ஜெயலலிதா உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது! கைவிரித்த ஓ. பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தெரியாது என விசாரணை ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் கூறியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த சந்தேகங்களை ஜெயலலிதா சார்ந்த கட்சியினர் எழுப்பியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளிப்படையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வருகின்றனர். அந்த … Continue reading ஜெயலலிதா உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது! கைவிரித்த ஓ. பன்னீர்செல்வம்

‘சசிகலாவுக்கு சிறையில் சலுகை தரப்பட்டது உண்மையே’

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான் என கர்நாடக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் அசோக் கூறியுள்ளார். பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் ஆஜரான சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரட், டிஐஜி ரேவண்ணா ஆகியோர் இதைத் தெரிவித்ததாகவும் அசோக் கூறியுள்ளார். சசிகலாவுக்கு டி.வி. வழங்கப்பட்டதும் தனி சமையல் நடைபெற்றதும் அவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்ததும் உண்மை தான் என அதிகாரிகள் கூறியதாக அசோக் தெரிவித்தார்.

அடியாட்கள்;அமைச்சர்கள்;உடையார்;ஒரே நாளில் பத்திரப்பதிவு : ஜெ-சசி கும்பலின் அராஜகம் பற்றி கொடநாடு உரிமையாளர்…

90-களில் நீலகிரி மாவட்டத்தில் சொத்து வாங்குவது தொடர்பாக பல்வேறு இடங்களை ஜெ;வும் சசியும் பார்வையிட்டாலும், கடைசியில் அவர்கள் திருப்தியுற்றது கொடநாடு எஸ்டேட்டில். 1800-களில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்டேட், ஒவ்வொருவருக்காக விற்கப்பட்டு, 1970-களில் Peter Earl Edward Craig Jones என்பவரின் குடும்ப சொத்தாக மாறியது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், கொடநாடு எஸ்டேட்டின் உண்மையான உரிமையாளர் Peter Earl Edward Craig Jones … Continue reading அடியாட்கள்;அமைச்சர்கள்;உடையார்;ஒரே நாளில் பத்திரப்பதிவு : ஜெ-சசி கும்பலின் அராஜகம் பற்றி கொடநாடு உரிமையாளர்…

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வமூட்டியதே நான் தான்!: சசிகலா

சென்னை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார் சசிகலா. அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களைச் சொன்னார். "எம்ஜிஆர் மறைவின்போது கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவை அவரது இறுதிச் சடங்கின் போது அனுமதிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஜெயலலிதா, தமக்கு கட்சியும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தார். உங்களை எதிர்த்தவர்கள் முன்னால் வளர வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவுக்கு நான்தான் அரசியல் ஆர்வத்தினை ஊட்டினேன். அத்தகையை சூழலில் … Continue reading ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வமூட்டியதே நான் தான்!: சசிகலா

சசிகலா மீது மக்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?

சரவணன் சந்திரன் நாலாங் கிளாஸ் படிக்கிற பையன் ஒருத்தன் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தானாம். அப்போது ஒரு பாலை சிக்ஸருக்கு அனுப்பிய போது, என் வாழ்க்கையில இப்படி ஒரு ஷாட்ட பாத்ததே இல்லை என்றானாம். அதைப் போலத்தான் எனக்கும் சின்ன வயதுதான். ஆனால் என் வாழ்க்கையில் இப்படி ஒரு மாநிலமே ஒருவை வெறுத்துப் பார்த்ததில்லை. என்ன போஸ்டர் ஒட்டினாலும் முகத்தில் எதையாவது கொண்டு போய் அப்பி விடுகிறார்கள். அப்படி அப்புபவர்களுக்குப் பயந்து மலைமேலே மரத்திற்கு மேலே எல்லாம் தட்டி … Continue reading சசிகலா மீது மக்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?

சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதால் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. சசிகலா, தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளது குறித்து சமூக ஊடகங்களில் கருத்தாளர்கள் தெரிவித்த சில கருத்துகள்... LR Jaggu: கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஜெயலலிதா தமிழக முதல்வரானபோது தமிழக அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டதாக திமுகவினரும் அவர்களின் ஆதரவாளர்களும் … Continue reading சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா?

சின்னம்மாதான் அம்மாவின் அரசியல் வாரிசு: மு. தம்பித்துரை

சசிகலா தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பித்துரை தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதே அம்மாவின் தாரக மந்திரம். சமூகநீதி காக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வினை உறுதி செய்யவும், சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும், இந்திய குடியரசில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் தன்னையே அர்ப்பணித்து எம்.ஜி.ஆர். காட்டிய புனிதப் பாதையில் வாழ்ந்த … Continue reading சின்னம்மாதான் அம்மாவின் அரசியல் வாரிசு: மு. தம்பித்துரை

அதிமுக வேட்பாளர் பட்டியலுடன் ஸ்ரீரங்கத்தில் சசிகலா சிறப்பு பூஜை?

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையை எதிர்க்கட்சிகள் முடுக்கிவிட்டிருக்கும் நிலையில் அதிமுக அமைதியாக இருந்து வருகிறது. கூட்டணி பற்றி பிறகு யோசிப்போம் என்று மட்டும் பொதுக்குழு கூட்டத்தில் பேசினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஸ்ரீரங்கத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து சிறப்பு பூஜையை செய்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த சில வாரங்களாகவே, சசிகலா தனது குடும்பத்தினருடன் கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார். அவர் பழனி முருகன் கோவில் சென்றது குறித்து நமது … Continue reading அதிமுக வேட்பாளர் பட்டியலுடன் ஸ்ரீரங்கத்தில் சசிகலா சிறப்பு பூஜை?

சசிகலா சாமி தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். வியாழக்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் கோவிலுக்கு வந்த சசிகலாவிற்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி இரண்டு மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. கூட்டம் அதிகம் இல்லாத நிலையிலும்,  சசிகலாவின் வருகையையொட்டி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தரிசனத்திற்கு காக்க வைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

#ஊடகங்கள்பேசாபொருள்: சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கிலிருந்து நீதிபதிகள் ஏன் விலகுகிறார்கள்?

கடந்த 1996-ம் ஆண்டு மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சசிகலா, டி.டி.வி.தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்தனர். ஜெ.ஜெ.டி.விக்கு செயற்கைகோள் இணைப்பு பெற்றபோதும், மேலும் சில பண பரிவர்த்தனையின் போதும் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் கோர்ட்டில் மனு … Continue reading #ஊடகங்கள்பேசாபொருள்: சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கிலிருந்து நீதிபதிகள் ஏன் விலகுகிறார்கள்?

கெயில் வழக்கு : தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் நீதிமன்றம் போகாததே தமிழக அரசின் வழக்கு தள்ளுபடிக்குக் காரணமா?

பால் முருகன் இயற்கை எரிவாயு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியபோதே தமிழக அரசின் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி இன்னும் வரவில்லை அவர்தான் வாதிட உள்ளார் என்று கூறினார். அப்போது கெயில் நிறுவனத்தின் வாதத்தை கேட்கத் தொடங்கினர் நீதிபதிகள். பின்னர் அரை மணி நேரம் சென்ற பின் தமிழகத்தின் கருத்தை அறிய நீதிபதிகள் பாலாஜியிடம் திரும்பினர். அப்போது அவர் மூத்த வழக்கறிஞர் இன்னும் வரவில்லை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதனை … Continue reading கெயில் வழக்கு : தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் நீதிமன்றம் போகாததே தமிழக அரசின் வழக்கு தள்ளுபடிக்குக் காரணமா?

2016 சட்டப்பேரவைத் தேர்தல்: பி டீம்களின் தர்ம யுத்தம்; கலக்கப்போவது யாரு?

வில்லவன் இராமதாஸ் அதிமுக கட்சி பாஜகவின் பி டீம் என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்த செய்தி (இதனை அதிமுக ஒத்துக்கொண்டாலும் மார்க்சிஸ்ட் ஒத்துக்கொள்ளாது). மக்கள் நல கூட்டியக்கத்தை அதிமுகவின் பி டீம் என்கிறது திமுக வட்டாரம். இந்த பட்டியலில் அடுத்த பி டீம் ஒன்றைப் பற்றிய தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் சிந்தன் (இரா) தன் நிலைத்தகவல் ஒன்றில் வெளியிட்டிருக்கிறார். அதாவது திமுகவை அதிமுகவின் பி டீம் என குறிப்பிட்டிருக்கிறார். ஆக தமிழக தேர்தல் களம் மூன்று முக்கிய … Continue reading 2016 சட்டப்பேரவைத் தேர்தல்: பி டீம்களின் தர்ம யுத்தம்; கலக்கப்போவது யாரு?

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு ஒரு நாடகம்: ஜி.ராமகிருஷ்ணன்

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு ஒரு நாடகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அதிமுகவின் நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியில் அதிமுகவின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தார். இது மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்கின்றனர். சட்ட சபையில் இதைவிடவும் தரமற்ற வாதங்களை சிரித்தபடி ரசிக்கும் தலைமையா இதற்கு நடவடிக்கை எடுக்கும்? இதே தலைமைதானே சசிகலாவை வெளியேற்றியது … Continue reading நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு ஒரு நாடகம்: ஜி.ராமகிருஷ்ணன்