன்முறை பற்றிக் கவலைப்பட வேண்டாமா?. கடமலைக்குண்டு பகுதியில் பழங்குடியின பெண்கள் மீது வனத்துறையினர் நடத்திய வன்கொடுமை என்ன?, சேலம் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு அண்டாவில் திணித்து வைக்கப்பட்ட பிரச்னை என்ன?, தஞ்சை சாலியமங்கலம் இளம் பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட கொடுமை என்ன?, நெகமம் அருகில் 8 மாத பச்சை குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு மண்டை ஓடு சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அராஜகம் என்ன?, இதில் காதல் எங்கிருந்து வருகிறது?.

சாதிய கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக ஆணாதிக்கம் இருக்கிறது. ஒன்றைப் பாதுகாத்துக் கொண்டே மற்றொன்றை முழுமையாக ஒழித்து விட முடியாது. பாலின பாகுபாட்டைத் தன் லாப வேட்கைக்காக முதலாளித்துவம் பயன்படுத்துகிறது. இவற்றையும் கணக்கில் எடுத்து, பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்குப் பின்புலமாக இருக்கும் கொள்கைகளையும், அவற்றின் விளைவுகளையும் ஒரு துளி கூட சமரசம் இல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து தொடர்ந்து போராடும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப் பட்டது. இந்தக் கடிதத்தில் ராமதாஸ் எழுதியுள்ளவை:
 
வணக்கம்!
தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை  கேட்டுக் கொள்வதற்காகவும் தான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் காரைக்கால் வினோதினியிடம் அந்தக் கொடுமை தொடங்கியது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து பொறியியல் பட்டம் பெற்று தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருந்தார் வினோதினி. இரவுக் காவலாளியான தந்தையின் குடும்ப சுமைகளை இறக்கி வைத்து, அவற்றை தாம் சுமக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரத்தில் தான் கொடிய மிருகம் ஒன்று, அந்த அப்பாவிப் பெண்ணுக்கு காதல் வலை வீசியது. ஆனால், தன் பொறுப்பை உணர்ந்திருந்த வினோதினி, அந்தக் காதலை ஏற்க மறுத்துவிட்டார். விளைவு அப்பெண்ணின் முகத்தை அமிலம் வீசி சிதைத்தது  அந்த மிருகம். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இடையில் ஏற்பட்ட ஊடலால் வித்யாவுக்கு அமில அபிஷேகம் செய்தது அந்த மிருகம். இந்த இரு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் உயிருக்கு போராடிய வினோதினியும், வித்யாவும் இறுதியில் மரணத்தைத் தழுவினார்கள்.
சேலம் வினுப்பிரியா, சென்னை சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என இந்தப் பட்டியல்  தொடர்கிறது. இந்த இளம்பெண்களின் துயர முடிவுக்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக் காதல் தான். இவர்களில் விழுப்புரம் நவீனாவுக்கு செந்தில் என்ற மிருகம் கொடுத்த தொல்லையை ஒருதலைக் காதல் என்று சொல்ல முடியாது. நவீனா 14 வயது சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே செந்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். கடைசியில் அந்த மிருகத்தின்  சீண்டல் நவீனாவை உயிருடன் தீயிட்டு எரித்து படுகொலை செய்த கொடுமையில் நிறைவடைந்துள்ளது.
இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முதன்மைக் காரணம் காதல் என்றால் என்ன? என்ற புரியாமையும்,  சாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்புத் திருமணம் தான் என்ற தவறான வழிகாட்டுதலும்  தான் என்பதில் உள்ள உண்மையை  புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ நான் ஒரு போதும் எதிரியல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்… கடந்த காலங்களில் நான் செய்து வைத்த கலப்புத் திருமணங்கள் என் வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும் கருவிகளாகும்.
காதல் என்பது அற்புதமான உணர்வு. ஆனால், அது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இயல்பாக வர வேண்டும். எந்த ஒரு பழமும் இயல்பாக கனிந்தால் மட்டுமே சுவைக்கும். மாறாக, கார்பைடு வைத்து கனியவைத்தால் அது உடல் நலனுக்கு தீமையை மட்டுமே ஏற்படுத்தும். இது அறிவியல் உண்மை. காதலும் அப்படிப்பட்டது தான். இயல்பாக ஏற்பட்ட காதல் நாளுக்கு நாள் வலிமையடையும். மாறாக பெண்ணிடம் உள்ள அழகில் மயங்கியோ, சொத்துக்களைப் பறிக்கும் நோக்குடனோ செயற்கையாக உருவாக்கப்படும் காதல் வாழ்க்கையை பொசுக்கிவிடும். இதில் கொடுமை என்னவெனில், இக்காதலால் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருப்பது தான்.
காதல் என்றால் என்ன? என்பதை 74 ஆண்டுகளுக்கு முன்பே 01.01.1942 அன்று பதிப்பிக்கப்பட்ட  ‘‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’’ என்ற கட்டுரைத் தொகுப்பில் ‘காதல்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் தந்தை பெரியார் வரையறுத்திருக்கிறார்.
‘‘அன்பு, ஆசை,  நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர, வேறு  பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் —— பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் & -பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல்,  திருப்தி இல்லாமல்,  தொல்லைபடுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.—
ஆனால், காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்ததெந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைகின்றது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்,   உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும்,(காதலை) அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.’’
அதுமட்டுமின்றி, காதல் தெய்வீகமானது அல்ல… அது ஆசை மற்றும் செல்வத்தை பொறுத்தே ஏற்படும் என்பதையும் 30.06.1940 அன்று வெளியான குடியரசு நாளிதழில்  பெரியார் கூறியிருக்கிறார்.
‘‘என்னைப் பொறுத்தவரையில் காதல் என்பது பொருளற்ற வார்த்தை என்பேன். அதற்குப் பொருள் ஏதாவது இருக்கிறது என்று சொன்னால், அது ஆசை அல்லது தேவை என்பதைத் தவிர வேறு அல்ல என்பேன். அந்த ஆசையும் தேவையும் வியாபாரம் போல் இலாபத்தை – நலத்தைப் பொறுத்ததே தவிர, அதில் தெய்வீகமோ அற்புதமோ ஏதும் கிடையாது. இலாபமுள்ள இடத்தில்தான் ஆசை அல்லது காதலும் தேவையும் இருக்கும். இலாபமில்லாத இடத்தில் இவற்றிற்கு வேலை இல்லை.
…அழகும் செல்வமும் உள்ளவன் என்று கருதும் போது ஏற்பட்ட காதல் அவை இரண்டும் இல்லை என்று தெரிந்தபின்னும் இருக்காது. அதுபோல தனது இயற்கை இச்சையைத் தீர்க்கத்தக்க வீரன் என்று கருதியபோது ஏற்பட்ட காதல், அவன் வீரமற்றவன் என்று தெரிந்த போது இருக்காது. ஆதலால், காதல் என்பது பயனை எதிர்பார்த்தும், தனது திருப்தியை எதிர்பார்த்தும் தானே ஒழிய, எப்போதும் யாதொரு பயனும் எதிர்பாராமலும் இருக்கவேண்டியது என்பதானதல்ல.’’ இது தான் காதல் குறித்த தந்தை பெரியாரின் பார்வையாக இருந்திருக்கிறது. இது தான் நிகழ்கால யதார்த்தமும், உண்மையும் கூட.
காதல் மற்றும் அதன்மூலம் ஏற்படும் கலப்புத் திருமணங்களால் சாதி ஒழிந்து விடும் என்று ஒரு பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது.  ஆனால், காதலாலும், கலப்புத் திருமணத்தாலும் சாதிகள் ஒழிவதில்லை என்பது தான் உண்மை. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது?  காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களில் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்? என்ற எளிய வினாக்களுக்கு பல ஆண்டுகளாக விடை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும்  விடை கிடைக்கவில்லை. காரணம்… காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 99 விழுக்காட்டினர் தந்தையின் சாதியையே குழந்தையின் சாதியாக பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அகநானூற்று சூழலில் இயல்பாக பிறந்தாலும், நல்ல நோக்கத்திற்காக உருவெடுத்தாலும் காதல் நல்லது தான். ஆனால், இன்றைய சூழலில் காதல்கள் கட்டமைக்கப்படுவதாகவே உள்ளன. அவ்வாறு கட்டமைக்கப்படும் காதல்களுக்கு உள்நோக்கமும் உள்ளன. இவை தான் பெண்களின் பாதுகாப்பை  பறித்து, ஆபத்தை உருவாக்குகின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரு காரணங்கள்  முக்கியமானவை. அவற்றில் முதலாவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் ஆணும், பெண்ணும் செய்ய வேண்டிய பிரதானப் பணி படிப்பது அல்ல… காதலிப்பதே என்ற நச்சு எண்ணத்தை இளைய தலைமுறையின் மனதில் விதைக்கும் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஆகும். இரண்டாவது, சாதி ஒழிப்பு புரட்சி என்ற போர்வையில் பிற சாதிப் பெண்களை காதலிக்கும்படி  தமது சமுதாய இளைஞர்களை தூண்டி விடுவதை முழுநேரத் தொழிலாக சில தலைவர்கள் வைத்திருப்பது.
இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் இவர்கள் பேசிய பேச்சுக்கள் பொது அரங்கில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்போது பிறசாதிப் பெண்களை காதலில் வீழ்த்துவது தங்களின் குலப்பெருமை என்பதைப் போல பேசி, அச்செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் ஒரு தலைவர். அவர் பேசிய மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை இந்த கடிதத்தில் மறுபதிப்பு செய்வதே பாவச்செயல் தான். ஆனாலும்,  அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் கயமையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரது உரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். இனி அவரது உரை வாசகங்கள்….
‘‘மானங்கெட்ட பிறவிகள்… வெட்கங்கெட்ட பிறவிகள். இவர்களுக்கு எது மானம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது என்றால் பொம்பளை சமாச்சாரம் தான். வேற ஒரு மயிரும் கிடையாது….வேற ஒரு மயிரும் கிடையாது. அவனை திரும்பிப் பார்ப்பதில்லை என்பதால் பொறாமையும் கூட. சிவப்பாக இருக்கிறான்… மீசை வைத்திருக்கிறான்… நல்லா அயர்ன் பண்ணிய சட்டை போடுறான். ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஷூ போடுகிறான்.
பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சென்ட் அடித்துக் கொள்கிறான். இவ்வளவும் அடித்துமே அவனைத் திரும்பி பார்க்கவில்லை. ஆனால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட சாதியில பிறந்த, சக்கிலியனை, பள்ளனை, பறையனை அவ திரும்பிப் பார்க்கிறாள் என்றால் அதிலிருந்தே தெரிஞ்சுக்க உங்கள் லட்சனம் எவ்வளவுன்னு… உன் கேடுகெட்ட லட்சனம் எவ்வளவுன்னு புரிஞ்சுக்க… இது ஒன்னே போதாதா… உன் லட்சனம் எவ்வளவுன்னு அந்த பொண்ணே சொல்கிறாள். இவ்வளவும் இருந்தும் ஒன்னுக்கும் லாயக்கில்லை. உங்கிட்ட ஒரு சரக்கும் இல்லை… ஒரு சரக்கும் உங்கிட்ட இல்லை… அவன் (பறையன்) ஏழையாக இருந்தாலும், வறுமையில் வாடுறவனா இருந்தாலும் அவனிடம் சரக்கும், மிடுக்கும் இருக்கிறது. அதனால நான் அவன் பின்னால போறேன்னு சொல்றா. அப்பவாவது உனக்கு மானம் இருந்தால் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள். ஆனால், இவன் என்ன பண்றான்…. இவள் அங்கு போய் 10 மாதம் படுத்திருந்தாலும் பரவாயில்லை… வா… நான் துடைச்சி விட்டுக்கிறேன்; கழுவி விட்டுக்கிறேன். என் கூட வந்து நீ குடும்பம் நடத்துங்கிறான்.’’
இது இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உரையா? இவை பெண் இனத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகள் அல்லவா? இதைவிட மோசமான வார்த்தைகளை எந்த தலைவராவது பேச முடியுமா?  கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த உரை அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பெண்ணுரிமை பேசும் பெரியார் வழி வந்த தலைவர்களோ, பொதுவுடமை பேசும் தலைவர்களோ, பெண்ணியவாதிகளோ இதைக் கண்டிக்க முன்வராதது மிகவும் வருத்தமளிக்கிறது.
பெண்கள் சமூகத்தின் வரங்கள். ஆனால், சமூகத்தின் சில சாபங்களால், அந்த வரங்கள் பொசுக்கப் படுகின்றன. பெண்களை படிக்க வைக்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால், நமது சமுதாயம் பெண்களை பாதுகாக்கவில்லை. மாறாக, பெண்கள்  எனும் மலரை கசக்கி எறியும் கயவர்களுக்கு, இல்லாத காரணங்களைக் கூறி, சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் தமிழகம் பெண்களுக்கு நரகமாகி  விடும் ஆபத்திருக்கிறது. இந்த ஆபத்துக்கு எதிராக பெண்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் அணி திரள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான சக்திகளை கண்டித்து போராடுவதால் என் மீது என்னென்ன முத்திரைகள் குத்தப்படும்; என்னென்ன கணைகள் தொடுக்கப்படும்; எத்தகைய பழிகளை சுமக்க வேண்டியிருக்கும் என்பதையெல்லாம் நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். போலிப் புரட்சியாளர்கள் உள்ள உலகத்தில் உண்மையையும், யதார்த்தத்தையும் பேசுபவர்கள் எப்படி பார்க்கப்படுவார்கள் என்பதை நான் அறிவேன். நாடகக் காதலுக்கு சாதி கடந்த காதல் என்ற முலாம் பூசி, அதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சமூக விரோதிகள் என்றொரு தீய பிம்பத்தை போலிப் புரட்சிவாதிகள் உருவாக்கி வைத்திருப்பதன் விளைவு தான் இது.
உண்மையில், காதலுக்கு நானோ, எங்கள் கட்சியோ ஒருபோதும் எதிரியல்ல.‘‘காதல் திருமணங்களை பா.ம.க. எதிர்க்கவில்லை. காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்புத் திருமணங்களுக்கோ தடை போடுவது நாகரீக சமுதாயத்தில் சரியானதாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல் கல்வி, வேலை, வருமானத்திற்கு முன்னுரிமை தந்து 21 வயதுக்கு மேல் நடக்கும் திருமணங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்று வெளிப்படையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தான் நீதிமன்றங்களும் எடுத்துள்ளன. 18 வயதுகூட நிறைவடையாத பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்தது தொடர்பான வழக்கில்  நீதிபதிகள் கே.பக்தவத்சலா, கே.கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு கடந்த  2011&ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
‘‘மைனருக்கு 21 வயது நிறைவடையும்போதுதான் அவர் மேஜராகிறாரே தவிர, அதற்கு முன்பாக இல்லை. எனவே, எங்களின் கருத்துப்படி,         21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண் தங்களுக்கு ஏற்ற துணையா? என்பதைப் பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல்வயப்பட்டு, திருமணம் முடித்து, அந்த முடிவுக்காக பின்னர்தான் வருத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தத் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் – இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துசெய்யத் தகுந்தவை என அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்’’ என்று கூறியுள்ளனர். இதேபோன்ற தீர்ப்பை மேலும் பல உயர்நீதிமன்றங்களும் வழங்கியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை தந்தைப் பெரியார் 45 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியிருக்கிறார்.
‘‘நம் பெண்கள் குறைந்த பட்சம் 20 வயது வரை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும். வாழ்விற்கு ஏற்ற வருவாயுள்ள தொழிலை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதன்பின் அவர்களாகத் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். வாழ்க்கையில் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்’’ என்று 28.-03.-1971 -அன்று மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த திருமண விழாவில் தந்தை பெரியார் பேசினார். ( ஆதாரம்: விடுதலை, 08.-04.-1971)
பெண்களுக்கான திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தந்தைப் பெரியார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 70 ஆண்டுகளுக்கு முன் குடியரசு நாளிதழில் தந்தைப் பெரியார் எழுதிய தலையங்கத்தின் ஒருபகுதி பின்வருமாறு:
‘‘பெண்களுக்கு திருமண வயதை இப்போது 21-க்கு கொண்டு வர வேண்டுமென்று சட்டம் இயற்ற இருக்கிறார்கள். இது நம் சமுதாயத்திற்கு மிகத் தேவையானதாகும். இளம் வயதில் திருமணம் செய்வதால் பெண்கள் மிகத் துன்பப்பட வேண்டி இருக்கிறது. 15 வயதிலேயே குழந்தை பெற ஆரம்பித்து விடுவதால் பெண்களின் உடல் இளம் வயதிலேயே சக்தி இழக்க ஆரம்பித்து விடுகிறது’’ என்று  தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதிமன்றத்  தீர்ப்பிலும், தந்தை பெரியாரின் கருத்திலும் உள்ள நியாயத்தையும், அக்கறையையும் பெண்கள் நலனை பாதுகாப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். எனவே…..
1. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். (அல்லது)
2. 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தத் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் – இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துசெய்யத் தகுந்தவை என அறிவிக்கவேண்டும் என்ற கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை  சட்டமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. பெண்கள் பள்ளி & கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் பாதுகாப்பாக சென்று வருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக, முக்கிய இடங்களில் பாதுகாப்புக்கு  காவலர்களை நிறுத்துவதுடன், சென்னையில் இயக்கப்படுவது போன்று அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்.
4. பெண்களின் பாதுகாப்புக்காக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 01.01.2013 அன்று அறிவித்த 13 அம்சத் திட்டம் முறைப்படி செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.
5. பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களை, முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதற்காக மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி உங்கள் கட்சியின் செயற்குழு/ பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

anbumani

அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா  மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.

anbumani 2

“குடிசை கொளுத்தியே வெளியேறு” “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். ஜேஎன்யூவில் பயிலும் தமிழக மாணவர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

படங்கள்: Vijay Amirtharaj

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ  மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித்.

ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,

“தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து பேச அழைக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டமாகனது, அவமானகரமானது. அன்புமணி, 2012-ல் 200 தலித் வீடுகள் கொளுத்தப்பட்ட தர்மபுரியிலிருந்து எம்பி ஆனவர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாமக முக்கியப் பங்கு வகித்தது. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் மணம் புரிந்துகொண்டதன் பேரில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டது.  அந்த தலித் இளைஞர் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடைய அம்மா, இது கொலைதான் எனத் தெரிவித்தார்.

இவை அனைத்து நடந்தேறிய நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளுக்கு எதிரான திட்டமிடப்பட்ட அரசியலை தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறது பாமக. தலித் ஆண்கள் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் உயர்சாதி பெண்களை கவர்வதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார். இதை முன்வைத்து வன்முறைகளை கட்டவிழ்க்கப்பட்டு தலித்துகள் மீது தாக்குதலும் நடத்தப்படுகிறது. தேர்தல் கால பலன்களை அறுவடை செய்யவே இவையெல்லாம்.

obc forum

எம்பியாக இருந்த அன்புமணி ராமதாஸ், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேரணியை நடத்தியிருக்கிறார். தலித்துகளுக்கு எதிரான பாதையை போட்டுக்கொடுத்திருக்கும் தன் தந்தையும் பாமக நிறுவனமருமான ராமதாஸின் பாதையில் இவர் பயணிக்கிறார். இதுபோன்ற ஒருவர்தான் ஓபிசி ஃபாரத்தில் சமூக நீதி குறித்து பேச வேண்டுமா? அதிகாரம் மிக்க அமைச்சர்களால் சமூக நீதியை அடைந்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒருங்கிணைப்பதன் மூலமே இதைச் செய்ய முடியும்.

இந்த அழைப்பு அன்புமணிக்கு அனுப்பப்பட்டிருப்பது தொடர்பாக சில மாணவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் எங்களுடன் இணைய வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (25-8-2016) நடைபெறுகிறது.

”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலித்துகள், பிரபல தலித் தலைவரின் தூண்டுதலின் பேரில் இஸ்லாமிய பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 200 முஸ்லீம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக அந்த ஊர் இமாம் இதைத் தங்களிடம் தெரிவித்தாக கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியில் ராமதாஸ் கூறியுள்ள சில கருத்துகள்:

  • அஞ்சாவது படிச்சவன் செல்போன் பயன்படுத்தறான். செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்களை காதல் வலையில் விழ வைக்கிறார்கள்.

  • நரிக்குறவர்கள் இருக்காங்களே, அதான் பாசி மணி ஊசி மணி விக்கிறவங்க(சிரிக்கிறார்) அவங்க வந்து எம் பொண்டாட்டியைத் தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு சொல்றாங்க.

  • கள்ளக்குறிச்சியில் ஒரு பெரிய கோடூஸ்வரர் அவர் பொண்ணு சென்னை படிக்க வந்தது. அந்தப் பொண்ணை காதல் நாடகம் ஆடி ஒருத்தன் வலையில சிக்க வெச்சுட்டான். இவங்களைப் பிரிக்கிறதுக்காக பிரபல தலைவர் பேரம் பேசினார், அந்தக் குடும்பத்துக்கிட்டே. ரூ. 100 கோடி கேட்டு, ரூ. 10 கோடிக்கு பேரம் முடிஞ்சது. அவங்களை பிரிச்சி வெச்சாங்க. அதுக்கு ஆதாரம் என்கிட்ட இருக்கு.

  • கடலூர் மாவட்டத்துல பிராமணர், ரெட்டியார், முதலியார், கவுண்டர், வன்னியர் பெண்கள் 1000 பேர் இந்தமாதிரி காதல் வலையில சிக்கி திருமணம் செய்துக்கிட்டாங்க. இவங்களை திருமணம் செஞ்சி வெக்கிறதுக்குன்னு லாயர் ஒருத்தன் இருக்கான்.

ராம்தாஸின் முழு பேட்டியும் இங்கே… ராமதாஸின் பேச்சைக் கேட்பதோடு அவருடைய உடல்மொழியைக் கவனியுங்கள். பொய்யர்களுக்கான உடல்மொழி என்று அறிய முடியும்.

ஜாதிப் படிநிலையில் உங்களுக்கு மேலே இருக்கிற ஆண்டைகளைப் பாருங்கள் நீங்கள் எவ்வளவு அடிமைகள் என்று புரியும்!

யாழன் ஆதி

யாழன் ஆதி
யாழன் ஆதி

தனிமனித காதல் பிறழ்வுகளை சமூகப் பிரச்சனையாக மாற்றுவதும், சமூகரீதியான கொலைகளை மிக எளிதாகக் கடந்துவிடுவதும் இதுவேதான் இளைஞர்களின் வேலை என்று அவர்களை மிக மோசமாக இழித்தும் பழித்தும் பேசுவதும் அதையே தன் அரசியல் எதிர்காலமாக நினைப்பதும் எப்படி சரியானத் தலைமையாகும்?

தொலைக்காட்சி நேர்காணலில் பார்வையாளருக்கு ஒரு நன்மை இருக்கிறது, கருத்துக்கள் உண்மையானவை என்னும் பட்சத்தில் சொல்பவரின் முகம் அதற்கு சான்றாகிவிடும், தான் கூறுவது பொய்யும் புரட்டும் எனும்போது அது அதைக் காட்டிவிடும். நவீனா கொலைக்குறித்துப் பேசும்போது ஒளிர்ந்த முகம், சங்கர் கொலை என்றால் துவண்டதைக் காண முடிந்தது.

சகலரையும் அவன் இவன் என்று ஒருமையில் விளிப்பது, குற்றம் செய்த ஒருவரை, ஒரு மாபெரும் தலைவர் ‘மிருகம்’ என்று கூறுவது எல்லாம் குறித்து ஐ.நா மன்றம் எதுவும் சொல்லித்தரவில்லை போலும். ஒரு கட்சியின் தலைவர்மீது அபாண்டமாக ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளைச் சொல்வது அதைச் சமூக விரோதத்தை வளர்க்க ஓட்டாக மாற்றுவது என்பதெல்லாம் நாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்றுதான் எண்ண வைக்கிறது.

தொடர்ந்து டிப்டாப் டிரஸ் குறித்து அவர்பேசுவது கோவணம் கட்டிக்கொண்டு குளிக்காமல் ஊரிலிருக்கும் ஒரு திண்ணைமேல் உட்கார்ந்துகொண்டு, பல்விளக்காம எந்த ஜாதிக்காரன் எந்தப் பொண்ணுக்கூட போறான்னு கண்ணுல விளக்கெண்ண ஊத்திப் பாத்துன்னு இருக்கும் ஒரு சமூக இருப்பையே அவர் ஆசைபடுகிறார் என்று தெரிகிறது.

தஞ்சையில் பார்ப்பனர் ஒருவரின் மனைவியை அவர் வீட்டிலிருந்த தலித் இளைஞர் கடத்திக் கொண்டுபோனதை என்னமாய் கூறினார் பாருங்கள். அந்த இளைஞன் ஒரு வன்னியராய் இருந்தால் ஏன் ஒரு பார்ப்பனராய் இருந்தாலுமே இருக்கக் கூடிய சூழ்நிலை அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தனிமனித அபிலாசைகளுக்கு ஜாதி சாயத்தை எப்படி பூசமுடியும் என்றுதான் தெரியவில்லை.

ஆனால் அவரே சொல்கிறார் அந்தப் பெண் இரண்டு குழந்தைகளைவிட்டு விட்டு அவனோடு சென்றுவிட்டார். அந்தப் பெண் அழகானவள் என்றும் கூறுகிறார். பெண்களை எப்படி நடத்தவேண்டும் என்று அய்.நா மன்றம் கூறியிருக்கிறது அதை நடைமுறைப் படுத்தத் தான் போராட்டம் என்னும் நீங்கள் பெண்களில் பாலியல் சுதந்திரத்தை தனக்கானத் துணையைத் தானே தேடிக்கொள்ளும் சுதந்திரத்தைக் குறித்தும் பேசலாமே!

ஆண்களாகப் பிறக்கிற பெண்களாகப் பிறக்கிற எல்லோரும் காதலர்களாக மாறி திருமணம் செய்துகொள்வதில்லை. காதல் திட்டமிட்டும் வருவதில்லை. தமிழர்களின் சுத்தமான எச்சமாக இருக்கிற இரு சமூகங்களும் அதுவும் ஜாதி அடுக்கில் மிக அருகில் தனக்கு மேலே ஆயிரம் ஆண்டைகளை சுமந்து கொண்டிருக்கிற இரு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு ஒருசிலர் புரிகிற காதல் உறுதுணையாக இருக்கட்டுமே. ஒரு வேளை அக்காதல் தானாக முறிந்தால் முறியட்டுமே. ஒரே ஜாதியில் ஏற்பாடு செய்கிற எல்லாத்திருமணமும் மகிழ்வானதாகவா இருக்கின்றன. அறிவியல் பூர்வமாக ஏன் மருத்துவபூர்வமாக காதல் காமம் ஒரு வாழ்வியல் செயல்பாடு.

ஆனால் வாழ்வியல் செயல்பாடுகளை ஜாதிகளின் செயல்பாடுகளாக மாற்றும் தலைமைகள் எப்படி சரியானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆரம்பத்தில் அவர்கள் கட்சி நடத்திய காலங்களில் காரல்மார்க்ஸ், லெனின், பெரியார், அம்பேத்கர் படங்களைப் பயன்படுத்தினர். இந்தப் பட்டியலில் நான் அம்பேத்கரை இறுதியில்தான் வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது வீரப்பனை வைத்திருக்கிறார்கள். அம்பேத்கரை அவர் புரிந்துகொண்டவர் போல இருந்தாரா என்று தெரியவில்லை. அம்பேத்கரை வாசிக்கச் சொல்லி வற்புறுத்தும் தைரியத்தை அவர் பெறவேண்டும்.

ஒருதலைமை என்பது அதுவும் இனவரைவியலில் தமிழ்தேசிய இனத்தில் ஓர் மரபினத்தின் தலைமயாக இருக்கிறவர் இப்படிக் கிஞ்சிற்றும் பண்படாமல் இருப்பது மிகுந்த ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. அவர் தலைமயை நம்பியிருக்கிற மக்களின் எதிர்காலம் அச்சத்திற்குள்ளானது என்று மனம் வெதும்புகிறது.

ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தியல் தவறானதாக தமிழ்ச்சமூகத்தில் இவர்களால் மாற்றப்படுகிறது. இந்து ஜாதிப் படிநிலைகளில் இவர்கள் இருந்துகொண்டு அந்தமக்களின் விடுதலையையும் இவர்கள் தடுக்கிறார்கள், என்பதை எப்படி புரியவைப்பது? அதற்குப் பெருந்தடையாக அந்தத் தலைமையே இருக்கிறது.

இடைநிலை ஜாதி என்பது ஆண்டைகளைக் குறிப்பது அல்ல. ஜாதிப் படிநிலையில் உங்களுக்கு மேலே இருக்கிற ஆண்டைகளைப் பாருங்கள் நீங்கள் எவ்வளவு அடிமைகள் என்று புரியும். இதை அழிக்க கல்வியும் சமூகம் சார்ந்த அறிவுப் புரிதலும் தேவை. மேலிருக்கும் ஆண்டைகளை தூக்கி வீச கீழிருக்கும் மக்களின் கூட்டுறவு தேவை. அதை வைத்துக்கொண்டு ஜாதி மேடுகளைத் தகர்த்து சமநிலையை உருவாக்கி ஜனநாயகத்தினைக் கட்டமைக்க வேண்டும். இதுதான் இன்றைய இளைஞர்களுக்கு நாம் சொல்வது. இதில் காதல் ஒரு தடையே இல்லை. அதை வைத்துக்கொண்டு மக்களை உசுப்பேற்றி பிரிப்பது அறிவுநாணயமுள்ள தலைமை ஆகாது.
அம்பேத்கர் சொல்கிறார் “ ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சி முறை அல்ல; அது சமூகத்தில் வாழும் சக மனிதனுக்காக மரியாதையை அளிப்பது” அந்த மரியாதைதான் உங்களுக்கும் கிடைக்கவேண்டும். சிலபேரின் அரசியல் லாபங்களுக்காக மக்களை பலி ஆக்குகிறது அந்தத் தலைமை.

தலித்துகள் போராடுவது சகமனிதனின் சமூகஜனநாயகத்திற்காக, வாருங்கள் மனிதர்களே எல்லாருக்குமான சமூகஜனநாயகத்தினை வென்றெடுப்போம்.

(இப்படிப்பட்ட நேர்காணல்கள் மீது ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள், சமூகவியலாளர்கள் தங்கள் கருத்துக்களைக்களை காத்திரமாக முன்வைத்தால்தான் தமிழ்ச்சமூகத்தைக் காக்க முடியும். பத்தோட பதினொண்ணு அத்தோட இதுவொண்ணுன்னு இருங்க.)

யாழன் ஆதி, எழுத்தாளர். சமூக-அரசியல் செயற்பாட்டாளர். இவருடைய நூல்களில் ஒன்று 
புத்தரின் தம்மபதம்.

“சிறுமியை நாசமாக்கிய தலித்திய, திராவிட, ஊடகக்கூட்டு”: சமூக வலைத்தளங்களில் பரவும் சாதி அரசியல்

விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனா என்ற பெண்ணை செந்தில் என்பவர் தீயிட்டு கொளுத்தி, தன்னையும் கொளுத்திக்கொண்டார். செந்தில் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். நவீனா, தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். சில மாதங்களுக்கு முன் செந்தில்(தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்), வேறு சாதி பெண்ணை காதலித்த காரணத்தால் அவர்களுடைய வீட்டினர் தண்டவாளத்தில் வீசி, கால் கைகளை துண்டித்தனர் என்று புகார் அளித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் ஊடகங்களில் விவாதங்களும் நடந்தன.

இந்த சம்பவம் நடக்கவில்லை என்றும் செந்தில் பொய் சொல்கிறார் என்றும் அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு அறிக்கை தந்தது. இந்நிலையில் செந்தில், நவீனாவை காதலிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் இதன் விளைவாக தானும் தீவைத்துக் கொண்டு, நவீனாவையும் கொளுத்தியதாகவும் ஊடகங்கள் சொல்கின்றன.

தனிப்பட்ட செந்தில் என்ற நபரின் இந்தக் குற்றங்களுக்கு விவாதம் நடத்தியவர்கள், அதில் பங்கேற்றவர்கள், தலித் அமைப்புகள் என அனைவரையும் குற்றவாளிகளாக்கி வருகின்றன சில அமைப்புகள். தொடர்புடையவர்கள் எதேச்சையாக நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த பிறகும்கூட..குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இத்தகைய பதிவுகள் அதிகமாக எழுதப்படுகின்றன. இவர்கள், ஒரு படி மேலே போய் ‘கருத்து சித்திரம்’ வரைக்கும் போய்விட்டனர். முகப்பில் உள்ள படம் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.

தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன்…நமக்கு புரியாத விஷயங்களை புரிந்து வைத்துள்ள மாமேதை..

ப .ஜெயசீலன்

2000 A space odyssey என்ற திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியும் இன்றும் அதன் இறுதி காட்சியில் இயக்குனர் சொல்ல வந்த உட்பொருள் குறித்து பெரும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு படத்தை இயக்கிய ஸ்டான்லி கூட தன்னிடம் கேள்வி எழுப்பியவரை பார்த்து நான் சொல்வது உங்களுக்கு புரியாது என்று சொன்னதில்லை. தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன் அவர்கள் சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கரு. பழனியப்பன் தாடி முடியில் கால் பங்கு கூட தலையில் முளைக்காத சிறுவர்களிடம் கேட்டால் கூட புரிய கூடிய வகையில் கேட்ட எளிய கேள்விக்கு “இத வேற ஆட்களோடு விவாதிக்கணும்…வேற மேடை வேண்டும்…உங்களுக்கு அது புரியவும் புரியாது” “உங்களுக்கு இல்ல யாருக்குமே புரியாது” என்று திருவாய் மலர்ந்தார்.

தொகுப்பாளினி, அப்பட்டமாக ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தை legitimate ஆக்கும் நோக்கத்துடன் எடுக்கபடும் படங்கள் தமிழர் அனைவருக்குமான படமாக உச்சி முகர்ந்து கொண்டாடப்படும் சூழலில் தலித்துகளின் குரலாக ஒலிக்கும் கபாலியை தலித்துகளுக்கான படம் என்று சுருக்குவதை கேள்வியாய் கேட்க இது மொக்கை வாதம் என்று ஒதுக்கிய பழனியப்பன் கபாலிக்கு U certificate ஏன் கொடுத்தார்கள் என்று “ராஜா குலோதுங்குவை விட்டு விட்டான் ஐயா” என்று கபாலியை புறம் தள்ள இன்னொரு காரணத்தை கண்டடைகிறார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரியானது. காபலிக்கு வெட்டப்பட்ட கை காட்டப்படும் காட்சியோடு U certificate கொடுத்தது ஏற்று கொள்ள முடியாதது. சென்சார் போர்டின் கோடிக்கணக்கான கோமாளித்தனங்களில் இதுவும் ஒன்று. உதாரணத்திற்க்கு சர்வதேச அரசியல், மத அடிப்படைவாத பயங்கரவாதம், மிக கொடூரமான கொலைகள் சண்டைக்காட்சிகள் கொண்ட விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் A certificate தரவில்லை. பிரச்சனை இப்பொழுது அது இல்லை. பிரச்சனை அதுதான் என்றால் கமல் “காசு கொடு வீட்டுக்கு போகணும் ஆத்தா வையும்” என்னும் பாவனையில் தான் அமெரிக்கா போவதாக கண் கசக்க, தமிழ் திரையுலகம் கூடி கமலுக்கு ஆறுதலும் அரவணைப்பும் வழங்க, தமிழர்கள் “தேவர் மகன்”கமலுக்கு இப்படி ஒரு நிலையா என்று கலங்கி சொந்த காசைக் காசோலையாக்கி அனுப்பி கமலுக்கு தைரியமூட்டி பின் படம் வெளியாகி வெற்றியும் அடைந்த பின் பழனியப்பன் இதே போன்று படத்திற்கு ஏன் A certificate தரவில்லை என்று இன்று வரை எங்காவது கேட்டுள்ளாரா? அப்பொழுது வராத அற சீற்றம் பழனியப்பனுக்கு கபாலத்தில் கபாலி மீது மட்டும் வருவது எதேச்சையானதா? ஒரு திரைப்படத்தை அதை இயக்கியவனின் சாதி சார்ந்து அவன் கதையினூடாக சொல்லும் விஷயங்களை கூட அவனது சாதியினூடே குறிப்பாக தலித்தாக இருக்கும் பட்சத்தில் மட்டும் சுருக்குவது எதனால்?

ஐயர் “விருமாண்டி ” இயக்கினால் அதில் ஐயர் அரசியல் இல்லாமல் விருமாண்டியாக பார்க்கிறார்கள், முதலியார் “நாட்டாமை” இயக்கினால் முதலியார் அரசியல் இல்லாமல் நாட்டாமையாக பார்க்கிறார்கள், பழனியப்பன் “பிரிவோம் சந்திப்போம்” இயக்கினால் செட்டியார் அரசியல் பார்க்காமல் “தமிழர் கலாச்சாரத்தை” ஆவணப்படுத்தும் முயற்சியாக பார்க்கிறார்கள். ஆனால் தலித் “கபாலி” எடுத்தால் மலேசியா வாழ்க்கையாக பார்க்காமல் ஏன் கபாலியை வெறும் தலித்தாக மட்டுமே பார்க்கிறார்கள்? பழனியப்பன், “ரஞ்சித் தமிழர்களையா ஒன்று சேருங்கள் என்கிறார்?? அவர் தமிழர்கள் என்று சொல்லி உண்மையில் தலித்துகளைத்தானே ஒன்று சேர சொல்கிறார் ” என்று ஒரு அரிய உண்மையை கண்டுபிடிக்கிறார்.

கபாலி படத்தில் தலித்துகள் ஒன்று சேர வேண்டும் என்றுதான் ரஞ்சித் சொல்ல விரும்பியதாகவும் ஆனால் அப்படி சொல்ல முடியாததால் அதைத்தான் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் என்னும் போர்வையில் திரும்ப திரும்ப படத்தில் சொல்வதாகவும் பழனியப்பன் கண்டு பிடித்து சொல்கிறார். திருமாவளவன் சமீபத்தில் “தலித்துகளின் போராட்டம் என்பது பிறரோடு ஒன்று சேர்வதற்கானது…சாதிய கட்டமைப்பானது எல்லோரையும் பிரித்து வைப்பது…அதுதான் தலித்துகள் பிறரோடு ஒன்று சேர முடியாமல் தடுப்பது” என்று சொன்னதைப் போல ரஞ்சித் மானுட விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய விஷயங்கள் சாதி வெறியர்களுக்கு புரியாது என்னும் நிலையில் குறைந்த பட்சம் தமிழர் என்ற அடிப்படையில் அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளிலாவது ஒன்று சேர்வோம் என்று சொன்னால் அதையும் பழனியப்பன், அவர் தமிழர்கள் என்ற போர்வையில் தலித்துகளை ஒன்று சேர சொல்கிறார் என்று அவருடைய தாடிக்குள் இருந்து ஒரு அரிய கருத்தை கண்டுபிடித்து சொல்கிறார்.

திருமாவளவன் முல்லை பெரியார் சார்ந்த ஒரு போராட்டத்தில் பங்கு பெற தான் தேனி வழியாக சென்ற பொழுது தன் மீது கல் வீசி தாக்கினார்கள் என்று ஒரு முறை சொன்னார். குண்டி கழுவ தண்ணி இல்லாமல் செத்தாலும் சாவோம் ஆனால் சாதி திமிரை விட மாட்டோம் என்னும் எண்ணத்தில் ஒரு தமிழனாக தங்கள் பிரச்சனையில் போராட திருமாவளவன் வருகிறார் என்று கூட பார்க்காமல் கல்லெறிந்த தற்குறிகளின் மனோபாவத்திற்கும் பழனியப்பனின் மனோபாவத்திற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா? ரஞ்சித் தலித்தாக இருப்பதினால் அவர் தமிழரின் ஒற்றுமை சார்ந்து யோசிக்க வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்வதற்கு இவரை வழிநடத்தியது எது? படத்தில் எந்த இடத்தில் வரும் வசனம் தமிழர் என்ற போர்வையில் தலித்துகளை ஒன்று சேர சொன்னது என்று பழனியப்பனால் விளக்க முடியுமா? பழனியப்பன் பார்வையில் ஒரு தலித் தமிழர் ஒற்றுமை, தமிழ் தேசியம் போன்ற விஷயங்களில் பங்கெடுக்க, வலியுறுத்த வாய்ப்பே இல்லையா? அல்லது தகுதி இல்லையா?

அட்டகத்திய ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று சலித்து வேறு கொள்கிறார். அட்டகத்தி குறித்து பொது வெளியில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அது ஒரு நேர்த்தியான தலித் திரைப்படம் ( “தலித் திரை படம் ” தலித் வாழ்வியலை. அவர்களது பிரச்சனைகளை, அவர்களது குரலை பேசும் படம் என்னும் பொருளில். தலித்துகளுக்கான படம் என்னும் பொருளில் அல்ல) என்று ஒரு சாராரும் அப்படி இல்லை என்று ஒரு சாராரும் விவாதித்தார்கள், முரண்பட்டார்கள். எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் அது ஏன் தலித் சினிமா இல்லை என்னும் பொருளில் ஒரு பெரிய கட்டுரை கூட எழுதியதாக நியாபகம். அப்பொழுது பழனியப்பன் தாடி வளர்த்து கொண்டிருந்ததால் இதை கவனிக்காமல் விட்டு விட்டார். கபாலி படம் கவனம் பெற ரஜினியும் வியாபாரமும் மட்டும்தான் காரணம் என்றால் அது ஏன் இதற்கு முன் வந்த எந்த ரஜினி படத்திற்கும் நிகழாத படம் சார்ந்த படத்தின் பேசுபொருள் சார்ந்த ஒரு விவாதம் கபாலிக்கு மட்டும் நிகழ்ந்தது? தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு படத்தின் பேசு பொருள் சார்ந்த அரசியல் சார்ந்த ஒரு பெரு வெளியில் எல்லோரும் பங்கு கொள்ளும், கொண்டிருக்கும் விவாதத்தை பழனியப்பன் இது எல்லாம் வியாபாரம் இதுக்கு வேற முக்கியத்துவம் தர தேவை இல்லை என்று ஆமையை போல தனது ஓட்டுக்குள் மண்டையை இழுத்து கொள்ளும் காரணம் என்ன ? இந்த விவாதத்தின் முக்கியத்துவத்தை வெறும் வியாபாரம் சார்ந்தது என்று கொச்சைப்படுத்தும் ஆசை ஏன்?

கடைசியாக, அவர் சொல்லுவது யாருக்கும் புரியாது என்னும் அளவில் அவர் இதுவரையில் எதாவது படம் இயக்கி உள்ளாரா ? அவரது படத்தில் சம்மந்தம் இல்லாமல் ஒரு கதாபாத்திரம் குளித்து விட்டு வந்து கண்ணதாசன் புகைப்படத்தை தொட்டு கும்மிடுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா? தனிமையில் வாடும் அவரது கதாநாயகி தனது தாய் தகப்பனை miss பண்ணாமல் தனது புருஷன் வீட்டு கூட்டு குடித்தனத்தை miss பண்ணுவது நமக்கு ஏன் என்று புரியவில்லையா? நன்கு படித்த நாலைந்து பெண்கள் ஒரே வீட்டில் இருந்து பேன் பார்ப்பது, மிளகாய் காய வைப்பது, காய் அறிவது போன்ற வேலைகளை சந்தோசமாக செய்வது ஏன் என்று புரியவில்லையா? உலகத்திலேயே அப்பழுக்கற்ற ஒரு சமூகம், ஒரு சமூக அமைப்பு, குடும்ப அமைப்பு எங்கு உள்ளது என்றால் எது காரைக்குடி சுற்று வட்டார பகுதியில்தான் உள்ளது என்று ஏன் பழனியப்பனுக்கு படம் எடுக்க தோன்றுகிறது என்று நமக்கு புரியவில்லையா? இவ்வளவு ஏன் பழனியப்பன் காதில் இருக்கும் கடுக்கன் வளையம் எதற்கானது என்று நமக்கு புரியவில்லையா? இப்படி சிறுவர் மலர் கதைகளை ஒத்து இருக்கும் எளிமையை தனது படங்களில், வாழ்க்கையில், பேச்சில் கடை பிடிக்கும் பழனியப்பனுக்கு எது தான் பேசுவது யாருக்குமே புரியாது என்று தோன்ற வைத்தது? அவரது படங்களின் தோல்வியா?அவரது படங்கள் தோல்வி அடைவது யாருக்கும் பிடிக்காமல்தானே தவிர புரியாமல் அல்ல என்று அவரிடம் எப்படி புரிய வைப்பது?

தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு அவர் பேச வேற மேடை வேண்டும் என்று சொன்னதைக் கூட அடுத்த வருடம் கேன்ஸ் பட விழாவில் அவர் The palm d’or விருது வாங்க போகும் மேடையை சொல்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் “இதை வேறு ஆட்களோடு நான் விவாதிக்கணும்” என்று சொன்னதில் உள்ள அந்த வேறு ஆட்கள் அவரது நண்பரான a mafioso action “ஆதி பகவான்” எடுத்த அமீர் போன்ற ஆட்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எனது ஆசையும் பிராத்தனையும்.

கட்டுரையாளர் ப .ஜெயசீலன், தமிழ் சினிமா பார்வையாளர்.

ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

விழுப்புரம் செந்தில் என்பவர் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாய் காதலித்து அந்தப்பெண் மறுத்தன் விளைவாக நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே கொளுத்திக்கொண்டு நவீனாவிற்கும் தீக்காயங்களை நான்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தினார் . செந்தில் அன்றே இறந்துவிட்டார். இது குறித்து கடந்த ஞாயிறு அன்றே நானும் பத்ரியும் புதிய தலைமுறையில் விவாதித்தோம். 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவீனாவும் இன்று மரணமடைந்தார்.

சென்ற ஆண்டே இந்த விவகாரம் வேறொரு கோணத்தில் பிரச்சினையாக மாறியது. அப்போது நவீனாவை காதலித்தற்காக ஒரு கையும் ஒரு காலும் வெட்டபட்டதாக செந்தில் புகார் செய்தார். ஊடகங்களிலு அது ஆணவக் கொலை முயற்சியா என்ற கோணத்தில் விவாதங்கள் நடந்தன. ஆனால் பின்னர் அ.மார்க்ஸ் அவர்கள் மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் செந்தில் ரயிலில் விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போதே கைகால்களை இழந்தார் என்ற உண்மை வெளிப்படுத்தபட்டது. ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடகூடியவர்கள் கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் சாதியக் கோணத்தில் மட்டும் அணுகுபவர்கள் அல்ல என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் இப்போது நவீனாவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த துயர மரணத்தை முன்வைத்து ஆணவக் கொலைகளுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களுக்கு எதிராக சாதி வெறியர்கள் கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆணவக்கொலை என்பது தமிழகம் முழுக்க பரவலாக நடந்துவரும் ஒரு சூழலில் ஒடுக்கபட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தாக்கபட்டதாக புகார் அளிக்கும்போது அது உடனடியக விவாதங்களை ஏற்படுத்தவெ செய்யும் ஆனால் காவல்துறை விசாரணையிலும் உண்மை அறியும் குழு விசாரணையிலும் அது செந்தில் என்கிற மனநோய்கொண்ட நபரின் பொய்க்குற்றசாட்டு என்பது உடனே வெளிவந்துவிட்டது.

இப்போது நவீனாவின் இறப்பு ஏற்படுத்திய உணர்வலைகளை வைத்துக்கொண்டு ஆணவக் கொலைகள் தொடர்பாகக் குற்றச் சாட்டுகள் எல்லாமே பொய் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இளவரசன், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என்ற பெயர்கள் எல்லாம் பொய் என்று ஆகிவிடுமா? தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் உயர்சாதியினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிற கலைச்செல்வி என்ற பெயர் பொய் என்று ஆகிவிடுமா?

நண்பர் குணசேகரன் சென்ற ஆண்டு புதிய தலைமுறையில் விழுப்புரம் செந்திலுக்கு ஆதரவாக விவாதித்தற்கு குற்ற உணர்வுடன் மன்னிப்பு கோருகிறார். ஊடக விவாதங்கள் செய்திகளின் அடிப்படையிலும் யூகங்களின் அடிப்படையிலும் பல்வேறு கோணங்களை ஆராய்கின்றன. அவை தீர்ப்புகளும் அல்ல, இறுதி உண்மைகளும் அல்ல. காவல்துறையும் நீதிமன்றங்களும் கூட மிக முக்கியமான வழக்குகளில்கூட பிழையான முடிவுகளுக்கு வந்துவிடுகிறபோது ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்? “ஒரு கையும் காலும் இல்லாத நபர் இவ்வளவு பெரிய குற்றத்தை எப்படிச் செய்ய முடியும்?’’ என்ற சந்தேகத்தை பத்ரி முன்வைத்தபோது நானும் அவரும் அதை மூன்று நாட்களுக்கு முன்பு விவாதிக்கவே செய்தோம். அது ஒரு கோணம், அவ்வளவே. அது அந்த விவகாரம் பற்றிய தீர்ப்பு அல்ல. தமிழ்நாட்டில் எந்த ஆணும் பெண்ணும் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தாலும் அது ஆணவக்கொலையா என்ற கோணத்தில் சிந்திப்பது தவிர்க்க முடியாதது. இனியும் விவாதஙக்ளை அப்படித்தான் நடத்துவோம்.

மனநோயாளிகள் சிலரின் செய்கையால் சாதி வெறி என்ற கொடூரமான மனநோயை மூடி மறைக்க முடியாது.

மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; பதிப்பாளர். இவரின் சமீபத்திய நூல் ‘புலரியின் முத்தங்கள்’.

விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?

அ. மார்க்ஸ்

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்
விழுப்புரம் செந்திலின் நெருப்பு ஆலிங்கனத்தின் விளைவாக 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நவீனாவுக்கு நேர்ந்த கதி அடுத்த சில நிமிட ங்களில் எனக்கு வந்தது. நான் அப்போது NCHRO கருத்தரங்கில் இருந்தேன். பத்திரிகையாளர்களிடமிருந்து அந்தச் செய்தி கிடைத்தது. நவீனாவின் மாமா ஏழுமலையிடம் பேசி தகவலை உறுதி செய்து கொண்டேன். அவர் ஒருகாலத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்.

நான் மிகவும் வேதனைப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்று இது. அந்தப் பெண், பெண் எனச் சொல்வதைக் காட்டிலும் ஒரு சிறுமி. மிகவும் ஏழைக் குடும்பம். நாங்கள் உண்மை அறியச் சென்ற போது தயங்கித் தயங்கி அவளிடம் சிலவற்றைக் கேட்ட போது அவள் அழுதது நினைவுக்கு வந்தது.

செந்திலின் குடும்பமும் அதை விட ஏழ்மையான குடும்பம். அவரது அப்பாவும் பல ஆண்டுகள் முன் இதேபோல ரயிலில் அடி பட்டுச் செத்ததை அவரின் அம்மா கண் கலங்கச் சொன்னார். இந்தப் பிரச்சினையில் இருவருமே பரிதாபத்திற்குரியவர்கள்.

இளம் வயதில் ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. தவறான புரிதல்கள், அல்லது சரியான புரிதல்களாக இருந்த போதிலும் பிற சமூக மற்றும் குடும்பத் தடைகள் குறுக்கிடும்போது பெண்கள் பின் வாங்க நேர்கிறது. அது இப்படியான நிகழ்வுகளில் முடிந்து விடுகிறது. சமுக அக்கறை உள்ளவர்கள் கவனத்தில் எடுத்துப் பரிசீலிக்க வேண்டிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

ஆனால் இது குறித்து இப்போது, அதுவும் இன்றைய ஊடகப் பரவலுள்ள இந்தச் சூழலில் காக்கப்படும் மௌனம் உண்மையிலேயே வருந்தத தக்கது.

இந்தப் பிரச்சினையில் இன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவிப் பெண்ணுக்கு ஆறுதல் அளிப்பது என்பது காலங் காலமான சாதியக் கொடுமைகளை எல்லாம் இல்லை எனச் சொல்வதாக ஆகிவிடாது. அதே போல இந்தப் பிரச்சினையில் அப்பெண்ணின் பக்கம் நின்று பேசும் டாகடர் ராமதாஸ் போன்றவர்கள் அப்படிப் பேச எல்லா நியாயங்களும் இருந்த போதிலும் இன்று நடக்கும் எத்தனையோ சாதி வன்மக் கொலைகள்ளின் சாதி வெறிக் காரணிகளை இதன் மூலம் நியாயப்படுத்த முயல்வதையும் ஏற்க இயலாது.

டாக்டர் ராமதாஸ் தன் அறிக்கையில் இந்தப் பிரச்சினை தொடர்பான எங்களின் உண்மை அறியும் குழு அறிக்கையை ஒரு சான்றாகக் குறிப்பிட்டுள்ளார். மிக்க நன்றி. ஆனால் டாக்டர் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் முன் வைக்க விரும்புகிறேன். நாங்கள் எங்கள் ஆய்வுகளில் எங்களுக்குப் பட்ட உண்மைகளைச் சொல்பவர்கள் என்பதை இதன் மூலம் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இது போன்ற இன்னும் எத்தனையோ வன்முறைகளில் நாங்கள் அறிக்கைகளைத் தந்துள்ளோம் அவற்றிலும் நாங்கள் இதே போல உண்மைகளைத்தான் சொல்லியுள்ளோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அணிகளிடமும் இதைப் பேச வேண்டும்.

பின்னர் பதிவு செய்யப்பட்டது…

விழுப்புரம் நவீனா இன்று காலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீக்காயங்களுக்குப் பலியாகியுள்ளார்.

நேற்று மாலை நான் இட்ட பதிவைப் பார்த்து விட்டு கடலூர் நண்பர் Rights Babu தொடர்பு கொண்டார். அவரும் எங்கள் உண்மை அறியும் குழுவில் பங்கு பெற்றவர்.

நாளை நான் வருவதாகவும் புதுச்சேரி சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து வரலாம் எனவும் திட்டமிட்டோம்.

காலையில் இந்தத் துயரச் செய்தி. அந்த ஏழைக் குடும்பத்திற்கு எங்களின் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

நவீனா கொளுத்தப்பட்ட அன்று அவளது மாமா ஏழுமலையிடம் பேசியதைச் சொன்னேன். அவர் முன்பு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றேன். சென்ற ஆண்டு இந்தப் பிரச்சினை நடந்து ரயிலில் அடிபட்டு செந்தில் ஒரு கையையும் காலையும் இழந்த போது அது திட்டமிட்ட தாக்குதலின் விளைவு என ஊடகங்களும் சில இயக்கங்களும் எழுதியும் பேசியும் வந்த போது இலக்காக்கப்பட்டதுகூட ஏழுமலைதான். மாமா எனும் உறவின் அடிப்படையில் அந்தச் சிறுமியிடம் செந்தில் வந்து அடிக்கடி பிரச்சினை செய்வதை ஒருமுறை கண்டித்து அந்த வழக்கு காவல்துறை வரை போய் செந்தில் கைதும் செய்யப்பட்டார். எனவே செந்தில் மீது திட்டமிட்ட தாக்குதல் நடந்தது என்றால் அதனால் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருந்தவர் ஏழுமலை. அவர் இப்போது இயக்கத் தொடர்புகளை எல்லாம் விட்டு விட்டு சைக்கிளில் பால் வியாபாரம் செய்து கொண்டுள்ளார்.

நவீனா ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து நான் மூன்று நாள் முன்னர் அவரிடம் பேசியபோது அவர் கூறினார்:

“கை காலை இழந்த பின்னும் அந்தப் பையன் அடிக்கடி வந்து நவீனாவுக்குப் பிரச்சினை கொடுத்திட்டுதான் இருந்தான். நான் அப்பவே நவீனாவின் அப்பா அம்மா கிட்ட சொன்னேன். நவீனாவைக் கொண்டு போயி எங்காவது வெளியூர் பள்ளிக்கூடத்தில சேருங்கன்னு. அவங்களால முடியல. அந்தப் பையன் ரயில்ல அடிபட்ட போது அது தாக்குதல்னு பிரச்சாரம் செய்யப்பட்டபோது கூட நாங்க பாதுகாப்புக்காகக் கூட எங்க சாதி இயக்கங்க கிட்ட போகல. போகக்கூடாதுங்கறதுல உறுதியா இருந்தோம். எங்க குடும்பத்துல இரண்டு திருமணங்கள் கலப்புத் திருமணம். (அந்த விவரங்களையும் சொன்னார்). தலித்கள்னு நாங்க அந்தத் திருமணத்தை சாதி அடிப்படையில் தடுக்கல. இப்ப நடந்ததை எல்லாம் பாக்கும்போது .ஒரு வேளை சாதிச் சங்கத்துல போயிருந்தாலாவது பாதுகாப்பு கிடைச்சிருக்குமோன்னு தோணுது..”

ஒரு விரக்தியில் அவர் பேசியதுதான் இது. ஆனால் இப்படியான மனநிலை ஒரு முன்னாள் இயக்கவாதியிடம் கூடத் தோன்றுவது குறித்து நாம் சீரியசாக சிந்திக்க வேண்டும்.

இங்கே சமூக ஆர்வலர்கள் மத்தியில் தொடரும் இறுக்கமான மவுனம்தான் இப்போது இதையும் இங்கே சொல்ல என்னை நிர்ப்பந்திக்கிறது.

மனித உரிமை செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸின் முகநூல் பதிவுகளின் தொகுப்பு இங்கே…

“ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்

நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், ஸ்வாதி பிராமணப் பெண் என்பதால்தான் அவருக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை என சொன்ன நிலையில், மற்றொரு பிரபலம், பத்திரிகையாளர் மஞ்சுளா ரமேஷ், தனது முகநூலில் இப்படித் தெரிவித்திருக்கிறார்.

Manjula Ramesh

ரோடில் சிரித்துப் பேசிக்கொண்டு போகும் இளம் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது…இப்படி பயப்படும் நிலைக்குத் தமிழ்நாடு மாறிவிட்டதே…நாம் எங்கே போகிறோம்?
மஞ்சுளா ரமேஷின் பதிவுக்கு எழுத்தாளர் தமயந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இயங்கும் பல பெண்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி

தர்மினி

‘கலகத்தை முதலில் தன் குடும்பத்திலிருந்தும் தன் உறவு முறைகளிடமிருந்தும் சொந்தச் சாதிக்குள்ளிருந்தும் தான் தொடங்கவேண்டும். எனக்கு அப்படித்தான் தொடக்கம்…’ என எழுதும் துரை. குணா நேற்று அதிகாலை காரணமெதுவும் சொல்லாமல் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நூலை வெளியிட்டதனால் தன் சொந்த ஊருக்குள்ளேயே விலக்கப்பட்டுத் துரத்தப்பட்டதை அதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் படும் துயரையும் எதிர்கொள்ளும் வழக்குகள் தடைகளைத் தொடர்ச்சியாகத் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருவதை காண்கிறோம்.கடந்த ஏப்ரல் 5ம் திகதி புதுக்கோட்டை சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றத்தினால் அவர் எழுதுவதன் பொருட்டான வரையறைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆதிக்க சாதி ஒடுக்குமுறை பற்றிய அவரது கருத்துகளின் பொருட்டு குடும்பத்தோடு வருடக்கணக்காக வழக்குகளை எதிர்கொள்ளும் துரைகுணா தற்போது பொய்க்குற்றச்சாட்டின் காரணமாகவே கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தெரிவிக்கிறார்.

தொடர்ச்சியாகத் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரளித்து வருபவர். அரசியற் கருத்துகளை முன் வைப்பவர். ஒடுக்கப்படுபவர்களுக்கான அவரது செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கான வழிவகைகளை அதிகாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன. 36 பக்கங்களைக் கொண்ட ‘ஊரார் வரைந்த ஓவியம்’ ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல். சங்கரனின் மகன் அப்படி என்ன மிகப்பெரும் தவறை அந்த ஊரில் செய்துவிட்டான்?

நாளைக்கு கூடிப்பேசி தீர்ப்பை வழங்குவதாக ஆதிக்கசாதியினர் சொல்வதும் அதைத் தொடர்ந்து கட்சிக்காரனை அழைத்து வரவேண்டாம் இது ஊர்ப்பிரச்சனை நாங்களே பேசித்தீர்த்துக்கொள்ளுவோம் என்பதாக அவர்களைத் தொடர்ந்து தம் தீர்ப்பைக்கேட்கும் குடிகளாகவே வைத்திருக்க அந்தரப்படுவதுமாக ஒரு பக்கம் அடுத்த நாள் விசாரணை பற்றி சொல்லப்படுகிறது. கட்சியினர் இளைஞர்களை விழிப்படையச் செய்வதும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது.

‘ என்னைக்கி காட்டுவிடுதியான் இந்த ஊருக்குள்ளே இந்தக் கமிணாட்டிக்கட்சியை கொண்டு வந்தானோ அன்னையிலேர்ந்து இந்த ஊரு குட்டிச் சுவராப் போச்சி, பேண்டு சட்டையலப் பொட்டுக்கிட்டு போனு ஒயற காதுல மாட்டிக்கிட்டு இவனுக பண்ற அட்டகாசம் இருக்கே சே..சே…தாங்க முடியலே.நம்மக்கிட்டே காவைத்து கஞ்சிக்கி கம்முகட்டுல துணிய வைச்சிக்கிட்டு கால் கடுக்க நின்னப்பயலுவ இன்னைக்கி காரூலப் போனா எப்புர்றா ஊருல மழை பேயும்’ என்றும் ஆதிக்கசாதியினர் பேசுவதை துரைகுணா எழுதியது இற்றைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னான கதையில் தான். இது எப்பவோ நடந்த பழைய கதையில்லை.

இந்நாவலில் அதிகமும் ஆளுக்காள் உரையாடல்களைச் செய்வதைக் கொண்டு தான் கதை செல்கிறது. மனிதர்கள் தம் ஆற்றாமைகளை, பயத்தை, ஒடுக்குமுறைகளை அவர்களது கதைகளால் தம் மொழியில் வெளிப்படுத்துகின்றனர்.

மறுபுறமாக, அடுத்த நாள் என்ன நடக்கப் போகிறது?அப்படி என்ன தவறைச் சங்கரன் மகன் செய்து விட்டான்? இவர்கள் கூடிக்கூடிப் பேசுமளவு என்ன தான் அவன் செய்த பிழை? என்ற கேள்வி படிப்பதற்கு உந்துதலை ஏற்படுத்துவதோடு அம்மனிதர்களின் வார்த்தைகள் அந்த ஊரைப்பற்றிய சித்திரத்தை நமக்குத் தந்தும் விடுகின்றன.

‘மதியம் நேரம் மடிந்து மாலை நேரம் வந்தது. அம்பலப்புளி மரத்தடியில்…சரம்மாறியான கேள்விகளுக்கு முன் சங்கரன் கொதிக்கிற எண்ணெயில தடுக்கி விழுந்த குழந்தை மாதிரி துடிதுடித்து மனம் அனத்தி நின்னான்? தான் பெற்றப் பிள்ளை செய்த பெரும் தவறை நினைத்து’

‘எங்கே வந்து முடிய வேண்டியப் பெரச்சன? என் ஊட்டுல வந்து விடிஞ்சிருச்சி. நாளைக்கி என்ன நடக்கப் போகுதோ? என்று கிட்டிப்போட்டு உதைக்கென உதைத்துக் கொண்டு இருந்தது சங்கரன் மனசுல…’ என எழுதியதைப் படிக்கும் நமக்கும் அப்படியென்ன பாதகத்தை அந்தப் பிள்ளை செய்தான் என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது.

இந்நூலின் மனிதர்கள் தங்களது இயலாத்தனங்களை காலாதிகாலமாக வழக்கமெனச் சொல்லப்பட்டுப் பழக்கமானவைகளைச் சுமந்து வாழும் நிலையின் பொருட்டு, குமுறிப் பேசுபவற்றை இயல்பான மொழியில், சிலேடைப்பேச்சுகளில் இயலாமைகளோடும் போராட்டங்களோடும் முன்வைப்பதாயிருக்கிறது.

தொடர்ந்து ஆற்றாமையோடு அதை வாசித்தபடி போனால் கதையின் முடிவில் தகப்பனும் தாயுமாக அவன் செய்த செயலையிட்டு அவனை ஊரை விட்டே தப்பிப்போகுமாறு பொதுகாப்பாய் அனுப்பிவிட்டு தாயும் தகப்பனும் நஞ்சருந்திச் சாகுமளவு ஆதிக்கசாதியினரின் ஒடுக்குதல்கள் இருப்பதும் பெரும் மன அவசத்தைத் தருகின்றது.

தாம்பாளத்தைத் தொட்டு திருநீறு பூசியதற்காகச் சங்கரனின் மகனைப் பூசாரி அடித்ததும் அதை விட தாம்பாளத்தை அவன் எப்படித் தொடலாம் என்ற பிரச்சனை ஊரையே கலவரப்படுத்தவதுமாக எழுதப்பட்ட கதையில் நடந்த மற்றுமொரு உரையாடல் துரைகுணாவையே ஊரைவிட்டு விலத்தி வெளியேற்றக் காரணமாகியதொன்றாய் அவரது குடும்பத்தவர்களும் பாதிக்கப்பட்டனர் என ஊரார் வரைந்த ஓவியம் தொடர்பாகப் படித்தவற்றிலிருந்து அறியமுடிகிறது.

இந்நூலுக்காக 2015ம் ஆண்டுக்கான வளரும் படைப்பாளர் விருது தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கியதன் பொருட்டு துரை.குணா ’என்னை அடித்து ஊரை விட்டு ஒதுக்கி விரட்டியடித்த என் ஊர் மக்களுக்கே, இவ்விருதைச் சமர்ப்பிக்கின்றேன்’ என்றவாறாக எழுதிய வரிகள், அவர் தன் சனங்களிடமிருந்தும் புறக்கணிக்கப்பட்ட வலியை வேதனையைக்காட்டுகிறது.

இப்போது இரு நாட்களாகப் பொய்க்குற்றச்சாட்டில் புதுக்கோட்டைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் துரை  குணா.

அதிகாரங் கொண்ட காவற்துறையினரின் நியாயம் சொல்ல முடியாத கைது துரை.குணாவுடைய எழுத்துகள் செயற்பாடுகளின் பொருட்டான அதிகாரவர்க்கத்தின் அநீதியும் மனிதவுரிமை மீறலுமாகும்.

ஊரார் வரைந்த ஓவியம்
கீழாண்ட வீடு வெளியீட்டகம்
விநியோக உரிமம் : கருப்புப் பிரதிகள் – தலித்முரசு
விலை ரூ.40 

தர்மினி எழுத்தாளர்.

தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாராகிறது ‘சய்ரத்’!

மராத்தியில் வெளியாகி வசூலைக் குவித்த சாதி ஆணவக் கொலை தொடர்பான படமான ‘சய்ரத்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. நாக்ராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தப் படம் ரூ. 100 கோடியை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தின் மொழியாக்க உரிமையை வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நடிகர்கள் தேர்வு விரைவில் தொடங்க இருப்பதாகவும் ஆகஸ்டு மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்…

இந்த படத்தை பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறேன். எழுத்தாளர் துரை குணா காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை பாருங்கள். பூபதி கார்த்திகேயனும் துரை குணாவும் தன்னை கத்தியால் குத்தினார்கள் என்று புகார் கொடுத்ததாக சொல்லபடுகிற சிவானந்தம், தனக்கு துரை குணா யார் என்று கூட தெரியாது. போலிஸ் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி அவர்களாகவே புகார் எழுதி இருக்கின்றனர் என்கிறார். அது மட்டும் அல்ல சிவானந்தம் மீது சின்ன கீறல் கூட இல்லை. இன்று அப்பகுதிக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டு இப்போதுதான் திரும்பி இருக்கிறேன். நாளை விரிவாக எழுதுகிறேன்.பல அதிர்ச்சி தகவல்கள் உண்டு. ( பட உதவி திரு.கண்ணன்)
____

மனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயன், எழுத்தாளர் துரை குணா ஆகிய இருவரையும் கரம்பக்குடி போலிஸ் நேற்று கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது.சிவானந்தம் என்பவரை இருவரும் 09.06.2016 அன்று இரவு 8.00 மணி அளவில் கத்தியால் குத்தினார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.கத்தியால் குத்த பட்டதாக சொல்லபடுகிற சிவானந்தம் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.அவரிடம் இன்று 11.06.2016 காலை 09:07 மணிக்கு 20 நிமிடம் தொலைபேசியில் பேசினேன். பூபதி கார்த்திகேயன் கரம்பகுடியில் பர்னிச்சர் கடை வைத்து இருக்கிறார்.நான் அவரிடம் 50,000 ரூபாய் கடனுக்கு பொருள் வாங்கினேன்.அதில் 42,000 ரூபாய் செலுத்திவிட்டேன்.

இந்நிலையில் கடந்த 09.06.2016 அன்று இரவு 8.00 மணி அளவில் நான் இரண்டு சக்கர வாகனத்தில் பூபதி கார்த்திகேயன் பர்னிச்சர் கடைக்கு முன்பு சென்று கொண்டு இருந்தேன். அப்போது என்னை வழிமறித்த பூபதி கார்த்திகேயன் என்னிடம் மீத பணம் கேட்டு இழிவாக பேசினார். தாக்கவும் செய்தார்.அருகில் இருந்த துரை குணா சின்ன கத்தியால் என் கையில் குத்தினார். அப்போது அங்கு யாரும் இல்லை என்றார். நான் அவரிடம் என்ன மாதிரியான கத்தி என்றேன்.இருட்டில் நடந்தினால் கத்தியை பார்க்கவில்லை என்றார்.

பூபதி கார்த்திகேயன் கடை அருகில் நிறைய கடைகள் இருக்கின்றன. பெட்ரோல் பங் இருக்கிறது. சம்பவம் கடைக்கு முன்பு நடந்து இருக்கிறது. அதுவும் 20 நிமிடம் தகராறு நடந்ததாம். ஆனால் அங்கு யாரும் இல்லை என்று சிவானந்தம் சொல்லுவது நம்பும்படியாக இல்லை. என்ன கத்தி என்று கூட சிவானந்தத்திற்கு தெரியவில்லை.

நான் ஆலங்குடி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டேன். அங்கு மெய்யப்பன் என்கிற போலிஸ் என்னிடம் வாக்குமூலம் வாங்கினார் என்று கூறினார். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு போலிஸ் என்னை அழைத்து வந்து இருக்கின்றனர் என்றார் சிவானந்தம். காயத்திற்கு எத்தனை தையல் போடப்பட்டு இருக்கிறது என்று கேட்டேன். தையல் போடுகிற அளவிற்கு காயம் இல்லை. சிறிய அளவில் கீறல் பட்டு இருக்கிறது என்றார். எனக்கு மனசு சங்கடமாக இருக்கிறது. அவர்களை போலிஸ் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. விசாரித்து விட்டு, விட்டுவிடுவார்கள் என்று கருதினேன். பூபதி கார்த்திகேயன் எனது நெருங்கிய உறவினர். நாங்கள் இருவரும் தலித் சமூகத்தினர். வழக்கினை நடத்த விருப்பம் இல்லை என்றார். நான் அவரிடத்தில் உங்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்களில் பிரச்னை இருந்து இருக்கு என்று தெரிகிறது. உங்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் கத்தியால் உங்களை குத்தினார்களா என்று கேட்டேன். நான் பொய் சொல்லவில்லை சார் என்றார். உங்களை போலிஸ் பயன்படுத்தி இருக்கிறது என்று பலரும் சொல்லுகிறார்கள். இது குறித்து என்ன சொல்ல வரிங்க என்று கேட்டேன். அமைதியாக இருந்தார். உங்களுக்கு தாக்குதல் நடந்து இருந்தால் அது கண்டிக்கதக்கது. ஆனால் இரண்டு தலித்துகளை மோத விட்டு போலிஸ் தங்களது பழிவாங்கும் உணர்ச்சியை பயன்படுத்தி இருப்பது உங்களுக்கு தெரிகிறதா? என்று கேட்டேன். ஆமாம் சார்..பூபதி கார்த்திகேயன் அண்ணன் இங்கு உள்ள கள்ள சாரத்திற்கு எதிராக போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராடி வந்தார் என்றார்.

பூபதி கார்த்திகேயன் மீதும் துரை குணா மீதும் போலிஸ் ஏன் வன்மம் கொள்ள வேண்டும்? கரம்பக்குடி காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு மீது சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையில் மட்டும் 5 வழக்குகள் நடந்து வருகிறது .இந்த வழக்கினை நடத்தி வருபவர்கள் பெரியார் அம்பேத்கர் பண்பாட்டு மயத்தின் பொறுப்பாளர் செல்வம், பூபதி கார்த்திகேயன் துரை குணா உள்ளிட்ட தோழர்கள். காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு பல தலித்துகளை விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து வருபவர்.இவரின் அத்து மீறலை தொடர்ந்து இந்த தோழர்கள் எதிர்த்து வந்தனர். கள்ள சாராயமும் சாதியமும் இந்த பகுதியில் தாண்டவம் ஆடுகிறது. கள்ள சாராய கும்பலிடம் சகாயம் அன்பரசு பணம் வாங்கி கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்கிற குற்றசாட்டுக்கு ஆளானவர்.

கரம்பக்குடி காவல் நிலையத்தில் பூபதி கார்த்திகேயன் மீதும் துரை குணா மீதும் குற்ற என் ; 187/2016 பிரிவுகள் 341,294(b),323,324,506(2) இ.த.ச.கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.சமிபத்தில் உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெறுகிற குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.ஆக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அது மட்டும் அல்ல எம்.எல்.சி.வழக்காக பதிவு செய்யப்பட்டு 10.06.2016 அன்று காலை 6.00 மணி அளவில் இருவரையும் அவர்களது வீட்டில் போலிஸ் கைது செய்து இருக்கின்றனர்.

போலிஸ் அடித்து சித்ரவதை செய்து இருக்கின்றனர் என்று நூற்று கணக்கான வழக்குகள் எம்.எல்.சி.போடப்பட்டும் ஒரு வழக்கில் கூட போலிஸ் யாரையும் கைது செய்யவில்லை. வேண்டும் என்றே போலிஸ் இவர்கள் இருவரையும் கைது செய்து இருக்கிறது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யும் உடந்தை. நேற்று முழுவதும் கரம்பக்குடி காவல் நிலைய தொலைபேசி என்னை போலிஸ் டி ஆக்டிவ் செய்து வைத்து இருந்தனர். நேற்று 10.06.2016 அன்று எஸ்.பி.இடம்.இதுபோன்ற சம்பவமே நடக்கவில்லை. காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு பல மீறல்களை செய்து வருபவர்.இது திட்டமிட்டு போடப்பட்டு பொய் வழக்கு என்று எடுத்து கூறினேன். அப்படியா நான் விசாரிக்கிறேன் சார் என்றார். காவல் ஆய்வாளர் மீது பல புகார் இருந்தும் அவர் மீது ஏன் எஸ்.பி.இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று கேட்டேன். அதற்கு அமைதியாக இருந்தார்.

ஆக..கரம்பக்குடி காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு மீதும் புதுகோட்டை எஸ்.பி.மீதும் வேண்டும் என்றே கடமையை புறக்கணித்த வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்திற்காக வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.எஸ்.பி.மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் பனி இட நீக்கம் செய்யப்படவேண்டும்.

ஜுன் 28: கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி தரும் நாளாக இருக்குமா?

வன்னியர் சாதி பெண்ணை காதலித்து, மணந்தார் என்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அந்த இளைஞர் தருமபுரி ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்தார். அவர் இளவரசன். தற்கொலை வழக்காக சொல்லப்பட்டு கொலை வழக்காக விசாரணை நடந்து வரும் நிலையில் இளவரசனின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையும் நீதியும் எந்த திசையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலையில் திருச்செங்கோடில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த கோகுல்ராஜின் கொலை நடந்தேறியது. இதுவும் தண்டவாளத்தில் நடந்த கொலைதான். இந்த முறை கவுண்டர் சாதி அவரைக் கொன்றதில் பெருமைத் தேடிக் கொண்டது.

“அவனுக்கு இப்படியொரு சாவு வரும்னு நாங்க எதிர்ப்பார்க்கலை. காலேஜுக்குப் போனவன், இப்படி பொணமா திரும்பி வந்தான். தம்பியைக் கொன்னது முழுக்க முழுக்க பப்ளிசிட்டி தேடிக்கத்தான். எங்களுக்கும் சரி அவனுக்கும் சரி விரோதிங்கன்னு யாரும் கிடையாது. அவங்க கம்யூனிடி காரங்ககிட்ட நான்தான் இந்த கம்யூனிடியைக் காப்பாத்தறேன்னு பேர் எடுக்கணும். அதன் மூலமா பணமும் அரசியல் அதிகாரத்தையும் சம்பாதிக்கணுங்கிறதுதான் தம்பி கொலைக்குக் காரணம். இப்ப வரைக்கும் அவங்க அதிகாரம், செல்வாக்கைப் பயன்படுத்தித்தான் தப்பிச்சுட்டு வர்றாங்க. அவங்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கும். எங்களுக்கு ஒன்னும் இல்லை. அவங்க அடிச்சா, நாங்க வாங்கித்தானே ஆகணும்” விரக்தியுடன் பேசினார் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன். சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்த அவர்,

“இவங்க உண்மையை வெளியே கொண்டுவரமாட்டாங்கன்னு தெரிஞ்சுப்போச்சு. மீடியாவே குற்றவாளியை ஹீரோ மாதிரி காமிக்குது. குற்றம் செஞ்ச சாதாரண மனுஷன், இப்படி மீசை முறுக்கிக்கிட்டு பேச முடியுமா? அதிகாரத்தோட துணையில்லாம இதெல்லாம் முடியாது” என்று கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் தலைமறைவாகி, ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த தருணத்தில் இப்படி குறிப்பிட்டார். அந்த சமயத்தில்  சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்குத் தொடுக்க முயற்சித்து வருவதாக  கலைச்செல்வன் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தடுத்த நகர்வுகளாக யுவராஜ் சரணடைந்ததும், ஆறு மாத சிறைவாசத்துக்குப் பின் ஜாமீன் பெற்று வெளியே வந்ததும் நடந்தேறியது. இப்போதும் ஊடகங்கள் யுவராஜின் பேட்டிகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தது அவருடைய குடும்பம். இந்த வழக்கு சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கோகுல்ராஜின் தாயார் சித்ரா தாக்கல் செய்துள்ள மனுவில், வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால், தலித் பிரிவைச் சேர்ந்த தமது மகன் கோகுல்ராஜை, யுவராஜ் என்பவர் கொலை செய்துள்ளார். இந்நிலையில் யுவராஜ் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால், சிறையில் ராஜ மரியாதையுடன் சிபிசிஐடி போலீசார் அவரை நடத்துகிறார்கள்

மேலும் இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணத்திற்கும், யுவராஜ் தான் காரணமாக இருப்பார். எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் இருவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் தெரிய வரும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது 725 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், யுவராஜ் உட்பட 17 பேரும், வரும் 28 ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  இதனையடுத்து வரும் 28ம் தேதி கோகுல்ராஜ் கொலை தொடர்பாக தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.

 

 

கோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் தமிழில் பாட முயன்றதற்காக தீட்சிதரால் அடித்து வீசப்பட்டார். பல ஆண்டுப் போராட்டங்களுக்கு பின் நீதிமன்றம் சென்று, திருச்சிற்றம்பல மேடையேறி தமிழில் பாட அரசாணையும் கிடைத்து அவர் பாடியபோது, 5000 ஏக்கர் கோயிலை கழுவி தீட்டு கழித்தனர். அந்த ஆறுமுகசாமி வன்னியர். அவருக்காக ஆலய பிரவேசத்திற்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானவர்களில் மூவர் விசிக வினர். 

இந்த நிலையில்,  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள குமாரபாளையம் கோயில் விழாவில் கரகம் எடுக்க முனைந்த வன்னியர்களை, நாயுடுக்கள் தடுத்துள்ளனர். தங்கள் சாதியைவிட வன்னியர்கள் கீழானவர்கள் என அவர்கள் காரணம் கூறியுள்ளனர். ஆண்ட பரம்பரை எனக் கூறிக்கொள்ளும் வன்னியர்களும் ‘தீண்டாமை’ அன்பவிக்கிறார்கள் என்கிற விவாதம் சமூக் வலைத்தளங்களில் நிகழ்ந்து வருகிறது.

Kallal Anbalagan நாமக்கல் மாவட்டத்தில் வன்னியர்கள் இழிவானவர்கள் எனக் கருதி கோவிலுக்குக் கரகம் எடுத்துச் செல்ல நாயுடுக்கள் எதிர்ப்பு.

Kandasamy Subrகொங்கு மண்டலத்தில் குறிப்பாக பழனி உடுமலை, பொள்ளாச்சி, கிணத்து கடவு பகுதிகளில் , பள்ளர் , பறையர் தோழர்களிடம் அடக்கி வாசிக்கும் நாயக்கர்களும் கவுண்டங்களும்உழைக்கும் வன்னிய மக்களை, அருந்ததியரை விட மோசமாக நடத்துவார்கள்!
ஒடுக்குமுறை சந்தித்திருக்கும் நேரங்களில் வன்னியர்களில் நலனுக்குக்காகப் போராடிவரும் பாமகவின் நிலைப்பாடு எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு ஆலய நுழைவு போராட்டத்தில் பாமக எப்படி நடந்துகொண்டது என்பது பற்றி, அதில் பங்கேற்ற சமூக செயல்பாட்டாளர் பேரறிவாளன் இப்படிச் சொல்கிறார்…

“நானும் ஆலய பிரவேசத்தின்போது அங்கே இருந்தேன். ஆனா கோயிலுக்குள்ள போகலை போராட்ட ஒருங்கிணைப்பாளர் மகஇக வினர் காலை ஆலயம் நுழைந்து ஆறுமுகசாமி பாடியபோது தீட்சிதர்கள் அனைவரும் ஊளையிட்டு பாடவிடாமல் செய்தனர். அதனால் மாலை திரும்பவும் போராட்ட குழுவினர் திரும்பவும் உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது காவல்துறை தடியடி நடத்தி பலரை கைது செய்தனர். அதில் விசிக தோழர்கள் இருவரும், அண்ணாமலை பல்கலைகழக வரலாற்று பிரிவு தலித் சமூகத்து மாணவர் அன்பழகனும் மற்றவர்களோடு கைதாயினர். ஆறுமுகசாமி வன்னியர் என்பதற்காகவே போராட்டக் குழுவில் இடம்பெற்ற பா.ம.க வினர் ஒருவர் கூட கைதாகவும் இல்லை, பிரச்சனைக்குரிய அந்த இடத்துக்கு வரவும் இல்லை”.

‘வன்னியர்’ என்கிற அட்டையைத் தூக்கிப் பிடித்து சாதி படிநிலையில் தனக்குக் கீழே உள்ளதாக தலித் மக்களை ஒடுக்கி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கும் பாமக, நிகழ்காலத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு ஆளாகியிருக்கியிருக்கும் தன் சாதியினரின் உரிமை மீட்க என்ன செய்யப் போகிறது? சாதி படிநிலையில் ஒடுக்குவதும் ஒடுக்கப்படுவதும் பெருமைக்குரியதே எனப் பேசப் போகிறதா? அல்லது ஒடுக்குமுறை எதிர்ப்பு போராடுமா? ஒடுக்குமுறையை எதிர்க்குமானால், ஒடுக்குவதையும் கைவிடும் வாய்ப்புல்லது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறு?!

 

“தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு என்று பெயர் வைக்கவேண்டும்”: யுவராஜின் சகா யோசனை

மதம், அபினை போல போதையானது என மார்க்ஸ் சொன்னது, சாதிக்கும் பொருத்தமாகப் பொருந்திப் போகிறது. சாதி என்னும் போதையில் ஆழ்ந்து கிடக்கும் சிலர், தாங்கள் உளறுவதெல்லாம் வரலாறு என்று பரப்பி வருகிறார்கள். ஆண்ட சாதி பெருமிதங்களுக்கு நடுவே சாதி போதையில் ஆழ்ந்த ஒருவர், தமிழ்நாட்டை கவுண்டர் நாடு ஆக்க வேண்டும் என்கிறார்.

அவருடைய பதிவைக் கீழே தந்திருக்கிறோம். Dheeran Saravanan Gurusamy Gounder என்ற பெயரில் முகநூல் உள்ள பதிவு இது:

“உலகை ஆண்ட ஒர் இனம் இன்று நாடாள முடியாம கிடக்கிறது. போதிதர்மனை உலகிற்கு தந்த இனம் அதன் சுவடுகளை மட்டும் இன்று காணமுடிகிறது. உலகிலேயே மிகப்பெரிய அங்கோர்வாட் கோவிலை தந்த இனம் இன்று தெருக்கோடியில் நிற்கிறது.

வழியேங்கிலும் கவுண்டரின் வரலாறு சுவடுகள் கிடக்கின்றன
அலெக்சாண்டரை வீழ்த்திய புருசோத்தமன் ஒரு கவுண்டர்.
அசோகரை எதிர்த்து போர் புரிந்த அரசன் ஒரு கவுண்டர்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் அருண்மொழி வர்மன் இவரும் கவுண்டர் இனமே.
உலகில் நாள்காட்டியை உருவாக்கிய மாயோன் மக்கள் இவர்களும் கவுண்டர்கள்.
பெங்களூரை உருவாக்கியவர் கெம்பு கவுண்டர்.
உலக கடற்பரப்பை பல நூறு ஆண்டுகள் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த ஒரே இனம் கவுண்டர் இனம் மட்டுமே.
மேற்கத்திய மக்கள் ஆதமே நிர்வாணமாக திரியும் போது உடையை அணிய கற்றுக்கொடுத்து உடையையும் வழங்கியவன் கவுண்டனே.
சக்கரயுகம் தேவை என்பதால் சக்கரத்தை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவனும் கவுண்டனே.
குமரிக்கண்டம் அழியும் என்று சரியாக காலத்தை கணித்து ஒரு உயிர்கள் கூட சாகமல் அனைத்தையும் பாதுகாப்பாக வெளியேற்றி, அரியவகை தாவரங்களை பாதுகாத்த இனம் கவுண்டர் குமரிக்கண்டம், மாயோன் கண்டம், பல்லவ கண்டம், பாண்டிய கண்டம், சோழ கண்டம், சேர கண்டம் முதல் சிந்துச்சமவெளி வரை பரவி வாழ்ந்த ஒரே குடி மூத்த குடி உலகின் முதல் குடி ஆதி குடி ஆண்ட குடி நாகர், இயக்கர், வேடர் என்ற கவுண்டர் குடியே.
வரலாறு தெரியாத இனத்தால் வரலாற்றை படைக்க முடியாது. வரலாராய் வாழ்ந்த இனம் இன்று தனது வரலாற்றை இழந்து நிற்கிறது இது காலத்தின் கொடுமை. குமரியில், சிந்துவில் இருந்து சென்ற ஒரே இனம் பல காலநிலையின் காரணமாக அந்தந்த இயற்கையின் இடத்திற்கு ஏற்றவாறு ஒரு மொழியின் ஒலிப்புத்தன்மை பல மொழிகளாக உருவெடுத்துள்ளது
ஆறுபடை வீடுகளில் மட்டும் அல்ல கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் கூட கவுண்டருக்கு மண்டபப்படி உள்ளது இப்படி தமிழ்நாட்டில் வேறு எந்த சாதிக்கும் கிடையாது.
கள்ளழகருக்கு இன்று கூட சீதனப்பொருட்கள் கவுண்டர் வீட்டில் இருந்தே செல்கிறது.
கொடைவள்ளல் என்று பெயர் எடுத்த பாரி, ஓரியும் கவுண்டரின் முன்னோரே. கொள்ளைக்கார இஸ்லாமியனையும்,கொலைகாரன் கிருத்துவனையும் கதிகலங்க வைத்த இனம் கவுண்டர் இனமே. இறைவன் ஒருவரே அவர் சிவன் மட்டுமே சிவனுக்கே கண் கொடுத்த கண்ணப்பனார் கவுண்டரே.  இந்திய விடுதலைப்போருக்கு வெள்ளக்கார கிருத்துவனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி முதன்முதலில் போராடிய இனம் கவுண்டர் இனமே. இப்படி மிக நீண்ட வரலாறு கொண்ட ஒரே இனம் கவுண்டர் இனம் மட்டுமே அதனால் தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு என்று பெயர் வைத்தாலும் தவறில்லை.
இனியாவது நமது இனம் அழியாமல் காப்போம்…….
ஒற்றுமை நிறைந்த சமூகமே!!!
உயர்வான சமூகம்!!!!!
மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை

மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

மாதவராஜ்

மாதவராஜ்
மாதவராஜ்

தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன.

ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக உருப்பெற்றது. இந்த அணி வெற்றி பெறும் என நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேமுதிக, தாமாகா வோடு இணைந்து தேர்தலை சந்தித்தது. மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தும், ஆட்சிக்கு வந்தால் எதற்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற தெளிவான பார்வையோடும், கூட்டணி ஆட்சி என்னும் முழக்கத்தோடும் மாற்று அரசியல் பேசியது.

பீ டீம் முத்திரை:

இரு கட்சிகள் மீதும் வெறுப்பும், அதிருப்தியும் கொண்ட மக்கள், இந்த அணியை நம்பிக்கையோடு பார்க்கத் துவங்கினர் என்பது உண்மை. தங்கள் கட்சியிலிருந்து இந்த கூட்டணி பக்கம் மக்கள் திரும்பி விடக் கூடாது என்னும் நோக்கத்தோடு, தனக்கே உரிய அரசியல் தந்திரத்தோடு திமுக, உடனடியாக மக்கள் நலக் கூட்டணியை அதிமுகவின் ‘பீ’ டீம் என முத்திரை குத்தியது. அதிமுகவின் மீது காலம் காலமாய் வெறுப்பு கொண்ட தங்கள் கட்சியின் அபிமானிகளும் ஆதரவாளர்களும் மக்கள் நலக் கூட்டணி நோக்கித் திரும்புவதை, ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விடும் உத்தி அது. ஓட்டுகளைப் பிரித்து அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும் நோக்கம் இருப்பதாக இழிபடுத்துவதால், மக்கள் நலக் கூட்டணி முன் வைத்த மாற்று அரசியல் குறித்த கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என்பதும் அவர்களின் செயல் திட்டமாக இருந்தது.

முதலாளித்துவ ஊடகங்கள்:

தமிழக அரசியலில் ஒரு மாற்று உருவாவதை விரும்பாத முதலாளிகளும், முதலாளித்துவ ஊடகங்களும் இயல்பாய் திமுக, அதிமுகவுக்கு ஆதரவாய், தங்களுக்குண்டான ஆக்டோபஸ் கரங்களோடு செயல்பட்டனர். இந்த கூட்டணியின் தலைவர்களில் வைகோவிடம் இருந்த உணர்ச்சி வசப்படும் போக்கு மற்றும் விஜய்காந்த்திடம் காணப்பட்ட உடற் கோளாறுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, திரும்பத் திரும்ப அவைகளை மட்டுமே பேசியும், காட்டியும் அவர்களை கோமாளிகளாக சித்தரித்தனர். தனிநபர்கள் மீது கட்டமைக்கிற பிம்பங்களே, மக்களிடம் செல்வாக்கு செலுத்துகிறது என்னும் புரிதலில் இருந்து இந்த உளவியல் ரீதியான தாக்கத்தை இடைவிடாமல் செய்தனர். இதிலும் மக்கள் நலக் கூட்டணி முன்வைத்த மாற்று அரசியல் சிந்தனைகளை வீழ்த்தும் நோக்கமே இருந்தது.

மாற்று முழக்கமிட்ட மதவெறி, சாதி வெறி, இனவெறி கட்சிகள்:

தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட மதவெறி பாஜகவும், ஜாதி வெறி பாமாகவும், இனவெறி நாம் தமிழரும் திமுக, அதிமுகவுக்கு தாங்களே மாற்று என்று பிரச்சாரங்களில் பேசினர். மக்களிடம் ‘மாற்று அரசியல்’ குறித்த சிந்தனைகளில் குழப்பங்களையும், தயக்கங்களையும் ஏற்படுத்துவதற்கு இந்த சூழலும் காரணமாய் இருந்தது.

கருத்து திணிப்புகள்:

அடுத்து களம் இறக்கி விடப்பட்டன கருத்துக் கணிப்புகள். சில கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாகவும், சில கருத்துக் கணிப்புகள் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருந்தன. எதிலும் மாற்று அரசியல் பேசியவர்களுக்கு இடமேயில்லாமல் இருந்தது. இதுவும் திட்டமிடப்பட்ட செயலே. இந்த இரு கட்சிகளில் ஒன்றுதான் வரும் என்ற நிலையை முன் வைத்ததால், இரு கட்சிகளிலும் உள்ளவர்களிடம் மாற்று அரசியலுக்கான நேரம் இதுவல்ல என்பதும், நம் பிரதான எதிரியை முதலில் வீழ்த்துவதுதான் இப்போதைக்கு சாத்தியம் என்பதும் படிய வைக்கப்பட்டது.
மாற்று அரசியல் முயற்சிகளை அரவமில்லாமல் ஓரம் கட்டும் வேலையை கருத்துக்கணிப்புகள் செய்தன.

வீழ்த்திய பணம்:

இறுதியாக அடித்து வீழ்த்தியது பணம். குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் திமுகவும், அதிமுகவும் வெறி கொண்டு செயல்பட்டனர். பகிரங்கமாக திமுகவும் அதிமுகவும் மக்களுக்கு பணத்தை வாக்களிக்க கொடுத்தனர். கடைசி இரண்டு நாட்களில் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் அந்த இரு கட்சிகளுக்கும் நாடி நரம்பெல்லாம் ஓடிக்கொண்டு இருக்கிறது, மக்கள் சாய்ந்து விட்டனர். மக்கள் நலக் கூட்டணி முன்வைத்த மாற்று அரசியல் எழுந்து நிற்கவில்லை.

மிகத் துரித காலத்தில், அவசரம் அவசரமாக எல்லாம் நடந்தேறி இருக்கின்றன. சட் சட்டென்று மக்களின் கவனத்தை சிதைக்கவும், திசை திருப்பவும் வல்லமை கொண்ட முதலாளித்துவ அமைப்பில் இப்படித்தான் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்படுகிறது. அதிசயங்கள் எப்போதாவதுதான் நிகழும்.

தூவப்பட்ட விதைகள்:

ஆனால், எந்த தடவையும் போல் இல்லாமல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மாற்று அரசியல் குறித்தும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும் முடிந்த வரையில் பேசப்பட்டு இருக்கிறது. உரையாடல்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. விதைகள் தூவப்பட்டு இருக்கின்றன. அவை மக்களிடம் எங்கோ ஒரு ஓரத்தில் தங்கி இருக்கவேச் செய்யும். இதுதான் எல்லோருக்குமான நம்பிக்கை.

ஆட்சியில் இருந்து, அதிகாரத்தில் அமர்ந்துதான் மக்கள் நலக் கூட்டணி தாங்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பதில்லை. அந்த அறிக்கையில் தாங்கள் முன்வைத்த நல்ல அம்சங்களை, மக்கள் நலத் திட்டங்களை தெருவில் மக்களைத் திரட்டி நடத்தும் போராட்டங்களின் மூலமும் நிறைவேற்ற முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை வஞ்சிக்கிற போது, முழு வீச்சோடு களத்தில் நின்று போராடி அவைகளை முறியடிக்கவும் முடியும். போராட்டங்களே சிந்தனைகளுக்கு நீர் வார்க்கும். தேர்தலின் போது, விதைத்த விதைகள் மண்ணுக்கு மேல் முளை விட ஆரம்பிக்கும்.

தொடர்ந்து இயங்க வேண்டும்:

மக்கள் நலக் கூட்டணி தொடர்வதும் இயங்குவதும்தான், தேர்தலின் போது அவர்கள் மீது வீசப்பட்ட பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் பதில் சொல்லும். மிக முக்கியமாக அவர்கள் முன்வைத்த மாற்று அரசியலை மக்கள் முழுமையாக நம்பத் தொடங்குவர். இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் மிக முக்கிய பொறுப்பு இருக்கிறது. ’எங்கள் நோக்கம் உன்னதமானது, நாங்கள் எங்கள் பயணத்தை தொடர்வோம்’ என்னும் தொல்.திருமாவளவனின் வார்த்தைகள் அதற்கான வாசலை திறந்து வைக்கட்டும்.

மாதவராஜ், எழுத்தாளர்

புனித திரு உரு’ பிம்பங்கள்!

அ. மார்க்ஸ்
அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

நமது அரசியல் தலைவர்கள் பற்றிய ‘திரு உரு’பிம்பங்களைக் கட்டமைப்பது, அப்பழுக்கற்ற iconic images உருவாக்குவது முதலியன ஆபத்தானது என அருள் எழிலன் கூறியுள்ளது முக்கியமான ஒன்று. காமராசர் பற்றிக் கிட்டத் தட்ட ஒரு குட்டிக் கடவுள் என்கிற அளவு பிம்ப உருவாக்கம் நடதுள்ளதை அவர் குறிப்பாகக் கூறியுள்ளார்

காமராசர் குறைகளே இல்லாதவர் என்பதல்ல. ஆனால் காமராசர், கக்கன் முதலானோருக்கு இத்தகைய பிம்பம் உருவானது எப்படி என்பது பற்றியும் நாம் ஆராய வெண்டும். இன்றைய தலைவர்களுடன் ஓப்பிட்டு அது உருவாகிறது. மூன்று முக்கிய அம்சங்களில் அவர்கள் இன்றைய தலைவர்களிடமிருந்து வேறுபடுத்தப் படுகிறார்கள்.

1..எளிமை 2. ஊழலின்மை 3. தன் குடும்பத்தினரை வாரிசுகளாக உருவாக்காமை. குறிப்பாகத் தன் அம்மாவைக் கூட அவர் தன்னுடன் கொண்டு வைத்துக் கொண்டால் அவரோடு சில உறவினர்களும்கூட வந்துவிடுவார்கள், அதன் மூலம் சில தவறுகள் நடக்கலாம் என அதை அவர் தவிர்த்தார் என்கிற செய்திகள் எல்லாம் காதில் விழும்போது இன்றைய தலைவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் கடவுளர் ரேஞ்சுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

இது பிரச்சினை இல்லை. பிரச்சினை எங்கு வருகிறது எனால் அவர்கள் மீது விமர்சனகளே கூடாது என்கிற அளவிற்குப் போகும்போதுதான். காமராசரிடமும் பல தவறுகள் இருக்கத்தான் செய்தன. அரசியல் ரீதியாகவும் இருந்தன. முதுகுளத்தூர் கலவரத்தைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். கலவரத்தை நிறுத்தணும்னா அவங்க ஆட்களில் நாலுபேரைச் சுட்டுத் தள்ளுங்க என காமராசருக்குப் பெரியார் அறிவுரைத்ததாகவும் உடனே காமராசர் உத்தரவிட 5 அப்பாவித் தேவரினத்தவர் பிடித்துச் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் கலவரம் நின்றதெனவும் இங்கு ஒரு கதை உண்டு. அப்படி காமராசரிடம் பெரியார் சொன்னாரா என்பது ஒரு பக்கம். ஆனால் அப்படி ஐந்து அப்பாவிகள், கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பிடித்து வரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது உண்மை. காமராசரின் இந்தச் செயலை எப்படிச் சரி எனச் சொல்ல இயலும்? இப்படி நான் சொல்வதை ஒரு வேளை அருள் எழிலனே கூட ஏற்காமல் போகலாம். இப்படி நான் சொல்வதற்காக் என்னை ஒரு தலித் விரோதி என்றும் கூட யாரும் சொல்லலாம்.

எல்லோரிடமும் நல்லவைகளும் உண்டு, எதிர்மறை அம்சங்களும் உண்டு. தந்தை பெரியாரை நான் முழுமையாகக் கொண்டாடுகிறேன். ஆனால் அதற்காக அவர் குத்தூசி குருசாமியை நடத்திய விதத்தை ஏற்றுக் கொள்ள இயலுமா?அதேபோல சினிமா என்கிற கலைவடிவத்தை 5 தீமைகளில் ஒன்று என முற்றாகப் புறக்கணிக்கச் சொன்னதையும் வீட்டில் கூடத் தமிழிலேயே பேசாதீர்கள் எனச் சொன்னதையும் மிகவும் ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் அப்படியே எடுத்துக் கொள்ள இயலுமா?

கார்ல் மார்க்சைவிடச் சிறந்த அறிஞர் ஒருவர் உலக வரலாற்றில் காண்பது அரிதுதான். அதற்காக அவர் அரசியல் ரீதியாக பகூனினை எதிர் கொண்ட விதத்தையும் சொந்த வாழ்க்கையில் ஹெலன் டெமூத்திடம் நடந்து கொண்டதையும் எப்படி விமர்சிக்காமல் இருக்க இயலும்

சோஷலிசக் கட்டுமானத்தில் தவறுகள் லெனின் காலத்திலிருந்தேதான் தொடங்குகின்றன.

இதையெல்லாம் சொல்லித்தான் ஆக வேண்டும். சோல்லாமல் இருப்பதுதான் பல மிகைப்படுத்தப்படல்களுக்கும், அசட்டு அரசியல் களுக்கும் பல தவறுகளுக்கும் காரணமாகின்றன.

2. இப்படித் தெய்வத் திரு உருக்களையும் கூட விமர்சனத்திற்குள்ளாக்கும் நெஞ்சுரம் இன்றைய காலத்தின் தேவை என அருள் எழிலன் சொல்வது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இங்கே முற்றிலும் எதிர்மறைத் திரு உருக்களாகக் கட்டமைக்கப்பட்டவர்கள் குறித்த சில மறுபார்வைகளும் அவசியம்.

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படிக் காமராசரின் எதிர்மறை அம்சங்களைப் பேசுவது என்பது அவரை முற்றாக மறுப்பது ஆகாதோ அவ்வாறே எதிர்மறை icon ஆகக் கட்டமைக்கப்பட்ட ஒருவரின் ஏதேனும் ஒரு சரியான அம்சத்தைச் சொல்வது என்பது அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வதோ கொண்டாடுவதோ ஆகாது.

வைகோ சமீபத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலையிடப் போனதை அவரை திரு உருவாகக் கொண்டாடுபவர்கள் எதிர்த்தது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் அவரை எதிர்மறை திரு உருவாக நினைப்பவர்கள் எதிர்த்ததும் அத்தனை அபத்தம்தான். ஒரு வெகுஜன அரசியலைச் செய்யும் அரசியல்வாதி தேவர் சிலைக்கு மாலையிடப் போனதைப் புரிந்து கொள்ள வெண்டும் என நான் எழுதியதற்காக ஏன்னைத் திட்டி இடப்பட்ட பின்னூட்டங்களைப் பாருங்கள்.

முத்துராமலிங்குருக்கு இம்மானுவேல் சேகரன் அவர்களின் கொலை அதை ஒட்டிய கலவரங்கள் ஆகியவற்றில் உள்ள பங்கிற்காக அவரை நாம் கண்டிப்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அவருக்கு வேறு வரலாறுகளுமுண்டு. தேவர் சாதி ஒர் பக்கம் ஆதிக்க சாதி.இன்னொரு பக்கம் அது ஒடுக்கப்பட்ட சாதியும் கூட. குற்றப்பரம்பரையாக கடும் ஒடுக்கு முறைகளுக்கு ஆளானவர்களுக்கு அந்தக் கொடுமையிலிருந்து விடுதலைபெறப் போராடியவர் அவர்.

சுதந்திரப்போராட்டத்திலும் அவருக்கு ஒரு பங்குண்டு. சுதந்திரப் போராட்டத்திலும் நெல்லைச் சதிவழக்கிலும் பத்தாண்டுகளுக்கும் மேல் சிறைப்பட்டிருந்த தியாகி தோழர் ஐ.மாயாண்டி பாரதி அவர்களை நானும் சுகுமாரனும் கடைசியாகச் சந்தித்த போது அவர் சில பழைய புகைப்படங்களைக் காட்டினார். அதில் ஒன்றில் முத்துராமலிங்கர் ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளார். காலடியில் ஐ.மாபா. அந்தப் படத்தின் ஒரு பிரதி சுகுமாரனிடம் உள்ளது. இதையேலாம் கணக்கில் எடுத்துக் கொள்வதென்பது அவரின் பெயரால் இன்று நடக்கும் அரசியலை ஏற்றுக் கொள்வதென்பதாகாது.

3. அரசியலில் மட்டுமல்ல அரசியலுக்கு அப்பால் இவ்வாறு உருவாக்கப்படும் திரு உருக்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. நீதியரசர் சந்துரு போன்றோர் இன்று அவ்வாறு விமர்சனத்திற்கு அப்பா்ற்பட்டு ச் சிலரால் திரு உருக்களாகக் கட்டமைப்பதிலும் ஆபத்துகள் உண்டு. அவர்களிடம் உள்ள பிரச்சினைகளையும் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.

******************************************************************************

இந்த விவாதத்தில் நான் தலையிடுவதில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்துதான் நான் இந்த ரிஸ்கை எடுத்துள்ளேன். இன்று இந்த “iconisation” என்பது எத்தனை மிகை எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்களுக்கும், அசட்டு அரசியல்களுக்கும், ஆபத்தான போக்குகளுக்கும் காரணமாகி உள்ளது என்பது குறித்து விரிவாகவே எழுத உள்ளேன்.

அ.மார்க்ஸ், ஓய்வுபெற்ற பேராசிரியர்; எழுத்தாளர்.

பெரிய மாயத்தேவர் பாரதிராஜா பெயர் சர்ச்சையும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதமும்

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்
1)தேர்தல்பணிகள் தொடங்கிய நேரத்தில் கட்சி கூட்டமொன்றில் திமுக பொன்முடி, சாதி பற்றி பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பொன்முடியின் சொந்த குடும்பத்தில் நடந்திருக்கும் கலப்புமணங்களை வரிசைப்படுத்திக் காட்டி அவரை சாதிரீதியாக யோசிக்கக் கூடாது என்று எழுதப்பட்டது.

2)இப்போது முகநூல்பக்கத்தில் தன்பெயரை மட்டுமே போட வாய்ப்பிருந்தும் சாதிப்பட்டத்தோடு கூடிய ‘மாற்றமுடியாத’தன் அப்பாவின் பெயரோடு தன் பெயரை குறிப்பிட்டிருக்கிறார் பாரதிராஜா.(பெரிய மாயத்தேவர் பாரதிராஜா)இந்நிலையில் சினிமாத்துறையைச் சேர்ந்த சிவா என்பவர் இதை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

வாசிக்க: “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. கல்யாணம் பண்ணும் போது சாதி பார்க்கணும்”: திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி

பாரதிராஜாவின் பங்களிப்புகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு எழுதப்பட்டிருக்கும் விமர்சனம் அது. பாரதிராஜாவின் அப்பா பெயர் சம்பந்தப்பட்டதல்ல அப்பதிவு.மாறாக வேதம்புதிது போன்ற விமர்சன பூர்வமான படங்களை எடுத்த பாரதிராஜா இச்சூழலில் சாதியோடு தொடர்புடைய இப்பெயரை சூடுவது பற்றியது அவ்விமர்சனம்.(மாயத்தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?என்பதே தலைப்பு.பாரதிராஜா வேதம்புதிது படத்தில் கேட்ட அதே கேள்வி)

சாதி அடையாள அரசியல் மேலோங்கிவரும் சூழலில்-குற்றபரம்பரை படம் தொடர்பாக அவர் சாதிய ஆவேசம் காட்டிவரும் நிலையில் -தமிழ் சினிமா உலகில் செயல்பட்டுவரும் சாதிசார்ந்த லாபி உள்ளிட்ட செயல்பாடுகள் உள்ள நிலையில் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.ஆனால் பாரதிராஜா பற்றி ஒருவரி கூட விமர்சனமாக பார்க்காமல் அவர் வீட்டிலும் வைரமுத்து வீட்டிலும் நடந்திருக்கும் கலப்புமணங்களை விவரித்து மேற்கண்ட பதிவை மறுத்திருக்கிறது ஒரு விமர்சனம். (கலப்புமணம் சரிதான்.ஆனால் அது சாதியமைப்பில் என்னவாகிறது என்கிற ஆய்வும் தேவையாகிறது.எனவே சொந்த வாழ்வின் கலப்புமணங்களை காட்டியே எல்லாவற்றையும் எதிர்கொள்வது ஒருவகை தந்திரம்.

கலப்புமணம் என்றால் யார் வீட்டோடு செய்துகொண்டார்கள்?பெண் வீட்டார் யார்?ஆண் வீட்டார் யார்?நடிகர் சிவக்குமார் பாஷையில் சொல்வதென்றால் ‘புழங்கும் சாதி’யா?என்றெல்லாம் பேச வேண்டியுள்ளது)

இந்த இரண்டு விமர்சனத்தையும் எழுதியிருப்பவர் ஒருவரே.அவர் நண்பர் (உண்மையிலேயே)வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்.அவரின் இந்த இரண்டு விமர்சனங்களுக்கு (மட்டும்)நூற்றுக்கும் மேற்பட்ட விருப்பக்குறிகள்.அவரே வியப்படைந்திருப்பார்.

வாசிக்க: பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!

சுபகுணராஜனின் இந்த உணர்ச்சிபூர்வமான எதிர்கொள்ளலோடு விசயம் முடியவில்லை. பாரதிராஜாவின் அப்பா பெயரை ஒட்டி தன் அனுபவங்களை கூறுவதாக தொடங்கும் அவரின் பதிவு பிரமலைகள்ளர்களின் கடந்த காலத்தை காட்டி நிகழ்காலத்தின் நியாயத்தை கோருகிறது.

கடந்த கால வரலாறு,பண்பாட்டுத்தொடர்புகளை பேசுவதில் உள்ள ஆர்வம் நிகழ்காலத்தை பேசுவதும்போது மௌனம் வந்துவிடுகிறது.இதை விரிவாக பேச இங்கு பேச வாய்ப்பில்லையெனினும் பழைய கேள்வி ஒன்றை மட்டும் கேட்கத் தோன்றுகிறது.இந்த ‘ஒடுக்கப்பட்ட’ சாதிகளின் உசிலம்பட்டியில் தான் ஒரு தலித் தலைவர் கூட இன்றுவரை உள்ளே நுழையமுடியவில்லை ஏன்? இந்நிலையில் இவர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற கடந்த காலத்தை மட்டுமே திரும்பதிரும்ப இப்போதைய விவாதங்களிலும் கொணருவது யாரை காப்பாற்றும்?

உண்மையில் மேலேயுள்ள பொன்முடி, பாரதிராஜா இரண்டு குற்றச்சாட்டுகளும் வேறுமாதிரி விவாதிக்கப்பட்டிருக்கமுடியும்.ஆனால் தமிழ்சூழலில் நிலவும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதத்தினால் அவை நடக்காமல் போய்விட்டது.

“அதாவது சொந்த வாழ்வில் சாதியை நம்பாத ஒருவர் (பொன்முடி)அரசியல் காரணத்திற்காக சாதியை பேசுவதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டுமென்றும்,கடந்த காலத்தில் சாதி உள்ளிட்ட விசயங்களை விமர்சித்த கலைஞன் ஒருவன் (பாரதிராஜா)பின்னாளில் இவைகளையே நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச நேர்ந்திருக்கும் தனிமனிதஉளவியல்/சமூக அரசியல் /காலக்கட்ட சூழல்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்றும் மாறியிருக்கவேண்டும்.”

ஆனால் முழுமையாகவோ அரைகுறையாகவோ இவற்றை விமர்சிப்பவர்கள் தான் இங்கு தாக்கப்படுகிறார்கள்.மாறாக காரணமானவர்களின் தரப்பு நியாயப்படுத்தப்படுகிறது.

பிராமண எதிர்ப்பின் பெயரில் நாமெல்லாம் நியாயமாகவே விமர்சித்த அடையாளங்கள் இன்றைக்கு பிராமணர்அல்லாதர் விசயத்தில் நியாயப்படுத்தப்படுகிறது.அதுவும் திராவிட இயக்க அறிவாளியாக ப்ரொமோஷன் பெற்றிருப்பவர்களாலேயே செய்யப்படுகிறது.

பாரதிராஜா பற்றிய விமர்சனம் அவர் மீதான ஒரு விமர்சனமாக இருக்கட்டுமே. அதை இவ்வளவு வலிய மறுத்துதான் ஆகவேண்டுமா?

ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில்  விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

இவருடைய நூல்கள் :

1. சாதீயம்: கைகூடாத நீதி

2. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது 

3.  தீண்டப்படாத நூல்கள்

4. சனநாயகமற்ற சனநாயகம்

“நாடார் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” சாதி பத்திரிகை மகாஜனம் கேட்கிறது!

நாடார் சாதி பத்திரிகையான மகாஜனம் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நாடார் சாதியைச் சேர்ந்த பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் படத்தை முகப்பில் போட்டு, அவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டிருக்கிறது. இது சமூக ஊடகங்களில் சாதியை முன்னிறுத்தி வாக்கு கேட்பது தேர்தல் விதிமீறல் ஆகாதா  என விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Thanthugi Blogspot

மஹாஜடங்களால் மஹாஜடங்களுக்காக மஹாஜடங்களையே தேர்ந்தெடுக்க வேணுமாம். அதாவது மஹாஜடங்களின் ஓட்டு மற்ற ஜடங்களுக்கு கிடையாதாம்.

Muthazhagan Ma

ஒரே சட்டமன்ற தொகுதியிலருந்து எப்படி சுப. உதயகுமாரனையும் அப்பாவுவையும் தேர்ந்தெடுக்க முடியும் அரைவேக்காடுகளே??????

Venpura Saravanan

சாதி வியாதி

ஆமா, மஹாஜனம் கக்காஜனம்னு இப்பிடி ஆளாளுக்கு சாதிபேரச் சொல்லி, சாதி வேட்பாளர்களச் சொல்லி, சாதிக்காக ஓட்டுக் கேளுங்க. நாடு வெளங்கும்!

எனக்கு இரண்டு கேள்விகளுக்கு பதில் வேணும் மஹாஜனங்களே…

1 தன் சாதிக்காரன் 100% ஓட்டுப் போடணும்னு கேக்குறது போலவே அதே மான ரோசத்தோட, அடுத்த சாதிக்காரன் ஒரு ஓட்டுக்கூடப் போடக் கூடாதுனு ஏன் சொல்லல?

2. இங்கே வட்டமிடப்பட்ட ‘தலைகள்’ ஒரே தொகுதியில் எதிரும் புதிருமா நிக்கிறாங்களே, அப்பிடின்னா அப்பத்த பிக்கிறது மாதிரி ஆளுக்குப் பாதி பிச்சுப் போடச் சொல்றீங்களா?

# சாதி வியாதி மூளைக்கு ஏறுனா சிந்திக்கும் திறன் மட்டுப்படும்!

Venpura Saravanan's photo.

“விரல்ல மை வைச்சிக்கிற உரிமை மட்டும்தான் எங்களுக்கு”: நத்தம் மேடு தலித்துகளின் ஓட்டுரிமையை பறிக்கும் சாதி!

தருமபுரி மாவட்டம் நத்தம் மேடு கிராமத்தில் 421 தலித் வாக்காளர்கள் வசிக்கிறார்கள். ஊரே தேர்தல் திருவிழாவில் இணைந்திருக்கிற, இந்த மக்களுக்கு இந்த முறையும் தங்களால் வாக்களிக்க முடியுமா? என்கிற கேள்விதான் முன்னால் நிற்கிறது.

தருமபுரியிலிருந்து 35 கிமீ தூரத்தில் இருக்கும் நத்தம் மேடு கிராமத்தில் தலித்துகளுடன் ‘சாதிக்காரர்’கள் பெரும்பான்மையினராக வசிக்கிறார்கள். பண பலம், ஆள் பலம் காரணமாக இவர்களின் அடிப்படை உரிமையான ஓட்டளிக்கு உரிமை ஒவ்வொரு முறையும் பறிக்கப்படுகிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தேர்தல் நாள்ல வாக்குச் சாவடிக்கு ஓட்டுப் போட போவோம். ஆனா விரல்ல மை வைச்சிருக்கிற உரிமை மட்டும்தான் எங்களுக்கு. அதோட எங்களை வெளியே அனுப்பிடுவாங்க. எங்க ஓட்டை எங்க கண் முன்னாடியே ‘சாதிக்காரங்க’ போட்டுடுவாங்க.” என்கிறார் இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனி.

“எங்களால எதுக்கு கேட்க முடியாது. அவங்க சொன்னதை கேட்டுட்டு பேசாம வந்துடுவோம்” என்கிறார் அவர்.

இந்த உரிமை பறிப்பு செயலுக்கு இங்கே பணிக்கு வருகிற தேர்தல் அதிகாரிகளும் உடந்தை என்கிறார் மற்றொருவர். தேர்தல் அதிகாரிகளுக்கு பணமும் விருந்தும் அளித்து நன்றாக கவனிப்பதால் அவர்கள் எதைப் பற்றியும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிறார் அவர்.

ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டார் கௌசல்யா: எவிடென்ஸ் கதிர் தகவல்

எவிடென்ஸ் கதிர்

 சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பு என்று செய்திகள் போட்டு கொண்டு இருக்கின்றனர். ஆபத்து இல்லை.சரியாகிவிட்டது. ஆயினும் முழுவதுமான பரிசோதனைக்கு கோவை மருத்துவமனைக்கு கவுசல்யா அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக சங்கர் எரிக்கப்பட்ட இடு காட்டிற்கு சென்று புலம்பி அழுது இருக்கிறார். அதிகமான மனவேதனை காரணமாக இந்த முடிவினை எடுத்து இருக்கிறார் கவுசல்யா. இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

சங்கர் அப்பா மற்றும் இரண்டு தம்பிகளுடன் கவுசல்யா வசித்து வருகிறார்.ஒரே ஒரு அறையை கொண்ட வீடு.அனைவரும் ஒன்றாக படுக்க முடியாது. ஆகவே அப்பாவும் தம்பிகளும் உறவினர் வீட்டில் உறங்க கவுசல்யா உறவினர் பெண்ணுடன் அந்த வீட்டில் உறங்கி வந்து இருக்கிறார். நேற்று அந்த உறவு கார பெண்ணிடம். நான் தனியாக படுத்து கொள்ள எந்த சிரமமும் இல்லை.நீ உன் வீட்டுக்கு போ என்று கூறி இருக்கிறார். அந்த பெண்ணும் வீட்டுக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் சாநிபவுடரை குடித்து இருக்கிறார் கவுசல்யா. விஷம் பெரிய அளவில் இல்லை. ஆபத்து இல்லை என்பது நிம்மதியாக இருக்கிறது.

சென்னையில் தங்கி படிக்கவைக்க முயற்சி செய்து வருகிறோம.கவுசல்யா அப்பகுதியை விட்டு வர மறுக்கிறார்.பேசி கொண்டு இருக்கிறோம்.ஒரு பக்கம் வழக்கு.மறுபக்கம் கவுன்சலிங் படிப்பு என்று பல மறுவாழ்வு பணிகள் கொண்டு செல்லப்பட வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் கவுசல்யா இது போன்ற முடிவு எடுப்பது வேதனையை தருகிறது. ஊடகங்கள்தான் எல்லாவற்றையும் செய்தி பார்வையில் பார்பார்கள். ஆனால் பொது சமூகமும் எல்லாவற்றையும் செய்தி பார்வையில் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது. செய்தி பார்வை உணர்வுகளை கொன்று கொண்டு இருக்கிறது. எங்கும் செய்தி மனிதர்களாக இந்த சமுகம் நிரம்பி வழிகிறது.

நாயூடு கு.பிச்சாண்டி, கே. என். நேரு ரெட்டி, கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ரெட்டி…திமுகவின் ’சாதி அரசியல்’ ஆதாரங்கள்!

Subramanian Ravikumar

நம் நாயூடு கு.பிச்சாண்டியாம்… திமுக தலைவர்கள் சாதிகளைப் பதவியூட்டி வளர்க்கிற லட்சணம் இதுதான்…. அந்தா 50 ஆண்டுகளில் பக்கத்துல பெரியார் அடிபட்டு விழுந்து கிடக்கிற காட்சி தெரிகிறது… ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற அண்ணாவின் கரகரத்த குரல் காற்றில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது…

castism in dmk 3

பிரதாபன் ஜெயராமன்

சாதிப்பெயரை ஒழித்த சரித்திரஆட்சியில் சாதனை பாரீர்…

castism in dmk

சமத்துவம்டா… சமூக நீதிடா… திமுக டா !!!

Jeyachandra Hashmi's photo.

கையில் தாலியுடன் திருமாவளவன்: அதிமுக பிரச்சாரப் படம் வெளிப்படுத்தும் சாதி அரசியல்!

மினியன்கள் பாணியில் தமிழகத்தின் ‘சனியன்’களை வரைந்துள்ளதாக ஸ்ரீராம் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தமிழக அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், ஸ்டாலின், திருமாவளவன், மோடி, பிரேமலதா போன்றோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக நபர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்தப் படங்களை வரையச் சொன்னதாக சொல்லியிருக்கிறார் ஸ்ரீராம் .

sanions
தற்போது அதிமுக சார்பில் சமூக வலைத்தளங்களில் வளம் வரும் படங்கள்…

பிரச்சாரத்துக்காக வரையப்பட்டுள்ள இந்தப் படங்களில், திருமாவளவனை மிகக் கீழ்தரமான சாதியத்துடன் வரைந்துள்ளார். கையில் தாலியுடன் இருக்கிறார் திருமாவளவன். இதுகுறித்து ஒருவர் பின்னூட்டமிட்டு கேட்டபோது, திருமாவளவன் குறித்து தாம் கேள்விப்பட்டதையே வரைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீராம்.

“தலித் இளைஞர்களை ‘சாதி’ பெண்களைப் பார்த்து இழுத்துக் கொண்டு ஓடும்படி சொன்னவர் அவர்” என தன்னுடைய விளக்கத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.

thiruma draq

தொடர்ந்து சிலர் திருமாவளவன் குறித்து இப்படி சித்தரிப்பது மிக மிக தவறானது என சொன்ன பிறகு, திருமாவளவன் பற்றி எனக்குச் சொன்னதை வைத்தே வரைந்தேன். எனக்கு எந்தவித அரசியல் காழ்ப்பும் இல்லை. நான் அவரைப் பற்றி தெரிந்துகொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகள் குறித்து கள்ளமவுனம் சாதித்து, பல தலித் இளைஞர்கள், அவர்களைத் திருமணம் செய்த பெண்கள் படுகொலை செய்யப் பட்ட பிறகும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை அதிமுக அரசு. இந்நிலையில் தன்னுடைய சாதிய சார்பை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய படத்தை வரையச் சொல்லியிருக்கிறது அதிமுக.

தற்போது அந்தப் படத்தை நீக்கியிருக்கிறார் ஸ்ரீராம்.

இப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா?

அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்

திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது பற்றி நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக, தமிழக வரலாற்றில் திமுக-வின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஏன் மறுக்க வேண்டும், அவற்றை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாமே என்று அந்த நண்பர்கள் முகநூலிலும் தொலைபேசியிலும் நேரிலும் என்னோடு விவாதிக்கிறார்கள்.

திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பொதுவாகப் பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. திராவிடம் என்பது விரிவான, முற்போக்கான அர்த்தங்களும் அடையாளங்களும் கொண்டது. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக, அணிசேர்ந்துள்ள திமுக ஆகிய கட்சிகளின் பெயர்களிலும் திராவிட என்ற சொல் இருக்கிறது. ஆயினும் திராவிடக்கட்சிகள் என்று சொல்லும்போது திமுக, அதிமுக ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடுவதாகிவிட்டது. என்னைப் பொறுத்தமட்டில் அவற்றை திராவிடக் கட்சிகள் என்று சொல்வதில்லை, திமுக, அதிமுக என்று மட்டுமே குறிப்பிடுகிறேன்

இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான கூறுகளில் இக்கட்சிகளுக்கு, குறிப்பாக திமுகவிற்கு உள்ள பங்கை மறுப்பதற்கில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் இதை நான் வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.

ஆனால் அந்த ஆக்கப்பூர்வமான கூறுகள் வரலாறாக, அதாவது பழைய கதையாக மாறிவிடவில்லையா? இன்றைக்கும் இக்கட்சிகள் அந்தக் கூறுகளை தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருவதாக உண்மையிலேயே நம்ப முடியுமா?

திராவிட இயக்கம் தமிழகத்தில் பதித்த பகுத்தறிவு, பெண்ணடிமை எதிர்ப்பு, சாதிய பாகுபாட்டு எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, பார்ப்பணிய எதிர்ப்பு உள்ளிட்டவை இன்று பெரிதும் நீர்த்துப்போயிருக்கின்றன. குறிப்பாக இளைஞர்களிடையே கணிசமான அளவிற்கு இவை அந்நியப்பட்டுப் போயுள்ளன. இக்கட்சிகள் – குறிப்பாக திமுக – எந்த அளவுக்கு மாற்றுச் சிந்தனைகளை மக்களிடையே கொண்டுசென்றன? வெறும் தலைமை வழிபாட்டிலும், பதவிப் பங்கீடுகளிலுமாக மாற்றுச் சிந்தனைகளை மழுங்கடித்துவிடவில்லையா?

இதற்கெல்லாம் இக்கட்சிகள் ஆட்சியதிகாரத்திற்காகச் செய்துகொண்ட கொள்கை சமரசங்கள் முக்கிய காரணம் இல்லையா? அதன் விளைவுதானே பல்வேறு வடிவங்களில் தொடர்கிற பெண்களுக்கெதிரான வன்முறை முதல், சாதி ஆணவக்கொலைகள் வரை? சிறிய பெரிய கோயில்களும் வழிபட வருகிற கூட்டங்களும் பெருகிப்போனது எப்படி? அவற்றின் விழாக்களில் கலந்துக்கொள்வோராக இல்லாமல், நடத்திக்கொடுப்பவர்களாகவே திமுகவின் வட்டாரத் தலைவர்கள் மாறிப்போனது எப்படி? அதிமுக பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

இப்படியான கொள்கை சமரசங்கள் பற்றி முன்பொரு முறை கலைஞரின் நேர்காணலுக்காகக் கேட்டபோது அவர், எந்தக் கட்சிதான் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பதான பதிலைத்தான் தந்தாரேயன்றி திமுகவின் சமரசங்கள் சரி அல்லது தவறு என்று சொல்ல முன்வரவில்லை.

ஆட்சி அதிகார ருசியை சுவைத்தபிறகு, சாதிய சக்திகளோடு சமரசம் செய்துகொண்டதன் வெளிபாடு தானே, சாதிய ஆணவக்கொலைகளை கண்டித்தும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாகவும் பெரிய இயக்கங்கள் எதையும் திமுக நடத்தாதது? உடுமலைப்பேட்டை சங்கர் கொலையைக் கூட அதிமுக அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலைமை என்பதாக மட்டும்தானே சித்தரித்தார்கள்?

பார்ப்பணியத்தோடு சமரசம் செய்துகொள்ளவும் தயங்கவில்லை என்பதன் அடையாளந்தானே, பாஜக-வுக்கு தமிழகத்தில் ஒரு அரசியல் தளம் உருவாகத் தோதாக முன்பு அதனுடன் கூட்டணி வைக்க தயங்காதது? இப்போதும் நாடு முழுக்க மதவெறி ஆதிக்க அரசியல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், உணவு உரிமை கூட மதக்கலவர விவகாரமாக்கப்படுகிற சூழலில், புதிய விளக்கங்களோடு பெண்ணடிமைத்தனத்தைக் கெட்டிப்படுத்துகிற போதனைகள் புகுத்தப்படுகிற பின்னணியில் இக்கட்சிகளிடமிருந்து, குறிப்பாக திமுக-விடமிருந்து பெரும் கண்டனங்களோ, உறுதியான எதிர்வாதங்களோ கிளம்பவில்லையே…

கருத்துச் சுதந்திரத்தின் மீதான வன்மமான தாக்குதல்ரகளின்போது அதை எதிர்த்துக் களம் காண வரவில்லையே…

அரசியல் என்றாலே ஒரு அசூயை உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு எல்லா மட்டங்களிலுமான கூச்சநாச்சமற்ற ஊழல் மிகப்பெரிய காரணம். சம்பாதிக்க வழியிருக்கிறது என்பதால் தானே கீழ்மட்ட உள்கட்சித் தேர்தல்களில் அடிதடி வரைக்கும் போகிறது?

எவ்வித உறுத்தலுமின்றி இயற்கைச் சமநிலைப் பாதுகாப்புகள் அழிக்கப்படுவதற்கு இவ்விரு கட்சிகளுமே உடந்தையாக இருக்கவில்லையா? ரியல் எஸ்டேட் வளைப்பு, மணல் கொள்ளை, குன்றுகள் அழிப்பு… என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

மறுபடி சொல்கிறேன், இவர்களது ஆக்கப்பூர்வமான பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதையெல்லாம் “நடுநிலை” போலித்தனத்தோடு மேற்கோள் காட்டுவதற்கு இது ஆய்வரங்க மேடையல்ல. குற்றங்களை எடுத்துக்கூறி, மாற்றங்களை வலியுறுத்தி மாற்று வழி அமைப்பதற்கான தேர்தல் களம்.

திராவிட இயக்கம் தொடங்கிய, இக்கட்சிகள் கைவிட்ட பகுத்தறிவு, சாதிய ஒழிப்பு, பாலின சமத்துவம் போன்றவை இன்று கம்யூனிஸ்ட், விசிக தளங்களில் லட்சிய முனைப்போடு தொடர்கின்றன.

இடதுசாரிகள் இப்படியெல்லாம் இக்கட்சிகளை – குறிப்பாக திமுகவை – விமர்சிக்கிறீர்களே என்று கேட்கிற நண்பர்கள், இப்படியான விமர்சனங்களை வைத்தாக வேண்டிய நிலைமையை ஏற்படுத்திவிட்டீர்களே என்று அவர்களிடம் கேட்டுப்பாருங்களேன்…

அ. குமரேசன், தீக்கதிர் சென்னை பதிப்பின் பொறுப்பாசிரியர்.

இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா?

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்

நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல.

ஆனால் இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும் திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு பற்றியதாகவும் மட்டுமே முடித்துகொள்ளப்படுகிறது. உண்மையில் இது மட்டும் தான் பிரச்சினையா?

1) கோவில்பட்டி திமுக வேட்பாளர் தேவர் * நாயக்கர் எதிர்மறை மூலம் தன் தேவர் சாதியின் எண்ணிக்கை பெரும்பான்மையை காட்டி பேசியது கடந்த 3 நாட்களாக செய்தி பக்கங்களில் உலா வந்தது.இப்போக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா? இன்றைக்கு தேர்தல் சார்ந்து, நிலவக்கூடிய சூத்திர எண்ணிக்கை பெரும்பான்மை அரசியலை வெளிப்படையாக அரசியல் நியாயம் போன்று பேசியபோது (அட சமூக நீதி) நாம் விரும்பும் அரசியல் கட்சியொன்றின் அரசியல் வெற்றிக்காக இதையெல்லாம் விவாதிக்க மறுக்கிறோமெனில் உண்மையில் நாம் யாராக இருக்கிறோம்?

2)உடுமலை சங்கரின் சாதி ஆவணப் படுகொலையைப்பற்றி முக்குலத்தோரை வெளிப்படையாக கண்டித்து வைகோ பேசினார்.வைகோ எத்தனையோ முறை தேவர்சாதியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.(நேற்றும் கூட)ஆனால் புகழந்த போது ஏற்றுக்கொண்ட சாதிய மனம்,விமர்சித்த போது மட்டும் வன்மம் காட்டுகிறது என்றால் இத்தகைய சூழல் பற்றி விரிந்த அளவில் பார்க்க வேண்டாமா?

(இதற்கிடையில் முதுகுளத்தூர் பொதுத்தொகுதியில் தேவேந்திரர் ஒருவரை வைகோ வேட்பாளராக்கியுள்ளமைக்கும் இதில் பங்கு இருக்கிறதா?என்றும் பார்க்க வேண்டியுள்ளது)

இதற்கிடையில் வைகோவின் இன்றைய நிலைபாட்டை விமர்சிக்கும் யாருடைய பேச்சிலும், இதில் பின்னணியாக இருந்த சாதியப் பேச்சுகளை சிறு குறிப்பாக கூட கணக்கெடுத்துக்கொள்ளாதது ஏன்? இங்கு பிரச்சினை வைகோ என்பதை விட அவர் சாதியாக்கத்தை குறிப்பாக சுட்டிப் பேசியதிலிருந்து எழுகிறது என்றால் நாம் இவற்றை மீண்டும் மீண்டும் வைகோ பிரச்சினையாக மட்டுமே காட்டுவது சரியா?

ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில்  விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

இவருடைய நூல்கள் :

1. சாதீயம்: கைகூடாத நீதி

2. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது 

3.  தீண்டப்படாத நூல்கள்

4. சனநாயகமற்ற சனநாயகம்

முதல் பதிப்பு: ஜனவரி 2007
பக். 124. ரூ. 50

வெளியீடு:
கவின் நண்பர்கள்
ஆர்.சி. நடுத்தெரு
வ. புதுப்பட்டி – 626 116,
விருதுநகர்.

திமுக சாதி கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது: தேர்தல் போட்டியில்லை என வைகோ பரபரப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் என் உயிரான கண்மணிகளுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அக்கட்சிகளின் தோழர்களுக்கும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும்,

தமிழக வாக்காளப் பெருமக்கள், பொதுமக்கள், ஊடகங்களின் செய்தியாளர்கள், தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களுக்கும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் போட்டியிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகங்களுக்கு இடையில் பகையையும், வெறுப்பையும் நெருப்பாக மூட்டி, அதன் வெப்பத்தில் குளிர் காய்ந்து தங்களை நிலைப்படுத்திக் கொள்ளத் தமிழ்நாட்டின் பல இடங்களில் பலர் முயல்கிறார்கள்.

நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றோம். வளரும் பிள்ளைகளிடம், பிஞ்சு உள்ளங்களில் கல்லூரி மாணவர்கள் இடையே, சாதி வெறி எனும் ஆலகால விஷம் திணிக்கப்படுகிறது.

தங்கள் சுயநலத்திற்காக, அரசியல் லாப வேட்டைக்காக, தங்களை அரசியல் தலைவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, 1980 க்குப்பின்னர் தீவிரமாகப் புறப்பட்டுள்ள சிலர், தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்திற்கே உலை வைக்கும் கொள்ளிக் கட்டைகளைத் தூக்கித் திரிகிறார்கள்.

நான் போட்டியிடுவதாக அறிவித்த கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர், தான் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்; எங்களுக்கு 70000 வாக்குகள் இருக்கின்றன; வைகோ சார்ந்துள்ள சமுதாயத்திற்கு 52000 வாக்குகள்தான் உள்ளன; அதையும் போட்டி போடும் வேட்பாளர்கள் பிரித்துக் கொள்வார்கள். அதனால் நான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறார்.

இதைக் கண்டித்துத்துத் தி.மு.க. தலைமை எந்த அறிக்கையும் தரவில்லை.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கா இந்தக் கதி?

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது சாதி மத வேறுபாடுகள் ஏதும் இன்றிப் பணி ஆற்றியுள்ளேன். வடக்கு திட்டங்குளம் கிராமக் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளும், ரேசன் கடையும் கட்டுவதற்கு எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணம் ஒதுக்கிக் கட்டித் தந்துள்ளேன்.

கோவில்பட்டி பிரச்சாரத்தில் என் முதல் நிகழ்ச்சியே வடக்கு திட்டங்குளம்தான். அந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நான் பசும்பொன் தேவர் திருமகனாரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அப்போதெல்லாம் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாகத் திரண்டு என்னை வரவேற்பார்கள்.

ஆனால், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் என்னை மையப்படுத்தி சாதி வேற்றுமையையும், சாதி மோதலையும் ஏற்படுத்த தி.மு.க. திட்டமிட்டு இருப்பது, ஆதாரபூர்வமாக எனக்குத் தெரிய வந்துள்ளது. அதனால்தான், நேற்றைய தினம் திட்டங்குளத்தில் தி.மு.க.வினர் சிலர் தேவர் சிலையை நெருங்க விடாமல் கலவரம் செய்ய முனைந்தார்கள். நண்பகல் இரண்டு மணியில் இருந்தே முழு மது போதையில், சாதியைக் குறித்து என்னை வசைபாடிக் கொண்டே இருந்துள்ளனர்.

சாதியைக் குறித்தும், கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்டதற்கு நான் கண்டனம் தெரிவித்ததையும், மருத்துவமனையில் கௌசல்யாவுக்கு நான் ஆறுதல் சொன்னதையும் குறிப்பிட்டு, தொடர்ந்து வெறிக் கூச்சல் போட்டுள்ளனர்.

நான் பிரச்சார வேனில் ஊருக்குள் சென்று, தேவர் சிலைக்குச் சற்றுத் தொலைவில் வேனை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி தேவர் சிலை நோக்கிச் சென்றபோது, பத்துப் பேர் கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டிக்கொண்டே, சங்கர் கொலையைப் பற்றிப் பேசினவனுக்கு இங்கே என்னடா வேலை? தேவர் சிலைக்கு மாலை போட விட மாட்டோம். மரியாதையாத் திரும்பிப் போ என்று கூச்சல் போட்டனர்.

அவர்கள் திட்டமிட்டுக் கலகத்திற்கு முனைகிறார்கள் என்பதை உணர்ந்து திரும்பி பிரச்சார வேனுக்குச் சென்றேன். நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன்; மாமன்னர் பூலித்தேவருக்குத் தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் கழுகுமலைக்கு அருகில் உள்ள சிதம்பராபுரத்தில் என் சொந்தச் செலவில், சிலை அமைத்தவன் நான். அவர் தேவர் என்பதற்காக அல்ல. வெள்ளையரை எதிர்த்து முதல் வாள் ஏந்தியவர் என்பதற்காக.

நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தேவர் சமூகத்து இளைஞன் வானமாமலையை ஒரு காரணமும் இல்லாமல் திட்டமிட்டுக் காவல்துறை ஆய்வாளர் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து, ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டி வட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே என் தலைமையில் உண்ணாவிரத அறப்போர் நடத்தினேன். அதில் பொது உடைமை இயக்கத்தின் தலைவர் அண்ணன் நல்லகண்ணு அவர்களும் கலந்து கொண்டார்கள்.

கொலையுண்ட இளைஞனின் மனைவிக்கு, அரசாங்க வேலையும் பெற்றுக் கொடுத்தேன்.

23.4.1979 அன்று, பனவடலிசத்திரத்தில் விவசாயப் போராட்டத்தின்போது, அய்யாப்பழம் என்ற காவல்துறை அதிகாரி மோதலில் கொல்லப்பட்டபோது, அந்தச் சம்பவத்திற்குத் தொடர்பு இல்லாத, வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நிரபராதிகளான பரமசிவத் தேவர், வெளியப்பத் தேவர் ஆகிய இருவருக்கு, நெல்லை செசன்Þ நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நான், பாளைச்சிறையில் இருந்தபோது, அவர்கள் இருவரும் என்னைச் சந்தித்துத் தங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் வேண்டினார்கள். தமிழ்நாட்டின் அன்றைய பிரபல வழக்கறிஞரும், பார்-அட்-லா படித்தவருமான கோவிந்தசாமிநாதன் அவர்களைக் கொண்டு அந்த வழக்கை என் சொந்தச் செலவில் நடத்தி, அவர்கள் இருவருக்கும் விடுதலை பெற்றுத் தந்தேன்.

தாழையூத்து காவல் நிலையத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், தேவர் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றியச் செயலாளர் புல்லையாவின் அண்ணன் மகன் பாண்டி கைது செய்யப்பட்டார். அவர்களது வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துத் தரை மட்டமாக்க முயன்றபோது, நான் குறுக்கே நின்று அதைத் தடுத்தேன்.

1991 நாடாளுமன்றத் தேர்தலில், கயத்தாறுக்கு அருகில் உள்ள காப்புலிங்கம்பட்டி என்ற, மறவர் சமுதாயத்தினர் மட்டுமே வாழ்கின்ற ஊரில், வாக்குப்பதிவு அன்று காவல்துறையினரைத் தாக்கி விட்டார்கள் என்று, அந்த ஊரையே சூறையாட ஆயிரம் போலீசார் கயத்தாரில் குவிக்கப்பட்டபோது, போலீÞ டிஐஜி, எÞ.பி.யிடம், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக, ஊரையே அழிக்கப் பார்க்கின்றீர்களே? ஊருக்குச் செல்லும் பாதையின் குறுக்கே நான் படுப்பேன்; என் பிணத்தின் மீதுதான் நீங்கள் ஊருக்குள் நுழைய முடியும் என்றேன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, காவல்துறையினர் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டார்கள். ஊர் மக்கள் காளியம்மன் கோவிலுக்குப் படையல் செய்து, என்னை அழைத்து நன்றி தெரிவித்தார்கள்.

1996 இல், விருதுநகர் மாவட்டத்தில் தேவர் சமூகத்தினருக்கும், தேவேந்திர சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டு, இருதரப்பிலும் படுகொலைகள் நிகழ்ந்தன. அப்பொழுது, இருதரப்புக் கிராமங்களுக்கும் சென்ற என்னை மட்டும்தான் நள்ளிரவிலும் கூட மக்கள் காத்திருந்து வரவேற்றனர். வைகோ எல்லோருக்கும் பொதுவான ஆள்; அவர் மட்டும் ஊருக்குள் வரட்டும் என்று அனுமதித்தனர். ஒவ்வொரு ஊரிலும் இருதரப்பினரும் ஒற்றுமையாக வாழ மன்றாடினேன். இவற்றை எல்லாம் திட்டங்குளம் மக்களிடம் கூறியதோடு, கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பசும்பொன்னுக்குச் சென்று தேவர் திருமகனுக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகின்ற, தேவர் சமுதாயம் அல்லாத ஒரு அரசியல்வாதி நான்தான். ஓட்டு வேட்டைக்காகக் கடந்த இருபது ஆண்டுகளாக மற்ற தலைவர்கள் அங்கே வருகின்றார்கள்.

அப்படிப் பசும்பொன்னுக்குச் செல்வது, அத்தலைவர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு அவர் வலதுகரமாகத் திகழ்ந்ததாலும், பிரம்மச்சரியத்தை ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர் என்பதாலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசத்திற்குப் பாதுகாப்புக் கொடுத்தவர் என்பதாலும், அவை எல்லாவற்றையும்விட, எனக்குப் பத்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு வந்து பசும்பொன் தேவர் அவர்கள் என் தந்தையிடம் நீங்கள் இனிமேல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கக் கூடாது என்று கூறியபோது, அரைக்கால் சட்டை போட்ட சிறுவனாக இருந்த நான், அவரது தோற்ற கம்பீரத்தில் மனதைப் பறிகொடுத்ததாலும், அவர் மீது எனக்கு இனம் புரியாத பற்றுதல் ஏற்பட்டதாலும் பசும்பொன் செல்கிறேன் என்பதையும் சொன்னேன்.

எனது கோவில்பட்டி தொகுதிப் பிரச்சாரத்தின் முதல் நிகழ்ச்சி இது. இதில் தேவர் சிலைக்கு மாலை போட விடாமல் தடுத்து விட்டால், வைகோவை ஊர் மக்கள் விரட்டி அடித்தார்கள் என்று அனைத்து ஏடுகளிலும் செய்தி போடுவார்கள்; அதுதான் அவர்களது நோக்கம் என்பதை உணர்ந்துதான், தேவர் சிலைக்கு மாலை போட வருகிறேன்; எத்தனை பேர் அரிவாளோடு வருகிறீர்கள்? தேவர் சிலைக்கு மாலை போடாமல் இந்த ஊரை விட்டுப் போக மாட்டேன் என்று கூறி, என் காலணிகளை வேனிலேயே கழற்றி வைத்து விட்டு, கலகம் வரும் என எதிர்பார்த்து, கருப்பு சால்வையையும் வேனில் போட்டு விட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சிலையை நோக்கிச் சென்றேன்.

இதன்பிறகுதான், காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

வன்முறையில் ஈடுபட நான் கருதி இருந்தால், என்னோடு வந்த 50 க்கும் மேற்பட்ட தொண்டர்படை வீரர்கள், எனக்காகத் தங்கள் உயிரையும் தத்தம் செய்யும் தீரர்கள், என் சொல்லுக்கு அஞ்சியே மிகக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருமே மறுகால்குறிச்சி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 1983 இல் அண்ணன் கலைஞருக்காக நான் ஏற்படுத்திய தொண்டர் படையைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுள் பலர் நடுவயதை எட்டியதால், அவர்களது பிள்ளைகள் இப்போது எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, தெற்கு திட்டங்குளம் சென்று, அங்கே இமானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, விளாத்திகுளம் தொகுதிப் பிரச்சாரத்தை நான் தொடர்ந்தேன்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, இந்தத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் என்னை மையமாக வைத்து, தேவர் – நாயக்கர் சாதிக் கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க, தலைமையைத் தற்போது இயக்கிக் கொண்டு இருப்பவர் திட்டமிட்டு இருப்பதும், அந்த யோசனையை தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஊக்குவித்ததையும் நான் அறிய நேர்ந்தது. கோவில்பட்டி தொகுதி முழுவதும் கலவரம் நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன்.

என்னைக் குறிவைத்துச் சாதி மோதல் ஏற்படுவதையும், இரத்தக்களறி ஆக்க முனைவதையும் நினைத்துப் பார்க்கவே மனம் வேதனையில் துடிக்கின்றது.

சாதி வெறியும், சாதிய ஆணவமும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்கி விடும் என நான் உணர்வதால், அந்த அபாயகரமான சீர்கேட்டைத் தடுக்கவும், தமிழ்நாட்டின் ஜீவாதார, நீராதார நிலைகளையும் காக்கவும், நான் பிறந்த பொன்னாடாகிய தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வுக்குப் பாடுபடவும், புற்று நோயாகி வரும் ஊழலை அறவே ஒழிக்கவும், மதுக்கொடுமையில் இருந்து தமிழ்நாட்டை மீட்கவும், தரணியெங்கும் வாழும் தமிழர்களின் நலனைக் காக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிக்கவும் எஞ்சிய என் வாழ்நாளை அர்ப்பணிப்பது என முடிவு செய்துள்ளேன்.

ஐவரின் தியாகத் தணலில் உதயமான மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை எவரும் நெருங்க முடியாத எஃகுக் கோட்டையாக நிர்மாணிப்பேன்.

திராவிட இயக்கத்தில் ஒளி வீசுகின்ற தந்தை பெரியாரின் சுயமரியாதையுடன், அண்ணாவின் இலட்சியக் கனவுகளை நனவாக்கி வெற்றி பெறுவேன் என்று என் நெஞ்சுக்குள் தவம் செய்து, சபதம் பூண்டுள்ளேன்.

இந்தப் பின்னணியில், 2016 மே 16 இல் நடைபெற இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், நான் போட்டியிடுவது இல்லை என்றும், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளராக விநாயகா ரமேஷ் அவர்களது பெயரையும், கழகத்தின் அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் சு.துரைசாமி, ஆட்சி மன்றக் குழுச்செயலாளர் அ. கணேசமூர்த்தி, அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் ஆகியோரிடமும், துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் தெரிவித்து, அவர்களின் முழு சம்மதத்துடன் இந்த முடிவை அறிவிக்கிறேன்.

எமது அணியின் முதல்வர் வேட்பாளரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி, நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க, பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது நான் பாடுபடுவேன்.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத கழகக் கண்மணிகள், எனது முடிவை ஏற்றுக்கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்று, தோழமைக் கட்சித் தலைவர்கள் நம்மைப் பாராட்டும் வகையில் பணியாற்றிடப் பாசத்தோடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.

“நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன்; வைகோ நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்; வெற்றி எனக்குத்தான்” திமுக வேட்பாளரின் தேர்தல் வியூகம்!

சாதி ஓட்டுகளை கணக்கில் கொண்டே வேட்பாளர்களை நிறுத்துவதாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மேல் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இதற்கு உதாரணமாக வேட்பாளர் பட்டியலே உள்ள நிலையில், கோவில்பட்டி திமுக வேட்பாளர் அ. சுப்பிரமணியன் சாதி ஓட்டு தனக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என்று பேட்டியளித்துள்ளார்.

“நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன். 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தேவர் சமூகத்தை சேர்ந்தவருக்கு டிக்கெட் வழங்கி இருக்கிறார்கள். அதே நேரத்தில் வைகோவும், அ.தி.மு.க. வேட்பாளர் ராமானுஜம் கணேசும் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்த தொகுதியில் தேவர் சமூகத்தை சேர்ந்த 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் 52 ஆயிரம் பேரே உள்ளனர். வைகோவும், ராமானுஜம் கணேசும் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த ஓட்டு 2 ஆக பிரிந்து விடும். நான் வெற்றி பெறுவது உறுதி” என்று தெரிவித்துள்ளார் அவர்.

அ. சுப்பிரமணியன் கழுகுமலை பேருராட்சி மன்ற தலைவராக இருக்கிறார்.

தூத்துக்குடி ஆன் லைன் இணையதளத்துக்கு திமுக வேட்பாளர் அ. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்…

 

தேவர் சமாதிக்குச் சென்று சேர்த்த புகழை வைகோ இப்படியா இழப்பது?

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்

நல்ல பேர் வாங்க வேண்டுமென்பதற்காக அதீத நடுநிலை, தன்னை முன்னிறுத்தல், இவற்றுக்கான மிகை உணர்ச்சி போன்றவற்றால் வைகோவுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டிருப்பதே அனுபவம்.ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப பார்த்து பார்த்து திட்டமிடுபவர்களை காட்டிலும் வைகோவின் கவன ஈர்ப்பு அரசியல் அவர் அறிந்தோ அறியாமலோ சில வேளைகளில் நேர்மறை அம்சங்களை நோக்கியும் நகர்த்திவிடுகிறது போலும்.

இத்தேர்தலில் கருணாநிதி மீது சாதிய வசை,மறுநாளே அதற்கு நேரெதிர் முனையில் நின்று மன்னிப்பு, பிரச்சார கூட்டத்தில்(மதுரை) முத்துராமலிங்கத்தேவர், காமராசர், இம்மானுவேல் சார்ந்த நடுநிலை பெயரிலான பேச்சுகள் என்றமைந்த வைகோ இதற்கெல்லாம் வெளியே முக்கிய செயலொன்றை செய்திருக்கிறார்.

இத்தேர்தலில் 2 பொதுத்தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.அதிலொன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி. இதற்காக அவர் தரப்போகும் வரலாற்று லுக்கையெல்லாம் நினைத்தால் அச்சமாக இருக்கிறது என்பது ஒருபுறமிருந்தாலும் அவரின் இம்முயற்சி முக்கியமானது.

முதுகுளத்தூர் தேவர் சாதி இறுக்கம் கொண்ட பகுதி. முதுகுளத்தூர் கலவரம் என்கிற பெயர் இங்கு நினைவுகூரத்தக்கது. முத்து ராமலிங்கத்தேவர் பிம்பம் கோலோச்சும் பகுதி. தேவர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் ஆன முரண் கூர்மையோடிருக்கும் இடம்.அங்கு யாதவர் கூட போட்டியிட்டிருக்கிறார். ஆனால் தலித் அமைப்பல்லாத கட்சி சார்பாக Sc வகுப்பினர் போட்டியிடுவது இதுதான் முதன்முறை. இது அங்கிருக்கும் மறவர்சாதி தேவர்களுக்கு வைகோ மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கவும் வாய்ப்புண்டு. (பல வருடமாக தேவர் சமாதிக்கு சென்ற புகழை இப்படியா இழப்பது?) இது பலரும் சுட்டிக்காட்ட விரும்பாத தகவல்.

ஆனால் இதையே கருணாநிதி செய்திருந்தால் (அவரால் ஒருபோதும் செய்யமுடியாது என்பது வேறு விசயம்) உள்ளூர் சமூகநீதி நியாயம் மட்டுமல்லாது உலகத்தியரியெல்லாம் வந்து இறங்கியிருக்கும். அப்படியே செய்தாலும் திமுக அதிமுக பாமக பாணியில் அங்கு சமபலத்திலிருப்பதால் ஆதிக்கத்தை எதிர்த்து வரும் தலித் பிரிவினருக்கு தராமல் சிறுபான்மை எண்ணிக்கையிலான தலித் பிரிவினருக்கு தந்து மார்தட்டுவார்கள்.

கருணாநிதியை சாதி ரீதியாக பேசியது வைகோ மீதான முக்கிய மதிப்பீடாக இருக்குமானால் அதில் நாம் மாறுபடபோவதில்லை. ஆனால் இவர்களின் மதிப்பீடு அறம் சார்ந்தது தானா என்கிற கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது. மதுரை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மீது சாதிய வசை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு திமுகவிடமோ அதன் ஆதரவாளர்களிடமோ இருக்கும் பதிலென்ன?

சோழவந்தான்(தனி) தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட வந்த டாக்டர் தேன்மொழியை ஒருமையில் திட்டினார் அவர் என்றுசொல்கிறது தி இந்து நாளேட்டுச் செய்தி. அவர் சாதி சொல்லியே திட்டினார் என்கிறது தற்போதைய குற்றச்சாட்டு. அவரை அறிந்தவர்களுக்கு தெரியும் அப்படி பேசியிருப்பாரென்று.தேன்மொழி ஒரு மருத்துவர். தானாக விலகியிருக்கிறார். ஒருமையில் விளிப்பதற்கு பின்னாலிருப்பது சாதித்திமிர் தானேயொழிய வேறில்லை.

இதேபோன்று மற்றுமொரு சம்பவமும் இப்பகுதியிலிருக்கிறது. இதே தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுக கருப்பையா.சட்டம் தந்த தனித்தொகுதி வாய்ப்பினால் இவர்கள் எம்எல்ஏக்கள் ஆகினாலும் கட்சி பொறுப்புகளில் உள்ள ஆதிக்க சாதியினர் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்வதில்லை. எனவே அவர்கள் எம்எல்ஏக்கள் ஆனாலும் தங்களுக்கு கீழானவர்களே என்பதை காட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். கருப்பையா மீது அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்குதலே நடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார். இதற்கு பின்னாலிருந்தது சாதி வெறுப்புதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.கருப்பையா முதலமைச்சருக்கே கடிதம் எழுதினார். அவர் ஒன்றும் செய்யவில்லை. (அதுதான் தெரியுமே)

இதெல்லாம் இங்கிருக்கும் எதார்த்தங்கள். இதையெல்லாம் விவாதிக்கவேண்டும் தான்.

விவாதிக்க வேண்டிய தமிழ்ச்சூழலை பார்த்தால் பயமாயிருக்கிறது. சாதி என்பது வெகுமக்கள் மனநிலை. அதை மக்கள்மய தேர்தலிய அரசியலில் (அதாவது சாதிவெறியை)திராவிட கட்சிகள் நேர்த்தியாக கையாள்கின்றன என்று கோட்பாட்டு பில்டப் தருவார்களோவென.

அல்லது தங்களுக்கு வாய்ப்பான இடங்களில் மட்டும் இதையெல்லாம் கண்டிக்கவோ ஆதரிக்கவோ செய்துவிட்டு ‘வாய்ப்பற்ற’இடங்களில் மௌனம் காப்பார்களோ!

ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில்  விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

இவருடைய நூல்கள் :

1. சாதீயம்: கைகூடாத நீதி

2. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது 

3.  தீண்டப்படாத நூல்கள்

4. சனநாயகமற்ற சனநாயகம்

முதல் பதிப்பு: ஜனவரி 2007
பக். 124. ரூ. 50

வெளியீடு:
கவின் நண்பர்கள்
ஆர்.சி. நடுத்தெரு
வ. புதுப்பட்டி – 626 116,
விருதுநகர்.

“பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ?” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்!

சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீப்ரியா தேன்மொழி போட்டியிட விரும்பவில்லை என்று விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக ஆதனூர் பவானி அவர்களை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. டாக்டர் ஸ்ரீப்ரியா விலகலுக்கு மாவட்ட செயலாளரின் சாதிய பேச்சே காரணம் என மதுரை ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் தெரிவிக்கின்றன.
திமுக சார்பில் சோழவந்தான் தனித்தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி அவர்களை திமுக மாவட்ட செயலாளரும் தேவர் சாதிவெறியருமான பெ. மூர்த்தி இழிவுபடுத்தி பேசியதால் டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி விலகியிருக்கிறார்.

இத்தகைய சாதி வெறியர்களை தளபதிகளாகக் கொண்டுதான் திமுக செயல்படுகிறது. ஆனாலும் கொஞ்சமும் கூச்சமின்றி தங்களை சுயமரியாதைக்காரக் கூட்டம் என்றும் கூறிக்கொள்கிறது.

சாதிவெறியன் மூர்த்தியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும்.

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களையும் உதவியவர்களையும் விடாமல் துரத்தும் சாதிவெறி கூலிப்படை;

சங்கர் படுகொலையின் சுவடுகளே இன்னும் வடுக்களாக இருக்கும்போது, சாதி வெறி கும்பல், சாதி மறுப்பவர்களை, சாதியத்தை உடைப்பவர்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. அதன் சமீபத்திய உதாரணம்., சாதி மறுப்புத் திருமணம் செய்த சந்தியா, சிவராமனை துரத்துகிறது சாதிவெறி கொலைகார கும்பல். இவர்களுக்கு உதவிய மக்கள் மன்றத்தைச் சேர்ந்த  தஞ்சை தமிழன் என்பவரை தாக்கியுள்ளனர்.

“அந்த புள்ளைக்கும், பையனுக்கும் நீங்கதாண்டா பாதுகாப்பு குடுத்து வச்சிருக்கீங்க..ஒங்களைய போட்டுட்டுதான் அந்த புள்ளையும், பையனையும் போடனும்” என்று கூறியபடியே பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்களை தாக்கியதாக, மக்கள் மன்றத்தின் ரமேஷ் பெரியார் கூறி இருக்கிறார்.  அவர்களுடைய இருசக்கர வாகனத்தையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், தங்கள் உயிருக்கு பாதுகாப்புக் கோரிய சந்தியா, சிவராமனுக்கு போலீஸ் தரப்பில் எவ்வித பாதுக்காப்பும் தரப் படவில்லை. ஒவ்வொரு நாளும் தாங்களும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தோழர்களும் அச்சுறுத்தப்படுவதாக சொல்கிறார் இவர்கள்.

 

ஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது!

விடுதலை ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு 2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் பெயர் ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்” என்பதாகும்.

இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 500 தம்பதியினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.ஆனால் இதுவரை இந்த நிதி உதவியை பயன்படுத்திக் கொண்டவர்கள் வெறும் 19 பேர் மட்டும்தான். தமிழகத்தின் ஒருவர் கூட இல்லை.தமிழக அரசின் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கோமத்திய அரசின் திட்டம் ஒன்று இப்படி இருக்கிறது என்பது கூட தெரியாத நிலையில் இருக்கிறார்கள்.

மாநிலங்கள் அவையில் ஜார்கண்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சமூக நீதித்துறை அமைச்சர் விஜயபாலா என்பவர் தமிழகத்தில் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள எவருமே முன்வரவில்லை என கூறி இருக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டியவர்கள் :

முதலில் யாராவது ஒருவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கக்கூடாது. திருமணம் செய்து கொண்ட ஓராண்டிற்குள் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனைகள் இருக்கின்றன.

இத்திட்டத்தில் பலனடைய வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக ”கலப்புத்திருமண தம்பதிகள் சங்கம்” எனும் அமைப்பு முன்வந்திருக்கிறது. அந்த அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கான எண்: 9442927157

முகப்புப் படத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மகேஷ்- திவ்யா இணையர்.

 

“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது”: புதிய தலைமுறை பாரிவேந்தர்

கை. அறிவழகன்

“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது” என்று “அக்னிப் பரீட்சை” நிகழ்ச்சியில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் பாரி வேந்தர், கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைச் செல்வனுக்கு ஒரு ஊடகவியலராக நன்றாகவே தெரியும் அவர் சமூக நீதிக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று, ஆனாலும், தான் வேலை பார்க்கிற ஒரு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பேசுகிற அபத்தமான சமூக நீதிக்கு எதிரான கருத்துக்களை எதிர்த்துப் பெரிய அளவில் அவரால் கேள்வி கேட்க முடியாது.

ஒரு ஒடுக்கப்பட்ட குழந்தைக்குத் தடுப்பூசி போட மறுக்கிற சமூகத்தில், இன்னொரு ஒடுக்கப்பட்ட மனிதனை நீங்கள் மருத்துவராக முன்வைக்க வேண்டியிருக்கிறது, ஒரு ஒடுக்கப்பட்ட குழந்தைக்குத் தண்ணீர் கொடுக்க நீங்கள் இன்னொரு ஒடுக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரைத் தான் முன்வைக்க வேண்டியிருக்கிறது, ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனை கல்விக் கூடங்களில் மலமள்ள வைக்காமல் இருக்க நீங்கள் இன்னொரு ஒடுக்கப்பட்ட ஆசிரியரைத்தான் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

ஏழ்மையை எமது குழந்தைகள் புரிந்து கொள்வார்கள், வறுமையை எமது குழந்தைகள் ஏற்றுக் கொண்டு வாழப் பழகி இருக்கிறார்கள், ஏழ்மை ஒரு எல்லோருக்கும் பொதுவானதாகவும், சம நீதியுடனும் இயங்குகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், ஆனால், உரிமைகளையும், சுய மரியாதையையும் இழப்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தான் ஏன் பகல் உணவின் போது தனியான இடத்தில் அமர வைக்கப்படுகிறோம் என்கிற கேள்விக்கான பதிலை இலவச உணவு மட்டுமே அவர்களுக்குத் தந்து விடவில்லை, தான் ஏன் இன்னொரு தெருவுக்குள் செருப்போடு நடந்து போகக் கூடாது என்கிற கேள்வியை இலவசக் காலணித் திட்டமும், இலவசப் பயணத் திட்டமும் அவனுக்கு விளக்குவதில்லை, தன்னை விட ஏழை மாணவனின் உணவுத் தட்டைப் பயன்படுத்திய காரணத்துக்காக நான் ஏன் விரல்கள் முறிக்கப்பட்டேன் என்கிற கேள்விக்கான பதிலை பொருளாதாரம் தருவதில்லை.

ஐயா பாரிவேந்தர் அவர்களே, எல்லா ஏழைகளும் இங்கே சம நீதி பெற்றவர்கள் அல்ல, பார்ப்பன ஏழை எப்போதும் கோவில் கருவறைக்குள் போகலாம், தலித் கோடீஸ்வரனால் இன்னும் பல கோவில்களுக்குள் கூட நுழைய முடியாது, ஆதிக்க சாதி ஏழையின் பிணம் மதிப்பும், மரியாதையும் கொண்டது, ஒடுக்கப்பட்ட மனிதனின் பிணம் மதிப்பீடுகள் இல்லாத தீட்டுக் கொண்டது, சமூக நீதியை வெறும் பொருளால் பெற்று விட முடியாது பெருமகனாரே.

ஆயிரமாண்டு காலப் புறக்கணிப்பையும், சமூக அநீதியையும் நீங்கள் வெறும் பொருளால் வகைப்படுத்தினால், அதன் பின்னால் இருக்கிற சமூக உளவியல் குறித்த எந்த அக்கறையும் இல்லாத, அரசியல் நுண்ணுணர்வு இல்லாத ஒரு தட்டையான கருத்தியலைச் சார்ந்து இயங்குகிறீர்கள் என்று பொருள்.

தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளாக ஒரு விடையில்லாத கேள்விகளை எமது குழந்தைகள் தங்கள் இதயத்தில் வைத்திருக்கிறார்கள், நான் ஏன் பொதுத் தெருவுக்குள் போகக் கூடாது? நான் ஏன் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கக் கூடாது? நான் ஏன் பொதுத் தெருவுக்குள் எனது மிதிவண்டியை ஓட்டிச் செல்லக் கூடாது? நான் ஏன் பொது அரசுப் பள்ளியில் தனி வரிசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்? இது போல ஆயிரமாயிரம் உளவியல் சிக்கல்கள் மிகுந்த கேள்விகளை அவர்கள் தொடர்ந்து கேட்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பொதுச் சமூகம் அவர்களின் முன்னாள் வைக்கிற சமூக இயங்கியல் தடைகளை எதிர் கொள்ளும் ஒரு மன எழுச்சிக்கான போராட்ட ஆற்றலை அவர்கள் தொடர்ந்து செலவழிக்கிறார்கள், பொதுச் சமூகத்தோடு தன்னைப் பொருத்திக் கொள்கிற ஒரு இயல்பான மனநிலையை அவர்களால் அவ்வளவு எளிதில் பெற்றுக் கொள்ள முடிவதில்லை, புறக்கணிப்பாலும், ஒடுக்குமுறையாலும் இழந்து போன கல்வி, பொருளாதார மற்றும் சமூக இருப்பின் வெற்றிடத்தை ஏழ்மையும், வறுமையும் நிரப்பிக் கொண்டு விட்டது.

இப்போது இவர்கள் இரண்டுக்கும் எதிராகப் போரிட வேண்டும், பொது சமூக உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் நீதிக்கான போராட்டம், பிறகு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டம். உயர் மற்றும் ஆதிக்க சாதிச் சார்பு நிறைந்த இந்திய பொது சமூகத்தில் வாழும் ஏனைய சமூக குழுக்களுக்கும், உயர் சாதி மனநிலைக்கும் புறக்கணிப்பும், மறுப்பும் இல்லாத ஒரு உளவியல் விடுதலை இருக்கிற போது அவர்களின் செயல்திறனும், இயங்கியல் திறனும் வெவ்வேறு படிநிலைகளில் இருக்கிறது.

மாறாக ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனின் உளவியல் மற்றும் இயங்கியல் திறன்களின் ஊற்றுக் கண்களே இன்னும் திறக்கப்படாமல் இருப்பதை உணர்ந்து தான், உலகம் போற்றும் அறிவுத் திறனும், சமூக ஆய்வாளருமாகிய அண்ணல் அம்பேத்கர் சாதி ரீதியான இட ஒதுக்கீடு ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய அவலங்களை ஓரளவு தீர்க்கக் கூடிய மருந்தாக இருக்கும் என்று வலியுறுத்தி அதனை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலிமையாக இடம் பெறச் செய்தார்.

சாதி பிறப்பின் போதே வரையறுக்கப்பட்ட ஒரு எளிதான அடையாளம் இந்த தேசத்தில், பொருளாதாரம் அப்படியில்லை, பொருளாதார இட ஒதுக்கீட்டின் அளவுகோலை வரையறுக்கும் இடங்களில் அமரப் போகும் ஆதிக்க சாதி உளவியலை நீங்கள் எப்படி வெற்றி கொள்வீர்கள், பொருளாதாரம் எந்தச் சூழலிலும் மாற்றம் பெறக் கூடிய ஒரு புறநிலைக் காரணி, சாதி எந்தச் சூழலிலும் மாற்ற இயலாத சமூக உளவியலோடு தொடர்பு கொண்ட அகநிலைக் காரணி, இதயம் அழுகிப் போயிருக்கும் ஒரு சமூகத்துக்கு நீங்கள் முகத்தை சிவப்பு நிறமாக்கும் “க்ரீம்”களை மருந்தாகக் கொடுக்க முடியாது.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதற்கு முன்னாள் எல்லா சமூகக் குழுக்களின் உரிமைகள் மற்றும் உளவியலை ஒரே நேர்கோட்டில் நிறுத்துங்கள், பார்ப்பனரையும், ஆதிக்க சாதி உயர் சமூகக் குழுக்களையும் இவர்களது பிறப்பினாலான இலவச சமூக ஒதுக்கீட்டை முற்றிலுமாக சட்டங்களால் நீக்குங்கள், எல்லாத் தெருக்களையும், எல்லாப் பள்ளிகளையும், எல்லாக் குழந்தைகளையும் பொதுமைப்படுத்திய பிறகு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுகளையும், திட்டங்களையும் செயல்படுத்துங்கள்.

ஒடுக்கப்பட்ட எமது குழந்தைகள் பிளவுபட்ட, கரடு முரடான, முட்களும், கற்களும் நிரம்பிய ஒற்றையடிப் பாதைகளில் இருந்து பொதுவில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள், பொதுச் சமூகமோ நெடுஞ்சாலையில் ஒரு சொகுசான பயணத்தில் இருக்கிறது, நீங்கள் இரண்டு பயணத்தையும் ஒன்று என்கிறீர்கள், சிறகுகள் முறிக்கப்பட்ட பறவைகளையும், இளஞ் சிறகுகளால் உயர உயரப் பறக்க முடிகிற பறவைகளையும் இரண்டும் பறவைகள் தானே என்று தொடர்ந்து சொல்கிறீர்கள்…

 

தேர்தல் ஆணைய வாட்ஸ்அப் குரூப்பில் சாதி

ஸ்ரீதர் கண்ணன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒரு வாட்ஸப் குழுமம் செயல்படுகிறது. அதில் திரு. கார்த்திமோகன் என்ற கிராம நிர்வாக அலுவலர் சமூக அமைதியைக் குலைத்து சாதீய பகைமையைத் தூண்டும் வண்ணமும் செயல்படுகிறார். அவர் தனது அலுவல்ரீதியான WhatsApp குழுக்களின் மூலம் 9677455954 என்ற எண்ணின் மூலம் சாதீய அடிப்படைவாதக் கருத்துக்களை பரப்பி வருகிறார்.

தேர்தல் ஆணையம் மூலம் செயல்படும் இக்குழுவில் இது போன்ற கருத்துக்களை எப்படி அக்குழுமம் அனுமதிக்கிறது.

இப்படி சாதிய ரீதியாக கருத்து தெரிவித்துள்ள அந்த கிராம நிர்வாக அலுவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

இல்லை இங்கும் சாதி தான் கோலோச்சும் என்று கிடப்பில் போடுமா?

”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!

2013-ஆம் ஆண்டு ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்டி, அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த 10 எண்ணிக்கைக்குள் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி ”தே…பசங்களா! க…பசங்களா!” எனக் கூறி நீண்ட கட்டையை எடுத்து அடிக்கப் பாய்கிறார் இரா. அருள். இவர் பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர். தற்போது பாமக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத பொழுதே, காவல்துறையினரை மிரட்டி கட்டுப்படுத்தி தங்கள் கட்சித் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கும்பலாக அடிக்கப் பாய்கிறார் இவர்

ஸ்ரீதர் கண்ணன்

பா.ம.க-வின் சேலம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள அருள் எப்படிப்பட்ட சாதிவெறி – ரவுடி என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இவரெல்லாம் சட்டமன்றத்திற்கு வந்தால் என்ன ஆகும் என்பதையும் நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற சாதிவெறி – ரவுடிகளைக் கொண்ட பா.ம.கவை புறக்கணிக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதையும் உணருங்கள்

பா.ம.கவினர் எந்த அளவிற்கு சாதிவெறிப்பிடித்த மிருகங்கள் என்பதை இந்த வீடியோ லிங்க்கில் உள்ள கமெண்டுகளின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

“வேறு ஒரு தொழிலைச் செய்யப்போகலாம்”: கருணாநிதியின் சாதி அடையாளத்தை சந்திக்கு இழுக்கும் வைகோவின் சாதிவெறி

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார் வைகோ. கேப்டன் டீவியில் நேரலை பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம் போலத்தான் பொங்குகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தார்.

இடையே சந்திரகுமாரின் வெளியேற்றத்தைப் பற்றி விளாசித்தள்ளிக்கொண்டிருந்தார். ஆச்சரியமில்லைதான்.

அப்போது சந்திரக் குமாரின் செயல்பாட்டை மிகமோசமாக வர்ணித்தார். அந்த “துரோகத்தை” அ்மபலப்படுத்தும்போது அவர் “வேறு ஒரு தொழிலைச் செய்யப்போகலாம்” என்றார். உலகத்தின் ஆதித்தொழிலைச் செய்யலாம் என்றார். இதுவும்கூட திராவிட வாய்ச்சவடால் ஸ்டைல்தான்.

அதன் பிறகு கருணாநிதியும் உலகத்தின் ஆதித் தொழிலைச் செய்யப்போகலாம் ஒரே போடாக போட்டா்ர்..

உலகின் ஆதித் தொழிலைச் செய்பவர்களை எதற்கு இழுக்கவேண்டும் எனறே தெரியவில்லை. அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு படு்க்கமாட்டேன் என்றார்களா? நடுராத்திரியில் அணி மாறினார்களா?
துரோகிகளாகவோ அரசியல்வாதிகளைப் போல மோசமானவர்களாகவோ அவர்கள் இருக்கிறார்களா? பாவம் அவர்கள். சரி, அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம ஊர் “ஆம்பிளைகளைப்” பற்றி நமக்குத் தெரியும்தானே!

அடுத்து சொல்கிறார் வைகோ. கருணாநிதிக்கு வேறு ஒரு தொழிலும் தெரியுமாம்? நாகஸ்வரம் வாசிக்கிற தொழில்!

எதற்காக வைகோ இந்த இடத்தில் கருணாநிதியின் சாதியை இழுக்கிறார்? அது வெறும் தொழில் சம்பந்தப்பட்ட வார்த்தை அல்ல. ஏனென்றால் கருணாநிதி ஒரு நாகஸ்வர வித்வானாக அறியப்பட்டவர் அல்ல. அவரோடு அதை சம்பந்தப்படுத்துவதாக இருந்தால் அது அவரது சாதியைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தானே ஒழிய. வேறு ஒன்றும் அல்ல.

வைகோவின் வார்த்தைகளை இந்த சாதிய சமூகத்தில் ஒரு பச்சைக் குழந்தைகூட புரிந்துகொள்ளும். அவர் கருணாநிதியின் ஜாதியை, – நாகஸ்வரம் வாசிப்பதைத் தொழிலாக கொண்டிருக்கும் ஒரு ஜாதியை – சுட்டிக்காட்டி, அதை உலகின் ஆதி தொழிலைச் செய்பவர்களோடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்.

எப்படிப்பட்ட ஆதிக்க சாதி மனநிலையும் ஆணாதிக்க மனநிலையும் இருந்தால் வைகோவால் இப்படி பேசமுடியும் என்று யோசித்துப்பாருங்கள்.

வைகோவின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதை அவரே அடிக்கடி வெளிப்படுத்திவருகிறார். அதில் ஒரு அம்சம்தான் இது. அன்று “கருவின் குற்றம்” என நாஞ்சில் மனோகரன் கருணாநிதியின் பிறப்பை கேள்விக்குள்ளாகியது தொடங்கி, இன்று ஆதி தொழில், நாகஸ்வரம் வாசிக்கும் தொழில் தெரிந்தவர் என கருணாநிதியை வைகோ விமர்சிப்பது வரை, மதிமுக தலைவர்கள் பலருக்கும் வேறு கட்சிகளில் இருக்கும் தமிழ்நாட்டு ஆண்டை சாதித் தலைவர்களுக்கும் கருணாநிதியின் சாதியைச் சுட்டிக்காட்டி விளையாடுவது ஒரு நீண்டகால சாதிவெறி விளையாட்டு.

வைகோ அப்படிப் பேசியதைக் கேட்டுக்கொண்டு மேடையில் அமர்நதிருந்த திருமா, ஜிஆர். முத்தரசன், ரவிகுமார் போன்றோரின் மனத்தில் அப்போது எத்தகைய எண்ணவோட்டம் இருந்திருக்கும் என்று நமக்குத் தெரியாது.

(டிஸ்கி: இது கருணாநிதி ஆதரவு பதிவு அல்ல. கருணாநிதியைத் தூக்கியெறிய ஆயிரம் காரணம் உண்டு. இப்போதும் ஜெ-கருணா இருவர் கூட்டணிக்கு எதிராகவே நிற்கிறேன். அது வேறு. ஆனால் வைகோவிடம் உறைந்திருக்கும் ஆண்டை சாதி மனோபாவததைப் பற்றி குறிப்பிடவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் பேர்போன சாதியொழிப்பாளர்கள் இவரை நம்பி தங்களுக்கு தாங்களே குழிபறித்துக்கொண்டிருக்கிறார்களே!)

ஆழி. செந்தில்நாதன், ஊடகவியலாளர்.