தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன் சென்னையில் தேர்தல் தேதிகளை அறிவித்தார். தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் நவம்பர் 2-ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாள்: அக்டோபர் 21ஆம் தேதி.
குறிச்சொல்: சட்டப் பேரவைத் தேர்தல் 2016
“93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”
ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயா ஜெயித்ததற்காக அறச்சீற்றத்தில் கொந்தளிக்கும் அதே நேரத்தில் திமுக தோற்றதற்காகவும் சிலர் வெம்பி வெடிப்பது நகைமுரண். ஜெயலலிதா எப்படி வெற்றி பெறத் தகுதி இல்லாத ஒருவரோ அதே அளவுக்கு தகுதியற்ற ஒருவர்தான் கருணாநிதியும் என்பது தான் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி. ஒப்பாரியையும், வசையையும், முத்திரை குத்தலையும் நிறுத்திவிட்டு கட்சி அபிமானிகளுக்கு இதில் யோசிக்க சில விஷயங்கள் உண்டு. இப்போதும் கண்முன் இருக்கும் உதாரணங்கள் நிறைய: கருணாநிதி ஒன்றும் எம்ஜியார் கிடையாது படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு. … Continue reading “93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”
“வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி தொடரும்”: ஜவாஹிருல்லா
தேர்தல் முடிவுகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று திமுக கூட்டணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி நிலைகூட இல்லாத திமுக இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை உருவாக்கிட திமுக தலைமையிலான … Continue reading “வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி தொடரும்”: ஜவாஹிருல்லா
திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!
விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ? 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!
சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி. வீரலட்சுமி 14083 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளருக்கு அடுத்த படியாக வந்துள்ளார். மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வீரலட்சுமி போட்டியிட்டார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. ஆர். சரஸ்வதியின் வெற்றியை இவர் வெகுவாக பாதித்திருக்கிறார். சரஸ்வதி 90, 000 வாக்குகளும் திமுக வேட்பாளர் 1லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். கி.வீரலட்சுமி குறித்து … Continue reading சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!
மாற்றத்திற்கான மையப்புள்ளி திருமாவளவன்..!
மு.ரா. பேரறிவாளன் மக்கள் நலக்கூட்டணி என்ற மாற்று முயற்சி படுதோல்வி அடைந்ததாக ஊடகங்களால், இணையதள அறிவாளிகளால் எடுத்துரைக்கப்படும் மூடத்தனமான பரப்புரைகளுக்கு பின்னால், மக்கள் நலக்கூட்டணி ஏற்படுத்தி பெரிய அதிர்வு வெகு சாமர்த்தியமாக மறைக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். மக்கள் நலக்கூட்டணி உதயமானது முதலே நிலவிய தி.மு.க தரப்பு பதட்டங்களும், அ.தி.மு.க தரப்பின் அமைதியும் சமூக வளைதளத்தை உபயோகிக்கும் சாமானியருக்கும் தெரிந்திருக்கும். நாம் முன்பே குறிப்பிட்டதை போல எந்த காரணத்தாலும் அ.தி.மு.க தொண்டர்கள் வாக்கை மாற்ற மாட்டார்கள் என்ற … Continue reading மாற்றத்திற்கான மையப்புள்ளி திருமாவளவன்..!
அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்
தேர்தல் முடிவுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கதில் எழுதியுள்ள கட்டுரை: ஜெயலலிதா அரசு மேல் மக்களுக்கு மிகக்கடுமையான வெறுப்பும் அவநம்பிக்கையும் இருக்கிறது. செயல்படாத அரசு, ஊழல் அரசு என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள் அதற்கு மாற்றாக திமுக அன்றி வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் நினைக்கிறார்கள். ஆனால் கணிசமானவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. குறிப்பாகப் பெண்கள் திமுகவுக்குப் போடுவதைவிட மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறார்கள் அதற்கு முதற் காரணம் ஜெயலலிதாவின் அரசின் செயல்பாடுகள் எப்படி … Continue reading அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்
“அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார். நேர்கண்டவர் செந்தில். ஏன் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவை பார்க்க வந்து மாண்டுபோனவர்கள் பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பாமல் திருமாவளவன் தூங்கியதை திரும்ப திரும்ப காட்டினீர்கள். இதெல்லாம் எங்கள் அணியை சிதைக்கும் முயற்சிதான்” … Continue reading “அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி
“தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி
பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதாக ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாஜக, பாமக தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது திமுகவுக்கு எதிரான சதி என்றும் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் தானே போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்தார். முன்னதாக தேர்தல் முடிவுகள் குறித்து … Continue reading “தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி
நோட்டாவால் வாய்ப்பிழந்த 15 திமுக வேட்பாளர்கள்!
நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நோட்டா வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறது. இதில் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவனைத் தவிர, மற்ற அனைவரும் திமுக வேட்பாளர். இந்தத் தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ளது. (தகவல்: Su Po Agathiyalingam) ஆவடி தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 4994. இந்தத் தொகுதியில் 1395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் திமுக வேட்பாளர். பர்கூர் தொகுதியில் நோட்டாவுக்கு 1382 வாக்குகள். … Continue reading நோட்டாவால் வாய்ப்பிழந்த 15 திமுக வேட்பாளர்கள்!
நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!
அ.குமரேசன் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் சமத்துவ சமுதாய மாற்றமே இலக்கு. அதற்கான ஒரு பாதைதான் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல். தேர்தலே இறுதி இலக்கல்ல. அந்த ஒரு பாதை மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பயணத்தை நிறுத்துவதற்கில்லை. இலக்கை அடைவதற்கான வீரமிகு போராட்டங்கள், இயல்பான தன்னலமில்லா தியாகங்கள், தீவிரமும் எளிமையுமான கருத்துப் பரவல் இயக்கங்கள், பாதிக்கப்படுவோருக்காகத் தன்னுணர்வான தொண்டுகள், சமரசமற்ற முற்போக்கு அடையாளங்கள், மக்களைத் திரட்டும் மாபெரும் முயற்சிகள்... ஆகிய பாதைகளை மூடுவதற்கில்லை. பதிவான வாக்குகளில் அதிமுக-வுக்கு சுமார் 41 சதவீதம் … Continue reading நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!
“இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”
தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கருத்து: தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை. இத்தகைய வெற்றியைப் பெற்றமைக்காக அதிமுக, திமுக கட்சிகள் வெட்கப்பட வேண்டும். மே மாதம் 16 ம் தேதி இயற்கை மழை பொழிந்தது. அதற்கு முன்னதாக ஊழல் மூலம் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு ஏற்கெனவே ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் தமிழ்நாடு முழுவதும் நீக்கமற பணமழையை பொழிந்தன. அண்ணா , காமராஜர் போன்ற தலைவர்கள் … Continue reading “இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”
“தர்மம் மீண்டும் வெல்லும்”
தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து: “தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி!
”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”
தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை ‘வாங்கி’ இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடரவிடாமல், மக்கள் ஆட்சித்தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம். மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல அகரம் எழுதி இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் … Continue reading ”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”
கருத்து திணிப்புகள் மீண்டும் பொய்த்துப்போன தேர்தல் இது!
Thiru Yo தேர்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கு நடத்தப்படுகிற கருத்துக் கணிப்புகள் எவ்வளவு போலியான கருத்துத் திணிப்புகள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. லயோலா முன்னாள் மாணவர்கள், அந்நாள் மாணவர்கள், முந்தாநாள் மாணவர்கள் துவங்கி விகடன், நக்கீரன் என இதழ்களும், தொலைக்காட்சிகளும் உற்பத்தி செய்த தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துத் திணிப்புகளும் அப்பட்டமாக தடைசெய்யப்பட வேண்டியவை. அவை அனைத்தும் விளம்பரங்கள் மற்றும் கட்சிகளிடமிருந்து பலனை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டவை. ஊடகங்களின் நேர்மையை இத்தேர்தல் அம்பலப்படுத்தியது. … Continue reading கருத்து திணிப்புகள் மீண்டும் பொய்த்துப்போன தேர்தல் இது!
தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!
பரமேசுவரி திருநாவுக்கரசு ஆசிரியப் பணியாகவும் தேர்தல் பணியாகவும் தொடர்ந்து கிராமங்களில் பணியாற்றுவதை சிற்சில இடர்ப்பாடுகள் கடந்து வரமாகவே நினைக்கிறேன். இந்தத் தேர்தல் முடிவு சில மாதங்களுக்கு முன்னரே உள்ளுணர்வு உணர்த்திய ஒன்று. அதிமுகவின் இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியதல்ல. சற்றே நிதானிக்க, சிந்திக்க வேண்டிய இடத்தில் மக்கள் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைச் சிந்தியாமல், செயல்படுத்தாமல் அதீத இலவசங்களுக்கே மக்கள் பெரும்பான்மை அளித்து விடுவார்களென்று நினைத்ததற்கான மரண அடியிது. சென்றமுறைபோல் அதீதப் பெரும்பான்மைஆட்சி இந்த … Continue reading தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!
வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!
அன்பு செல்வம் தலைவர் திருமா அவர்களுக்கு பாராட்டுக்கள்! தலைவர் வெற்றியடைந்திருந்தால் அதீத மகிழ்ச்சியே. ஆனாலும் தனக்கான தனித்தன்மையோடு வெற்றிக்கு மிக அருகில் இணையாகத் தான் இருக்கிறார் (48450 / 48363). கிட்டத்தட்ட அனைத்து ம.ந. கூட்டணித் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு, கிடைத்த சொற்ப நேரத்தில் தனது தொகுதி மக்களிடமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, சொந்த சமூகத்தைச் சார்ந்தவரையே எதிர்கொண்டு களத்தில் நிற்க வேண்டியிருக்கிறதே அது மிகவும் துயரமானது. எனினும் அதையும் கடந்து அவர் பெற்ற வாக்குகள் இத்தனையென்றால் … Continue reading வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!
ஜெயலலிதா அவர்களே…வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
இராசையா சின்னத்துரை ஜெயலலிதா அவர்களே... தொண்ணுறுகளுக்கு பின் தமிழகத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை யாரும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்ததில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள். மக்கள் நல்லவர் கெட்டவர் கொள்கை கோட்பாடுகள் பார்த்து வாக்களிப்பதில்லை என்பதால் இதை சாதனையாக கருதுவது எளிய மனங்களின் செயல்பாடுகள் மட்டுமே. விதந்தோத ஒன்றும் இல்லை. ஆனால், காலம் உங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது மக்களுக்கு நிறைய செய்யமுடியும். உலகம் எப்போது சுதந்திர மனிதர்களால் நிறைந்துள்ளதோ அன்றுதான் மனிதகுலத்தின் விடுதலை சாத்தியமாகும். அதிகாரத்தில் இல்லாதவர்கள் … Continue reading ஜெயலலிதா அவர்களே…வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
“வேதனையும் விரக்தியும் மேலெழுந்து நிற்கின்றன”
தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 1984 முதல் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தமிழகத்து ஆட்சி நாற்காலியில் மாறி மாறி அமரும் சூழல் இன்று முறியடிக்கப்பட்டு அ.தி.மு.க.,வே மீண்டும் ஆட்சியில் தொடரும் நிலை வாய்த்திருக்கிறது. இது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றாலும் இந்த முடிவு ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கைகளையும், ஊழலற்ற ஆட்சிமுறையையும், நேர்த்தியான நிர்வாகத்திறனையும் ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க … Continue reading “வேதனையும் விரக்தியும் மேலெழுந்து நிற்கின்றன”
ஜெயலலிதாவின் வெற்றியும் மக்களின் எதிர்பார்ப்பும்!
நாச்சியாள் சுகந்தி போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா வெற்றியின் புன்னைகையோடு அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் வண்ண வண்ண மலர்செண்டுகளுடன் கும்பிடு போடுகிறார்கள். அதில் ஒருசிலர் இப்போதுதான் புதிதாக குனியக் கற்றுக்கொண்டார்கள் போலும்.. அத்தனை திருத்தமாக குனியமுடியவில்லை. ஒரு ரோஸ் கலர் சேலை அணிந்த பெண்மணி பூங்கொத்தை கொடுத்து முடித்து, ஜெயலைதாவைப் பார்த்து கைகளை விரித்து ஒரு சிறு ஆட்டம் போட, ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு சிரிப்பு. அநேகமாக அண்மைகாலத்தில் அவர் இத்தனை சந்தோஷத்துடன் சிரித்தது அப்பெண்ணால்தான். நன்றி சொல்லும்போது, … Continue reading ஜெயலலிதாவின் வெற்றியும் மக்களின் எதிர்பார்ப்பும்!
“தர்ம யுத்தம் தொடரும்”!
"தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் எது நடக்கக் கூடாது என நல்லவர்கள் நினைத்தார்களோ, துரதிருஷ்டவசமாக அது தான் நடந்திருக்கிறது. தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பாமகவின் தர்ம யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்த தேர்தலில் பா.ம.கவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள … Continue reading “தர்ம யுத்தம் தொடரும்”!
அதிமுக வெற்றி; அமைச்சர்கள் தோல்வி!
அதிமுக அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா அகியோர் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி, திமுக வேட்பாளர் செலவத்திடம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா, திமுக வேட்பாளர் எம்.கே. மோகனிடம் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இதேபோல அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் தோல்வியுற்றனர்.
திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்
காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். MURUGUMARAN.N All India Anna Dravida Munnetra Kazhagam 48450 THIRUMAAVALAVAN.THOL Viduthalai Chiruthaigal Katchi 48363 MANIRATHINEM. DR .K.I Indian National Congress 37346 SOZHAN.ANBU Pattali Makkal Katchi 25890 ANBALAGAN.K Independent 1360 JAYASRI.E Naam Tamilar Katchi 1055 SARAVANAN.S.P Bharatiya Janata Party 822 KALAIVANAN.S Bahujan Samaj Party … Continue reading திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்
ஜெயலலிதாவின் உத்திக்கு கிடைத்த வெற்றியா?
சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. ஆரம்ப முடிவுகள் அதிமுக வெற்றி பெறும் என காட்டியிருக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்துகளின் தொகுப்பு... தளவாய் சுந்தரம் ஜெயலலிதாவின் உத்தி / தந்திரத்துக்கு (strategy) கிடைத்த வெற்றியாகவே இந்த முடிவுகளைப் பார்க்கிறேன். முதலில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று ஒரு பரிட்சார்த்த முயற்சியை செய்தார் ஜெயலலிதா. அதில் பெற்ற வெற்றியை அடுத்து மக்களவை தேர்தலில் அதனைத் தொடர்ந்தார். அதிலும் அவர் கணக்கு வெற்றிபெற்றது. அதுவே இப்போதும் … Continue reading ஜெயலலிதாவின் உத்திக்கு கிடைத்த வெற்றியா?
அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!
அசாமில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 60 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கிறது. வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை. 15 ஆண்டு கால ஆட்சியை இழந்திருக்கிறது காங்கிரஸ். மொத்த தொகுதிகள்: 126 கட்சி வென்றவை முன்னணி மொத்தம் பாஜக 60 0 60 காங்கிரஸ் 26 0 26 All India United Democratic Front 13 0 13 அசாம் கனபரிஷத் 14 0 14 போடோலேண்ட் மக்கள் முன்னணி … Continue reading அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!
ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!
நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக 89 இடங்களையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 8 இடங்களையும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் கட்சி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது அதிமுக. Status Known For 232 out of 234 Constituencies Party வெற்றி முன்னிலை மொத்தம் காங்கிரஸ் 8 0 … Continue reading ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!
செந்தில்பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு
பணப்பட்டுவாடா அதிகளவில் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி சட்டப் பேரவைத் தேர்தலை அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் தள்ளிவைத்தது தேர்தல் ஆணையம். தேர்தல் 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால், வரும் 21-ம் தேதி வரை பிரசாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில் பாலாஜி பள்ளப்பட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். செந்தில் பாலாஜியின் பணிமனை அலுவலகத்தில் மர்ம நபர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். … Continue reading செந்தில்பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு
“தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்
ஜெயமோகன் சமீபத்தில் தமிழக அரசியல் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது. மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு … Continue reading “தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்
விஜயகாந்த், பி. எல். சுந்தரம், தளி ராமச்சந்திரனுக்கு நிச்சய வெற்றி: தந்தி டிவி தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு!
மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக- தாமாக கூட்டணி வேட்பாளர்களான உளூந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளர் விஜயகாந்த், பவானிசாகர் பி.எல்.சுந்தரம், தளி தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நிச்சய வெற்றி உண்டு என தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலும் ரவிக்குமார் போட்டியிடும் வானூர் தொகுதியிலும் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இந்தக் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. https://youtu.be/hmmCxoF82Uw கருத்து கணிப்பு முடிவுகள் அதிமுக - 111 … Continue reading விஜயகாந்த், பி. எல். சுந்தரம், தளி ராமச்சந்திரனுக்கு நிச்சய வெற்றி: தந்தி டிவி தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு!
“ஓட்டுப் போடாதவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” ஆர்ஜே. பாலாஜி ட்விடுக்கு ஆதரவும் எதிர்ப்பும்!
நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் சென்னையில் 57 சதவீத வாக்குப் பதிவு மட்டுமே பதிவாகியிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வனொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் வாக்கு செலுத்தாத மீதி 43 சதவிதம் பேருக்கு ஆழ்ந்த இரங்கல் என ட்விட்டியுள்ளார். https://twitter.com/RJ_Balaji/status/732202674494439429 இந்த ட்விட்டுக்கு கிட்டத்தட்ட 2000 ரீ- ட்விட்டுகளும், 2000க்கும் அதிகமான விருப்பங்களும் நூற்றுக்கணக்கான … Continue reading “ஓட்டுப் போடாதவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” ஆர்ஜே. பாலாஜி ட்விடுக்கு ஆதரவும் எதிர்ப்பும்!
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி செய்யப்படுகின்றன?
தளவாய் சுந்தரம் எனக்குத் தெரிந்து நேற்று மாலையில் இருந்து எட்டு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. எட்டும் தமிழகத்துக்கு வெளியேயுள்ள ஊடகங்கள் செய்தவை. எப்படி இந்த சர்வேகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த விபரங்கள் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் எதுவும் சொன்னதாகவும் தெரியவில்லை. பொதுவாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்றால், சில இடங்களில் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று, வாக்களித்து வருபவர்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, அதன்படி கணிக்கப்படுகிறது என்பதுதான் என் புரிதல். உங்களுக்கும் அப்படித்தான் … Continue reading தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி செய்யப்படுகின்றன?
சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தது எதனால்? பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் விவாதம்!
நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மாநில அளவில் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் மிகக் குறைவாக(57%) பதிவாகியுள்ளது. ஏன் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் ஏன் குறைந்தது என முகநூல் முழுக்க விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் நடக்கும் இந்த விவாதங்களின் தொகுப்பு இங்கே... ஊடகவியலாளரும் பிரபல முகநூல் பதிவருமான Saraa Subramaniam காரணத்தை அலசுகிறார்: “விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை வீடு மாறும் அவலநிலைக்கு … Continue reading சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தது எதனால்? பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் விவாதம்!
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 73.85% வாக்குகள் பதிவு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 77. 08 சதவீதம் வாக்குப்பதிவானது. தற்போது 232 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர். 2 கோடியே 12 லட்சத்து 44ஆயிரத்து 129 ஆண்களும், 2 கோடியே 16 லட்சத்து 28ஆயிரத்து 807 பெண்களும், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளதாக அவர் … Continue reading தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 73.85% வாக்குகள் பதிவு!
தடைகளைக் கடந்து வாக்களித்தவர்கள்!
பல்வேறு உடல் குறைபாடுகளைக் கடந்து தமிழக வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நடக்க முடியாத பல முதியவர்கள் துணையுடன் வந்து வாக்களித்தனர். திருநங்கைகள் பலர் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர். இதோ ஒரு தொகுப்பு... https://twitter.com/SmithaSadasiva5/status/732128912671674368 https://twitter.com/TNelectionsCEO/status/732112686490624000 https://twitter.com/deccanchennai/status/732099014162710528 https://twitter.com/TNelectionsCEO/status/732095550137344000 https://twitter.com/drsitu/status/732079839239385088 https://twitter.com/zubeda_h/status/732126630521405440 https://twitter.com/zubeda_h/status/732106890826547201 https://twitter.com/zubeda_h/status/732082163865133057 https://twitter.com/zubeda_h/status/732073312344408064 https://twitter.com/zubeda_h/status/732069973372198912 https://twitter.com/zubeda_h/status/732069704114704384 https://twitter.com/zubeda_h/status/732056818608832512 https://twitter.com/zubeda_h/status/732055607490936833
பாலக்கோட்டில் 78%; பென்னாகரத்தில் 79% வாக்குப்பதிவு; 3 மணி வரையான நிலவரம்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக 3 மணி வரையான நிலவரப்படி பென்னாகரத்தில் 79 சதவீதமும் பாலக்கோட்டில் 78 சதவீதமும் தர்மபுரியில் 72 சதவீதமும் பாப்பிரெட்டிபட்டியில் 72 சதவீதமும் அரூரில் 72 சதவீதமும் பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்ட தொகுதிகள் இவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மனைவியுடன் சென்று வாக்களித்தார்
சென்னை ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளியில் CPIM மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார். இதேபோல் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான உ. வாசுகியும் க. பீம்ராவும் வாக்களித்தனர். படங்கள்: கவாஸ்கர்.
சொந்த ஊரில் தாயுடன் சென்று வாக்களித்த திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தன்னுடைய சொந்த ஊரான அங்கானூரில் தன் தாய் தொல். பெரியம்மாவுடன் சென்று வாக்களித்தார். இந்தத் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடுகிறார் ஆளூர் ஷானவாஸ். Joshua Isaac Azad Annan Thol. Thirumavalavan casted his vote along with his mother Thol. Periyamma in his native Anganur village. Our party deputy general secretary Aloor Shanavas is contesting from this constituency.
சாமானியனுக்கு இல்லாத ’சூழலா’ உங்களுக்கு…சொல்லுங்க சூர்யா!
கதிர்வேல் ஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது. அதுலயும், நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும் ஓட்டு போட முடியாது, என்னா என் பேரே பட்டியல்ல இல்லைனு சொன்ன கமல் கவுதமியோட வந்து ஓட்டு போட்டுட்டு கர்வமா சிரிக்கும்போது சூர்யாவுக்கு மெசேஜ் சொல்ற மாதிரியே இருக்கு. என்னாங்க பெரிய சூழல்.. தொலை தூரத்துல இருந்தும் வெளிநாட்ல இருந்தும் ஓட்டு போடதுக்குன்னே வந்திருக்க சராசரி ஜனங்க … Continue reading சாமானியனுக்கு இல்லாத ’சூழலா’ உங்களுக்கு…சொல்லுங்க சூர்யா!
தேர்தல் ஆணைய பிரச்சாரம், கட்சிகள் பணம் கொடுத்தும் கேரளா, புதுச்சேரியைவிட தமிழக வாக்கு சதவீதம் குறைவு!
நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு மணி வரையான நிலவரத்தில் தமிழகத்தில் 42 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது. கேரளத்தில் 43 சதவீதமும் புதுச்சேரியில் 50 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது. சென்னையில் 38 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது.
ஆர்.கே.நகரில் போலி மையைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட முயற்சி
சென்னையில் ஆர்கே நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் பொது வேட்பாளராக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி போட்டியிடுகிறார். ஆர்.கே நகர் கூட்டணியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் வாக்குப்பதிவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மை மாற்றப்பட்டு எளிதில் அழியும் போலியான மை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் நலக்கூட்டணி சார்பில் தலைமைத்தேர்தல் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றுள்ளதாகவும் ஆர்கே நகர் தொகுதியில் மறு … Continue reading ஆர்.கே.நகரில் போலி மையைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட முயற்சி