’பார்பி’ கோவில்பட்டியின் கதை மட்டுமல்ல, திருமங்கலத்தின் கதையும்கூட: லக்ஷ்மி சரவணகுமார்

கோவில்பட்டியில் இத்தனை இலக்கியவாதிகள் செழிப்பாக வந்ததற்குப் பின்னால் அந்த ஊரின் விளையாட்டும் முக்கிய காரணம்.

ரேஷன் அரிசியை நிறுத்த வேண்டுமா?

தீப்பட்டி கம்பெனிகளில் ஒட்டுவதற்காக ஏழு இலைக் கிழங்கு மாவு தருவார்கள். மக்கள் வறுமையின் காரணமாக அந்த மாவை வைத்து ரொட்டி சுட்டுச் சாப்பிட்டுவிடுவார்கள்.

ஆட்சி மாற்றம் எப்படி வரும்?

உண்மையைச் சொல்லட்டுமா? இந்த ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதென பண்ணாரி அம்மன் கோவிலில் எதிர் முகாம் ஆட்கள் தீ மிதிக்கிறார்களாம். தீயாய் எல்லா பக்கமும் பாய்கிறது பணம்.

இந்தியாவின் தேசியம் கோமியத்தில் இருக்கிறது!

அவர்களின் தேசியம் உழைப்பில் இருக்கிறது. இங்கே கோமியத்தில் இருக்கிறது. விரைவில் அதையும் பாட்டிலாக சைனாக்காரனே அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்!

ஒரு ஆயா ட்ரான்ஸ்பரைக்கூட அப்ரூவல் இல்லாமல், பண்ண முடியாது என்கிற போது தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துவதெல்லாம் பெரிய விஷயமா என்ன?

தமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல்!

சரவணன் சந்திரன் இந்தச் சூழலில், வேறு யார் முதல்வரானாலும் சரி தமிழகத்தைக் கட்டிக் கொண்டு அழ முடியாது என்றுதான் தோன்றுகிறது. நாக்கு வெளியே தள்ளி விடும். தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர் ஆகியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமுமே நம்பிக்கையின்மையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய குடை மர்மம் போலத் தமிழகத்தை மூடியிருக்கிறது. இந்த மக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பிள்ளை குட்டிகளுடன் அத்துவானக் காட்டில் ஊற்றுகளில் நள்ளிரவில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு ஊற்றாவது தோண்டித் தாருங்கள் அல்லது, பாம்புக் கடியால் … Continue reading தமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல்!

அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!

சரவணன் சந்திரன்   குரங்குகளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கதை சொல்வார்கள். இது உண்மையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காட்டுயிர் சார்ந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன். அதே சமயம் இந்த உதாரணம் மிகச் சிறந்ததும்கூட. கூண்டிற்குள் மாம்பழமோ ஏதோ ஒரு பழமோ வைத்து குரங்குகளுக்குப் பொறி வைப்பார்கள். அந்தக் குரங்கு கூண்டின் கம்பி இடைவெளிக்குள் கையை நுழைத்து பழத்தை பற்றி விடும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. பழத்தைத் தூர எறிந்து விட்டு மீண்டும் கையை … Continue reading அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!

நூறு நாள் வேலைத் திட்டம்: சில உண்மைகளை பேசித்தான் ஆக வேண்டும்!

சரவணன் சந்திரன் இந்த நூறு நாள் கட்டாய வேலைத் திட்டம் குறித்து பேசுவதெல்லாம் கத்தி மேல் நடப்பதற்குச் சமம். ஆனாலும் இந்த வறட்சி, விவசாயம் என்றெல்லாம் பேசும் போது அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி புரியும் அம்மாவின் மகன்தான் ரோலக்ஸ் வாட்ச் நாயகன் என்பது நான் எந்தப் பக்கம் என்பதை உணர்த்தியிருக்கும். அந்த சொற்ப பணத்தை வைத்து ரேஷன் அரிசி பொங்கிக் குடும்பம் நடத்தும் மூதாட்டிகளை எனக்குத் தெரியும். சும்மா … Continue reading நூறு நாள் வேலைத் திட்டம்: சில உண்மைகளை பேசித்தான் ஆக வேண்டும்!

“நான் நயினார் நாகேந்திரன் பேசறேன் பட் ராங் நம்பர்”: அதிமுகவினர் அன்று இன்றும்!

சரவணன் சந்திரன் இரண்டு நாட்களாக கொஞ்சம் ஒதுங்கியிருந்து நிறைய எழுதினேன். ஒரு ஏழாயிரம் வார்த்தைகள் இருக்கும். தலைமுடி பற்றிய கட்டுரையொன்று எழுதினேன். ஈகா சலூனில் காத்திருக்கும் வணிகக் கழுகுகள் என்பது தலைப்பு. மாற்று விவசாயத்தில் கனி வளர்ப்பு பற்றி ஒருகட்டுரை. இரவு ராணியிடம் தஞ்சமடைந்த கதை என்பது தலைப்பு. இரண்டு பத்திரிகைகளுக்குக் கொடுத்திருக்கிறேன். விரைவில் வரலாம். இந்த அக்கப் போரில் ஒரு ஆங்கிளைச் சொல்லாமல் விட்டு விட்டேன். முன்பெல்லாம் ரிப்போர்ட்டர்ஸ் மத்தியில் ஏடியெம்கே பீட் என்றால் சிதறி … Continue reading “நான் நயினார் நாகேந்திரன் பேசறேன் பட் ராங் நம்பர்”: அதிமுகவினர் அன்று இன்றும்!

கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?

சரவணன் சந்திரன் இரண்டு வகை அரசியல் இருக்கிறது. சட்டத்தை முன்னிறுத்திய அரசியல். சில சமயங்களில் சட்டத்தைத் தாண்டி தார்மீகத்தை முன்னிறுத்தும் அரசியல். முன்னதில் இம்மி பிசகாமல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது முதன்மையானதாக இருக்கும். மு.க.ஸ்டாலின் இப்போது சட்டத்தை முன்னிறுத்திய அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அது மிக முக்கியமானதும் மதிக்கத்தக்கதும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அதே சமயம் ஜல்லிக்கட்டிற்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் தடைக்கல்லாக இருக்கும் சமயத்தில், அது சட்டப்படி செயல்படுகிறது … Continue reading கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?

இனி ஒரு குரோட்டன்ஸ் செடியைக்கூட நட்டு வளர்க்க ஆட்கள் இல்லை!

சரவணன் சந்திரன் புயலின் போதும் புயலுக்குப் பின்னும் மழைப் பயணம் போனேன். எனக்கு ஒரு சாலை மார்க்கம் மிகவும் பிடிக்கும். வால்பாறையிலிருந்து அதிராம்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலக்குடி பாதை அடர்த்தியான காடுகளின் வழியாகப் போகும். இரண்டு பக்கமும் மரங்கள் மூடியிருக்கும். ஆங்காங்கே மட்டும்தான் வெயிலைப் பார்க்கவே முடியும். உண்மையில் மரங்களடர்ந்த புதர்களுக்கு மத்தியிலான சாலை அது. மிக முக்கியமான யானை வழித்தடமும்கூட அது. யானைகள் ஒடித்துப் போட்ட மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து கிடக்கும். கிட்டத்தட்ட கடந்த இரண்டு … Continue reading இனி ஒரு குரோட்டன்ஸ் செடியைக்கூட நட்டு வளர்க்க ஆட்கள் இல்லை!

எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்‌ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது!

சரவணன் சந்திரன் த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் உயரதிகாரியாய் வரும் ஆஷா சரத் ஒரு வசனம் சொல்வார். “எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்‌ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது” என்பார். உண்மைதான் அது என்பதை நேற்று உணர்ந்திருப்பீர்கள். அப்போலாவின் சங்கீதா ரெட்டி க்ரேவ் சிட்டுவேஷன் என்று ட்வீட் செய்தார். அதற்கடுத்து ரிச்சர்ட் பீலே அறிக்கை அதை உறுதி செய்தது. மறுபடி சங்கீதா ரெட்டி மிக மிகக் கவலைக்கிடம் என்றார். இடையில் மரணமடைந்ததாக அறிவிப்பு வந்தது. அது திரும்பப் பெறப்பட்டது. … Continue reading எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்‌ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது!

வீழ்ந்தவர்களில் பிழைத்தவன் கதையே அஜ்வா!: சரவணன் சந்திரன்

ஒரு விளையாட்டு வீரனை, அவன் காயமற்று இருக்கிற காலத்தில் களத்திற்கு அனுப்பாமல் இருக்கிற நிலை துயரமானது. அந்தத் துயரத்தைப் பல முறை அனுபவித்திருக்கிறேன். எனவே வாய்ப்புக் கிடைக்கிற போது முழுமையாக ஆடிப் பார்க்க நினைக்கிறேன். இப்போது நல்ல உடல் தகுதியோடு இருப்பதாகவும் கருதுகிறேன். எனக்கு ஏற்கனவே பழக்கமான களம்தான் இது. இங்கிருந்துதான் என்னுடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தேன். இடையில் கொஞ்ச வருடங்கள் பிழைப்புத் தேடி வேறு வேறு நிலங்களில் சுற்றினேன். அது அனுபவங்களைக் கொட்டிக் கொடுத்தது. அந்த … Continue reading வீழ்ந்தவர்களில் பிழைத்தவன் கதையே அஜ்வா!: சரவணன் சந்திரன்

‘நம்ம பையன்ப்பா. நாசமாயிடக்கூடாதுல்ல’!

சரவணன் சந்திரன் பரபரப்பான அரசியல் விவாதங்களுக்குப் பெயர் பெற்ற தந்தி டீவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனுக்கு என்ன வேலை? இது பொதுவான அரசியல் நிகழ்ச்சிதானே என்று சொல்லக்கூடும். ஆனால் இதற்கு முன்னர் இப்படி ஏதேனும் நடிகர்கள் அந்நிகழ்ச்சியில் அணிவகுத்திருக்கின்றனரா என்கிற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால், இதற்குப் பின்னால் உள்ள முடிச்சுக்களும் திரைத் துறையில் ஏற்படத் துடிக்கும் உடைப்புகளும் தெரியவரும். கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட அந்த நிகழ்ச்சியும்கூட ஒரு தவிர்க்கவே இயலாத அரசியல் நிகழ்ச்சிதான். தந்தி டீவி … Continue reading ‘நம்ம பையன்ப்பா. நாசமாயிடக்கூடாதுல்ல’!

பழிவாங்கும் தலைமுறை! சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் கடந்த இரண்டு நாட்களில் ஒருதலைக் காதலால் நடந்த நான்கு சம்பவங்களை சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. கரூரில் சோனாலி என்கிற மாணவி கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரான்சினா என்கிற ஆசிரியர் தொழில்புரிந்த பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். திருச்சியைச் சேர்ந்த மோனிகா என்கிற மாணவி கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருத்தரும் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். இந்த நான்கு சம்பவங்களும் இன்னொரு ஆழமான உண்மையை நமக்கு … Continue reading பழிவாங்கும் தலைமுறை! சரவணன் சந்திரன்

கருத்து கணிப்புகள் எப்படி எடுக்கப்படுகின்றன? ஒரு ஊடகவியலாளரின் அனுபவம்!

சரவணன் சந்திரன் 2001 ஆம் வருடம். அப்போதுதான் ஆறாம்திணையில் வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம். சம்பளம் போதவில்லை. எங்களுடன் கல்லூரியில் படித்த நண்பனொருவன் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனத்தில் வேலையில் இருந்தான். என்னையும் என்னுடைய நண்பர்கள் சிலரையும் நடக்கவிருந்த அந்தத் தேர்தலுக்குக் கருத்துக் கணிப்பு வேலைக்காக அழைத்திருந்தான். ஒருநாளுக்கான சம்பளம் 150 ரூபாய். ஐம்பது பேரைச் சந்தித்து கருத்துக் கணிப்புப் படிவங்களை நிரப்பித் தரவேண்டும் என்பது விதி. நானும் சில நண்பர்களும் முதலிரண்டு நாள்கள் ஆர்வமாக … Continue reading கருத்து கணிப்புகள் எப்படி எடுக்கப்படுகின்றன? ஒரு ஊடகவியலாளரின் அனுபவம்!

#புத்தகம்2016: சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் எப்படி இருக்கிறது?

எஸ்.செந்தில்குமார்  சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் நாவல் வாசித்தேன். எனக்குப் பிடித்திருந்தது. கணபதி என்கிற கதாபாத்திரன் மூலமாகக்கூட இந்த நாவல் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது அவர் வழியாக நாவல் முடிவடைந்திருக்கலாம். எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கான காரணம் முற்றிலும் வேறொரு வாசிப்பு அனுபவமாக இருந்தது. காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்காரர் விருது வாங்க டெல்லி செல்வது ரேஷன் கடை சாக்குப்பை டாஸ்மார்க் அட்டைப்பெட்டி அதிகாரவர்க்கத்தினருடன் தொடர்பிலிருக்கும் மனுஷன் ரயிலில் அடிப்பட்டு சாவது என்று மாநகர அரசியல் வாழ்வை அளவாக சித்திரப்படுத்தியிருப்பது சுவாரஸ்யமாகவும் அதேநேரம் … Continue reading #புத்தகம்2016: சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் எப்படி இருக்கிறது?

“ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்?

புத்தக வெளியீடுகள் அதிகமாக நடக்கும் காலக்கட்டங்களில் சர்ச்சைகளுக்கும் குறைவு இருப்பதில்லை. அண்மையில் கோவையில் உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு விழா நடத்தியது. இந்த விழாவில் உயிர்மை மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.  இந்தக் குழு கோவை அருகே மசினகுடியில் தங்கியிருந்தபோது, அங்கு நடந்த விவாதத்தில் சாருநிவேதாவை, குமரகுருபரன் அடிக்க கிளம்பியதாக சமூக வலைத்தளங்களில் எழுதிய சிலர், குமரகுருபரனை ‘200 கிலோ’ என உருவத்தைப் பற்றிய தாழ்ந்த பதிவுகளையும் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து மனுஷ்ய … Continue reading “ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்?

சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’

சரவணன் சந்திரன் கடந்த அக்டோபர் மாதம் விடுமுறைக்காக தென்மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, நீண்ட வருடங்கள் கழித்து பள்ளியில் உடன் படித்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். நண்பனுக்கு வலதுகையில் முழங்கைக்கு கீழே துண்டிக்கப் பட்டிருக்கும். உள்ளூர் தீப்பெட்டி அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் பணிபுரியும் அவனை வறுமை வாட்டியெடுப்பதை அவனது தோற்றத்தைப் பார்த்த எல்லோரும் சொல்லி விடுவார்கள். அப்போது சாரை சாரையாக பல வாகனங்கள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த பகுதியைக் கடந்தன. அந்த வாகனத்தில் குறிப்பிட்ட … Continue reading சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’