“உங்க மசூதிக்குள்ள பெண்கள விடுவியாடா தே.பயலே?” எனக் கேட்டவர்களுக்கு ஒரு இஸ்லாமியரின் பதில்

சபரிமலை வழிபாட்டு உரிமைக்காக போராடும் பெண்களை ஆதரித்து எழுதும் சில‌ முஸ்லிம்களை நோக்கி பல்வேறு தளங்களில் தொடர்ந்து இக்கேள்வி எழுப்பப்படுகிறது. எவ்வித அறிவார்ந்த பதிலையும் எதிர்நோக்கி எழுப்பப்படும் கேள்வி அல்ல இது. வழக்கமான இஸ்லாமியர்கள் மீதான வன்மத் தாக்குதல் மட்டுமே. இருந்தாலும் இஸ்லாமியர்கள் இப்படியான மேம்போக்கான கேள்விகளுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்கள் பள்ளிவாசலுக்குள் சென்று தொழ‌ எவ்வித தடையுமில்லை. இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளான குர் ஆன், ஹதீஸ் உள்ளிட்ட எந்த நூல்களும் பெண்கள் பள்ளி … Continue reading “உங்க மசூதிக்குள்ள பெண்கள விடுவியாடா தே.பயலே?” எனக் கேட்டவர்களுக்கு ஒரு இஸ்லாமியரின் பதில்

”சங்கிகளிடம் இருக்கும் இணைவு முற்போக்கு அமைப்புகளிடம் ஏன் இல்லை?”

ஒடியன் லட்சுமணன் "இந்த நேரத்தில் இது தேவையா?" "இது தேவையில்லாத எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்" என்று சொல்லப்பட்ட மனிதிகளின் மலைப் பயணம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலான சங்கிகள் செல்வியின் முகப்புப் படத்தையும் பம்பை சென்றிருக்கும் பிற பெண்களின் முகப்புப் படத்தையும் போட்டு இது சி பி எம் கட்சியால் அனுப்பப்பட்ட குழு என்று தொடர்ச்சியாக ஒரு வாரகாலமாக இணையம் முழுக்க ஜல்லியடித்திருக்கிறார்கள். பஜ்ரங்தள் போல இயங்கும் சேவ் அய்யப்பன் கும்பலோ "இவர்கள் மாவோ இயக்கத்தைச்சார்ந்தவர்கள்" என்று எழுதி … Continue reading ”சங்கிகளிடம் இருக்கும் இணைவு முற்போக்கு அமைப்புகளிடம் ஏன் இல்லை?”

”பெண்கள் தீட்டல்ல,புனிதமும் அல்ல!”

சபரிமலை பயண ஒருங்கிணைப்பு  மனிதி அமைப்பு அளித்துள்ள விளக்கம் தோழமைகளே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அக்டோபர் 18 சபரிமலை பயணத்தை ஒருங்கிணைக்க மனிதி முடிவு செய்திருந்தது. மனிதி அமைப்புக்குள்ளும், அமைப்பின் நலன் விரும்பிகள், தோழர்கள், என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், மறுப்பும், கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது. கட்சி சார்புடைய, இசங்கள் சார்புடைய பிற முற்போக்கு பெண்கள் அமைப்புகள் போன்றதல்ல மனிதி. வீட்டுக்குள் காலம் காலமாக முடக்கப்பட்ட பெண்கள் தங்களுக்குள் பேசி கொள்ள, பகிர்ந்து … Continue reading ”பெண்கள் தீட்டல்ல,புனிதமும் அல்ல!”

ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் கார்த்திகேயனை பாஜகவினர் சமூக ஊடகங்களில் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “’மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை … Continue reading ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்

அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் வழிபட அனுமதிக்கத் தயார்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. இதுவரை கேரள அரசு தன்னுடைய வாதத்தில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது இயலாத என்றே வாதிட்டு வந்தது. இந்நிலையில் இன்று நடந்து விசாரணையில் அனைத்து வயது பெண்களை வழிபட அனுமதிக்கத் தயார் என … Continue reading அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் வழிபட அனுமதிக்கத் தயார்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு

இருமுடி கட்டி சபரிமலை கிளம்பினார் ஒ.பி.எஸ்!

தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சபரிமலை சென்றார். புதன்கிழமை இருமுடி கட்டி சபரிமலை பயணமானார் ஓ.பன்னீர்செல்வம்.