கடவுளின் பெயரால் தொடரும் அராஜகம்!

சந்திரமோகன் கடந்த ஆண்டில், 2018 சட்டமன்ற தேர்தல் காலகட்டத்தில், கர்நாடகத்தில் அமைக்கப்படவிருந்த மிக உயரமான ஹனுமான் சிலைக்கு கோலார் அருகிலிருந்து கிழக்கு பெங்களூர் அருகிலுள்ள காச்சாரகானஹள்ளி வரை சுமார் 1450 டன்கள் எடை கொண்ட பெரும்பாறை, ஒற்றைக்கல் ஸ்வரூபம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது; இதன் போக்குவரத்து ஏற்படுத்திய சேதங்கள் பெரும் சர்ச்சைகளை அங்கே உருவாக்கியது. கார்நாடகாவிலேயே பெரும் பெரும் கரடுகள், மலைகளில் பாறைகளிருக்க, பெங்களூரிலுள்ள கோதண்டராமசுவாமி டிரஸ்ட் என்ற நிறுவனம், தமிழ் நாட்டில் தான் மாபெரும் ஒற்றைக்கல் … Continue reading கடவுளின் பெயரால் தொடரும் அராஜகம்!

ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!

சந்திரமோகன் "ஏகாதிபத்திய சகாப்தத்தில் தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டி எழுப்ப முடியும் " என்ற லெனினியத்தை நடைமுறைப் படுத்தும் சவால்மிக்க கடமைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட தோழர். JV ஸ்டாலின் [ ஜோசப் வி ஸ்டாலின் 18.12.1878] அவர்களின் 140 வது பிறந்த நாள் இன்று! ஏகாதிபத்திய - முதலாளித்துவ சக்திகள் துவங்கி இலக்கியவாதிகள், இடதுசாரிகள் வரை தொடுக்கும் வெறுப்பு விமர்சனங்கள் தாக்குதல்கள் இதுநாள் வரையும் குறையவில்லை. புனையப்பட்ட பொய்களும் ஏராளம். "ஸ்டாலின் மீது எவ்விதமான குறைகளும் … Continue reading ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!

ஓசூரில் சாதீய காட்டுமிராண்டிதனம்: முகங்களை எரித்து சாதிய ஆணவப் படுகொலை!

சந்திரமோகன் ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டபள்ளி கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பறையர் சாதி இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்து உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்று தங்கி வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். பிறகு ஒசூருக்கு திரும்பி வந்து நந்தீஸ் ஒரு மரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த வாரம் இருவரும் காணாமல் போனார்கள். 13.11.2018 அன்று, நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் … Continue reading ஓசூரில் சாதீய காட்டுமிராண்டிதனம்: முகங்களை எரித்து சாதிய ஆணவப் படுகொலை!

அரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்!

சந்திரமோகன் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மலையடிவார கிராமமான சிட்லிங்கி ஊராட்சியைச் சார்ந்தவர் அண்ணாமலை. மலையாளி பழங்குடி இனத்தைச் சார்ந்த இவரின் மகளான செளமியா (வயது 16) பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். தீபாவளி விடுமுறைக்காக விடுதி மூடப்பட்டதால், நவம்பர் 5 ந் தேதியன்று ஊருக்கு திரும்பியுள்ளார். பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் வேலைக்கு சென்றுவிட்டனர். காலை 11.30 மணியளவில், இயற்கை உபாதையாக ஓடை பக்கம் தனியாக சென்ற … Continue reading அரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்!

தாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்!

சந்திரமோகன் திருநெல்வேலி மாவட்டத்தில் அக்.11 இன்றிலிருந்து - "தாமிரபரணி மஹா புஷ்கரம்" என்ற பெயரில், இந்துக்களின் புனித நீராடல் விழா ஒன்றை "அகில பாரதிய துறவியர்கள் சங்கம் " என்ற அமைப்பை முன்னிறுத்தி, தமிழக அரசாங்க ஆதரவுடன் RSS அரங்கேற்றியுள்ளது. அக். 22 வரையில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத், பாஜக என அனைத்தும் களமிறங்கி வேலை பார்க்கவுள்ளன. புஷ்கரம் என்பது கும்பமேளா போன்ற ஒரு நிகழ்ச்சியாகும். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற காவிரி புஷ்கரம் … Continue reading தாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்!

ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்?

சந்திரமோகன் சென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலையில், ஒரு முக்கியமான அம்சம், சேலம் மாநகரம் அருகிலுள்ள #ஜருகுமலைகுகைபாதைகள்_Tunnels ஆகும். NHAI தேசீய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கை Feasibility Report கூறும் பட்ஜெட் அடிப்படையில் 277.3 கி.மீ நீள 8 வழி சாலைக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை நான்கு வகையான சாலைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 2.50 கி.மீ (1000 மீ + 750 மீ + … Continue reading ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்?

பத்தாயிரம் கோடி ரூபாய் விரைவு சாலையும் கதவுகள் இல்லாத சிறை கழிவறைகளும்: தோழர் சந்திரமோகன்

800 சிறைவாசிகளுக்கு சமைத்துப் போட, இரண்டு சமையல்காரர்கள் மட்டுமே உள்ளனர். தினசரி 30 சிறைவாசிகள் சமையலறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா?

1956சட்டம் 1988சட்டம் 2013சட்டம் எதையுமே தமிழக அரசாங்கம் கடைபிடிக்கவில்லை. சொந்த நாட்டு மக்களை, அவர்கள் ஏழைகள் என்பதால் சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு, அலட்சியமாக அணுகுகிறது; எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் விவசாயிகளின் நிலத்தின் உள்ளே நுழைகிறது; அச்சுறுத்துகிறது.

#நீட்2018: கேள்வித்தாளாவது தமிழில் கிடைக்குமா?

தமிழகத்திலேயே தேர்வு மையங்களை மாற்றித்தர கால அவகாசம் இல்லை என்கிறது சிபிஎஸ்இ இதுகூடச்செய்ய முடியாத ஓர் அமைப்புதான் தேர்வுகளை நடத்துகிறது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்?

மார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்

லெனினை கொடுங்கோலனாக சித்தரித்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை கொச்சைப் படுத்துகிறார் குஹா. மறைமுகமாக பாஜக விற்கு உதவுகிறார்.

பழங்குடியினரின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் போலி பழங்குடிகள்!

994 ல் தான் போலிச் சான்றிதழ்களை களையெடுக்க SC க்கு மாவட்ட விழிப்புணர்வு குழுவும், ST பழங்குடிக்கு மாநில கூர்நோக்கு குழுவும் உருவாக்கப்பட்டன. கேரளாவில் "SC & ST சாதி சான்றிதழ் நெறிப்படுத்தும் சட்டம் 1996" உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் இன்றுவரை அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்!

சந்திரமோகன் உங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் 'வான்னா க்ரை' (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது. சமீபத்திய நிலவரப்படி, நூறு நாடுகளுக்கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் கணினிகளில் இந்த 'வான்னா க்ரை' … Continue reading கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்!

தமிழகத்தின் புதிய முதல்வரின் ரெக்கார்ட்! வேண்டாம் கிரிமினல்களின் ஆட்சி!

சந்திரமோகன் உச்சநீதிமன்றத்தால் கிரிமினல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க தற்காலிக பொது செயலாளர் V.K.சசிகலா பரப்பனஹள்ளி சிறைக்கு அனுப்பப்பட்டதால், தற்சமயம் தமிழகத்துக்கு 'எடப்பாடி' தான் முதல்வர் என்ற நிலைமை வந்துள்ளது. 15 நாட்களில் என்ன நடக்கும் என்ற போதிலும், முதல்வராகப் பொறுப்பேற்றுவிட்ட எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் , பொருளாதார ஊழல் பின்னணி பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். கமிசனுக்கு வெல்லம் விற்பதில் தனது வாழ்க்கையைத் துவங்கி, அரசியலில் நுழைந்தவர், எடப்பாடியார். MGR மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க ஜானகி - … Continue reading தமிழகத்தின் புதிய முதல்வரின் ரெக்கார்ட்! வேண்டாம் கிரிமினல்களின் ஆட்சி!

#சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மாணவர்களை அனுப்பிய தனியார் பள்ளிகள்…

சந்திரமோகன் சனவரி 29 அன்று சென்னை, சேலம் எனத் தமிழ்நாட்டில் சில இடங்களில் RSS ராஷ்ட்ரிய சுயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிகள் நடைபெற்றது. வாழ்நாள் முழுவதும் 'இந்துத்துவா'வை எதிர்த்த அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் விழா, சுபாஸ் சந்திர போஸ் 120, குரு கோவிந்த் சிங்கின் 350 ம் பிறந்த நாள் விழா, ராமனுஜத்தின் 1000 வது ஆண்டு நிறைவு விழா எனப் பல்வேறு ஆளுமைகளின் பெயர்களை முன்னிட்டு இப் பேரணிகள் நடத்தப்பட்டதாக விளம்பரம் … Continue reading #சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மாணவர்களை அனுப்பிய தனியார் பள்ளிகள்…

ஜெயலலிதாவிற்கு பிந்தைய தமிழக அரசியல் – கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னுள்ள கடமைகள்!

சந்திரமோகன் 1)பாரதீய சனதா'விற்கு ஆதாயம் :- ஜெயா மறைவுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள அ.இ.அ.தி.மு.க அரசாங்கத்தையும், அதிமுக கட்சியையும் கட்டுப்படுத்துவதில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. கடந்த இருமாத காலமாக,தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு முக்கியமான பங்கு வகுத்தனர்.அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களைக் கையாளுவது உட்பட பல்வேறுபட்ட விவகாரங்களைக் கையாள்வதில், பிற பிஜேபி உயர் தலைவர்களும் பிடியை இறுக்கமாக வைத்துள்ளனர். ஜெயா & சசிகலா மீதான வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்த … Continue reading ஜெயலலிதாவிற்கு பிந்தைய தமிழக அரசியல் – கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னுள்ள கடமைகள்!

கருப்பு பணம் பராமரிக்கும் தொழிலதிபர்களின், பெரிய வர்த்தகர்களின் “டார்லிங் ” ஆக. ICICI, HDFC வங்கிகள்

சந்திரமோகன் செல்லாமல் போய்விட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு, மக்கள் தினசரி நீண்ட வரிசையில் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் நிற்கின்றனர். வாய் வயிற்றை சுருக்கிக் கொண்டு விட்டனர். இந்த விவகாரங்களில், நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஒரு பிரச்சினை மீது பல நாட்கள் பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் போராட்டங்கள், கிளர்ச்சிகளை நாடு சந்தித்து கொண்டுள்ளது. கருப்பு பணம் மாற்றுவதில் பாஜக கட்சியினர் முன்னிலை! புதிய நோட்டுக்கள் வரிசையில் நிற்பவர்களுக்கு ரூ.2000 கூட கிடைக்கவில்லை. நடப்பு … Continue reading கருப்பு பணம் பராமரிக்கும் தொழிலதிபர்களின், பெரிய வர்த்தகர்களின் “டார்லிங் ” ஆக. ICICI, HDFC வங்கிகள்

கருப்புப் பணம் என்ன கரன்ஸி நோட்டிலா இருக்கிறது?!

சந்திர மோகன் நவ.10 முதல் ரூ.500, ரூ.1000 கரன்சி நோட்டுக்கள் செல்லாது என திடீரென பிரதமர் மோடி அறிவித்துவிட்டார். இரண்டு நாட்கள் ஏடிஎம் இயங்காது. வங்கிகளும் இயங்காது. வங்கிகள் திறந்த பின்னர், ரூ.4000 வரை ஆதார் அட்டை காட்டி சில்லறை நோட்டுக்கள் மாற்றிக் கொள்ளலாம். ATM களில் நாளொன்றிற்கு ரூ.2000 மட்டுமே, வங்கிகளில் வாரத்திற்கு ரூ.20,000 மட்டுமே இனிமேல் எடுக்க வேண்டும். கூடுதலான பணம் என்றால் அக்கவுண்டில் போட்டு மாற்ற வேண்டும். புதிய 500 , 2000 ரூபாய் … Continue reading கருப்புப் பணம் என்ன கரன்ஸி நோட்டிலா இருக்கிறது?!

அரசியல்வாதிகள், முதலாளிகள், பியூஸ் சேத்தியா வகை சமூக ஆர்வலர்கள் அபகரித்த பழங்குடியினர் நிலங்கள்!

சந்திர மோகன் நிலங்கள் பறிபோனதால் திருப்பதி காடுகளில் சாகின்றனர்! கல்வராயன் மலையானது, சேலம்,விழுப்புரம் மாவட்டங்களில் 600 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்த இலட்சக்கணக்கான ஏக்கர் செழிப்பான நிலங்களைக் கொண்டதாகும். 50,000 ற்கும் மேற்பட்ட (தமிழ் பேசுகின்ற) "மலையாளி" பழங்குடியினர் வசிக்கும் முக்கியமான மலையும் ஆகும். இம் மலையிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக திருப்பதிக் காடுகளுக்கு செம்மரங்களை வெட்டச் சென்றவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்; வன அதிகாரிகள் கொலை வழக்கில், 2016 மே மாதத்தில் ஆந்திர சிறைகளிலிருந்து விடுதலையான 287 … Continue reading அரசியல்வாதிகள், முதலாளிகள், பியூஸ் சேத்தியா வகை சமூக ஆர்வலர்கள் அபகரித்த பழங்குடியினர் நிலங்கள்!

சாதிய கட்டமைப்பின் தீண்டகத்தகாத வேலையை, பெருந்திரளான தலித்துகள் மறுப்பது மிகப்பெரிய கலகம்!

சந்திரமோகன் குசராத் தலைநகர் அகமதாபாத்தில், கடந்த வாரம் துவங்கிய தலித் மக்களின் "விடுதலை" பேரணியானது, ஆக.15 அன்று உனா'வில், தலித் இளைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஊரில் நிறைவுபெறவுள்ளது. தற்போதைய மக்கள் இயக்கத்தில், தலித்துகளின் கண்ணியம் (Dignity), மனித உரிமைகள், நிலம் & கல்வி, வேலை உரிமைக்கான கோரிக்கைகள் எழுப்பப்படுகிறது. எனினும் கூட, 'செத்த மாட்டை அகற்றும் வேலையை கைவிடுதல்', 'மனித கழிவகற்றும் தொழிலை விட்டொழித்தல்' ஆகியவை அடிப்படை உணர்வாக, உரத்த குரலாக எழுந்துள்ளது. இது பார்ப்பனீய சாதீய … Continue reading சாதிய கட்டமைப்பின் தீண்டகத்தகாத வேலையை, பெருந்திரளான தலித்துகள் மறுப்பது மிகப்பெரிய கலகம்!

தன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்

சமூக - அரசியல் செயற்பாட்டாளர் சந்திரமோகன் எழுதிய பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் எழுதிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் தன்னுடைய முகநூலில் பதிலளித்திருக்கிறார். அதில், சந்திரமோகன் வைத்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மா.லெ) கட்சியைச் சேர்ந்த தோழர் சந்திரமோகன் என்னைப் பற்றி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் இது.. என்னைப் பற்றிய தகவல்களை எப்படி காவல்துறை அறிந்துகொள்கிறது என யோசித்திருக்கிறேன்... தோழர் உங்களுடைய சிரிக்கும் முகத்தைத் தாங்கி இணையத்தில் வந்த  என்னைப் பற்றிய … Continue reading தன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்