தொ.பரமசிவனை பெரியாரிஸ்ட்கள் எப்படி அணுக வேண்டும்? சுகுணா திவாகர்

தோழர்.வே.மதிமாறன் நான் மிகவும் மதிக்கும் சிந்தனையாளர்; எழுத்தாளர்; பேச்சாளர். பல்லாண்டுகால நண்பர். வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் அம்பேத்கர். பெரியார் சிந்தனைகளை முன்வைப்பவர். எண்ணற்ற இளைஞர்களைத் தன் பேச்சால் ஈர்ப்பவர். ஆனால் சிலசமயம் அவரது தடாலடியான கருத்துகள் ஆழமும் சாரமும் அற்ற அப்போதைய கவர்ச்சிகரம் வாய்ந்தவை, சமயங்களில் பெரியாரியலுக்கு எதிர்த்திசையில் நடைபோடுபவை. அதற்கான சமீபத்திய உதாரணம் தொ.பரமசிவன் குறித்த அவரது அண்மைய வீடியோ. அவரது 'பாரதிய ஜனதா பார்ட்டி' நூலை அறிவுலகம் தேவையற்ற பதற்றத்துடன் எதிர்கொண்டது உண்மைதான். … Continue reading தொ.பரமசிவனை பெரியாரிஸ்ட்கள் எப்படி அணுக வேண்டும்? சுகுணா திவாகர்

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4

ப. ஜெயசீலன் முதல் மூன்று பகுதிகளை படிக்க பகுதி 1 பகுதி 2 பகுதி 3 < div> சமூக விலங்கான மனிதர்கள் அடிப்படையில் கூடி, இசைந்து வாழக்கூடியவர்கள். கூடியிருத்தல்,கூடுதல் எப்பொழுதுமே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆதி மனிதர்கள் கூடிஇருக்கையில் பயமற்று,ஆபத்துகளை சந்திக்கும் வல்லமையோடும், தேவையான உணவை கண்டடையும் வாய்ப்புகளோடும் இருந்தார்கள்.எனவே by instinct அவர்கள் கூடியிருப்பதை விரும்பினார்கள். அதனால் தான் இன்றும் நாம் மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால், சடங்கின் பெயரால், கலையின் பெயரால்,விளையாட்டின் பெயரால் என … Continue reading சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4

”முதல்வரய்யா… நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’

பாரதிதம்பி ''முதல்வரய்யா... நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’ என்று எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் உ.பி. மாநிலம் கான்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவர். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்த மாணவர் ஒரு முஸ்லிம். இதனால், பள்ளியின் ஆசிரியர்களும் முதல்வரும் மீண்டும் மீண்டும் அவரை ‘டெர்ரரிஸ்ட்’ என வகுப்பறையில் அழைத்தனர். ஒவ்வொரு நாளும் அந்த மாணவரின் ஸ்கூல் பேக் … Continue reading ”முதல்வரய்யா… நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’

”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம். நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இன்றைய டாக்டருக்கும், தலித்துகளை ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்ற அன்றைய டாக்டருக்கும் எட்ட முடியாத அளவிலான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. ஆச்சர்யமாகவும் … Continue reading ”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

“பன்றி” யார் ?

சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும்  இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும்  ஆகிறான். இப்படிபட்ட  சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு!

அ. குமரேசன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுவோருக்கு ஒரு முக்கிய வெற்றியாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 5) அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கிறேன், வரவேற்கிறேன். எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானதுதான் எழுத்தாளர்களின் சமூகப் பொறுப்பும். கருத்துரிமை, சமூகப்பொறுப்பு இரண்டிற்கும் சம முக்கியத்துவம் அளிக்கிற இயக்கம்தான் எமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். ஒரு ஊரைப்பற்றி, அதன் வாழ்க்கை … Continue reading பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு!

“ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்

நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், ஸ்வாதி பிராமணப் பெண் என்பதால்தான் அவருக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை என சொன்ன நிலையில், மற்றொரு பிரபலம், பத்திரிகையாளர் மஞ்சுளா ரமேஷ், தனது முகநூலில் இப்படித் தெரிவித்திருக்கிறார். Manjula Ramesh ரோடில் சிரித்துப் பேசிக்கொண்டு போகும் இளம் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது...இப்படி பயப்படும் நிலைக்குத் தமிழ்நாடு மாறிவிட்டதே...நாம் எங்கே போகிறோம்? மஞ்சுளா ரமேஷின் பதிவுக்கு எழுத்தாளர் தமயந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இயங்கும் பல … Continue reading “ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்

“ஏண்டா ப…… தா….லி எனக்கு ஏண்டா போன் செஞ்ச” தெரியாமல் போன அழைப்புக்கு சாதித் திமிர் பிடித்தவரின் வசைச்சொல்; கண்டித்ததற்கு அரிவாள் வெட்டு

மு கந்தசாமி சிவகங்கை மாவட்டம் சூராணம் அருகே உதயனூர். ஞானசேகரனின் (தலித் கிறிஸ்தவர்) ஊர். பாபு என்பவருக்கு போன் பண்ண முயற்சிக்கிறார். தெரியாமல் பிரபு (ஆதிக்க சாதி) என்பவரின் நம்பருக்கு கால் போய்விட்டது. ஆகா, ராங் கால் போய்விட்டதே என்று உடனே கட் பண்ணுகிறார். ஆனாலும் கால் போய்விடுகிறது. பிரபு உடனே லைனுக்கு வந்து, “ஏண்டா ப...... தா....லி எனக்கு ஏண்டா போன் செஞ்ச” என்று ஞானசேகரனை அசிங்க அசிங்கமாகப் பேசுகிறார். நொந்துபோன ஞானசேகரன் நேராக பிரபுவின் அப்பாவிடம் … Continue reading “ஏண்டா ப…… தா….லி எனக்கு ஏண்டா போன் செஞ்ச” தெரியாமல் போன அழைப்புக்கு சாதித் திமிர் பிடித்தவரின் வசைச்சொல்; கண்டித்ததற்கு அரிவாள் வெட்டு

“நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்

சாதிய தீவிரத்தை உணர்த்திய அறிமுகப்படமான ஃபாண்ட்ரி மூலம் மராத்தி சினிமாவுக்கு புத்துயிரூட்டியவர் நாக்ராஜ் மஞ்சுளே(37). வெளியாக இருக்கும் ‘சய்ரத்’ படத்தில் காதல் கதைக்கு மாறியிருக்கிறார். தன்னுடையை திரை முயற்சிகள் ஏன் ஏற்றத் தாழ்வுகளை மையப்படுத்துகின்றன என்று உரையாடுகிறார் நாக்ராஜ். தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக நேர்கண்டவர்: Alaka Sahani  நேர்காணலின் தமிழாக்கம் இங்கே... உங்களுடைய முதல் சினிமா ஃபாண்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பு அடுத்த படமான சய்ரத் மீது ஏதேனும் அழுத்தம் செலுத்தியதா? ஃபாண்ட்ரி திரைப்படத்தை உருவாக்கும்போது, … Continue reading “நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்

”அங்கு போகாதே! அது அவர்களின் இடம்!” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு

அருணா ஸ்ரீ இது தில்லி பெண்ணைப் பற்றியோ கேரளப் பெண்ணைப் பற்றியோ அல்ல. பொதுவெளியில் களையெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை. அதிலும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கவனிக்க வேண்டிய விசயம். இன்று எங்கு பார்த்தாலும் தலித் மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகளையும் சவால்களையும் முன்னெடுத்து வலைத்தளங்களில் வாதிடுகிறோம். உயிர்களின் மதிப்பு கூட ஜாதி அடிப்படையில் தான் மதிப்பிடப்படுகிறது. எங்கும் தலைவிரித்தாடும் இந்த பேயானது , கல்வி மையங்களிலும் ஆடும் ஆட்டம் ஆரம்பக் கட்டத்திலே தடுக்க வேண்டிய … Continue reading ”அங்கு போகாதே! அது அவர்களின் இடம்!” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு

“சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது” கேட்டட் கம்யூனிடி என்னும் தீண்டாமை குடியிருப்புகள்!

“சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது”  பெங்களூரு ப்ரெஸ்டீஜ் சாந்திநிகேதன் என்னும் கேட்டட் கம்யூனிடி குடியிருப்பில் ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பு வாசகங்கள் இவை. கேட்டட் கம்யூனிடி என்னும் குடியிருப்புகள் தீண்டாமை குடியிருப்புகளாக மாறிவருவது குறித்து பெங்களூரு மிரர் A gulf, maid in B’luru என்னும் தலைப்பில் ( by Maitreyi Krishnan and Clifton D’ Rozario. (This is a guest post by the writers who are lawyers practicing in … Continue reading “சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது” கேட்டட் கம்யூனிடி என்னும் தீண்டாமை குடியிருப்புகள்!

“பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ?” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்!

சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீப்ரியா தேன்மொழி போட்டியிட விரும்பவில்லை என்று விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக ஆதனூர் பவானி அவர்களை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. டாக்டர் ஸ்ரீப்ரியா விலகலுக்கு மாவட்ட செயலாளரின் சாதிய பேச்சே காரணம் என மதுரை ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் தி திமுக சார்பில் சோழவந்தான் தனித்தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி அவர்களை திமுக மாவட்ட செயலாளரும் தேவர் சாதிவெறியருமான பெ. மூர்த்தி இழிவுபடுத்தி பேசியதால் … Continue reading “பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ?” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்!

ஒடுக்கும் சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியரை நிர்வாணவாக்கி, சிறுநீர் குடிக்க வைத்த சாதி வெறியர்கள்

தமிழகத்தில் சாதிய மனநோய் கடுமையான நிலையை எட்டி இருக்கிறது என்பதற்கு நாளுக்கு நாள் ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. கொலை, வன்முறை, மனித உரிமை மீறல் என அனைத்துவிதமான கொடுமைகளையும் தலித் மக்கள் மீது ஏவுகிறது சாதிய சமூகம். திருச்சி அருகே நடந்த இந்த சம்பவத்தைப் பாருங்கள்... எவிடென்ஸ் கதிர் தலித் இளைஞரை சீறுநீர் குடிக்க வைத்து..அவர் கட்டிய தாலியை கத்தியால் அறுத்து வேறு ஒரு இளைஞரை கொண்டு தாலி கட்ட வைத்த கொடுமை நடந்து இருக்கிறது. திருச்சி … Continue reading ஒடுக்கும் சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியரை நிர்வாணவாக்கி, சிறுநீர் குடிக்க வைத்த சாதி வெறியர்கள்

தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது!

ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் தலித் மக்களை உணவகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதிக்காத அம்மன் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவகத்திற்குள் தலித் மக்களை அனுமதித்தால் மற்ற சமூகத்தினர் வரமாட்டார்கள் என இந்த உணவகத்தின் உரிமையாளர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. தி டைம்ஸ் தமிழும் வெளியிட்டது. http://www.youtube.com/watch?v=iNyzsuRwyvQ இந்நிலையில் இந்த தீண்டாமைக்கு எதிராக சமூகநீதிக் கட்சியினர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் படி புகார் அளித்தனர். அதன் பேரில் உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகநீதிக் கட்சி தலித்துகளை … Continue reading தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது!

இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் காதலுக்கு சாதி எதிர்ப்பு: திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகம்!

திருப்பூரைச் சேர்ந்த சக்தி காமாட்சி - ஆனந்த் தங்கள் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சாமிநாதன் அவர்களிடம் பாதுகாப்பு கோரிவந்தனர். ஆனந்த் ''இந்துமுண்ணனி''யின் தீவிர உறுப்பினர். இவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பாதுகாப்பளித்து சட்டப்படி 25.03.2016 அன்று திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து திவிக வெளியிட்ட குறிப்பில், “இணையரின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு பெண் வீட்டார் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இணையருக்கு … Continue reading இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் காதலுக்கு சாதி எதிர்ப்பு: திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகம்!

கொங்கு பகுதியில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை; கரூரில் கூலிப்படையால் இளைஞர் வெட்டிக் கொலை

உடுமலைப் பேட்டை சங்கர் கொடூரமாக கொல்லப்பட்டதன் அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை. இதற்குள் மேலும் ஒரு ஆணவக் கொலை அரங்கேறியுள்ளது. இதுவும் கொங்கு பகுதியில்... மணிகண்டன் மா.பா மீண்டும் ஒரு ஆணவக் கொலை.... திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் மகன் சுரேஷ் ஆரோக்கியசாமி வயது 28.இவர் தனது தாய் மற்றும் சகோதரிகளோடு கரூர் ஆண்டாங்கோவில் ராமா கவுண்டன் புதூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி உள்ளார்.இதனிடையே வீட்டு உரிமையாளரின் மகளுக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் கடந்த … Continue reading கொங்கு பகுதியில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை; கரூரில் கூலிப்படையால் இளைஞர் வெட்டிக் கொலை

“ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. கல்யாணம் பண்ணும் போது சாதி பார்க்கணும்”: திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி

“ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும்” என முன்னாள் திமுக அமைச்சர் க. பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசிய பொன்முடியின் பேச்சை ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும், வாக்களிக்க சாதி பார்த்தால் அப்புறம் வருஷம் முழுதும் கஷ்டம்தான் என்று பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://twitter.com/Sentamizh_vck/status/713769638908170240 மேலும் திமுக முன்னாள் அமைச்சர்கள் சாதிக் … Continue reading “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. கல்யாணம் பண்ணும் போது சாதி பார்க்கணும்”: திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி

”ஜனநாயகத்தை பத்தியெல்லாம் பேசாதீங்க; ஓட்டல்ல அவங்களுக்கெல்லாம் எடமில்லை”: கொங்கு பகுதி உணவகங்களில் தீண்டாமையை வீடியோவில் பாருங்கள்

கொங்கு மண்டலம் சாதியத்தை தக்க வைத்துக்கொள்வதில் எத்தகைய கீழ்மையான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என சமீப கால பல நிகழ்வுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. திருமண மண்டபங்களில் தீண்டாமை என சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வந்த செய்தியை வெளியிட்டிருந்தோம். காங்கேயம் அதிமுக எம் எல் ஏ வுக்குச் சொந்தமான திருமணம் அது என்பது கூடுதல் கீழ்மை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் ஒடுக்கும் சாதியினர் நடத்தும் உணவகங்களில் தலித் மக்கள் உணவு விற்பனையும், சரிசமமாக உணவகத்தில் அமர்ந்து உண்கிற … Continue reading ”ஜனநாயகத்தை பத்தியெல்லாம் பேசாதீங்க; ஓட்டல்ல அவங்களுக்கெல்லாம் எடமில்லை”: கொங்கு பகுதி உணவகங்களில் தீண்டாமையை வீடியோவில் பாருங்கள்

தீண்டப்படாத கிறிஸ்தவரின் பாதத்தை இயேசுவின் பெயரால் யார் தீண்டுவார்?

அன்பு செல்வம் உங்களில் தலைவராக இருக்க விரும்புகிறவர் முதலில் எப்படி ஒரு தொண்டராக இருக்க வேண்டும் என்பதற்காகவும், யூத கலாச்சாரத்தின் பஸ்கா விருந்து அடையாளத்துக்காகவும் இயேசு தனது இயக்கத் தோழர்களுக்கு செய்து காண்பிக்கும் ஒரு வேலைத்திட்ட‌ நிகழ்வு தான் இந்த "பாதம் கழுவுதல் - Foot Washing Ceremony". இதனை "நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்" (John. 13 : 14) என்று மாபெரும் கட்டளையாகவும் கூறுவார். தனது தோழர்களுக்கு அவர் விதித்த ஒரே கட்டளையும் … Continue reading தீண்டப்படாத கிறிஸ்தவரின் பாதத்தை இயேசுவின் பெயரால் யார் தீண்டுவார்?

#பாரத்மாதாகீஜெய்!: தலித் பெண்களை நிர்வாணமாக்கி தாக்கும் ‘உயர்சாதி’ பெண்கள்: சுற்றிலும் நின்று அதை மொபைலில் படம் பிடித்த ஆண்கள்

தலித்துகள் நிலையில் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். சாதி நோய் பீடித்த இந்திய சமூகம், எத்தனை வன்மமானது, பெண்களின் ‘உயர்சாதி’ வன்மம் எத்தகைய கோரப் பற்களுடன் தலித் பெண்களை கடித்து குதறுகிறது என்பதைக் காட்டுகிறது இந்த வீடியோ. நிர்வாணமாக்கப்பட்ட இரண்டு பெண்கள், தண்ணீரில் தள்ளப்பட்டு கிடக்கிறார்கள், 3 அல்லது 4 பெண்கள் அவர்களை கடும் வன்மத்துடன் தாக்குகிறார்கள். அந்தப் பெண்கள் கதறி அழுகிறார்கள். அவர்களைச் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் போனில் … Continue reading #பாரத்மாதாகீஜெய்!: தலித் பெண்களை நிர்வாணமாக்கி தாக்கும் ‘உயர்சாதி’ பெண்கள்: சுற்றிலும் நின்று அதை மொபைலில் படம் பிடித்த ஆண்கள்

“எங்க அப்பா என்னை கவுரவ கொலை பண்ண திட்டம் போடறாங்க; என்னைக் காப்பாத்துங்க” தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா கண்ணீர்

உடுமலைப் பேட்டை சாதி வெறித் தாக்குதல் சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, தலித்தை காதலித்தார் என்பதற்காக பிரியங்கா என்ற பெண், கடுமையாக தாக்கப்பட்டுள்ள செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா தன்னுடைய முகநூல் பதிவில் இவ்வாறு பகிர்ந்துள்ளார். ஆணவ படுகொலை செய்யப்படவிருக்கும் பெண்ணின் உயிரை காக்க உதவுங்கள் ........ புதுக்கோட்டை ஆலங்குடி பகுதி பிரியங்கா - வினோத் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வினோத் தலித் , … Continue reading “எங்க அப்பா என்னை கவுரவ கொலை பண்ண திட்டம் போடறாங்க; என்னைக் காப்பாத்துங்க” தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா கண்ணீர்

’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி

உடுமலைப் பேட்டையில் பொறியியல் மாணவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞருமான சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குக் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், நீதிபதிகள் நாகமுத்து, ஜெயச்சந்திரன் ஆகியோர் "பத்திரிகைகளில் வெளியான புகைபட்டத்தில் உள்ளபடி, கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆடையை வழங்காமல் போலீஸ் நிறுத்தியது ஏன்? " என்று கேள்வி எழுப்பியதுடன் … Continue reading ’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி

என்ன நினைத்திருப்பாய் எங்கள் மகனே?

க. கனகராஜ்   கொலையாளிகள் உருவிய அரிவாளோடு உன்னை நெருங்கிய போது, என்ன நினைத்திருப்பாய்?தப்பித்து விடுவோம் என்றா?தான் பிறந்த சாதியின் மீது திணிக்கப்பட்ட அவமானம் தன் பிள்ளையின் மீதும் படிந்து விடக்கூடாது என்பதற்காக பட்டினிக்கிடந்து உன்னை வளர்த்த தாயையா?ஏழ்மை எப்படி வாட்டினாலும் என் மகனாவது எஞ்சினியரிங் படிக்கட்டும், வேலைக்குப் போகட்டும், கண்காணாத இடத்தில் நன்றாக வாழட்டும், நிமிர முடியாமல் அழுத்திக் கொண்டிருக்கும் பரம்பரை சுமையை அவனாது தள்ளி விட்டு நடக்கட்டும் என்று ஊண் இன்றி உறக்கம் இன்றி … Continue reading என்ன நினைத்திருப்பாய் எங்கள் மகனே?

தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், தரகம்பட்டியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை விதித்து, அந்தப் பகுதியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் முள்வேலி அமைத்துள்ளதாக படங்களுடன் செய்தி பகிர்ந்திருக்கிறார் பூவை லெனின். அவருடைய பதிவில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தரகம்பட்டி வடக்கு தெருகாலனியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை. பொதுப்பாதையில் முள்வேலி போட்டு தடுப்பு. தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தயாளன் மற்றும் அவர் தம்பி ராகுல்காந்தி சாதி வெறியாடட்டம். தட்டி கேட்ட சகோதரர் … Continue reading தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?

“நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ தலித் மாணவரை அலைக்கழிக்கும் உ.பி பல்கலை; மாணவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரதமருக்குக் கடிதம்!

ஹரிஷ் குமார் வரலாற்றுத்துறை மாணவர். இவர் 2005ஆம் ஆண்டு பல்கலைக் கழக தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்து மீரட், சௌத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். தந்தை ஒரு தையற்காரர். ஹரிஷ் குமார் 25க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். ஆயினும் அவரால் தன்ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை. இவருக்குத் தன் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒரு மேற்பார்வையாளர் கிடைக்கவில்லை. இவர் சந்தித்த பேராசிரியர்கள் அனைவருமே, “நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ என்று கூறி … Continue reading “நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ தலித் மாணவரை அலைக்கழிக்கும் உ.பி பல்கலை; மாணவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரதமருக்குக் கடிதம்!

சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

கார்ட்டூனிஸ்ட் பாலா இரு தினங்களுக்கு முன் கவிஞர் சல்மா அவர்கள் பதட்டமாக போனில் தொடர்பு கொண்டார். அவருக்கு தெரிந்த ஒரு காதல் தம்பதியை பிரித்து பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் செய்ய முயற்சி நடக்கிறது.. ஏதாவது உதவ வாய்ப்புண்டா என்று கேட்டார். இதுபோன்ற பஞ்சாயத்துகளை கவனிக்கும் சாகசம் என்ற அமைப்பினரின் தொடர்பு எண் கொடுத்தேன். அதன்பிறகு எப்படியோ காவல்துறையினர் மூலம் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியிருக்கிறார்கள். காதலுக்கு குறுக்கே நிற்கும் வழக்கமான சாதி பிரச்னைதான் இந்த காதல் தம்பதியை பிரிக்க முயற்சிப்பதற்கும் … Continue reading சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ... தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்) தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! கடவுளின் கதை (5 பாகங்கள்) யுகங்களின் தத்துவம் பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து … Continue reading தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

வங்கிமேலாளார் முத்துசாமி மனைவி கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது கவுண்டமார் தாலி: நாச்சியாள் சுகந்தி கவிதை

நாச்சியாள் சுகந்தி வங்கிமேலாளார் முத்துசாமி மனைவி கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது கவுண்டமார் தாலி பழனி தாலுகா ஈசாம்பட்டி கிராமம் மருதமுத்து மகன் முத்துசாமி ஆதிதிராவிடர்-பறையர் என அரசுமுத்திரை குத்திய பச்சைத்தாள் வீட்டின் மூலையில் குப்புறக்கிடக்கிறது சாரயக்கடை வாசலில் விழுந்துகிடக்குமவன் பட்டாபட்டி டவுசரில் கலையாமல் இருக்கும் சாதிசங்க உறுப்பினர் அட்டையை பெரும்போதையிலும் இறுகப்பற்றியிருக்கிறான் சாதிஒழிய வேண்டுமென நடுநிசியில் ஒருவள் எழுதிக்கொண்டிருக்கிறாள் காலம் சும்மா உட்கார்ந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது காலம் மாறுதலுக்குட்பட்டது

சாதிய வன்மத்துடன் எழுதிய இலங்கை தமிழருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர் சுப்பையா ரத்தினம், ரவிக்குமாரை, ‘பற நாயே’ சாதிய வன்மத்துடன் பின்னூட்டமிட்டார். இது இந்திய-இலங்கை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களிடையே கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உடைக் கட்டுப்ப்பாடு குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு பற்றி … Continue reading சாதிய வன்மத்துடன் எழுதிய இலங்கை தமிழருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்

”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். “இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக ( University of Jaffna ) நிர்வாகம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது. 1. மாணவர்கள் வகுப்புகளுக்கு ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது 2. வெள்ளிக்கிழமைதோறும் மாணவிகள் சேலை … Continue reading ”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்

நீதிபதி கர்ணனுக்கு வெளிநாடு செல்ல ரூ. ஒரு லட்சம் அளிக்கிறேன்; அவர் விரும்பும் நாட்டுக்கு செல்லட்டும்’: சாதி பிரச்சினைக்கு அர்ஜுன் சம்பத் தீர்வு சொல்கிறார்

நீதிபதி கர்ணணுக்கு எந்த ஒரு நீதிமன்ற அலுவல்களும் கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடட்டிருந்தது.  இது குறித்து சென்னையில் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த கட்டளைகளை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வேன். அவர்களுக்கு சாதிய உள்ளோக்கம் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். சாதிய மனோநிலை பரவிக்கிடக்கும் இந்த நாட்டில் வாழப் பிடிக்கவில்லை … Continue reading நீதிபதி கர்ணனுக்கு வெளிநாடு செல்ல ரூ. ஒரு லட்சம் அளிக்கிறேன்; அவர் விரும்பும் நாட்டுக்கு செல்லட்டும்’: சாதி பிரச்சினைக்கு அர்ஜுன் சம்பத் தீர்வு சொல்கிறார்

தலித் தலைமை என்பது அம்பேத்கரிய-மார்க்சிய செயல்பாட்டுத் தளத்தில் அமைய வேண்டும்; ஏன்?

பிரேம் இந்திய அரசியல்-சமூக விடுதலை அரசியல்-பொருளாதார விடுதலை எதுவாக இருந்தாலும் தலித் அரசியலின் (ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல்- சமூக சமத்துவ அரசியல்) அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகே தமக்கான அடுத்த கட்ட இயக்கத்தைத் தொடர முடியும். அடிமைப்பட்ட சமூகம், அடக்கப்பட்ட சமூகம், ஒடுக்கப்பட்டச் சமூகம் என ஒரு அமைப்பை -பல சாதிகளைத்- தமக்குள் வைத்துக்கொண்டுள்ள ஒரு சமூகக்கூட்டம் அடிப்படையில் சமத்துவம், மனித உரிமைகள், அடிப்படை மனித அறங்கள் என எதையும் மதிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான உண்மை. … Continue reading தலித் தலைமை என்பது அம்பேத்கரிய-மார்க்சிய செயல்பாட்டுத் தளத்தில் அமைய வேண்டும்; ஏன்?

சாதிய குற்றச்சாட்டு எழுப்பிய நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கும் தரக்கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது, சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதாக நீதிபதி சி. எஸ். கர்ணன் குற்றம்சாட்டியிருக்கிறார். நீதிபதி சி. எஸ்.கர்ணன் அளித்த கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற பதிவாளர், இந்த விவாகாரத்தை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அவரச மனுவை புதன்கிழமை அளித்தது. இதன் மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது உச்சநீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கும் தரக்கூடாது என்று உத்தரவிட்டதாக என்டிடீவி செய்தி வெளியிட்டுள்ளது. கொல்கத்தா நீதிமன்றத்துக்கு … Continue reading சாதிய குற்றச்சாட்டு எழுப்பிய நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கும் தரக்கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்

தலித்துகளுக்கு திறக்க மறுக்கும் தேவாலய கதவுகள் 20 ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றன!

தமிழ் ஆதவன் மூடப்பட்டு கிடக்கும் தச்சூர் கத்தோலிக்க தேவாலயதின் கதவுகள் தலித் கிறிஸ்துவர்கள் உள்ளே வரக் கூடாது என மூடியே கிடக்கிறது.. ஒடுக்கப்பட்டோரை நேசித்த இயேசு இந்தியாவின் ஒடுக்கப்பட்டோரை நேசிப்பதில்லை போலும்.. பாவிகள் மன்னிக்கப்படுவார்கள் என சொன்னது சாதி இந்து கிருஸ்துவர்கள் செய்யும் சாதிக் கொடுமைகளை மன்னித்துக் கொண்டே இருக்கிறது .. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது இங்கே தலித் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. செங்கல்பட்டு அருகே உள்ள தச்சூரில் 20 ஆண்டுகாலமாக … Continue reading தலித்துகளுக்கு திறக்க மறுக்கும் தேவாலய கதவுகள் 20 ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றன!

வன்னியர் சாதி பெண்ணை காதலித்ததால் இஸ்மாயில் கொல்லப்பட்டாரா?

சேலம் ஓமலூரை சேர்ந்த சையது இஸ்மாயில் ஆட்டோ ஒட்டுநர். இவர் ஓமலூர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டாவாளத்தில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இஸ்மாயில் சாவுக்கு அவர் திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணை காதலித்ததே காரணம் என அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  அந்தப் பெண்ணின் உறவினர்களால் இஸ்மாயில் மிரட்டப்பட்டார் என்றும்  அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

#Exclusive: சமூக நீதிக்கு எதிரானதை பெரியாரியம் கைவிடும்; ஜல்லிக்கட்டில் தலித்துக்கான இடம் தப்படிப்பது மட்டும்தானா?

கார்ல் மார்க்ஸ் ஜல்லிக்கட்டு' தொடர்பான விவாதங்களை உற்று நோக்குகையில் அது பலரை முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் தலித்தியம் பேசுபவர்களும் அடக்கம். இப்போது பெரியார் இருந்திருந்தால், ஜல்லிக்கட்டை ஆதரித்திருப்பாரா அல்லது எதிர்த்திருப்பாரா என்ற சுவராஸ்யமான விவாதத்தையும் பார்க்க முடிந்தது. ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. இந்தப் பாரம்பரியத்தில் தலித்துகளின் இடம் என்ன என்ற கேள்விதான் தலித்தியர்கள் எதிர்கொள்ள விழைவது. அதை ஒரு பாரம்பரியம் இல்லை என்று அவர்களால் முழுக்கவும் … Continue reading #Exclusive: சமூக நீதிக்கு எதிரானதை பெரியாரியம் கைவிடும்; ஜல்லிக்கட்டில் தலித்துக்கான இடம் தப்படிப்பது மட்டும்தானா?

சாதி கொடுமைக்கு ஆளான நூறு வயது முதியவர் இவர்: யாரென்று தெரிகிறதா ?

கடந்த மூன்றாம் தேதி காலமான மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து. இவரது சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இவருடைய குடும்பத்தினரின் கோரிக்கை. வழக்கமாக தலித்துகள் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை மழையால் உருக்குலைந்து போனதை அடுத்து இந்தக் கோரிக்கையை வைத்தார். கோரிக்கை என்பதைவிட உரிமையைக் கோரினார்கள். நீதிமன்றத்துக்குப் போய் தங்கள் உரிமையைப் பெற்றார்கள். பொது பாதைக்கான நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின், உயர்நீதிமன்ற … Continue reading சாதி கொடுமைக்கு ஆளான நூறு வயது முதியவர் இவர்: யாரென்று தெரிகிறதா ?

பிணத்தை புதைப்பதற்குக்கூட உரிமை மறுக்கப்படும் தலித் மக்கள்: இதுவும் தமிழகத்தில்தான் நடக்கிறது!

மரக்காணம் பாலா நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம். பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர். இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் செத்த பிணத்தை புதைப்பதற்குகூட அவர்களுக்கு அனுமதி இல்லை. 40 தலித் குடும்பங்களை சேர்ந்த திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் பிணத்தை புதைக்கவேண்டும் என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக … Continue reading பிணத்தை புதைப்பதற்குக்கூட உரிமை மறுக்கப்படும் தலித் மக்கள்: இதுவும் தமிழகத்தில்தான் நடக்கிறது!

ஜாதி வெறியைத் தூண்டுகிறாரா திருமாவளவன்? காலச்சுவடு கண்ணன் vs யாழன் ஆதி

சமீபத்தில் திருமாவளவனின் வீடியோ பேச்சு குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம்  முகநூலில் (டிசம்பர் 26) ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருமாவளவனின் பேச்சு சாதியத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.  மேலும் அந்தப் பதிவில், “திருமாவளவனின் இந்த உரை உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. வசவு என்று கருதப்படும் சொற்களை அவர் பயன்படுத்துவதோ ஒடுக்கும் சாதிகளை சீண்டுவதோ என் அதிர்ச்சிக்கு காரணம் அல்ல. இவ்வுரையின் வழி பெண்கள் பற்றிய அவர் மன எண்ணங்கள் பல வெளியே சிந்தி விட்டன. கலப்புத் திருமணம் … Continue reading ஜாதி வெறியைத் தூண்டுகிறாரா திருமாவளவன்? காலச்சுவடு கண்ணன் vs யாழன் ஆதி

வெள்ள நீரில் கலந்த சாதியம்: கடலூரில் நிவாரணம் மறுக்கப்படும் தலித் மக்கள்

பெரும் துயரத்திலும் கடலூர் மக்கள் சாதியத்தை தூக்கி சுமப்பதாக தலித் உரிமைகளுக்கான தேசிய பிரச்சார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.