தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ள வாஜ்பாயி புகழஞ்சலி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் திமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் தலைவர்கள் இந்த புகழஞ்சலி கூட்டத்தில் பேசுகின்றனர். https://twitter.com/DrTamilisaiBJP/status/1034039494368882689 இந்த புகழஞ்சலி கூட்டத்தின் அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பல்வேறு தரப்பினர் சொன்ன கருத்துக்களின் தொகுப்பு இங்கே! அரசியல் விமர்சகர் வில்லவன்: இந்தியாவின் பெரிய அச்சுறுத்தல் இந்துத்துவா. அடுத்ததாக வரப்போவது … Continue reading உத்தமர் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டம்: கட்சிகளை விளாசுகிறது முகநூல்!
குறிச்சொல்: சமூக ஊடகம்
காவிரிக்காக #IndiaBetraysTamilnadu டிவிட்டர் பரப்புரையின் மகத்தான வெற்றி.
ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு அதில் பங்கெடுத்திருக்கிறார்கள். சிங்கப்பூர், வளைகுடா நாடுகள், பிரிட்டன் என முக்கியமான பகுதிகளில் வாழும் தமிழர்கள் பரப்புரையில் கலந்துகொண்டார்கள்.
பொதுவெளியில் இயங்கும் பெண்கள் ஏன் “ஐட்டம்” ஆகிறார்கள்?
கொற்றவைக்கு எதிர்வினையாற்றுகிறோம் என்கிற பெயரில் பல ட்ரோல்கள் அவரை மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் எழுதியுள்ளனர். அவர்கள் அத்தனை பேருடைய வார்த்தைகளிலும் மிக பிரதானமாக உள்ளது “ஐட்டம்” என்கிற சொல்.
’காலா படத்துக்கும் ஜெயந்திரர் மரணத்துக்கும் என்ன தொடர்பு?’
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘காலா’. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் இந்தப் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் திங்கள்கிழமை வெளியாகவிருந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜெயந்திரர் மறைவை ஒட்டி, அவரை போற்றும்விதத்தில் காலா டீஸர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா செயல்பாட்டாளர் அருண், “ஜெயேந்திர சரஸ்வதிக்கும் காலாவுக்கும் என்ன என்ன தொடர்பு? ஶ்ரீதேவிக்காக காலா டீசரை தள்ளிவைத்தாலும் ஒரு … Continue reading ’காலா படத்துக்கும் ஜெயந்திரர் மரணத்துக்கும் என்ன தொடர்பு?’
தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு
நீட்டை ஆதரித்தும் அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி. இவரை விமர்சித்து சமூக ஊடகங்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய முகநூல் பதிவு வைரலாகி வருகிறது... “2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் … Continue reading தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு
”தமிழன் தலையில் கோமாளிக்குல்லா”: கமல் ட்விட்டும் ரசிகர்களின் மீமும்
அதிமுக மூன்று அணிகளாக பிரிந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் இணையப்போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போதைய பரபரப்பான அரசியல் நிலவரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காந்திகுல்லா, காவிக்குல்லா, காஷ்மீர்குல்லா! தற்போது கோமாளிக்குல்லா தமிழன் தலையில் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/ikamalhaasan/status/899558430330859520 கமல்ஹாசனின் ட்விட்டுக்கு அவருடைய ரசிகர் பலர் மீம் போட்டு வரவேற்பு தெர்வித்துவருகின்றனர். https://twitter.com/Kamaladdict7/status/899559413689733120 https://twitter.com/Rahul_james95/status/899558677094453248 https://twitter.com/vbzu/status/899565920665845760 https://twitter.com/ajay_offcl/status/899559522053652482
வாஞ்சிநாதன், தமிழ் இந்து, முகநூல் பகடிகள்
தமிழறிஞர் பொ. வேல்சாமி தனது முகநூலில் எழுதிய பதிவு: ஜவஹர்லால் நேருவிற்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினேன்…. நண்பர்களே…. ஜவஹர்லால் நேரு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி கேள்வியுற்று அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவல் கொண்டார். அப்பொழுது நண்பர்கள் என்னைச் சிபாரிசு செய்தார்கள். நேருவுக்கு நான் தான் தமிழ்மொழியின் வரலாற்றுப் பெருமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தேன். தமிழகத்தில் என்னிடம் தமிழின் வரலாற்றுச் சிறப்பைப் பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டார் நேரு. பின்னர் வங்க இலக்கிய வரலாறு … Continue reading வாஞ்சிநாதன், தமிழ் இந்து, முகநூல் பகடிகள்
தரமணி படத்துக்கு ஆனந்தவிகடன் தந்த 50 மார்க்!
தயாளன் உதயகீதம் படத்திலன்னு நினைக்கிறேன். கவுண்டமணி செந்தில்கிட்ட கேப்பார். என்ன பண்னிட்டு ஜெயிலுக்கு வந்தன்னு கேப்பார். செந்தில் எட்டணா நாணயம் அடிச்சேன்னு சொல்வார். பளார்னு ஒன்னு விடுவார் கவுண்டமணி. கள்ள நோட்டு அடிக்கனும் முடிவு பண்ணிட்டு ஏண்டா எட்டணா அடிச்சே, ஐம்பது நூறுன்னு அடிக்கவேண்டியதுதான அப்படின்னு சொல்லிட்டு கோயம்புத்தூர் ஊர் பேரையே கெடுத்துட்டியேன்னு இன்னொரு பளார் விடுவார். அத மாதிரி மார்க் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. 1000, 2000ன்னு கொடுத்திற வேண்டியதுதானே சார். எதுக்கு சார் 50, 48 … Continue reading தரமணி படத்துக்கு ஆனந்தவிகடன் தந்த 50 மார்க்!
#stand_with_udayachandran_ias : ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் எனும் பேராயுதம்!
தங்கள் மீதான துறை ரீதியில் நடவடிக்கை வருவதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பள்ளிக் கல்வித் துறையின் நன்மை ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் நேரடியாகக் களமிறங்கியிருப்பது வேற லெவல் கெத்து.
நீதிபதிக்குரிய கண்ணியம்கூட இல்லையா? நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்!
உச்ச நீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன், செவ்வாய்கிழமை மேற்கு வங்க போலீஸாரால் கோவையில் கைதுசெய்யப்பட்டார். நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மறுபரிசீலனை செய்யும்படி மூன்று முறை மனு செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவருடைய கைது சம்பவம் நடந்திருக்கிறது. நீதிபதி கர்ணனின் கைதை கண்டித்து, சமூக ஊடகங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எழுத்தாளர் மாலதி மைத்ரி, “தலித்துகளைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்வதும் ஊழல் மலிந்தது … Continue reading நீதிபதிக்குரிய கண்ணியம்கூட இல்லையா? நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்!
கூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்!
ஆட்சிக் கலைப்புக்கு தோதான ஒரு அயிட்டம் இப்பவே மோடி மஸ்தான் கைல சிக்கியிருச்சு.. பார்த்துக்கிட்டேயிருங்க.. வைச்சு செய்யப் போறாரு மோடி
ஈழ நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்; செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு
மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் … Continue reading ஈழ நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்; செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு
#DravidaNadu – கேரளம் நினைப்பது என்ன?
ஆழி செந்தில்நாதன் அக்மார்க் இந்தியர்களாக இதுவரை இருந்த கேரளர்கள் இன்று ட்விட்டரில் நடத்திய #DravidaNadu பரப்புரை ஒரு தன்மை மாற்றத்தைப் புலப்படுத்துவதாகவே கருதுகிறேன். மாட்டிறைச்சி விவகாரம் மலையாளிகளை உலுக்கியெடுத்திருக்கிறது. முன்பு ஒரு முறை ஓணம் அன்று வாமன கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துச் சொல்லி அமித் ஷா பட்டபாடு நமக்கெல்லாம் தெரியும். அண்மையில் மத்திய அரசின் சர்வாதிகாரத்துக்கு எதிராக முழங்கிவரும் பினரயி விஜயனின் அரசு மோடிக்கு சிம்மசொப்பனமாக ஆகிவருகிறது. உண்மையில், இங்கே திராவிட நாடு என்ற சொல் இப்போது … Continue reading #DravidaNadu – கேரளம் நினைப்பது என்ன?
இந்தியாவிலிருந்து பிரிந்து ‘திராவிட நாடு’ உருவாக வேண்டும்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #dravidanadu
மாட்டிறைச்சி உண்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள மறைமுக தடைக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தென் இந்திய மக்கள் அதிகமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் அடுத்த நிலையாக, இந்தியாவிலிருந்து பிரிந்து திராவிட மொழிகளை பேசும் மக்கள் வசிக்கும் மாநிலங்கள் இணைந்து ஒரு நாடாக உருவாக வேண்டும் என ‘சீரியஸாக’ மக்கள் ட்விட்டி வருகின்றனர். #dravidanadu என்ற ஹேஷ் டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த மூன்றாண்டுகால மோடி … Continue reading இந்தியாவிலிருந்து பிரிந்து ‘திராவிட நாடு’ உருவாக வேண்டும்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #dravidanadu
இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை; சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்க மற்றும் வாங்க முடியும். இறைச்சிக்காக காளைகள், ஒட்டகங்கள், எருமைகள், பசுக்கள், இளம் காளைகள் மற்றும் பசுக்கள் ஆகியவற்றை விற்க முடியாது. எழுத்தாளர் மாலதி மைத்ரி: பசு, கன்று, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை … Continue reading இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை; சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு
பால் பேதமில்லாத முரட்டு மிருகங்களா காவல்துறையினர்?: சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு
திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இரா எட்வின் (எழுத்தாளர்) டிஎஸ்பி பாண்டியராஜனிடம், ஈஸ்வரி என்கிற பெண்மணி அறைவாங்கிய அதே போராட்டத்தில்தான் இதுவும் நடைபெற்றுள்ளது. ஆண் போலீஸ்தான் என்றில்லை தோழியரே அரசாங்கத்தை எதிர்த்து போராடினால் காக்கியில் இருப்பது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் திருநங்கையாகவே இருந்தாலும் இதுதான் நிலை நாம்தான் மாற வேண்டும். எல்லோரும் படமெடுத்து ஆவணப் படுத்தத் தேவையில்லை. சிலர் அதை செய்வதும் மற்றவர்கள் … Continue reading பால் பேதமில்லாத முரட்டு மிருகங்களா காவல்துறையினர்?: சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு
நெட்டீசன்களே இளையராஜாவை விட்டுவிடுங்கள்..!
சரா சுப்ரமணியம் விவரம் அறிந்தவர்கள் பலர் சரியான விளக்கங்களை அளித்த பின்னரும் இளையராஜாவை கலாய்ப்பதும், கடுமையாக விமர்சிப்பதும் நொந்துகொள்ளத்தக்கது. இளையராஜாவின் இயல்புத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் அவர் மீது தவறான கண்ணோட்டத்துக்கு வழிவகுத்துள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், காப்பிரைட் - ராயல்டி விவகாரத்தில் பலராலும் பல கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ள அவர் மீது வெறுப்புணர்வை வெவ்வேறு வடிவங்களில் கொட்டுவதை ஏற்க முடியவில்லை. நம் காதல் உள்ளிட்ட உணர்வுகளை இசையால் வளர்த்தவர்; மன அழுத்தத்தில் இருந்தபோதெல்லாம் இனிய … Continue reading நெட்டீசன்களே இளையராஜாவை விட்டுவிடுங்கள்..!
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு… மன்னார்குடிய நம்பி வெச்சிக்காத ஆப்பு…! வைரலாகும் பாடல்
கடந்த ஆறு நாட்களாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனக்கு ஆதரவாக உள்ள இந்த எம். எல்.ஏக்களை இப்படி ‘அடைத்து’ வைத்திருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ரிசார்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு தொலைபேசியில் பேசி ஓ.பீ. எஸ்ஸுக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் "மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு... மன்னார்குடிய நம்பி வெச்சிக்காத ஆப்பு...!" என்ற பாடல் ஒன்று … Continue reading மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு… மன்னார்குடிய நம்பி வெச்சிக்காத ஆப்பு…! வைரலாகும் பாடல்
#standwithjothimani: ஓர் எளிய அரசியல்வாதிக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை ஆசிட் வீச்சு, பாலியல் வன்புணர்வு மிரட்டல்தானா?
அரசியல் செயல்பாட்டாளர் ஜோதிமணி மீது பாஜக ட்ரோல்கள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜோதிமணிக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் எழுதப்பட்ட பதிவுகளின் தொகுப்பு இங்கே... சிவசங்கர் எஸ்.எஸ் சகோதரி ஜோதிமணி (Jothimani Sennimalai) ஒரு எளிய அரசியல்வாதி. பொது நலத் தொண்டர். தன் கருத்துகளை முகநூலில் தொடர்ந்து எழுதுபவர். மோடியின் 'செல்லாக்காசு' திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து எழுதி வருபவர். இதை எதிர்க்கிறோம் என்று ஒரு கும்பல் வெறித் தாக்குதல் நடத்துகிறது. அவர் தன் கட்சி சார்ந்த … Continue reading #standwithjothimani: ஓர் எளிய அரசியல்வாதிக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை ஆசிட் வீச்சு, பாலியல் வன்புணர்வு மிரட்டல்தானா?
ஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக்கு அதிக பார்வையாளர்கள்: சர்ச்சையாகும் தந்தி டிவி விளம்பரம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி. டிசம்பர் 5-ஆம் தேதி 5 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தது. மருத்துவமனை செய்தியை மறுத்த நிலையில், ஜெ. இரவு 11 மணியளவில் இறந்ததாக செய்தி அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த இறுதி ஊர்வல கவரேஜை தந்தி டிவியில்தான் அதிகமானோர் பார்த்ததாக விளம்பரத்தை வெளியிட்டுள்ளது தந்தி … Continue reading ஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக்கு அதிக பார்வையாளர்கள்: சர்ச்சையாகும் தந்தி டிவி விளம்பரம்
சசிகலாவை சந்தித்தபோது தோள்களிலிருந்து சிவப்புத்துண்டை கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் ஏன் இறக்கினார்?; சமூக ஊடகங்கள் அலசல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக கருதப்பட்ட சசிகலாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவரை போயஸ் இல்லத்தில் சந்தித்தார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதா மறைந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சசிகலா உட்பட யாரையும் அப்போது சந்தித்து பேச இயலவில்லை. அதனால் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நானும் சசிகலாவும் அரசியல்வாதி. போயஸ் கார்டனுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கூட அரசியல்வாதிகள். சசிகலாவுக்கு … Continue reading சசிகலாவை சந்தித்தபோது தோள்களிலிருந்து சிவப்புத்துண்டை கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் ஏன் இறக்கினார்?; சமூக ஊடகங்கள் அலசல்
முதல்வர் இறந்ததாக செய்தி; சமூக ஊடகங்களில் தந்தி டிவிக்கு கடும் எதிர்ப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக முதன் முதலில் செய்தி வெளியிட்டது தந்தி டிவி. இந்தச் செய்திக்கு அடுத்து அனைத்து ஊடகங்களும் அப்படியே வெளியிட்டன. இதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. https://www.facebook.com/thiraikoothu.rahim/posts/640685872758855 https://www.facebook.com/ArunThamizhstudio/posts/663747107128054 தந்தி டிவி முழு பொறுப்பேற்க வேண்டும் https://www.facebook.com/vinayaga.murugan.7/posts/1183682735000684 https://www.facebook.com/maheswari.nagarajan.7/posts/1134481843314304 எந்த அடிப்படையில் ஊடகங்கள் ஜெயா மரணம் என அறிவித்தது ? ஒரு மாநில முதல்வர் குறித்த செய்தியே இப்படி நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறதே. இவர்கள் சாமானியர்கள் … Continue reading முதல்வர் இறந்ததாக செய்தி; சமூக ஊடகங்களில் தந்தி டிவிக்கு கடும் எதிர்ப்பு
மத்திய அரசு தங்கத்துக்கு கட்டுப்பாடு: சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு
தங்க நகைகள் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. திருமணமான பெண் ஒருவர் 500 கிராமும், திருமணமாகாத பெண் 250 கிராமும், ஆண் ஒருவர் 100 கிராம் தங்க நகைகளை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரம்பரை நகைகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும் வருமான வரித்துறை சோதைனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திரை செயல்பாட்டாளர் மோ. அருணின் … Continue reading மத்திய அரசு தங்கத்துக்கு கட்டுப்பாடு: சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு
“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”: இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்
மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவையொட்டி அவர் எழுதிய "மனுசங்கடா நாங்க மனுசங்கடா" பாடலை நினைவுகூர்ந்து இடதுசாரி செயல்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சிபிஎம்எல்(விடுதலை) மாநில கமிட்டி உறுப்பினரும் பத்தியாளருமான சந்திரமோகன் தனது முகநூலில் எழுதிய அஞ்சலி: பலநூறு முறை மக்கள் மத்தியில் நான் பாடிய அப் பாடலை நினைவு கூர்ந்து அஞ்சலி! "மனுசங்கடா நாங்க மனுசங்கடா " "மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா ! எங்களோட … Continue reading “மனுசங்கடா நாங்க மனுசங்கடா”: இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்
மோடி விமர்சன பதிவுகள்: தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணாவின் முகநூல் முடக்கம்
தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளரரும் ஆவணப்பட இயக்குநருமான எஸ்.கருணாவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கருப்புப் பண நடவடிக்கையான செலாவணி நீக்கம் எத்தகைய பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது என தனது பதிவுகளில் விமர்சனம் செய்து வந்தார் கருணா. இறுதியாக சேலத்தில் பாஜக பிரமுகரிடம் கைப்பற்ற ரூ. 20 லட்சம் குறித்த செய்தியை பகிர்ந்திருந்தார். கருணாவை கிட்டத்தட்ட12 ஆயிரத்து ஐநூறு பேர் பிந்தொடர்கிறார்கள். https://www.facebook.com/karuppukaruna/posts/1255649937811787 இதுகுறித்துவழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன் பதிவு செய்துள்ள கருத்து: தோழர் … Continue reading மோடி விமர்சன பதிவுகள்: தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணாவின் முகநூல் முடக்கம்
மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரை: சமூக ஊடக மக்கள் என்ன சொல்கிறார்கள்?
முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன் சிங், மோடி அரசின் கருப்புப் பண அழிப்பு நடவடிக்கை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவித்த சில கருத்துகளின் தொகுப்பு இங்கே... Rajarajan RJ: வருங்காலம் அவரை கனிவுடன் பார்க்கும் என்றார். நிகழ்காலமே அவரை கனிவுடனும் மரியாதையுடனும் பார்க்கிறது #ManmohanSingh Senthil Kumar: நீங்க இந்த மாதிரி நல்லா கேள்வி கேட்கிறவருன்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா … Continue reading மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரை: சமூக ஊடக மக்கள் என்ன சொல்கிறார்கள்?
பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்ற நடிகர்!
ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் ரவி பாபு ஏடிஎம் வரிசையில் பன்றிக்குட்டியுடன் நின்றது சமூக ஊடகங்களில் வைரல் செய்தியாகியுள்ளது. அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்படி நடந்துகொண்டாரா என ஊடகங்கள் பரபரவென கேட்க, ரவி பாபு அளித்த விளக்கம் என்ன தெரியுமா? 'பன்றிக்குட்டி ’அதிகோ’ எனும் படத்தில் என்னுடன் நடிக்கிறது. பன்றிக்குட்டியுடன் படப்பிடிப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு பெட்ரோல் நிரப்ப பணம் இல்லாததால் ஏடிஎம்பில் … Continue reading பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்ற நடிகர்!
வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் கம்பு ஒடிய அடித்து விரட்டிய போலீஸ்
வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களை காவலர் ஒருவர் கம்பு ஒடிய அடித்து விரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த மாநிலம் என்பது தெரியவில்லை. https://youtu.be/yPgIY9sOUTE பணம் மாற்ற வந்த எளியவர்களை காரணமே இல்லாமல் தாக்கும் அதிகாரத்தை காவலருக்கு யார் கொடுத்தது எனவும் இதுதான் மோடி அரசு சாமானியர்களுக்கு தரும் பரிசா எனவும் சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. https://www.facebook.com/shahjahanr/videos/1238863916136379/ … Continue reading வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் கம்பு ஒடிய அடித்து விரட்டிய போலீஸ்
SBI ரூ. 7000 கோடி வாராக் கடன் தள்ளுபடி: சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு
பொதுத் துறை வங்கியான எஸ் பி ஐ 63 தொழிலதிபர்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்ய உத்தேசித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் நூறு ரூபாய்க்கு அலைந்துகொண்டிருக்கும் நிலையில் ரூ. 7000 கோடி வாராக் கடன் தள்ளுபடி அறிவிக்கலாமா என சமூக ஊடகங்களில் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில பதிவுகள் இங்கே... எழுத்தாளர் மாலதி மைத்ரி தன்னுடைய முகநூலில் எழுதியுள்ள பதிவு: SBI தலைவர் ஏழை மல்லையாவின் வாராக்கடன் 1201 கோடி உட்பட 63 கோடிஸ்வர … Continue reading SBI ரூ. 7000 கோடி வாராக் கடன் தள்ளுபடி: சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு
‘விரைவில் ஏடிஎம்களுக்கு பிரதமர் மோடி தலைமையில் அஞ்சலி’!
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500. ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளை நாடி வருகின்றனர். ஏடிஎம்களில் பணம் எடுப்பதும் கடினமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலை நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் இல்லாததால் கோபமான மக்கள் அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். மலர் வளையத்தோடு,“தனது காலத்திற்கு முன்னரே … Continue reading ‘விரைவில் ஏடிஎம்களுக்கு பிரதமர் மோடி தலைமையில் அஞ்சலி’!
சூரத் தொழிலதிபர் ரூ. 6000 கோடி ஒப்படைத்த செய்தி பொய்!
குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்தவர் லால்ஜிபாய் படேல். வைர வியாபாரியான இவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பில் பிரதமர் மோடி அணிந்திருந்த சூட்டை பரிசளித்தவர். ஒவ்வொரு தீபாவளியின் போதும் தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து செய்தியில் இடம்பெறுபவர். இந்நிலையில் பிரதமரின் ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பின் பின்னணியில் தன்னிடமிருந்த கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் கோடியை அரசிடம் ஒப்படைத்ததாக சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவியது. இதை ஊடகங்களும் செய்தியாக்கின. ஆனால், அப்படி எதுவும் … Continue reading சூரத் தொழிலதிபர் ரூ. 6000 கோடி ஒப்படைத்த செய்தி பொய்!
வெளுக்குது 2000 ரூபா நோட்டு!: வீடியோ வெளியிட்ட திவ்யா ஸ்பந்தனா
ரூ. 500, 1000 ரூபாய்களை தடை செய்துவிட்டு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் பரவலாக கிடைக்க ஆரம்பித்துள்ளது. முன்னதாக இந்த ரூபாய் நோட்டில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக சமூக ஊடகங்களில் பல புனைவுகள் வெளியாகின. அதையெல்லாம் மறுத்தது ரிசர்வ் வங்கி. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டின் வெளிர் சிவப்பு நிற வெளுப்பதாக நிரூபித்து பதிவொன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இட்டிருக்கிறார் நடிகரும் … Continue reading வெளுக்குது 2000 ரூபா நோட்டு!: வீடியோ வெளியிட்ட திவ்யா ஸ்பந்தனா
ரூபாய் நோட்டு அதிருப்தி: ஒரே நாளில் 3 லட்சத்துக்கு அதிகமானோர் மோடியை அன்ஃபாலோ செய்தனர்
நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி திடீர் அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். அதேசமயம் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் நடுத்தர வர்க்க மக்கள் மகிழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்த 3 லட்சத்துக்கு அதிகமானோர் ட்விட்டர் பக்கத்தில் மோடியை அன்ஃபாலோ செய்துள்ளனர். 2 கோடிக்கும் … Continue reading ரூபாய் நோட்டு அதிருப்தி: ஒரே நாளில் 3 லட்சத்துக்கு அதிகமானோர் மோடியை அன்ஃபாலோ செய்தனர்
மநகூ தோற்றதற்கு கூடுதல் காரணம் வைகோ தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியதே: பேரா. அருணன்
மக்கள் நலக் கூட்டணி தோற்றதற்கு கூடுதல் காரணம் வைகோ தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியதே என பேராசிரியர் அருணன் கருத்திட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில், “மக்கள் நலக் கூட்டணி தோற்றதற்கு முக்கிய காரணம் அதிமுகவும் திமுகவும் அவிழ்த்து விட்ட பணபலமும் ஊடக பலமும். கூடுதல் காரணம் எது என்றால் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது. அதுவும் கூட்டணியின் இதர கட்சி தலைவர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அந்த முடிவை எடுத்தது. போட்டியிடுமாறு தலைவர்கள் … Continue reading மநகூ தோற்றதற்கு கூடுதல் காரணம் வைகோ தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியதே: பேரா. அருணன்
மலிவு விலை மாடல்!
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக மத்திய அரசு கூறியது. பிரதமரின் படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியதற்காக ரிலையன்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, முத்திரைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தவிர்ப்பு) 1950 சட்டத்தின் கீழ் வரும் பிரிவின் 3-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதற்காக சுமார் 500 ரூபாய் வசூலிக்கப்படலாம் என்கிறது மத்திய அரசு. இந்த முடிவு குறித்து சமூக ஊடகங்களில் … Continue reading மலிவு விலை மாடல்!
“லிவிங் டுகெதரெல்லாம் நம்ம நாட்டுக்கு செட்டாகாது”: கௌதமி-கமல் பிரிவு குறித்து விவாதம்
“13 ஆண்டுகால வாழ்க்கைப் பிறகு நானும் திரு. கமல்ஹாசனும் பிரிகிறோம்” என நடிகர் கௌதமி தன்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இது சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் பொருளாகியுள்ளது. சமூக ஊடக மக்கள் பகிர்ந்துகொண்ட சில முக்கியமான கருத்துகள், விவாதங்கள் இங்கே: “13 வருடங்கள் லிவிங் டுகதரில் வாழ்ந்தது உன்மையில் இந்திய சூழலில் ஒரு சாதனைதான். அதைவிட, நான் பிரிகிறேன் என்று ரொம்ப மெஜஸ்டிக்கா சொல்ற கவுதமியின் பேராண்மை (இது சரியான வார்த்தை சொல்லவும்)பாராட்டுக்குரியது. இந்த பிரிவினால் ஏற்படும் வலியைத் … Continue reading “லிவிங் டுகெதரெல்லாம் நம்ம நாட்டுக்கு செட்டாகாது”: கௌதமி-கமல் பிரிவு குறித்து விவாதம்
வங்கிப் பணியாளர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? வெளியான தகவல்
எழுத்தாளர் ஜெயமோகன், மெதுவாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு வங்கிப் பணியாளரின் வீடியோவைப் போட்டு அதுகுறித்து ‘தேவாங்கு’ எனும் பெயரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். இதுகுறித்து டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அது பரவலாகப் பகிரப்பட்டு, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், வங்கிப் பணியாளரை தேவாங்கு என்றும் ஒருமையில் விளித்து எழுதியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வங்கிப் பணியாளர் குறித்து, தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் பிரேமலதா ஷிண்டே என்றும் … Continue reading வங்கிப் பணியாளர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? வெளியான தகவல்
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மறக்கடித்த பாகிஸ்தான் டீ மாஸ்டர்!
அர்ஷாத் கான், பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தின் ஞாயிறு சந்தை எனப்படும் இத்வார் பாஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராகப் பணிபுரிகிறார் 18 வயதான அர்ஷாத் கான். ஜியா அலி என்ற ஒளிப்படக் கலைஞர் அர்ஷாத் கானை படமெடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர டீக்கடை மஸ்டர், மாடலாகியிருக்கிறார். எல்லாம் சமூக ஊடகங்கள் செய்த மாயாஜாலம்! அர்ஷாத் கானின் நீல நிற கண்களும் வசீகரிக்கும் பார்வையும் பாகிஸ்தானின் சமூக ஊடக மக்களைக் கவர #ChaiWala என்ற ஹேஷ் டேக் உடன் ட்ரெண்ட் … Continue reading சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மறக்கடித்த பாகிஸ்தான் டீ மாஸ்டர்!
இந்து மக்கள் கட்சி போராட்டத்தில் பழ. நெடுமாறன்; இதுதான் தமிழ் தேசிய ஃபார்முலாவா?
இலங்கையில் பௌத்தமயமாக்கலை எதிர்த்து இந்துமக்கள் கட்சியின் சார்பில் கடந்த 23-09- 2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், ஈழ கவிஞர் காசி. ஆனந்தன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக-அரசியல் விமர்சகர் திரு. யோ தனது முகநூல் பதிவில், “தமிழ்தேசியம் என்ற போர்வையில் பழ.நெடுமாறன் செய்து வருவதெல்லாம் தனது இருப்பை தக்க வைத்தலும், தன்னை முன்னிறுத்தலும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் அவர் நடத்திய பல நாடகக்காட்சிகள் அதை … Continue reading இந்து மக்கள் கட்சி போராட்டத்தில் பழ. நெடுமாறன்; இதுதான் தமிழ் தேசிய ஃபார்முலாவா?
விகடனின் ரெமோ விமர்சனம்; அதை நீங்க சொல்லலாமா எனக் கேட்கும் சமூக ஊடகம்!
அண்மையில் வெளியான ‘ரெமோ’ படத்துக்கு விமர்சனம் எழுதிய ஆனந்த விகடன் இதழ், இதுபோன்ற படங்கள் சமூகத்துக்கு கேடு என எழுதியது. இதற்கு சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். அதன் தொகுப்பு இங்கே: Karthick Gopalakrishnan: சன் டிவியில் கொலை செய்ய சொல்லிக்கொடுக்கிறது விகடன் சீரியல். டைம் பாஸ் விகடன் , மக்கள் மனதை விஷமாக்கும் தொடர்களுக்கு ரெமோ பரவாயில்லை. இவர்கள் ரெமோவிற்கு மார்க் கொடுக்கிறார்கள். ரெமோ உலகக் காவியம் எல்லாம் இல்லை. அது குப்பையே, … Continue reading விகடனின் ரெமோ விமர்சனம்; அதை நீங்க சொல்லலாமா எனக் கேட்கும் சமூக ஊடகம்!