“பிஜேபி ரெண்டு, மூணு சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கே”: சுப்ரமணியன் சுவாமி

சமீபத்திய சீ ஓட்டர் கருத்து கணிப்பில் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெல்ல வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி பாஜக இரண்டு அல்லது மூன்று தொகுதியில் வெல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், “வித்தியாசமான ஆதரவு இருக்கே  ஹிந்து மக்கள் ஆதரவு இருக்கு. ஆர். எஸ். எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணியோட  ஆதாரம் இருக்கே. அதன் காரணம் ரெண்டு, மூணு சீட் … Continue reading “பிஜேபி ரெண்டு, மூணு சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கே”: சுப்ரமணியன் சுவாமி

யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

 ஞாநி ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா? தி.மு.க: 1. எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப்படும் கட்சி. 2.பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தும் கட்சி. அங்கே இங்கே என இரண்டு இடங்களிலும் இதே கட்சி அதிகாரத்தில் இருந்தால், கட்சித்தலைவர் குடும்பத்தின் வியாபாரத்தொழில் துறை ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்பு கட்டுக்கடங்காமல் போய்விடும். 3. பகுத்தறிவு, தமிழ்ப்பற்று போன்றவற்றையெல்லாம் வெற்று கோஷங்களாக மட்டுமே … Continue reading யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதி?

 வரும் மே மாதம் 16-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1. திருத்தணி 2. அம்பத்தூர் 3. ராயபுரம் 4. மயிலாப்பூர் 5. மதுரவாயல் 6. ஆற்காடு 7. ஸ்ரீபெரும்புதூர் 8. ஓசூர் 9. கலசபாக்கம் 10.செய்யாறு 11.ஆத்தூர் 12.சங்ககிரி 13.நாமக்கல் 14.கோபிச்செட்டிப்பாளையம் 15.உதகமண்டலம் 16.காங்கயம் 17.தாராபுரம் 18.சூலூர் 19.கோவை தெற்கு 20.வேடச்சந்தூர் 21.கரூர் 22.திருச்சி கிழக்கு 23.முசிறி 24.ஜெயங்கொண்டம் 25.காட்டுமன்னார்கோவில் 26.வேதாரண்யம் … Continue reading காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதி?

#வீடியோ ”விஜயகாந்த் முதலமைச்சரானால் நாண்டுக்கிட்டு சாகலாம்”: சீமான் சொன்னபடி செய்வாரா?

அதிரடி பேச்சுகளுக்கு பெயர் போன சீமானின் இந்த முறை விஜயகாந்தை குறி வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்., “விஜயகாந்த் முதல்வரானால் தமிழர்கள் நாண்டுக்கிட்டு சாகலாம்” என தெரிவித்துள்ளார். சவால் விடுவதில் பெயர் போன சீமான், ஒரு வேளை விஜயகாந்த் முதல்வரானால் என்ன செய்வார்? வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=JNHxxN37jPs

ஒரு கை தட்டினால் எப்படி ஓசை வரும்?:மருமகன் சபரீசன் குறித்த கேள்விக்கு இப்படி பதில் அளித்தாரா முக.ஸ்டாலின்?

"நமக்கு நாமே" திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை ஒட்டி, அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் ஜி.ஆர்.டி கிரான்ட் ஹோட்டலில் மிகப்பெரும், மதிய விருந்துக்கு திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதிய உணவுடன் கலந்துரையாடல் என்று  நிரல் அமைக்கப்பட்டிருந்த அந்த விருந்தில், சென்றிருந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும், ஸ்டாலினிடம்,  கேள்விகளை கேட்டு  பதிலும் வாங்கியுள்ளனர். அதே கூட்டத்தில், சர்ச்சைக்குரிய பல அரசியல் கட்டுரைகளை எழுதிய இளம் பத்திரிகையாளர் ஒருவரும் பங்கேற்றிருக்கிறார். இருப்பினும், ஸ்டாலினை ஆத்திரமூட்டும் வகையில், அவர் ஏதாவது கேள்விகளை கேட்டுவிடுவாரோ … Continue reading ஒரு கை தட்டினால் எப்படி ஓசை வரும்?:மருமகன் சபரீசன் குறித்த கேள்விக்கு இப்படி பதில் அளித்தாரா முக.ஸ்டாலின்?

“மனுஷ்யபுத்திரன் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பரப்புரையை தொடங்கிய மக்கள் நலக் கூட்டணி, வாக்குகளைப் பிரிக்குமா? வெற்றிக் கனியை பறிக்குமா? என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சி புதன்கிழமை ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் மனுஷ்ய புத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திருப்பூர் சுப்பராயன், முஸ்லீம் கட்சியிலிருந்து ஷேக் தாவூத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆளூர் ஷாநவாஸ், பத்திரிகையாளர் ப.கோலப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை மு. குணசேகரன் நெறியாள்கை செய்தார். இந்த விவாதத்தின் … Continue reading “மனுஷ்யபுத்திரன் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”

விஜயகாந்’த்தூ’ என சொன்ன அன்புமணி: மு. க.ஸ்டாலினை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசிய காடுவெட்டி குரு!

சமீபத்தில் விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து ‘த்தூ’ என்று சொன்னது பெரும் சர்ச்சையானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், ‘த்தூ’ என்று துப்பியதால் இனி விஜயகாந்‘த்தூ’ என அழைக்கப்படுவார் என பகடி செய்திருந்தார். விஜயகாந்தின் நடத்தையும் கண்டித்திருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் நடந்த பாமக மாநாட்டில் பேசிய ‘சர்ச்சை’ புகழ் காடுவெட்டி குரு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் … Continue reading விஜயகாந்’த்தூ’ என சொன்ன அன்புமணி: மு. க.ஸ்டாலினை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசிய காடுவெட்டி குரு!