சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

சந்திரமோகன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, புகழ்பெற்ற ஐஐடி மற்றும் என்ஐடி IIT & NIT கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவரிடம் ஒரு முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில், "1) சம்ஸ்கிருதம் விஞ்ஞான அறிவியல் மொழி எனவும், 2) கணினியில் உபயோகப்படுத்த சிறந்த மொழி எனவும் நிரூபிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவும், 3) எதிர்காலத்தில் … Continue reading சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

புதிய ரூபாய் நோட்டுகளில் தேவ நாகரி மொழி எழுத்துகள்: அதென்ன மொழி?

இளங்கோ சிவன் தேவநாகரி எழுத்தில் புதிய ரூபாய் நோட்டுகளில் எண்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. அது என்ன தேவ நாகரி எழுத்து. தேவர்கள் எப்பொழுது எழுத்தை கண்டுபிடித்தார்கள். சரி இல்லையெனில் ஏன் அந்த எழுத்துக்கு அவ்வாறு பெயர் கொடுக்கப்பட்டது. கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் வடபகுதியில் சமஸ்கிருத மொழியை எழுத வழங்கப்பட்ட ஒரு வகை எழுத்துகளை நாகரி என்பர். இதை ‘தேவநாகரி’ என்றும் அழைப்பர். கி.பி 8க்குப் பிறகே இவ்வெழுத்து வடபுலப்பகுதியில் சிறப்பு பெற்றது. தமிழகத்திலும் … Continue reading புதிய ரூபாய் நோட்டுகளில் தேவ நாகரி மொழி எழுத்துகள்: அதென்ன மொழி?

சென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி?

அ. மார்க்ஸ் அப்பட்டமான ஒரு இந்துத்துவவாதியும், ஒரு போலி அறிவுஜீவியுமாகிய ராஜிவ் மல்ஹோத்ராவின் ஏற்பாட்டில் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் “சுதேசி இன்டாலஜி” கருத்தரங்கம் வெளியார் அனுமதியின்றி மூடிய கதவுகளுக்குள் ஐஐடி நிர்வாகத்தின் பூரண ஒத்துழைப்புகளுடனும் விதிமீறல்களுடனும் நடந்து கொண்டுள்ளது. உலகளவில் மதிக்கப்படும் இந்தியவியல் அறிஞரான ஷெல்டன் பொல்லாக்கைக் குறி வைத்து இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிற செய்தி இப்போது ஊடகங்களில் பேசப்படுகிறது.. ராஜிவ் மல்ஹோத்ரா ஏற்கனவே ஷெல்டன் பொல்லாக்கை “விமர்சித்து” எழுதிய Battle for … Continue reading சென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி?

” சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து பிறந்தது தான் தமிழும், சமஸ்கிருதமும்”

சமஸ்கிருதம் குறித்து திமுக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார். மதுரை பீ.பீ.குளத்தில் வருமான வரி அலுவலகம் எதிரே மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம் மையத்தை கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் "சமஸ்கிருதத்தை திணித்தால் கிளர்ச்சி ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியது பற்றி கேள்வி கேட்டனர். அதற்க்கு பதில் … Continue reading ” சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து பிறந்தது தான் தமிழும், சமஸ்கிருதமும்”