பெங்களூருவில் என்னதான் நடக்கிறது; ஒரு நேரடி பதிவு

வா. மணிகண்டன் பெங்களூருவில் ஆங்காங்கே 144 போட்டுவிட்டார்கள்; தமிழ் சங்கத்துக்குள் ஆட்கள் புகத் தயாராக இருக்கிறார்கள் என்றெல்லாம் வரிசையாகச் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அலுவலகத்திற்குள் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்குத் தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ‘பத்திரமா இருக்கியா?’ என்று விசாரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். நான்கரை மணியிலிருந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தேன். பிரச்சினைகள் எதுவுமில்லை என்றாலும் வெளியில் ஒருவிதமான பதற்றம் தெரிகிறது. வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எல்லோரும் அவசர அவசரமாக வீடுகளுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள். … Continue reading பெங்களூருவில் என்னதான் நடக்கிறது; ஒரு நேரடி பதிவு

சமூக வலைத்தளங்களில் ‘த்தூ..’

 கோபாலகிருஷ்ணன் சங்கரநாராயணன் விஜயகாந்த்தின் “தூ” காணொளியை முதல் முறை பார்த்தபோது, அவர் அப்படிச் செய்ததற்கு மன்னிப்பு கேட்கும் வரை ஊடகத்தினர் அவரைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சற்று முன்தான் அந்தக் காணொளியை மீண்டும் பார்த்தேன். அவர் அப்படித் துப்பிய பின்னும் துளி எதிர்ப்பையும் காட்டாததோடு தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊடகத் துறை என்பது முழுக்க முழுக்க வியாபாரமாகவும் செய்தி என்பது பண்டமாகவும் மாறிவிட்ட சூழலில் இதைவிட பல மடங்கு மோசமான அவலங்கள் நிகழும் … Continue reading சமூக வலைத்தளங்களில் ‘த்தூ..’

ஸ்டாலினின் சமூக ஊடகத்தொடர்பு கேலியாகிறது ஏன்?

வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவிருக்கிற 30 சதவிகிதத்துக்கு அதிகமாக உள்ள இளைஞர்களை கவரும் விதமாக இளைஞர் அதிக அளவில் நேரத்தை செலவிடும் சமூக ஊடகங்கள் மூலம் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிடுகிறன. இதில் அதிகம் கவனம் செலுத்தி வருவது பாமகவும் திமுகவுதான். அன்புமணியை முன்னிறுத்தி பாமக சமூக வலைத்தளங்களில் செய்யும் பிரச்சார உத்திகள் சமூக வலைத்தளங்களில் மீமிக்களாக உலவும். அதுபோலத்தான் திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் உள்பட பலர் அரசியல் வாதிகளை நெட்டிசன்கள் வருத்தெடுக்கிறார்கள். ஆனால், … Continue reading ஸ்டாலினின் சமூக ஊடகத்தொடர்பு கேலியாகிறது ஏன்?