தேர்தலில் செலவிடப்படும் ’பினாமி’ பணங்கள்!

அ. மார்க்ஸ் இரண்டு நாட்களாகப் பெரிய அளவில் (கோடிக் கணக்கில்) பதுக்கி வைக்கப்பட்ட பணம் கைப்பற்றப்படுகிறது. இவர்கள் அனைவரும் அ.தி.மு. க வினர்க்கு நெருக்கமானவார்கள், அமைச்சர்களுக்கு பினாமிகளாக இருப்பவர்கள் என்கிற செய்தியும் வருகிறது. மாவட்ட ஆட்சியாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளும் பெரிய அளவில் மாற்றப்படுகின்றனர். கரூரில் கைப்பற்றப்பட்ட 4.77 கோடி ரூபாய்க்கு உரிய அதிமுக காரர் அரசு வாகனம் என்கிற பெயரில் போலி பதிவு எண்ணுடன் இக் குற்றத்தைச் செய்துள்ளார். இவர்கள் கைது செய்யப்பட்டு கொஞ்ச … Continue reading தேர்தலில் செலவிடப்படும் ’பினாமி’ பணங்கள்!

#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதிவண்ணன் பத்திரிக்கையாள நண்பரொருவர் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற விவாதத்தில் உங்கள் கருத்து என்ன எனக் கேடடார்;. அவரிடம்; சொன்னதும் சொல்ல நினைத்ததுமான சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கருத்து எனக்கு உடன்பாடானதே. இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்வதென்றால் ஒடுக்குமுறையில் உச்சபட்சத்தை அனுபவிக்கின்றதும் உற்பத்தியில் உடல் உழைப்பில் நற்பண்புகளில் முதன்மை இடத்தை வகிப்பதுமான அருந்ததியர் வகுப்பில் ஒருவர் முதல்வர் ஆவது கருத்தியல் ரீதியில் பொருத்தமான ஒன்று. நடைமுறையில் … Continue reading #தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே!’

நரேன் ராஜகோபாலன் மேலாண்மை புத்தகங்களில், கிழக்கில் முக்கியமான ஒரு புத்தகம் சுன் ட்சு(Sun Tsu) எழுதிய Art of War. சுன் ட்சு ஒரு ராணுவ ஸ்ட்ராடஜிஸ்ட், அவர் கிட்டத்திட்ட கி.முவில் எழுதிய புத்தகம் இன்றளவும் மேலாண்மை பைபிள்; குறிப்பாக எதிரிகளை வீழ்த்துகின்ற வியூகங்களையும், யுக்திகளையும் உள்ளடக்கிய மனித குல வரலாற்றின் முக்கியமான புத்தகம். அதன் ஐந்தாவது அத்தியாயம் - சக்தி (Energy). அதில் ஒரு முக்கியமான வாசகம் வரும் “The whole secret lies in … Continue reading ’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே!’

#அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!

தமிழ் ஆதவன் சுப வீரபாண்டியனின் விவாதம் சிறுத்தைகள் அருந்ததியருக்கு போட்டியிட வாய்ப்புத் தரவில்லை என்ற பொய்யான செய்தியை பதிவு செய்வதோடு நிற்கவில்லை. நாம் அதை அந்த அளவோடு நிறுத்திப் பார்ப்பதும் சரியானதல்ல. தலித்கள் அதிகாரத்திற்கு வந்தாலும் மாற்றம் வராது, இன்னமும் இழிவை சுமக்கும் போது தலித்கள் அதிகாரம் குறித்து சிந்திக்க கூடாது. சிறுத்தைகள் அனைத்து பட்டியலினப் பிரிவினருக்குமான கட்சி அல்ல போன்ற செய்தியைகளை பல வார்த்தை ஜாலங்களில் பதிவு செய்தார் சுப வீரபாண்டியன். சுபவீ சிறுத்தைகளை குற்றம் … Continue reading #அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!

மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

அ. மார்க்ஸ் 1.ஏப்ரல் 25, 2013 அன்று மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டிற்கு அச்சசங்கத்தினர் சென்ற போது மரக்காணத்தில் நடை பெற்ற சாதிக்கலவரத்தில் கொல்லப்பட்ட பா.ம.க வைச் சேர்ந்த செல்வராஜ் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் கொலைக் குற்றத்தை உறுதி செய்து ஆறு தலித்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க நிறுவனர் தீர்ப்பை வரவேற்றுள்ளார். வி.சி.க தலைவர் திருமாவளவன் தீர்ப்பை ஏற்கவில்லை; தண்டிகப்பட்டவர்கள் அப்பாவிகள் எனக் கூறியுள்ளார். இது விசாரனை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. … Continue reading மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விருப்பம் தெரிவித்து ட்விட்டியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், மு.கருணாநிதி முதல்வராவதை தவிர்ப்பார் என்றும், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://twitter.com/Swamy39/status/694491246652366850 https://twitter.com/Swamy39/status/694491123302080514 https://twitter.com/Swamy39/status/694477931037372416 இதுகுறித்து கருத்து சமூக வலைத்தளங்களில் … Continue reading ’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

ரோஹித் மரணத்திற்கு காரணமான அமைச்சர் தத்தாத்ரேயாவுடன் கோவை வந்த மோடி: திரும்பி போக சொல்லி போராட்டம்…

கோவையில் மத்திய அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்க விழா , பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று மதியம் கோவை வந்தார் கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், மற்றும் ஐதராபாத் பல்கலை மாணவன் ரோஹித் மரணத்திற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படும் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே கோவையில் பிரதமர் மோடிக்கு கறுப்பு … Continue reading ரோஹித் மரணத்திற்கு காரணமான அமைச்சர் தத்தாத்ரேயாவுடன் கோவை வந்த மோடி: திரும்பி போக சொல்லி போராட்டம்…

மோடியின் கோவை மாநாட்டை காலி நாற்காலிகள் நிரப்பியதா?:போலீஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

கோவை கொடிசியா மைதான பொதுக்கூட்டத்தில்  பிரதமர் மோடி பேச வைதத்தன்  மூலம், தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை பாரதீய ஜனதா தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு  “தாமரை மலரட்டும்:தமிழகம் நிமிரட்டும்” என்றும் லோகோ வடிவமைக்கப்பட்டது. இதனிடையே பிரதமர் மோடியின் கொடிசியா கூட்டம் குறித்து நேரலை மூலம் செய்திகளை அளித்து கொண்டிருந்த தி ஹிந்து, மாநாட்டு அரங்கத்தில் காலி நாற்காலிகளே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிட்டது. காவல்துறையின் அதிக பாதுகாப்பு காரணமாக, தொண்டர்களை மாநாட்டு திடலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் அதனால்தான் கூட்டம் … Continue reading மோடியின் கோவை மாநாட்டை காலி நாற்காலிகள் நிரப்பியதா?:போலீஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

வாக்குச் சாவடியில் எத்தனை பேர் க்யூவில் இருக்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்!

வாக்காளர்கள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடியில் கூட்டம் எவ்வளவு உள்ளது? வரிசையில் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை தெரிந்து கொள்வதற்காக, வாக்காளர்கள் தங்கள் செல்போனில் ‘கியூ’ என்று டைப் செய்து, சற்று இடைவெளி விட்டு தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, ‘1950’ என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், தங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள், எப்போது வந்தால் சீக்கிரமாக வாக்களித்துவிட்டு செல்ல முடியும் என்ற தகவலை பெற … Continue reading வாக்குச் சாவடியில் எத்தனை பேர் க்யூவில் இருக்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்!

#அட்டேன்ஷன்: விஜயகாந்துக்கு அதிகாரம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் அளிப்பதாக சனிக்கிழமைக் கூடிய தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி தொலைபேசியில் ‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா’ என பேசி எரிச்சலூட்டுகிறார்: ராமதாஸ்

“ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா?” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வினவியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராத முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யும், தேனும் கலந்து தயாரிக்கப்பட்ட ஓர் உரையை ‘வாட்ஸ்-அப்’பில் படித்தார். உண்மையை குழிதோண்டி புதைத்து விட்டு, அரசியல் லாபம் தேடும் ஒற்றை நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த … Continue reading அடிக்கடி தொலைபேசியில் ‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா’ என பேசி எரிச்சலூட்டுகிறார்: ராமதாஸ்

லயோலா கருத்து கணிப்பு:’ஸ்டாலின் மருமகன் சபரீசனை முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை?’

திரு யோ 'லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்' லேபிள் ஒட்டி கருத்துத்திணித்தால் எடுபடுமா? இந்த தில்லுமுல்லு கருத்துக்கணிப்பில் முதல்வராக யாரை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்கிற கேள்விக்கு கருணாநிதிக்கு 70.99%, ஸ்டாலினுக்கு 69.6%, ஜெயலலிதாவுக்கு 65.9%. முறையான கருத்துக்கணிப்பு சதவிகிதம் என்றால் மொத்தம் கூட்டுத்தொகை நூறு வரவேண்டும். இதில் வருவது 206.49. என்னவகை கருத்துக்கணிப்பு இது? ஸ்டாலினின் மருமகன் சபரீசனை முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஏன் சேர்க்கவில்லையோ. திரு யோ, அரசியல் விமர்சகர்.  

விஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார்? ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா?

கார்ல் மாக்ஸ் தொண்ணூறுகளில் வடமாவட்ட கிராமங்களில் பயணம் செய்ய வாய்ப்பிருந்தவர்கள் கவனித்திருக்கலாம். திமுக, அதிமுக கொடிக்கம்பங்களுக்குப் பிறகு விஜயகாந்தின் ரசிகர்மன்ற போர்டுகள் எல்லா ஊர்களிலும் இருக்கும். ஊடகங்கள் எல்லாம், ரஜினியின் புகழை ஊதிப்பெருக்கிக் கொண்டிருந்த அதே தொண்ணூறுகளில், யதார்த்தத்தில் கிராமங்களில் புகுந்திருந்தது விஜயகாந்த் தான். தென்மாவட்டங்களில் அவர் ஒரு மதுரைக்காரர் என்ற பிம்பம் சாதாரணமாகவே அவர்மீதான ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களில் கவனிக்கத்தக்கவை என்றால் ஒன்று, பாமக திராவிடக் கட்சிகளுடன் … Continue reading விஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார்? ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா?

திமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதியோ? இந்தப் படத்தைப் பாருங்க…

எழிலரசன் செவ்வாய்கிழமை கடலூர் விஜயகாந்தின் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த வேனில் 'தேமு-திமுக' என்று பேனர்! திமுகவுடன் கூட்டணி உறுதியோ?

பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி: ராமதாஸ் புதிய அறிவிப்பு

பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சென்ற வாரம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால் பாஜக தரப்பில் அவர் அப்படித்தான் பேசுவார்; அன்புமணி நேற்றுகூட மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர்கள் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்கள் என சொன்னார்கள். இப்போது, அன்புமணியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முன் வந்தால் பாஜக உடனான கூட்டணி தொடரும் என  ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராமதாஸ்,பாஜக கேட்டுக்கொண்டால் துணை முதல்வர் பதவி அந்தக் கட்சிக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.  

விஜயகாந்த் எங்களொடு வந்தால் மகிழ்ச்சிதான்: இப்போது இளங்கோவனும் அழைக்கிறார்

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நெசப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்த கேள்விகளுக்கு “ஒரு கட்சி, மற்ற கட்சியுடன் கூட்டணியில் இணைவது என்பது தேர்தல் நேரத்தில் நடக்கும் இயல்பான விஷயம் என்று தெரிவித்த இளங்கோவன், தேமுதிக தங்களோடு கூட்டணியில் இணைந்தால் மகிழ்ச்சி தான்” என்று பதிலளித்தார்.

மக்கள் நலக் கூட்டணி ஏன் விஜயகாந்தை சார்ந்திருக்கிறது?

மழை வெள்ளம் அரசியல் ஓய்ந்துவிட்ட நிலையில் சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைவிட அரசியலில் அனுபவம் வாய்ந்தவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள். ஆனால், ஏன் அவர்கள் தேமுதிகவின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள்?   பத்திரிகையாளர் அருள்எழிலன் மக்கள் நலக் கூட்டணியினர், விஜயகாந்தை சந்தித்து பேசியது குறித்து இப்படி எழுதுகிறார்.. “தமிழக அரசியலில் இருந்து அழித்தொழிக்கப்பட வேண்டிய சக்திதான் … Continue reading மக்கள் நலக் கூட்டணி ஏன் விஜயகாந்தை சார்ந்திருக்கிறது?